எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 மே, 2013

இன நல்லிணக்கம்.

இன நல்லிணக்கம்:-

மனிதர்கள் தம் சொந்த தேசத்திலேயே ஜாதியால் மதத்தால் மொழியால் வேறுபட்டிருப்பது போல  வாழச் சென்ற தேசங்களில் இனத்தால் வேறுபட்டிருக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளிலே கூட வடநாட்டவர், தென்னாட்டவர் என்று வேற்றுமை கருதப்படுகிறது. ஆனால் இனம், மொழி, மதம் , ஜாதி இவை எவற்றாலும் வேற்றுமை பாராட்டாமல் இன நல்லிணக்கத்தோடு இருக்கும் நாடு சிங்கப்பூர்.

செவ்வாய், 28 மே, 2013

விலையின்றிப் பெறமுடிவதும் விலையின்றித் தரமுடிவதும்..

போரும் அமைதியும் புத்தகத்தில் விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் அண்ணன் வேலாயுதம் அவர்கள் எழுதிக் கொடுத்த வரிகள் இவை.. என்னைப் பொறுத்தவரை இவை வைர வரிகள். போரில் அமைதி என்பது போரை நிறுத்தி மனித குலத்தை நேசிக்கும் அன்பொன்றாலே கிடைக்கூடியதுதானே.


என் பள்ளி ஆசிரியை மைதிலி மிஸ்ஸை ( ஒன்பதாம் வகுப்பு கணக்கு டீச்சர் --

ஹலோ எஃப்.எம்மில்.. என்னைக் கவர்ந்த சாதனைப் பெண்.

என்னைக் கவர்ந்த சாதனைப்  பெண் யாருன்னு திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடியில் ஒலிபரப்பாகும் ஹலோ எஃப். எம்மின் ஆர். ஜே . ஜெயகல்யாணி தொலைபேசியில் அஞ்சரைப்பெட்டி நிகழ்ச்சிக்காக கேட்டார்.

”மேரி கோம்  விளையாட்டு வீராங்கனை. அவர் சாதனை பெரிது. நம்  நாட்டுக்காக விளையாடி நிறைய பதக்கங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்  விண்ணையும் பெண்கள் சாடுவோம்னு விண்வெளியில் பலமணிநேரம் இருந்து சாதனை படைத்துள்ளார்.

திங்கள், 27 மே, 2013

கோலங்களும் கோலக் கிளிகளும்..:-

கோலங்களும் கோலக் கிளிகளும்.:-

தென் தமிழ் நாட்டுக்கே உரித்தான ஒரு கலை கோலக்கலை .மார்கழி மாசம்தான் கோலங்களுக்கான மாசம்.  யார் வீட்டுக் கோலம் பெரிசுன்னு ஒரு போட்டியே நடக்கும். முன்ன எல்லாம் விடியற்காலையில் எழுந்து வாசல் கூட்டி சாணி தெளிச்சு வாசல் நிறைக்க இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் கோலம் போட்டு பார்டர் எல்லாம் போட்டு அமர்க்களப் படுத்துவாங்க. சிலர் காவி போட்டு அசத்துவாங்க.

வீட்டுல அக்கா, தங்கைகள் கோலம் போட்டா கூடவே பொடிசுகளும் எந்திருச்சு கலர் போட  உதவுவாங்க. கோலத்து நடுவுல சாணி வைச்சு பூசணிப்பூ அல்லது பரங்கிப் பூவை செருகிவைப்பாங்க. இதுக்காக தம்பி தங்கைகள் எல்லாம் ஓடி ஓடி பூ சேகரிப்பாங்க.

சனி, 25 மே, 2013

தைராய்டு.. THYROID.

தைராய்டு..
உறவினர் ஒருவர் மிக மெலிந்து கொண்டே போனார். ஒருவர்  திடீரென்று குண்டாகவும் சோர்வாகவும் உணர்ந்தார்.. இருவரின் உடல் நிலைக்குமே காரணம் தைராய்டுதான்.

