எனது பதிமூன்று நூல்கள்

ஞாயிறு, 31 மே, 2015

புதிய பார்வை :- வாசகர் கடிதம்.

மதுரையில் இருந்து புதிய பார்வை என்ற இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. ஆசிரியர் அகமுடை நம்பி. அறிவுடை நம்பி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார்.

அந்தப் புதிய பார்வையில் வெளியான சிறுகதைக்கு வந்த வாசகர் கடிதம் இது.

வேலை கிடைச்சிட்டுது என்ற சிறுகதை வெளியாகி இருந்தது.

அந்த சிறுகதை இதுதான்.

புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை. 

அதற்குத் திருவிடை மருதூரைச் சேர்ந்த எழில்வேந்தன் என்பவர் வாழ்த்துக் கடிதம் எழுதி இருக்கிறார்.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஐங்கர தேவா போற்றி.

 ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஐங்கர தேவா போற்றி.ஓம் இருவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் அம்மையின் பிள்ளாய் போற்றி
ஓம் ஆதிமூல விநாயகா போற்றி
ஓம் துண்டி விநாயகா போற்றி
ஓம் கருணை செய்வாய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வேதப்பொருளே போற்றி
ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
 


இவர் குல்பர்கா சரவண பசவேசுவரர் கோயிலில் உள்ள  சரவண பசவேசுவரர் சந்நிதியின் நிலையில் உள்ள விநாயகர்.
இவர் அதே கோயிலின் வெளிப்புற சந்நிதியின் கோபுர நிலையில்  இருக்கும் விநாயகர்.
குல்பர்கா ஏடிஎம் டீ பாயிண்டில் உள்ள விநாயகர்.

சனி, 30 மே, 2015

சின்னச் சின்ன சந்தோஷங்கள். :)

பீபிள்ஸ் டுடேயின் சப் எடிட்டர் உமாகாந்த் திருக்குமரன் தான் வாங்கிய புத்தகங்களை முகநூலில் முகப்புப் படமாகப் போட்டிருந்தார். ஆஹா அஞ்ஞாடிக்குப் பக்கத்தில் அன்ன பட்சி. என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி :)


ஃபேஸ்புக் முரசில் ஒன் லைனர்.

ஃபேஸ்புக் முரசில் ஒரு ஒன்லைனர் கேட்டு இன்பாக்ஸில் போடச் சொல்லி இருந்தார்கள். அதுதான் இது :)

தேன் பாடல்கள். பொன் வீதியில் மானும் முயலும் மயிலும்.

341. தோளின் மேலே பாரம் இல்லை.


 கல்லூரிப் பருவத்தில் வசந்தி அக்கா டான்ஸ் ஆடிய பாடல் என்பதால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  கார்த்திக் திலிப் ஆடும் பாடல் காட்சி அப்போ க்ரூப்பாக இந்த ஸ்டைலில் கிடார் எல்லாம் வைத்துக் கொண்டு ஆடுவது புதுசு. அக்கா ஆடிய ஹாஸ்டல்டே டான்ஸில் பின்பக்கம் ஒரு ஓடம் திரையின் பின்னால் நிழலாக அசைய முன்பக்கம் ஒரு கறுப்பு ட்ரெஸ்ஸில் வெள்ளையாக பெயிண்ட் அடிக்கப்பட்ட ஸ்கெலிடன் போல ஆடியது 1982 இல் ரொம்பவே புதுசு. கட்டறுக்கும் காளைப்பருவம் ஆனால் இந்தப் பாட்டை இப்போதுதான் பார்த்தேன்.

342. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாள்

மிக அருமையான சந்த நயம் மிகுந்த பாடல். கவிதா முத்துராமன் ஜோடி. காற்றினிலே வரும் கீதம் படம். பெரும்பாலான படங்களும் பாடல்களுமே கூடப் பார்த்திருக்கமாட்டேன் ஆனால் இசையும் குரலும் குழையும் அற்புதம் இந்தப் பாடலில் கவர்ந்திழுக்கும். அதே போல ஹொகனேக்கலில் தெறிக்கும் சாரலில் ஒரு வானவில்லும் உருவாகி இருக்கும். 

வெள்ளி, 29 மே, 2015

கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

கல்வாழைப்பூக்கள் காரைக்குடியிலும் பார்க்கலாம். இது நான் லால்பாக் சென்றிருந்த போது எடுத்தது.

