எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 மார்ச், 2010

மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல்)




மகளிர் தினத்திற்காக நண்பர் ,"அவர்" பட இயக்குனர்
திரு. செல்வகுமார் அவர்கள் ஒரு பாடல்...--
"தாய்மையும் பெண்மையின் பெருமையும்" மிகுந்த
ஒரு பாடல் ..--எழுதும் படி கூறினார்.
அதை ,"அவர்" படத்தின் இசை அமைப்பாளர்
திரு. விவேக் நாராயணன் இசை அமைத்துப் பாடி
இருக்கிறார்..அன்பு சகோதரிகளே... உங்களுக்காக
நானும் சகோதரர் திரு. செல்வகுமாரும் .,
திரு.விவேக் நாராயணனும் வழங்கும் பாடல் .
கேட்டு மகிழுங்கள் ....பின்னூட்டத்துல உங்க
பதில் அன்பைத் தெரிவியுங்க மறந்துடாம...!


இது டவுன்லோடு லிங்க்..
http://www.4shared.com/file/236169902/cf878963/Magalir_dhinam.html


அன்பென்னும் ஊஞ்சலில் அழகாக அசைந்திடும்
ஆனந்தப் பெண்மை அழகே!

அதிகாரம் ஆணவம் அனைத்தும் கடந்து
அரவணைக்கும் அன்னை நீயே!

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!

அன்னப் பறவையாய் நல்லதை கைக்கொண்டு
அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!

மன்னவன் மாலையே மாதர்கள் அரசியே
மகிழ்வோடு என்றுமிருப்பாய்!

ஆழி நீ சூழி நீ ஆர்ப்பரிக்கும் ஆர்வம் நீ
அகலாத அன்பின் தேவி!

சொல்லும் நீ செயலும் நீ எண்ணம் நீ வண்ணம் நீ
நல்லதனைத்தும் நீயே!

குழந்தைக்கு குழந்தை நீ தேவாதி தேவி நீ
உலகெல்லாம் ஆளும் சக்தி!

உண்மையே மென்மையே ஒளிர்கின்ற பாசமே
உலகத்தின் உயிர்ச்சக்தியே.!

காந்தம் நீ கருணை நீ எரிமலை நெருப்பும் நீ
பனி உருவச் சிற்பம் நீயே!

புதுயுகப் புயலும் நீ பொதிகையின் கயலும் நீ
புவியாள வந்த அழகே!


43 கருத்துகள்:

  1. புதிய இசை. பெருமையான பாடல் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  2. ஆஹா ! அருமையான வரிகள் . அற்புதமான வாய்ப்பு வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  3. //நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
    உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!//

    இந்த இரண்டு வரிகளையும் திரு செல்வ குமார் இசையமைக்கும் போது உண்டான உடனடித் தேவையால் எழுதி இருகிறார்

    பதிலளிநீக்கு
  4. ஆஹா பாடல் மிக அருமை.. வரிகள் ரொம்ப சூப்பர்

    வாழ்த்துகள் தேனக்கா..

    மகளிர்தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தேனம்மை. உங்கள் கவிதை பாடலாக டிஜிட்டல் வடிவம் எடுத்திருப்பது உங்களின் உயரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது. நல்ல இசை. ஒரு இடத்தில் கூட பிசகு இல்லை. திரையுலகத்திற்கு பாடல் எழுதும் தூரம் அதிகம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உங்கள் அடுத்த பரிமாணம் உலகத்திற்கு வெளிப்படட்டும் இதன் மூலம். இனி எல்லாம் ஜெயமே. வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் பணியை.

    பதிலளிநீக்கு
  6. மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.
    அருமையான பாடல் செல்வா சார்..
    வாழ்த்துக்கள் கவிஞர்க்கும்(நமக்கு நன்றாக தெரிந்த) , இசை அமைப்பாளர்க்கும்..

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள் தோழி...

    அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டீர்கள்.

    உங்கள் எழுத்துப் பணியில் இது ஒரு மைல் கல்.

    உங்கள் தோழமையை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  8. மக்கா,

    கவிதையில் எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை,இது.

    ஆனால் பாடலாக கேட்க்கும் போது கவிதையும் சேர்ந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.

    ரொம்ப சந்தோசமாய்,நிறைவாய் இருக்கு தேனு.

    இனி,

    "நான் தேனுவின் மக்கா,நம்புங்கப்பா."என்று சொல்கிற காலங்கள் வரட்டும். :-)

    weldone மக்கா. congrats!