ஒருவர் படபடவென்று இருப்பார் எப்போதும். இன்னொருவர் படுத்துக் கொண்டே இருக்கலாமா என நினைப்பார். கை காலில் மதமதப்பு , பகலில் தூக்கம், இரவில் தூக்கமின்மை என பிரச்சனைகள். செக்கப் செய்து பார்த்ததில் தைராய்டு பிரச்சனை எனத் தெரிந்தது. இருவருக்கும் மத்திம வயதுதான்.

வெள்ளி, 24 மே, 2013

கொள்ளையடிக்காமல் கொள்ளையடிக்கும் ஷேர் ஆட்டோக்கள்.

எத்தனையோ வண்டிகள்ல பயணப்பட்டிருப்போம். ஆனா சிலது மட்டும் சாதாரணமா இருந்தாலும் நம்ம ஞாபகத்துல இருக்கும். அதுல ஒண்ணு கே கே நகரில் இருந்து டி. நகருக்குப் போகும் ஷேர் ஆட்டோக்கள்.

மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்ல விடியற்காலையில் வந்து இறங்கினா ஆட்டோவுக்கு 100 அல்லது 120 கேப்பாங்க. இப்ப இன்னும் அதிகம் இருக்கும்.பஸ்ல கூட்டம் போக முடியாது. இதே கால் டாக்சின்னாலும் 150 - 200 ரூபாய் வரும். இந்த செலவைத் தவிர்க்க முடியாது. ஏன்னா லக்கேஜ் அதிகம் இருக்கும்.

வியாழன், 23 மே, 2013

பனைமரத்துக் கிளி..

பனைமரத்துக் கிளி :-
******************************
மழை கொத்தித் தின்னும்
பறவையாய் கை விரித்த
இறக்கையுடன் ரசிக்கிறாய்..

எனக்கும் கொஞ்சம்
கவிதைத் தானியம் தூவு..
நீ வரும்வரை அன்றிலாய்..
கொறித்துக்கொண்டு அல்லது
நானும் அதில் நனைந்து..

செவ்வாய், 21 மே, 2013

அவள் விகடனில் வலைப்பூவரசி..!

23.10.2012 அவள் விகடனில் வலைப்பூவரசியாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.நன்றி அவள் விகடன். என்னுடைய அழகான புகைப்படம் போட்டு , வலைத்தள முகவரியும் கொடுத்திருக்கிறார்கள் நன்றி ..நன்றி.. நன்றி..:)


/// இணையத்தில் பிரபல பதிவராக வலம் வரும் இவர், தனது வலைப்பதிவுக்கு வைத்திருக்கும் பெயர் “சும்மா”, ஆனால் அவரது ப்ளாக்குக்குச் சென்று நாம் சும்மா திரும்பிட முடியாது, அழகுக் கவிதைகள், அனுபவக் குறிப்புக்கள் என ரசிக்கத்தக்க எழுத்துக்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன. ஒன்றரை லட்சம் பார்வைகளைக் கடந்த வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரான தேனம்மை லெக்ஷ்மணன் இந்த இதழின் வலைப்பூவரசி. அவரது வலைப்பூ  -

http://honeylaksh.blogspot.com  ///.

நன்றி அவள் விகடன்.

திங்கள், 20 மே, 2013

தினமணியின் ஊக்கப்பரிசும், காரைக்குடியில் ”ங்கா”வும்.

இவள் புதியவள் சூரியக்கதிர் இவற்றின் எடிட்டர் சகோ பாரதிராஜாவின் திருமண ரிஷப்ஷனில் பரிசளிக்க ஒடிசியில் பரிசுப்பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது (இனிமே யாராவது ஃபோட்டோ ஃப்ரேம் வாங்கிக் கொடுத்தீங்க.. கொன்னுபோடுவேன் என்று அவர் கோபமாக இருப்பதாகக் கேள்வி..:) ( பின்னே கல்யாணத்துக்கு கிஃப்டா  7 , 8  ஃபோட்டோ ஃப்ரேம் வந்தா.. :)   ஒரு ஃபோன் கால் .