எந்தச்சூழ்நிலையிலும் சிறிதளவே தண்ணீரில் வளர்ந்து பூக்கும் தன்மையுடையது கல்வாழைச்செடிதான். கழிவு நீரைக்கூட சுத்திகரிக்குமாம் இந்தச் செடி. சோப்பு நீரைக்கூட சுத்தம் செய்யுமாம்,

பொங்கல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ் , குமுதம் பக்தி ஸ்பெஷல்.சிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல் :-

தேவையானவை :-
சிவப்பரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
பனை வெல்லம் – 2 அச்சு
பனங்கருப்பட்டி – 1 துண்டு ( 50 கி)
பால் – ½ கப்
ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் )
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி கிஸ்மிஸ் – 10.

வியாழன், 28 மே, 2015

கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

லால் பாக் ஃப்ளவர் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சில பூக்களை இங்கே பகிர்கிறேன். பலவற்றில் பெயர் தெரியாது. சில டெய்சி, கார்னேஷன், ஆர்கிட், சாமந்தி, லில்லி வகையைச் சார்ந்தவை.

குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.37.எண் விளையாட்டு./காகுரே. 

இது தினமலர்ல வந்துகிட்டு இருக்கு சுடோகு போலத்தான். இதுக்குப் பேரு காகுரே.இது குறுக்கெழுத்துப் புதிர்போலக் கட்டங்களில் சில எண்களை அங்கங்கே கொடுத்திருப்பாங்க. மேல் கீழா, இடம் வலமாக் கூட்டினா நமக்கு அந்தக் கூட்டுத் தொகையில் வரணும். வந்த எண்ணே வரக்கூடாது. மூணு கட்டம் கொடுத்து 18 ந்னு கொடுத்திருந்தா 9 +1 +8 இல்லைன்னா 9+2+7 , 9+3+6, 9+5+4 ,5+6+7, 4+6+8 , 7+3+8 இன்னு வரும். நாலு கட்டம்னா 9+1+2+6 இல்லைன்னா 9+1+3+5, 9+2+3+4, 8+1+2+7, 8+2+3+5, 8+1+4+5, 8+1+3+6, 8+1+5+4, அண்ட் சோ ஆன் இருக்கும்.. J

38.வார்த்தை விளையாட்டு./குறுக்கெழுத்துப் புதிர்.

பன்னெடுங்காலமா விளையாடின விளையாட்டு இது. தினமலர் வாரமலர்ல வருது. ஒரு க்ளூ கொடுத்திருப்பாங்க. மேலும் கீழும் வலமும் இடமும் இதை ஃபில்லப் செய்யணும். இத ஃபில் பண்ணி அனுப்பினா ப்ரைஸ் எல்லாம் உண்டுன்னு அறிவிச்சிருப்பாங்க ராணிமுத்துவுல. J

புதன், 27 மே, 2015

பூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.


இரண்டாம் ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயில்களைச் சுற்றிப் பிரம்மாண்டமான பூங்காவும் புல்வெளியும் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அழிந்து வரும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க யுனெஸ்கோ எடுத்திருக்கும் அதிரடி முயற்சி இது. இருந்தும் அங்கங்கே மக்கள் குப்பைகளைப் போட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள்.

திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-

குவாலியர் கோட்டை. கோடையில் கொழுந்துவிட்டெறிகிறது குவாலியர் மாநகரம்.அதைவிட அதிகமாய் அங்கே கொழுந்து விட்டெறிகிறது ஜௌஹார்குண்ட் என்னும் நெருப்புக் குண்டம். வண்ண வண்ணமாக கண்ணாடிகள் பதித்த உடையணிந்த அழகும் இளமையும் நளினமும் நிரம்பிய ராஜபுதனத்துப் பெண்கள் நிரம்பியிருக்கின்றார்கள் நெருப்புக்குண்டத்தின் முன். சம்சுதீர் அல்துமிஷின் படைகள் ஆக்கிரமிக்கப் போகின்றன கோட்டையை. ராஜா இறந்தபின் ராணிகள் மீதும் ஆக்கிரமிப்பு நடந்துவிடும். அதைப் போன்ற ஒரு அவலம் நிகழ்ந்துவிடும்முன் ராணிகள் அனைவரும் அங்கே அரண்மனைக்கு நீர் வழங்கிக்கொண்டிருந்த குளத்தில் குதித்து உயிரிழக்கின்றார்கள். மிச்சமுள்ளவர்கள் ஜௌஹார் குண்டத்தில் தீப்பாய்கிறார்கள். எங்கும் பரவுகிறது சதியின் வாசனை. சதி தேவிகள் பதிவிரதா தேவிகள் என்று வணங்கப்படுகின்றார்கள்.

