எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 பிப்ரவரி, 2015

பத்ரிக்கைகளில் (& TV ) புகைப்படப் படைப்புகள். பாகம் 3.தினமணியும் காரைக்குடி புத்தகத் திருவிழாவும் இணைந்து நடத்தின சிறுகதைப் போட்டியில் எனக்கு ஊக்கப் பரிசு கிடைத்தது. அப்போது தினமணிக்கதிரில் புகைப்படத்துடன் சிறுகதை வந்தது.


விழா நிகழ்ந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பத்ரிக்கையில் மறுநாளே பாராட்டுக்களோடு வெளிவந்தது

தினமணிக்கதிரில் என் வலைத்தளத்தில் புரட்டாசி மாதம் பற்றிப் போடப்பட்டிருந்த பகிர்வு தினமணியில் பகிரப்பட்டு ஆறு வலைப்பதிவர்களில் ஒரு பெண் பதிவராக என் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

இந்தியா டுடேயின் ரஜனி ஸ்பெஷலில் பலரிடமும் கருத்துக்கள் கேட்டுப் போட்டிருந்தார்கள். கவிஞராக என்னிடமும் கேட்டுப் புகைப்படத்துடன் போட்டிருந்தார்கள்.
குங்குமம் தோழியின் இணைப்புப் புத்தகத்தில் 30  சமையல் குறிப்புகள் கேட்டு வாங்கி வெளியிட்டிருந்தார்கள். அதில் என் புகைப்படம் ஒரு ஓரமாக இருக்கிறது. :)


பொதிகையில் காரசாரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது  தொலைக்காட்சி நிகழ்ச்சியை டேப் செய்ய இயலாததால் புகைப்படம் எடுத்தேன்

கலைஞர் தொலைக்காட்சியில் சேரன் மிஷ்கின், கயல், நந்தினி, ஷர்மிலி, ஐஸ்வர்யா ஆகியோருடன் யுத்தம் செய் கலந்துரையாடல் நிகழ்ச்சி சத்யம் தியேட்டரில் நடைபெற்றதை ஒளி பரப்பினார்கள். அதை தோழி ராமலெக்ஷ்மி புகைப்படம் எடுத்து அனுப்பினார்.

சன் டிவியில் பபாசி பற்றிக் கருத்துக் கணிப்புக் கேட்டபோது தொலைக்காட்சியைப் புகைப்படம் எடுத்துப் போட்டிருக்கிறேன்.  ( சங்கமத்தில் எடுக்கப்பட்டது யூ ட்யூபில் உள்ளது )

இன் அண்ட் அவுட் சென்னையில் எல்லா இதழ்களிலும் மேல் பக்கத்திலும் முகப்பிலும் ஐந்தாம் பக்கத்திலும் என் புகைப்படம் இடம் பெறும். அதில் சில விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஒரு முறை ஜெ அம்மாவுடன் என் புகைப்படமும் இடம் பெற்றது. அதுதான் இது. எனவே ரொம்ப ஸ்பெஷல்

அதே போல் புதிய தரிசனம் 2014 மே இதழிலும் கலைஞர், ஜெ அம்மாவுடன் என் புகைப்படமும் அட்டைப் படத்தில் இடம் பெற்றது. என்னுடைய சித்திரைக் கவிதைகள் என்ற 27 குழந்தைக் கவிதைகள் இடம் பெற்றிருந்தன. இரு பெரும் தலைவர்களோடு இருப்பதால் எனக்கு இது ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் படமாகும்

--நன்றி தினமணி, தினமணிக்கதிர், இந்தியா டுடே, குங்குமம் தோழி, பொதிகை, கலைஞர் டிவி, சன் டிவி, இன் அண்ட் அவுட் சென்னை, புதிய தரிசனம்.:)


5 கருத்துகள்:

 1. மிகவும் மகிழ்ச்சி... தொகுப்பு அருமை...

  மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. நன்றி தனபாலன் சகோ

  நன்றி ரூபன் சார் :)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...