வெள்ளி, 22 மே, 2015

உஷ்ணப்பூ

கனவில் வசப்படாமொழியில்
கிள்ளைகள் மிழற்றிக்கொண்டிருந்தன.
நெருக்கியடித்து அமர
இடநெருக்கடியும் இல்லை
விருட்சமும் கிளையும் பெரிது.
இலைகளும் இடம்பெயர்ந்து
இருபுறமும் அணைத்திருக்கின்றன.

உரசிய இறக்கைகளில்
உஷ்ணப்பூ பூக்க
அலகோடு அலகு
கொத்திக்கொண்டன
டக்குக் டக்கென்று.
கண்மூடிக்கொள்கின்றன
இலைகளின் கீழ் பூக்கள்.
நாணம் ஓடும் ரேகைக்கண்களால்
மூடி மூடி விழிக்கின்றன
கொத்தப்படும் கனிகள்.
ஒளிந்து கசிந்து
எட்டிப் பார்க்கிறது நிலா.
சுவையூறிய விருந்து பார்த்துப்
பசியாறிக்கொண்டிருக்கிறது பூமி.5 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பறவைகளின் காதல் உஷ்ணத்தைப்பற்றி எழுதியுள்ள கவிதை அழகு !

மிகவும் ரஸித்த வரிகள்:
========================

உரசிய இறக்கைகளில் உஷ்ணப்பூ பூக்க அலகோடு அலகு கொத்திக்கொண்டன டக்குக் டக்கென்று.
கண்மூடிக்கொள்கின்றன இலைகளின் கீழ் பூக்கள். நாணம் ஓடும் ரேகைக்கண்களால் மூடி மூடி விழிக்கின்றன கொத்தப்படும் கனிகள்.

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

இமா சொன்னது…

ரசித்து எழுதியிருக்கிறீர்கள் தேனம்மை. அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி டிடி சகோ

நன்றி இமா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...