செவ்வாய், 26 மே, 2015

நமாமி கங்கே !!!. NAMAMI GANGE !!!

நைரோபியில் வசித்துவரும் என் அன்புத் தோழி காஞ்சனா மோகன் அவ்வப்போது முகநூலில் தமிழ் இலக்கியங்களில் இருந்து தான் வாசித்து மகிழ்ந்த பகுதிகளைப் பகிர்வார். இது மட்டுமல்ல தனக்குப் பிடித்த மேற்கோள்கள், சாதனைகள், பாடல்கள் ஆகியவற்றையும் பகிர்வார். மிக உன்னதமான ரசனைகளின் தொகுப்பு அவர்.

இன்று நமாமி கங்கே பற்றி அவருடைய மொழியில் மிக அருமையாகப் பகிர்ந்து இருந்தார். கங்கை நம்மோடும் நம் இதிகாசத்தோடும் வாழ்வியலோடும் ஒன்றிக் கலந்து விட்டவளல்லவா. இந்தியாவில் எத்தனை நதிகள் இருந்தாலும் கங்கைக் கரையில் இறப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. கங்கா மாதாவை மட்டுமல்ல எந்த நதிக்கரைக்குப் போனாலும் பூஜா கரோ என்று பண்டிட்ஜிகள் கேட்பார்கள்.

கங்கே ச யமுனே என்றுதான் ஸ்நானம் செய்யும்போது சொல்லும் ஸ்லோகமும் ஆரம்பிக்கிறது. பூஜையின்போதும் இப்படித்தான். நதிக்கரை நாகரீகங்களில் தழைத்து வாழ்ந்த நாம் இப்போது வாட்டர் கேன் தண்ணீரில் உயிர்வாழ்கிறோம்.

கொட்டிய கழிவை எல்லாம் சுமந்து நம்மைப் புனிதப்படுத்திய கங்கையை நாம் இனியாவது மாசுபடாமல் காப்போம். திருச்சூர் சகோதரர்கள் பாடிய இந்த அறிமுகப் பாடல் மனதுக்கு மிக இன்பமாக இருந்தது எனவே பகிர்கிறேன். நன்றி காஞ்சனா ( எனக்கு இதைச் சொல்ல நைரோபியிலிருந்து இந்தியாவையும் கங்கையையும் நேசிக்கும் & சுவாசிக்கும் தோழி தேவைப்பட்டிருக்கிறார் :) :) :)

இனி காஞ்சனா மோகனின் எழுத்தில் நமாமி கங்கே !

/////நமாமி கங்கே... நமாமி கங்கே!

திருச்சூர் பிரதர்ஸ்!

நைரோபியில் ஐயப்பா கோவில் ஆண்டு நிறைவு உற்சவத்தை முன்னிட்டு,
” ஐய்யப்ப சேவா சாமாஜ் “ன் அழைப்பை ஏற்று நைரோபிக்கு விஜயம் செய்து கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வந்திருக்கிறார்கள்,
” திருச்சூர் ப்ரதர்ஸ் ’’ ___
திரு ஸ்ரீ கிருஷ்ண மோகன் & திரு. ராம் குமார் மோகன் !

‪கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

241. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். எம் பி ஏ சேர்றதுக்கெல்லாம் ஒரு வயசு லிமிட் இல்லையா. என்ன ஏன் தினம் வந்து எம் பி ஏ சேரச் சொல்லுது எஃப் பி.

