சனி, 13 மார்ச், 2010

காயின் ருசி

கரித்துக் கொட்டிய
துப்புரவுப் பெண்
வாரிச் செல்கிறாள்,
இலைத் துகள்
இல்லாத நடைபாதையை...

ஒடித்துப் போட்ட
பக்கத்து பால்கனிக்காரர்கள்
முகத்தில் இடிக்காது
என்ற நிம்மதியில்...

முறித்துப் போட்ட
கீழ்வீட்டுப் பெண்
காயும் துணிகளில்
பூச்சி விழுவதாய்...வெட்டிப் போட்டபின்
அள்ளவந்த வண்டிக்காரன்
பிணம் சுமக்கும் டாக்ஸி போல்
பேரம் பேசி...

எல்லோருக்கும் நிம்மதி
வெட்டுப்பட்ட தண்டின் மேல்
விழுந்து கிடந்தன பச்சைப்
பால்துளியாய் சில இலைகள்...

பக்கத்து அஸ்பெஸ்டாசில்
கிடந்தசில பழுத்த இலைகள்
அதன் கல்லெடுத்துப் பால்
ஊற்றிய ஞாபகமாய்...

முதலில் முறிந்த
அதன் ஒற்றைக்கிளை
ட்யூப்லைட்டையும் சாய்த்து
சிலநாள் இருண்டு கிடந்தது
துஷ்டியுடன்...

காக்கைகளும் குருவிகளும்
வண்டுகளும் இல்லாமல்
கண்கள் காயும் வெளிச்சத்தில்
வறண்டு கிடந்தது
சிமெண்ட் தரை...

நிலவு கூட
மொட்டையடித்தது போல்
இலையிழந்து
அழகிழந்து
களையிழந்து...

விழிப்புவரும் நடுநிசி
ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து
துக்கமாய்...

திரும்பவும் சுரக்கவே இல்லை
அதன் முலைகள்
வெட்டவேண்டும் என
நினைத்த என் மனதின்
கொத்துப்பட்டதுபோல்...

எப்போதாவது
நினைத்துக் கொண்டார்கள்
எல்லோரும்
அதன் காயின் ருசி பற்றி...

http://www.vikatan.com/ http://youthful.vikatan.com/ http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem110310.asp

இது மார்ச் மாதம் 12ம் தேதி யூத்ஃபுல் விகடனில்
வந்து இருக்கு

51 கருத்துகள் :

Chitra சொன்னது…

Congratulations, Akka! Very nice one!

மைதிலி கிருஷ்ணன் சொன்னது…

ithu entha maraththai patriya kavithai.. murungai maramaa?? illa vera ethaavathu?? seekiram sollunga..

D.R.Ashok சொன்னது…

அழ்கு கவித

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வார்த்தைகளை செதுக்கும் ரகசியத்தை எனக்கும் சொல்லி கொடுங்களேன்.....

கே.ரவிஷங்கர் சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது.

சுருக்கி இருந்தால் தாக்கம் “நச்” என்று
உறைக்கும் என்பது என் யூகம்.

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

சசிகுமார் சொன்னது…

எப்பவும் போல சொல்லிடறேன் அக்கா, நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

கவிதை மிக அருமை. மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

நீங்களும் இப்படி எழுத ஆரம்பிச்சுட்டீங்களா..

வெரி குட்...

திவ்யாஹரி சொன்னது…

இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துக்கள்..

அக்பர் சொன்னது…

ரொம்ப அருமை அக்கா.

மரம் வளர்க்க மற்றவர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

Jaleela சொன்னது…

காயின் ருசி மிக அருமை, யுத் ஃபுல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

நேசமித்ரன் சொன்னது…

வாழ்த்துக்கள்

சொற்களின் இறுக்கம் முதிர்வு

சுடரின் நீளம் புகை முடி வரையா என்ன ?
கவிதை யும் அப்படித்தானே ?!

:)

Vidhoosh சொன்னது…

சந்தோஷமாய் இருக்குங்க. வாழ்த்துக்கள். கவிதை அருமை.

ஸாதிகா சொன்னது…

கை தேர்ந்த சிற்பி பார்த்துப்பார்த்து சிற்பத்தை நயம் பட செதுக்குவதுபோல் கவிதையையையும் அழகுற பார்த்துபார்த்து புனைந்துள்ளீர்கள் சகோதரி.வாழ்த்துக்கள்.

padma சொன்னது…

நிலவு கூட
மொட்டையடித்தது போல்
இலையிழந்து
அழகிழந்து
களையிழந்து...

மன வருத்தம் எப்படி எல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள்!ரொம்ப நல்ல கவிதைக்கா

Sivaji Sankar சொன்னது…

அக்கா RockZZ....

தமிழ் உதயம் சொன்னது…

எங்கேயிருந்தாவது கவிதையின் கருவை தூக்கி கொள்கிறீர்கள்.

ஆச்சர்யப்படுத்துகிறிர்கள்.

காயின் ருசி நன்றாக இருந்தது.

நாய்க்குட்டி மனசு சொன்னது…

ஒரு சிறு கருப்பொருளும் உங்களுக்கு கவிதையாகி விடுகிறது. good

வினோத்கெளதம் சொன்னது…

மறுப்படியும் வாவ்..

