எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
MAGAZINES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MAGAZINES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள். - ஐபிசி தமிழ், அகரம், தமிழ் டைம்ஸ், வெற்றிமணி.

நான்கு ஐரோப்பிய தமிழ் சஞ்சிகைகள் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. வெற்றிமணியின் ஆசிரியர் திருமிகு தவா அவர்கள் வெற்றிமணி, அகரம் ஆகியவற்றையும் பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்  வெற்றிமணி, தமிழ் டைம்ஸ், அகரம் ஆகிய சஞ்சிகைகளையும் அளித்தார்கள்.





சனி, 18 ஏப்ரல், 2015

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 5

குங்குமம் தோழியில் ஒரு கேள்வி ஒரு மனசு பகுதியில்.ஷேர் ஆட்டோ பற்றி.



குமுதம் பக்தி ஸ்பெஷல் தீபாவளி இதழில் ( 2014 )
பெண்கள் ராஜ்ஜியத்தில் பிள்ளைக்கறி என்ற சிறுகதையுடன் புகைப்படம்.

வியாழன், 5 பிப்ரவரி, 2015

பத்ரிக்கைகளில் (& TV ) புகைப்படப் படைப்புகள். பாகம் 3.



தினமணியும் காரைக்குடி புத்தகத் திருவிழாவும் இணைந்து நடத்தின சிறுகதைப் போட்டியில் எனக்கு ஊக்கப் பரிசு கிடைத்தது. அப்போது தினமணிக்கதிரில் புகைப்படத்துடன் சிறுகதை வந்தது.

சனி, 15 நவம்பர், 2014

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் 2



வள் புதியவளுக்காக விஐபியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் அதைப் பற்றிய விவரத்தை அனுப்பினால் புடவை பரிசு  என்று அறிவித்திருந்தார் மை பாரதிராஜா. உடனே எங்கள் முகநூல் நண்பர்( இயக்குநர் & நடிகர்  சேரன் பாண்டியன் ) சேரன் அவர்களை  நாங்கள் எங்கள் அன்பு ராஜிக்கா சிங்கப்பூரிலிருந்து வந்தபோது பார்க்கச் சென்றோம். அப்போது எடுத்த புகைப்படத்தைக் குறிப்போடு எழுதி அனுப்பினேன். உடன் புடவைப் பார்சல் வந்துவிட்டது.
 


இவள் புதியவளில் வலைப்பூக்களில் கலக்கிவரும் புயல் பூக்கள் அறிமுகத்துக்குப் பின் கவிதைகள் கட்டுரைகள் வெளிவரத் துவங்கின. கோதை, ஆண்டாள், வெங்கட் சபா, தேனு, தேனம்மைலெக்ஷ்மணன் என்று புனை பெயரிலும் சொந்தப் பெயரிலும் எழுதத் துவங்கினேன். சில சமயம் என்னுடைய கட்டுரைகளும் வாங்கிக்கொடுத்த கட்டுரைகளுமாக 6, 7 கூட இடம்பெறத் துவங்கின காலம் அது.அந்த கால கட்டத்தில் இரு கவிதைகளை என் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்கள். !

திங்கள், 20 அக்டோபர், 2014

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1

சுஜாதாவின் ஒரு கதையில் யஷ் என்ற கதாபாத்திரம் சொல்வது போல ஒரு டயலாக். // யஷ் யஷ் என்று எத்தனை முறை எத்தனை ஆயிரம் காப்பிகளில் என் பெயர் ப்ரிண்ட் ஆகி இருக்கும்.// என்று . நம் பெயரும் பத்ரிக்கைகளில் ப்ரிண்ட் ஆனால் எப்படி இருக்கும் என்று படிக்கும்போதே எக்ஸைடட் ஆக வைத்த வரிகள்.

முதன் முதலில் ( கல்லூரிப்பருவ கல்கி,இன்னபிற இதழ்களுக்குப் பிறகு பல வருடம் கழித்து லேடீஸ் ஸ்பெஷலில் என் பெயர் வந்தது . அதன்பின் )  யங் லேடீஸ் கவிதைப் போட்டிக்காக லேடீஸ் ஸ்பெஷலில் முதன் முதலில் முகமற்றிருந்த எனக்கு முகம் காட்டும் விதமாக என்னுடைய புகைப்படம் வந்தது. நன்றி கிரிஜாம்மா.
அதன் பின் லேடீஸ் ஸ்பெஷலில் கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சுய உதவிக் குழுப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் ப்ரச்சனைகள் குறித்துப் பேசினேன். அதன் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
Related Posts Plugin for WordPress, Blogger...