-- வழக்கமா பாத்திரம் பண்டம் , ஃபர்னிச்சர் கடை, சாப்பாடுக்கடை , புத்தகக் கடை ,  இல்லாட்டி புடவை, நகை, பிசியோதெரஃபி ஃபோட்டோ போட்டு லைக் பண்ண சொல்லும். :P :P :P  


242. கவிஞர்கள் ம(றை) றந்து போகிறார்கள் . கவிதைகளை மறக்க முடிவதில்லை

243. தினமும் இனிமேல் ஒரு மணி நேரம்தான் ப்லாக், ஃபேஸ்புக் வரணும்னு தீர்மானம் செய்துட்டு ( புத்தாண்டு சபதம் மக்காஸ் ) ஒரு நாளைக்கு 10 தரம் எட்டிப் பார்க்கிறேன், முகநூல் சுவரை. கழுதை கெட்டால் குட்டிச் சுவர், நமக்கு ஐ மீன் எனக்கு முகநூல் சுவரோ :) :) :)

244. மிகுதன்னுணர்வுத் தன்மை எதையும் அண்டுவதில்லை. அண்டவிடுவதுமில்லை.

திங்கள், 25 மே, 2015

ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும் நீர்க்கோல வாழ்வை நச்சி.


3. ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும்:-

கவிஞர் ஈழவாணி பல பத்ரிக்கைகளின் ஆசிரியராகப் பணி புரிந்தவர். இரு கவிதை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு குறு நாவல், ஒரு தொகுப்பு நூல் என ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளார். இது ஆறாவது நூல். போன வருடமும் இந்த வருடமும் கூட கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.

கூண்டுக்கிளி
கூண்டுக்கிளி:-
=================
அவள் தங்கக் கூண்டுப் பறவை. விநாயகா மில்ஸின் ஓனர் விஸ்வநாதனின் மகள் விசித்ரா.

அந்த ஆவேசக் கோஷங்கள் அவளுக்குப் புதியவை. அவளுக்கு ரொம்பவும் ஆச்சர்யமாய் இருந்தது இப்படியெல்லாம் கொடுமைகள் உண்டாவென்று. தானும் ஊர்வலம் போகும் அந்தப் பெண்களுடன் சேர்ந்து நடப்பதாய் நினைத்துப் பார்த்தாள். அது சுலபத்தில் நடக்கக் கூடியதில்லை. டாடி பார்த்தால் தன் மானமே போய்விட்டதாக வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். மம்மியை நினைத்தவுடன் பிடரியில் வியர்த்தது அவளுக்கு.

அந்தப் பெண்கள் ‘லோயர் மிடில்’ வகுப்பைச் சார்ந்தவர்கள். சேலை அணிந்து கொண்டிருந்த அவர்கள் பெண் எரிப்பையும் வரதட்சணையையும் கண்டனம் செய்து கொண்டு சென்றார்கள்.

போர்டு வாசகங்கள், “ பெண் எரிப்பை ஒழிப்போம்” எனக் கூப்பிட்டன.

“ வாங்காதே.. வாங்காதே.. வாலிபமே.. வரதட்சணை வாங்காதே. “

கொடுக்காதே கொடுக்காதே பெண்குலமே வரதட்சணை கொடுக்காதே.. “

”பொறுத்தது போதும் பெண்ணே பொங்கி எழு..”

”பெண்களைக் கேவலப்படுத்தும் ஆபாசப் புத்தகங்கள் விளம்பரங்கள் படங்களைக் கொளுத்து. “

அவர்களின் வார்த்தைகள் சத்தியமானவையாய் வந்து காதை அறைந்தன. டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணியதும்தான் தான் உறைந்து போயிருப்பது அவளுக்கு உறைத்தது.

ஞாயிறு, 24 மே, 2015

செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
இன்னருள் புரிந்திடுவாய்.
கன்று போல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
அக்கினி ஆத்தாஉமையே !.
 

— இது என் அம்மாவின் கவிதை அக்கினி ஆத்தா பற்றி..:).

68. சாமி வீடு.  படைப்பு வீடு.

70. சாமி வீடு ,படைப்பு வீடு :-

செட்டிநாட்டுப் பகுதியில் படைப்புக்கென்று தனி வீடுகள் உண்டு. அக்கினியாத்தா, மெய்யாத்தா, அடைக்கம்மை ஆத்தாள், அழகன் செட்டி,சிவகாமி ஆயா, காளி ஆயா ( இரணிக்காளி )  , பாப்பாத்தி என்று ஏகப்பட்ட படைப்புகள் நடைபெறும். 