PPattian : புபட்டியன் சொன்னது…

கட்டாயமாக.. மரம் ஒரு பிரிவுதான்.. அருமையான கவிதை. நாவிஷ் செந்தில்குமார் கூட இதே போல் ஒரு கவிதை புனைந்திருந்தார்

வாழ்த்துகள்

விஜய் சொன்னது…

இயற்கையை வாழவைக்க வலியுடன் எழுதப்பட்ட கவிதை.

வாழ்த்துக்கள்

விஜய்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா

நன்றி மைதிலி

நன்றி அஷோக்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சை கொ ப

நன்றி ரவிஷங்கர்

நன்றி ராம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சசிகுமார்

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி ராகவன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன்

நன்றி வித்யா

நன்றி ஸாதிகா

thenammailakshmanan சொன்னது…

நன்றி பத்மா

நன்றி சிவாஜி

நன்றி ரமேஷ்

thenammailakshmanan சொன்னது…

நன்றி நாய்க்குட்டி மனசு

நன்றி வினோத்

நன்றி பட்டியன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

மிக அருமை...!

பிரபு . எம் சொன்னது…

//நிலவு கூட
மொட்டையடித்தது போல்
இலையிழந்து
அழகிழந்து
களையிழந்து...//

நான் எங்குபோனாலும் என் கூடவும் வந்தாலும் நிலவுக்குக் கவிஞர்கள்தான் சொந்தக்காரர்கள் என்று நினைத்திருக்கிறேன்.... இருப்பினும் பூமியில் நிலவுக்கு " நெருங்கிய" சொந்தம் ஓங்கிவளரும் மரங்கள்தானே...

அற்புதமான பார்வை அக்கா....

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

ரொம்ப அருமை,உங்களைபோல

சே.குமார் சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது.

யுத் புல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

செந்தில்குமார் சொன்னது…

இது எனது முதல் வருகை

இந்த இடம் அருமை

விழிப்புவரும் நடுநிசி
ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து
துக்கமாய்...

லேசான வருடல் இருதயத்தில் ......

செந்தில்குமார் சொன்னது…

இது எனது முதல் வருகை


விழிப்புவரும் நடுநிசி
ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து
துக்கமாய்...


எனக்கு ஏதோ லேசான வருடல் இந்த இடத்தில் அருமை.........

செந்தில்குமார் சொன்னது…

இது எனது முதல் வருகை

விழிப்புவரும் நடுநிசி
ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து
துக்கமாய்...

இந்த இடத்தில் லேசான வருடல் அருமை..........

பெயரில்லா சொன்னது…

இது எனது முதல் வருகை

விழிப்புவரும் நடுநிசி
ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து
துக்கமாய்...

இந்த இடத்தில் லேசான வருடல் அருமை..........

ரிஷபன் சொன்னது…

எப்போதாவது
நினைத்துக் கொண்டார்கள்
எல்லோரும்
அதன் காயின் ருசி பற்றி...
டச்சிங்!

ரிஷபன் சொன்னது…

எப்போதாவது
நினைத்துக் கொண்டார்கள்
எல்லோரும்
அதன் காயின் ருசி பற்றி...
டச்சிங்!

Mrs.Menagasathia சொன்னது…

கவிதை மிக அருமை அக்கா!! படித்து முடித்த பிறகு ஏனோ மனம் வலித்தது...

விகடனில் வந்ததற்க்கு வாழ்த்துக்கள் அக்கா!!

புலவன் புலிகேசி சொன்னது…

மரங்களின் தேவையை அழகா சொல்லிட்டீங்க...வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு சொன்னது…

இது என் முதல் வருகை, ஆனால் நச் என்று ஒரு கவிதை. மைதிலி கேட்டது போல, சிறு வயதில் நான் ஆசையாய் ஏறிய முருங்கை மரமா?

வெட்டியவுடன் காலியான வெறுமை
வெட்டிய இடத்தில் கூட மட்டும் அல்ல
என் மனதிலும் தான்.

நல்ல கவிதை, இந்த வெறுமை உங்கள் கவிதையை படித்தவுடன் என் நினைவுக்கு வந்தது. மிக்க நன்றி.

அம்பிகா சொன்னது…

ஒவ்வொரு முறியும் மரக்கிளைகளை வெட்டும் போது இதே உணர்வும் வலியும் தெரியும். ஆனால் உங்களை போல் அதை அழகாக கவிதையாக்க தெரியவில்லை. அருமையான கவிதை.

விக்னேஷ்வரி சொன்னது…

ரொம்ப நல்லாருக்குங்க இந்த நிதர்சனக் கவிதை.

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அருமை தேனம்மை.

thenammailakshmanan சொன்னது…

நன்றி வசந்த்

நன்றி பிரபு

நன்றி பாஃத்திமா ஜொஹ்ரா

நன்றி குமார்

thenammailakshmanan சொன்னது…

நன்றி செந்தில் குமார்

நன்றி பெயரில்லா

நன்றி ரிஷபன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மேனகா

நன்றி புலிகேசி

நன்றி பித்தனின் வாக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி அம்பிகா

நன்றி விக்னேஷ்வரி

நன்றி ராமலெக்ஷ்மி

SUFFIX சொன்னது…

பல முறை படிக்க வைத்து விட்டீர்கள், நல்லா இருக்கு. விகடன் வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...