கொண்டாட்டப் பறை.
பறையறிவித்தல் என்றால் சத்தமாக அறிவித்தல் என்று அர்த்தம்.பறை என்பது ஒரு தமிழிசைக்கருவியுமாகும். தோலால் ஆன மேளம் எனப்படுகிறது. எல்லா இசையும் கேட்க இனிமை என்றாலும் ஆடவைக்கும் அளவு ஒவ்வொரு செல்லையும் தூண்டுவது பறைக்கே சாத்தியம்.
அடிச்சுத் தூள் கிளப்புறது என்பார்களே அதை இங்கே ஹைதராபாத்தில் உள்ள சில்பாராமம் என்ற கலாசார கிராமத்தின் கோடைத்திருவிழாவான சில்ப சந்தியா வேடிகா என்ற மாலை நேரக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாத்தேன்.
சும்மாவே பிள்ளையார் சதுர்த்தி என்றாலும் சாமி ஊர்வலம் என்றாலும் திருமணம் என்றாலும் 3, 4 மணி நேரம் பறையடித்துத் தூள் கிளப்புவார்கள் இங்கே.
ஹைதை சில்பாராமத்தில் இந்தப்பறை வெறும் பறை மட்டுமே. மற்ற இசைக்கருவிகள் இல்லை.. மேலும் பாரம்பர்ய இசையை வாழவைக்கும் நோக்கில் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒல்லியான உயரமான உறுதியான இளைஞர்கள் இதை வெறுமனே நின்று கொண்டே அடிக்கவில்லை.வாசித்துக் கொண்டே சும்மா ஆடித் தீர்த்துவிட்டார்கள்.அதுவும் கால் விரல்களின் நுனியில் நின்றபடி. !!!
டண்டனக்கு டனக்குனக்கு,
டண்டக்க டண்டக்க டண்டக்க டண்டக்க
டன் டன் டன் டன் டனக்கு என்று விதம் விதமாக அடித்து ஒலியெழுப்பி மொத்தக் கூட்டத்தையும் ஈர்த்துவிட்டார்கள். கேட்ட நமக்கே உற்சாகம் பொங்கியது என்றால் ஆடிய அவர்களுக்கு உற்சாகம் குறையவே இல்லை. களைப்பே இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
இது பற்றி தமிழில் என்ன இருக்கு என்று பார்த்த போது
அட பறையில் இத்தனை வகைகளா. இத்தனை இடங்களில் இசைக்கப்படுகிறதா என்று தோன்றியது.
இங்கே பாருங்க.
பறை (இசைக்கருவி)
மேலும் இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கு என்று பார்த்தபோது
விக்கி சோர்ஸில் கிடைத்தது.
/////மருதம் - தோழி கூற்று
குட்டுவன் வெற்றிக் கொண்டாட்டப் பறை முழக்கத்தைக் கேட்ட நாரைகள் மருண்டன. அதுபோல என் உறவைப் பற்றி ஏதேதோ பேசியவர்கள் என் திருமணச் செய்தி கேட்டு மருள்கின்றனர்.////
நீதிக்கான பறை . :-
இது இலங்கையில் நடைபெற்றது.
நூறு கோடிமக்களின் எழுச்சி நிகழ்வுக்காக மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் 14. 2. 2015 அன்று பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது பெண்களால் வாசிக்கப்பட்ட பறை நிகழ்வு இது.( இது மேளக்கூத்து என்ற பறை வகை என நினைக்கிறேன் )
இதை இங்கே பாருங்க
6 பெண்கள் சும்மா அடிச்சு தூள் கிளப்புறாங்க. 6 மாசமா ட்ரெயினிங் எடுத்துக்கிட்டாங்களாம். ஆண்கள் மட்டுமே இசைக்கும் பறையைப் பெண்களும் வாசித்திருக்கிறார்கள். கடற்கரையில் பறைவாசிக்கும் பெண் சிற்பம் இன்னும் அழகா இருக்கு.
இந்தப் பாரம்பரிய இசை அமங்கலத்துக்குத்துத்தான் பயன்படுத்தப்படுதுன்னு நினைச்சேன். ஆனா கூத்து, திருவிழா, அரச செய்தி, பிறப்பு அறிவித்தல், முக்கிய செய்தி அறிவித்தல் என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி இருக்காங்க. பழனி பாத யாத்திரை முடிவிலும் சில திருவிழாக்களிலும் பறை அடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இளையோர் பலர் சுற்றிச் சுற்றி ஆட்டமாய் ஆடுவார்கள்.
சேகண்டி சங்கு என்ற ஆகியவற்றையும் ஆண்கள் மட்டுமல்ல காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை சமயத்தில் ஒரு பெண்ணும் இசைத்தார். அந்த அழகிய புகைப்படம் மேலே கொடுத்திருக்கிறேன். :)
பறையறிவித்தல் என்றால் சத்தமாக அறிவித்தல் என்று அர்த்தம்.பறை என்பது ஒரு தமிழிசைக்கருவியுமாகும். தோலால் ஆன மேளம் எனப்படுகிறது. எல்லா இசையும் கேட்க இனிமை என்றாலும் ஆடவைக்கும் அளவு ஒவ்வொரு செல்லையும் தூண்டுவது பறைக்கே சாத்தியம்.
அடிச்சுத் தூள் கிளப்புறது என்பார்களே அதை இங்கே ஹைதராபாத்தில் உள்ள சில்பாராமம் என்ற கலாசார கிராமத்தின் கோடைத்திருவிழாவான சில்ப சந்தியா வேடிகா என்ற மாலை நேரக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாத்தேன்.