படைப்பு அன்று காலை குழந்தைகள் அல்லது பெண்கள் சாமி வீட்டைக் கூட்டி மெழுகி சுத்தம் செய்து கோலமிட்டு வைப்பார்கள். அந்த வருடம் சீட்டு விழுந்தவர்கள் குடும்பத்தினரோடு மற்றவர்களும் கைகோர்த்து செயல்படுவது அழகு. உள்ளூரிலேயே இருப்பவர்கள்தான் இதன் பெரும்பலம். :)

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி.ஓம் வாதாபி கணபதி போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் இளம்பிறை சூடினாய் போற்றி
ஓம் தம்பிக்கு உதவினாய் போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியாய் போற்றி
ஓம் உற்றதுணை நீயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் விண்ணோர் தலைவா போற்றி
 


இவர் ராமேஸ்வரம் சென்ற காரில் இருந்தவர். மல்லிகையில் இருக்கும் விநாயகர்.
 நம்ம காரைக்குடி நெல்லி மரத்துப் பிள்ளையார்.

சனி, 23 மே, 2015

"என் வானிலே" "டீக்கடைச் சூரியன்”


2. என் வானிலே :-

சென்ற ஆண்டு அகநாழிகையின் வெளியீடாக பல கவிதைத் தொகுதிகள் மலர்ந்துள்ளன அதில் ஒன்று நிம்மி சிவாவின் என் வானிலே. மிக எளிமையாக அதே சமயம் வலிமையான கவிதைகள் படைத்திருக்கிறார் ஜெர்மனியில் வசித்து வரும் நிம்மி சிவா.

சாட்டர்டே போஸ்ட். டி வி என் சாரின் கவிதைகள். - கடிகாரமும் கடவுளும்.

முகநூலில் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு நாராயணன் சார் அவர்கள் தினமும் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்து இருப்பார்கள். அந்த இன்சொற்களையும் வாழ்த்துகளையும் படிக்கும்போதே நாட்கள் இனிமை மயமாகிவிடும். மனிதநேயமிக்க பண்பாளர். :)

மிகப் பெரும் ப்ரபலங்களுடன் புகைப்படம் இருக்கும். ஆனால் எளிமையானவர், இனிமையானவர் திரு நாராயணன் சார் அவர்கள். அவர் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் தேவர் தேவியைப் பார்த்ததுபோல் இருக்கும். 

அவருடைய நித்யப் ப்ரார்த்தனையும் மிகப் பிடித்த ஒன்று. எனவே அவருடைய ஆன்மீகப் பார்வையை கட்டுரையாக்கி அனுப்பி வைக்க வேண்டி இருந்தேன். 

அதே சமயம்  அவர் ஆங்கிலத்திலும் எழுதி வருவதால் நீங்கள் விரும்பும் எதையும் எழுதி அனுப்பலாம், ஆனால் அது தமிழில் இருந்தால் பலருக்குப் புரியும் படிப்பார்கள் என்று கூறி இருந்தேன். (ஆங்கிலம் என்றாலும் படிப்பார்கள் ஆனால் குறைந்த அளவில்தான். அதன் ரீடர்ஸ் வேறு ரகம். ) 

 சாம்பிளுக்கு அவருடைய சிந்தனையைத் தூண்டும் சில பகிர்வுகளை இங்கே பகிர்ந்துள்ளேன். 

///எனதுயிரினும் மேலான நண்பர்களே..........................

உங்களனைவருக்கும் குடும்பத்தாருக்கும் எங்களது
சிரம்தாழ் பணிவான இனிய நற்காலை வணக்கங்களும்,
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளுடன்!

உங்களனைவருக்குமான எங்களது நித்திய பிரார்த்தனைகள்
எங்களிடம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்!
-----------------------------------------------------------------------------------
சிந்தனை: பச்சை குத்தி சிவப்பு ரணம்....தேவையா?
-----------------------------------------------------------------------------------
அரிசி மாவு, கோலமாவு கொண்டு நாம் வீட்டு
வாசல் சாணமிட்டு நீர் தெளித்து, கோலம் போட்டு
வீட்டை லட்சுமிகரமாக நன்மைகள் வேண்டி நன்மை
செய்யும் கிரஹமாக அலெட்சுமியை விரட்டி அழகுற
வைத்திருப்போம்.