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் அக்கா, நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப அழகா வார்த்தைகளைக் கொடுத்திருக்கீங்க...
    அட.. அந்த ரெண்டு வரிக்கும் இசையமைப்பாளருக்கு காப்பிரைட் தந்திருக்கணுமா!! :)
    அதிலும் உங்க தனித்தன்மை தெரியுது.. :)
    மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா....
    இன்னும் கொஞ்ச நாள்ல பிரபல பாடலாசிரியர் கவிஞர் தேனம்மையை தமிழுலகம் வாழ்த்தும்போது நாங்கள்லாம் அவுங்கள‌ தேனக்கானு கூப்பிடுவோம்னு பெருமைப் பட்டுக்குவோமே!! :)

    மனதார்ந்த வாழ்த்துக்கள் அக்கா...
    மென்மேலும் சிறப்பான எழுத்துக்களை எதிர்பார்க்கும் உங்கள் வாசகன் ,
    பிரபு

    பதிலளிநீக்கு
  11. அழகானப் பாடல்...வாழ்த்துக்கள் தோழி..

    பதிலளிநீக்கு
  12. மனம் கனிந்த இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் தேனம்மை...

    செல்வா, விவேக் நாராயண் உள்ளிட்ட பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    //அன்பென்னும் ஊஞ்சலில் அழகாக அசைந்திடும்
    ஆனந்தப் பெண்மை அழகே!//

    இந்த ஆரம்ப வரிகள் பல ஹிட் பாடல்களை (அன்பெனும் மழையிலே அகிலங்கள் நனையவே - மின்சார கனவு, ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா - பொன்னூஞ்சல்) நினைவுபடுத்தியது...

    பதிலளிநீக்கு
  13. பெண்மையைப்போற்றும் அழகான பாடல்.///அன்னப் பறவையாய் நல்லதை கைக்கொண்டு
    அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!///அருமையான வரிகள்.சகோ.தேனம்மை மகளிர்தினவாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  14. "பெண்ணே சக்தி"
    அருமையான பாடல்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. கவிதை தேனக்கா... புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்..அக்கா நீங்க திரையுலகத்திற்கு பாடல் எழுதும் தூரம் அதிகம் இல்லை.,
    சீக்கிரம்... ஒரு பாடல் ஆசிரியர் எதிர் பார்கிறேன்...

    பதிலளிநீக்கு
  16. நல்லாயிருக்குங்க. வாழ்த்துகள். மகளிர் தினத்துக்கும்,

    பதிலளிநீக்கு
  17. பாடல் நன்றாக இருந்தது. தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாடல் மலர காரணமாக இருந்த செல்வா சாருக்கு நன்றி.

    மகளிர் தின நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. //அன்னப் பறவையாய் நல்லதை கைக்கொண்டு
    அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!//

    வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  19. தங்களின் அமுதவரிகளோடு அருமையான இசைசேர்ப்பும் சேர்ந்து மிக அழகா ஒலிக்கிறது.

    மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்.

    விஜய்

    பதிலளிநீக்கு
  20. மகளீர் தின நல்வாழ்த்துக்கள்.உங்கள் பரிசுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அழகாக பாடல் எழுதி இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
    அருமையாக பாடி இசை அமைத்து இருப்பவருக்கு வாழ்த்துக்கள்!
    அனைத்தையும் ஒன்று கூடி வர செய்த செல்வா அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். to me
    show details 7:49 PM (10 hours ago)


    நல்வாழ்த்துகள். வியப்பு ஆச்சரியம் மகிழ்ச்சி.


    பின்னூட்டம் ஏற்க மறுக்கிறது.


    நட்புடன்
    ஜோதிஜி

    பதிலளிநீக்கு
  23. நன்றி பத்மா

    நன்றி பனித்துளி சங்கர்

    நன்றி நாய்க்குட்டி மனசு

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி சூர்யா

    பதிலளிநீக்கு
  25. நன்றி கோபிநாத் உங்க மனம் நிறைந்த வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  26. நன்றி வினோத் கௌதம்

    நன்றி ராகவன் உங்க அன்பான வாழ்த்துக்களுக்கு

    பதிலளிநீக்கு
  27. நன்றி மக்கா உங்க அன்பு தோய்ந்த வாழ்த்துக்களுக்கு

    பதிலளிநீக்கு
  28. நன்றி சை கொ ப

    நன்றி பிரபு உங்க வார்த்தைகள் என் எழுத்துக்கு கிடைத்த அன்புப் பரிசு பிரபு

    பதிலளிநீக்கு
  29. நன்றி புலிகேசி

    நன்றி கோபி

    நன்றி ஸாதிகா

    பதிலளிநீக்கு
  30. நன்றி மஹராஜன்

    நன்றி சிவாஜி சங்கர்

    நன்றி ரமேஷ்

    பதிலளிநீக்கு
  31. நன்றி வானம்பாடிகள்

    நன்றி ஹுசைனம்மா

    நன்றி அண்ணாமலையான்

    பதிலளிநீக்கு
  32. நன்றி விஜய்

    நன்றி சாந்தி

    நன்றி சித்ரா

    பதிலளிநீக்கு
  33. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

    பதிலளிநீக்கு
  34. பாடலை இதற்கு முன்பே கேட்டிருக்கிறேன். இது உங்கள் வரிகள் என்று இன்றுதான் தெரியும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...