சும்மாவே பிள்ளையார் சதுர்த்தி என்றாலும் சாமி ஊர்வலம் என்றாலும் திருமணம் என்றாலும் 3, 4 மணி நேரம் பறையடித்துத் தூள் கிளப்புவார்கள் இங்கே.
ஹைதை சில்பாராமத்தில் இந்தப்பறை வெறும் பறை மட்டுமே. மற்ற இசைக்கருவிகள் இல்லை.. மேலும் பாரம்பர்ய இசையை வாழவைக்கும் நோக்கில் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒல்லியான உயரமான உறுதியான இளைஞர்கள் இதை வெறுமனே நின்று கொண்டே அடிக்கவில்லை.வாசித்துக் கொண்டே சும்மா ஆடித் தீர்த்துவிட்டார்கள்.அதுவும் கால் விரல்களின் நுனியில் நின்றபடி. !!!
டண்டனக்கு டனக்குனக்கு,
டண்டக்க டண்டக்க டண்டக்க டண்டக்க
டன் டன் டன் டன் டனக்கு என்று விதம் விதமாக அடித்து ஒலியெழுப்பி மொத்தக் கூட்டத்தையும் ஈர்த்துவிட்டார்கள். கேட்ட நமக்கே உற்சாகம் பொங்கியது என்றால் ஆடிய அவர்களுக்கு உற்சாகம் குறையவே இல்லை. களைப்பே இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
இது பற்றி தமிழில் என்ன இருக்கு என்று பார்த்த போது
அட பறையில் இத்தனை வகைகளா. இத்தனை இடங்களில் இசைக்கப்படுகிறதா என்று தோன்றியது.
இங்கே பாருங்க.
பறை (இசைக்கருவி)
மேலும் இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கு என்று பார்த்தபோது
விக்கி சோர்ஸில் கிடைத்தது.
/////மருதம் - தோழி கூற்று
- ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
- தமிய ருறங்குங் கௌவை யின்றாய்
- இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
- முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ
- டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம்
- குட்டுவன் மரந்தை யன்னவெம்
- குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே.
- பாடியவர்
- கொல்லிக் கண்ணன்.
பாடல் தரும் செய்தி
திருமணம் உறுதியாயிற்று. ஊராரின் கௌவைப் பேச்சு அடங்கிவிட்டது என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள்.குட்டுவன் வெற்றிக் கொண்டாட்டப் பறை முழக்கத்தைக் கேட்ட நாரைகள் மருண்டன. அதுபோல என் உறவைப் பற்றி ஏதேதோ பேசியவர்கள் என் திருமணச் செய்தி கேட்டு மருள்கின்றனர்.////
நீதிக்கான பறை . :-
இது இலங்கையில் நடைபெற்றது.
நூறு கோடிமக்களின் எழுச்சி நிகழ்வுக்காக மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் 14. 2. 2015 அன்று பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது பெண்களால் வாசிக்கப்பட்ட பறை நிகழ்வு இது.( இது மேளக்கூத்து என்ற பறை வகை என நினைக்கிறேன் )
இதை இங்கே பாருங்க
6 பெண்கள் சும்மா அடிச்சு தூள் கிளப்புறாங்க. 6 மாசமா ட்ரெயினிங் எடுத்துக்கிட்டாங்களாம். ஆண்கள் மட்டுமே இசைக்கும் பறையைப் பெண்களும் வாசித்திருக்கிறார்கள். கடற்கரையில் பறைவாசிக்கும் பெண் சிற்பம் இன்னும் அழகா இருக்கு.
இந்தப் பாரம்பரிய இசை அமங்கலத்துக்குத்துத்தான் பயன்படுத்தப்படுதுன்னு நினைச்சேன். ஆனா கூத்து, திருவிழா, அரச செய்தி, பிறப்பு அறிவித்தல், முக்கிய செய்தி அறிவித்தல் என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி இருக்காங்க. பழனி பாத யாத்திரை முடிவிலும் சில திருவிழாக்களிலும் பறை அடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இளையோர் பலர் சுற்றிச் சுற்றி ஆட்டமாய் ஆடுவார்கள்.
சேகண்டி சங்கு என்ற ஆகியவற்றையும் ஆண்கள் மட்டுமல்ல காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை சமயத்தில் ஒரு பெண்ணும் இசைத்தார். அந்த அழகிய புகைப்படம் மேலே கொடுத்திருக்கிறேன். :)
சொல்லாமல் கொள்ளாமல் கால்கள் தானே ஆடும்...!
பதிலளிநீக்குபதிவினில் ‘பறை’யைப்பற்றி நன்கு ’பறை’த்து
பதிலளிநீக்குபடிப்போர் அனைவரையும் ’ஆட’ வைத்துவிட்டீர்கள்.
தொடர்ந்து பறை ஒலியே அருகே நின்று கேட்டால் நம் காது கிழிந்து ரத்தமே வந்திடுமே ! :)
படங்கள் அத்தனையும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
ஆம் டிடி சகோ ; ஒரு படத்தில் காஜா ஷெரீஃப் ( பாக்கியராஜ் படம் என நினைக்கிறேன் ) இந்த சவுண்ட் கேட்டு ஆடிக்கொண்டே இதை வாசிக்கும் இடத்துக்கு ஓடி விடுவார். :)
பதிலளிநீக்குஅஹா நன்றி கோபால் சார். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!