வெள்ளி, 22 மே, 2015

உஷ்ணப்பூ

கனவில் வசப்படாமொழியில்
கிள்ளைகள் மிழற்றிக்கொண்டிருந்தன.
நெருக்கியடித்து அமர
இடநெருக்கடியும் இல்லை
விருட்சமும் கிளையும் பெரிது.
இலைகளும் இடம்பெயர்ந்து
இருபுறமும் அணைத்திருக்கின்றன.

ராமநவமி ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.1.துளசி ரொட்டி
2.தூதுவளை அடை
3.வல்லாரை வடை
4. முடக்கத்தான் ஊத்தப்பம்.
5.முள்ளு முருங்கை தோசை.
6.புதினா பக்கோடா
7.மேத்தி பரோட்டா.
8. தேன் நெல்லிக்கனி பாயாசம்
9.பீட்ரூட் பானகம்
10.கருவேப்பிலை நீர் மோர்
11. காரட் மல்லி வடை பருப்பு.

1.துளசி ரொட்டி :-

தேவையானவை :-
புழுங்கல் அரிசி – 2 கப்
பச்சரிசி – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
துளசி – ஆய்ந்தது ½ கப்
சின்ன வெங்காயம் – 6 பொடியாக நறுக்கவும்.
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 20 மிலி.

வியாழன், 21 மே, 2015

கற்பெனப்படுவது யாதெனின்..

கற்பெனப்படுவது யாதெனின்

நைமிசாரண்யத்திலிருந்தவள்
நைருதிக்குக் கடத்தப்பட்டாள்.
நெருப்புக் குண்டம் நுழைந்து
நன்னிலை அறிவிக்கச் சொல்கிறது
ஈசான்யம்.

அல்டுமிஷ்கள் தீண்டுமுன்
கொழுந்துவிட்டெரிகிறது 
ஜௌஹார்குண்ட்.
ராஜ்புதனத்து ராணிகளை
சதி ஆலிங்கனம் செய்து.

செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

54. இரண்டாம் கட்டு - வீட்டின் பின் பகுதி. இதிலும்  பத்தி ., வளவு இருக்கும்.
( செட்டிநாட்டு வீடுகள் இரண்டு கட்டு, மூன்று கட்டு உள்ளவை.)

புதன், 20 மே, 2015

குழந்தைகள் விளையாட்டு பகுதி 7. ஈஸி சுடோகும் காகுரேவும்.இது மாதிரிப் படம்-  சுடோகுவும் காகுரேவும்.

32. பில்டிங் ப்ளாக்ஸ்.
இதில் மெக்கானிக்ஸ்/ மெக்கானோ என்ற பில்டிங்க் செட்டுகளை விளையாடி இருக்கிறார்கள் பிள்ளைகள். பில்டிங்க் மட்டுமல்ல, பாட்டரியுடன் எலக்ட்ரிக் கார் போன்றவற்றையும் வடிவமைக்கலாம். துவாரங்கள் உள்ள இரும்பு/சில்வர் தகடுகளும் ஆணிகளும் இதன் மூலப் பொருட்கள். பிள்ளைகளின் கைகளுக்கும் மூளைக்கும் கண்ணுக்கும் பயிற்சிஏரோப்ளேன், வீடு, வண்டிகள் போன்றவற்றை வடிவமைக்கலாம்.

33. க்ராஸ்வேர்டு பசில்ஸ்
பத்ரிக்கைகளில் மற்றும் காமிக்ஸ் புக்குகளில் இந்த பசில்ஸ் வரும். இது வெக்காப்லரியை செம்மையாக்கும்டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துவுல வரும்.

செவ்வாய், 19 மே, 2015

கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

221. பெரியவர்களுடன் பேசும்போது சில சமயம் குழந்தைகளுடன் பேசுவது போல் இருக்கிறது.

222. ஒரு காலத்தில் வசிஷ்டர். இப்போது துர்வாசர்..

#ஹ்ம்ம்_காலம்.

223. ரெண்டுபேர் சண்டை போடுற இடத்தை எட்டிப்பார்க்கவே பயமா இருக்கு. ( நடுநிலைய சாக்கு சொல்லி நம்மளையும் ரெண்டு போடுவாங்களேன்னுதான் ) . தெரியாம எந்த லைக் பட்டன்லயாவது கை பட்ருமோன்னு பயந்து படிக்கவேண்டியதா இருக்கு. :)

224. காஃபி விடவே முடியாமல் எவ்வளவு இனிமைக் கசப்பு.

 ஃப்ரெஷ் டிக்காக்‌ஷன் எடுத்து ஃப்ரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி வச்சிட்டு அப்போ அப்போ புதுசா பால் காய்ச்சி ரெண்டு ஸ்பூன் ஜீனி போட்டு நுரை வர ஆத்தி குடிச்சிட்டு முடிக்கும்போது காஃபியைக் கைவிட்டுறனும்னு நினைக்கிறது என்ன மாதிரியான ஹெல்த் கான்ஷியஸ்.. :)

கொண்டாட்டப் பறையும் நீதிக்கான பறையும்.

கொண்டாட்டப் பறை.

பறையறிவித்தல் என்றால் சத்தமாக அறிவித்தல் என்று அர்த்தம்.பறை என்பது  ஒரு தமிழிசைக்கருவியுமாகும். தோலால் ஆன  மேளம் எனப்படுகிறது. எல்லா இசையும் கேட்க இனிமை என்றாலும் ஆடவைக்கும் அளவு ஒவ்வொரு செல்லையும் தூண்டுவது பறைக்கே சாத்தியம்.

அடிச்சுத் தூள் கிளப்புறது என்பார்களே அதை இங்கே ஹைதராபாத்தில் உள்ள சில்பாராமம் என்ற கலாசார கிராமத்தின் கோடைத்திருவிழாவான சில்ப சந்தியா வேடிகா என்ற மாலை நேரக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாத்தேன்.

ஞாயிறு, 17 மே, 2015

மைக் மோ 'ஹனி' :)

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றிஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் மோதகம் ஏற்பாய் போற்றி
ஓம் காவிரி தந்த கருணை போற்றி
ஓம் கஜமுகனை வென்றாய் போற்றி
ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றி
ஓம் அச்சினை முறித்தாய் போற்றி
ஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றி
ஓம் அல்லல் அறுப்பாய் போற்றி
ஓம் பிரவண சொரூபமே போற்றி
ஓம் வேதாந்த வித்தகனே போற்றி
 


விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்.
இங்கும் ஹைதை கணபதிகள்.

சனி, 16 மே, 2015

விளையாட்டும் வார்த்தைகளும்.

 
சின்னப் பிள்ளையில் எவ்வளவோ விளையாட்டு விளையாடி இருப்போம். இது போல சில வார்த்தை விளையாட்டுகளை இப்போது உள்ள தலைமுறை அறியாது.
 வீட்டில் சிறு குழந்தைகளுடன்கூட கை வைத்து விரலில் தொட்டுச் சொல்லி விளையாடும் விளையாட்டும் இருக்கிறது. இது பந்து விளையாடும் போது சொல்லி அடிப்பது.

வெள்ளி, 15 மே, 2015

தேன் பாடல்கள்.காதலும் மயக்கமும்

191.சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
தமிழ்வாணன் பாணியில் தொப்பி கண்ணாடியோடு எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடும் பாடல். தாய் சொல்லைத் தட்டாதே 1961 இல் வந்தது .அந்தக் கால மோட்டார் காரும் அழகு.  ”பழகப் பழக வரும் இசை போலே தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே.”. என்ற வரிகள் அருமை.

192.அருகில் வந்தாள். உருகி நின்றாள்.
பார் மகளே பார் படம் என்று நினைக்கிறேன். மனசைச் சோகத்தில் ஆழ்த்தும் பாடல்./// உன்னைச் சூடி இருந்ததும் பெண் தானோ பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ.// இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு. அது மாளிகையானதும் அவளாலே. மண் குடிசையானதும் அவளாலே..///உருக்கும் வரிகள்.

193.மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு
அன்னமிட்ட கையில் எம்ஜியாரும் பாரதியும் நடித்தது.சுசீலாவும் டிஎம் எஸ்ஸும் பாடியது. அசல் எம்ஜியார் போலவே நடுவில் குரல் கொடுப்பார் டி எம் எஸ். அட்டகாசம்.

வியாழன், 14 மே, 2015

மயிலிறகு


பூங்காவின் சாயம் திப்பிய கிருஷ்ணன்
நெற்றியில் கட்டிய ஒற்றை மயிலிறகு
ஒரு மாறுவேடப்போட்டியில்
சிலையாக நிற்கவைத்தது குழந்தையை.
அசைந்து ஓடிக்கொண்டிருக்கும் அவனை
ஐந்து நிமிடங்கள் அசைவற்ற சிலையாக்கிய
பெருமைக்குள்ளானதாக அது
ஊர் ஊராக புத்தகங்கள் மத்தியில்
பயணப்பட்டுக்கொண்டிருந்தது.

புதன், 13 மே, 2015

சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.


201. நகரும் இரும்புக் கூடாரங்களுக்குள் நான் ஒரு சந்தோஷ நாடோடி.

202. பயிர்களைப் போல வளர்கிறது ஆசை.
.
மலையைப் போல நிஷ்டையிலிருக்கிறது மனம்.


203. கற்பாறைகளும், கருவேலங்களும் சூழ்ந்த இடத்திலும் பருத்தி, சன்னா பயிரிட்டிருக்கிறார்கள் ஆந்திர விவசாயிகள். எவ்வளவு கஷ்டப்பட்டு எப்படிப் பண்படுத்தினார்களோ.. உழைத்த அளவு விளைச்சல் உண்டான்னும் தெரியல..

204. காற்று அசைக்கிறது.
மரங்கள் ஆட்டம் போடுகின்றன.
மௌனமாய் நிலை கொள்கிறது மலை.

செவ்வாய், 12 மே, 2015

செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

53. கீழ் வாசல். - முற்றம் போன்ற அமைப்பு

-- பத்தியில் 20 முதல் மேலும் அதிக அளவில் கல் நாகம் வைத்த தூண்களும் உண்டு.

ஓலை. ( சொல்வனம் )ஒரு பறவையை
தூதனுப்ப நினைக்கிறேன்.
தன் காலை உடைத்துக் கொள்கிறது.
தீனி தின்ற வயிற்றுப் புடைப்பைக் காட்டுகிறது.
அலகின் கூர்மை மழுங்கியதாகச் சொல்கிறது.
முன்பு சென்ற தடம் ஓர்மையில்இல்லையென்கிறது.
காற்றின் திசையில் ஏழுலோகத்துக்குள்
எந்த லோகம் என்று திரும்பத் திரும்ப விசாரிக்கிறது
கடலில் அலையும் பாய்மரம் போல
இறகை விரித்து விரித்துக் கோதி
விரிவு பத்தாதென்கிறது.

திங்கள், 11 மே, 2015

பொன்முடி :- ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரிக்கையில்.”தங்கச்சிகரம். பொன்முடி ”என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.ஞாயிறு, 10 மே, 2015

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் உமையவள் மைந்தா போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் உமையவள் மைந்தா போற்றி.108 விநாயகர் போற்றி :-

ஓம் சக்திவிநாயகா போற்றி
ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி
ஓம் உமையவள் மதலாய் போற்றி
ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி
ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி
ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி
ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி
 


விநாயகனைத் தொழுதால் வினைகள் அகன்றுவிடும்.

மும்பை பாந்த்ராவில் ஷீ அமைப்பினர் ஏற்படுத்தி இருந்த விநாயகர் கூடம்.

வெள்ளி, 8 மே, 2015

குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு.27.டயர் விளையாட்டு:-
பழைய சைக்கிள் டயரை எடுத்து அதை ஒரு குச்சியால தட்டினபடி ஓட்டுறது. கூடவே ஓடுறது.. நினைச்சுப்பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. அப்போ உள்ள பிள்ளைகள் ஓடி ஆடி விளையாட எளிமையான பொருட்களைக் கைக்கொண்டிருந்திருக்காங்க. !

28.கோலிக்குண்டு  

கோலிக்குண்டு அடிக்கிறது / ஒரு வட்டத்துல போட்டு அதையும் குறிபார்த்து அடிக்கிறது.இத பளிங்குன்னும் சொல்வாங்க. இதுலயும் விதம் விதமா ஆட்டம் இருக்கு. இதே போல் ஆட்டாம் புழுக்கையையும் சுத்தி ஒரு வட்டம் போட்டு ஒரு ஓட்டாஞ்சில்லால அடிச்சு விளையாடுவாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...