சனி, 18 மே, 2013

புதுக்கோட்டை ஜெஜெ குழுமக்கல்லூரியில் மகளிர் தினத்தில் உரை. ( 2013) .



ஜெ ஜெ குழுமக் கல்லூரிகளில் இந்த வருடம் மகளிர் தினத்தன்று ஆற்றிய உரையும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கியதும் யூ ட்யூபில் போட்டு அனுப்பினார்கள்.

வாஷிங்டனில் புறநானூறு.

வாஷிங்டனில் திருமணம் என்ற புத்தகத்தை எழுதியவர் சாவி . மறக்கமுடியாத நகைச்சுவைப் புதினம் அது. 

தமிழுக்குச் சேவை செய்யும் நோக்கோடு இந்த வாஷிங்டனில் புறநானூறு மாநாடு பற்றி முகநூலில் பார்த்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

///வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து நடத்தும் பன்னாட்டு மாநாடு : புறநானூறு
வாசிங்டன் DC

ஆகஸ்ட் 31, 2013 – செப்டம்பர் 2, 2013

வெள்ளி, 17 மே, 2013

பேறுகாலப் ( TRIMESTER) பாதுகாப்பு..

கல்யாணம் ஆயிட்டாலே குழந்தைப் பேறு எப்பன்னு அப்பல்லாம் எதிர்பார்ப்பாங்க வீட்டில உள்ள பெரியவங்க.சொந்தக்காரங்களும் ஒரு ஆறு மாசம் ஆயிட்டா உங்க மகள்/மருமகள் முழுகிட்டு இருக்கிறாளா எனக் கேட்பாங்க.

இப்ப உள்ள நிலைமை என்னன்னா நிறைய தாமதமான திருமணங்கள் . அதனால அவங்க காரியரில் தடைஏற்படாதவண்ணம் பிள்ளைப் பேறுன்னு தள்ளிப் போறதால சிலசமயம் பிள்ளைப் பேறு ரொம்ப தாமதமாயிடுது.

புதன், 15 மே, 2013

பேருந்துச் சங்கீதம்.

பேருந்துப் பாடல்கள்
ஒற்றைத் தலைவலியை
உண்டுபண்ண
ஒற்றைக்கால் கொக்காய்
தலைபிடித்துத் தவமிருக்கும் நேரம்
சங்கீதமாய் ஒலித்து
கவனம் ஈர்க்கிறது
அம்மாவிடம் அடம்பிடிக்கும்
குழந்தையின் குரல்.

செவ்வாய், 14 மே, 2013

காரசாரம். - பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு.


பொதிகையின் காரசாரம் நிகழ்ச்சிக்காக முகநூல் நண்பர் ப்ரேம் சாகர்  தொடர்பு கொண்டு பெண்சிசுக் கொலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா இல்லையா என்ற தலைப்பில் கருத்துக் கூற அழைத்திருந்தார். விழிப்புணர்வு இல்லை என்ற பகுதியில் நானும் விழிப்புணர்வு இருக்கிறது என்ற பகுதியில் கருத்துக் கூற என் கணவரும் இடம் பெற்றிருந்தோம். (13.12.2011 அன்று நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 4 முறை பொதிகையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பகலிலும் இரவிலும் ஒளிபரப்பானது. )

வியாழன், 9 மே, 2013

இறந்த முட்டையிலிருந்து உயிர்பெற்ற கோழிகள்.

பாம்புகள் துரத்துகின்ற
இரவுக்கனவில் விழிக்கவொட்டாது
பள்ளத்தில் தடுமாறுகின்றன
ஓடத்துடிக்கும் கால்கள்.
கழுத்து முறிந்து
கொண்டை திருக
அதிரடித்து எழுப்புகிறது
மதியத் தூக்கம்.

புதன், 8 மே, 2013

மதிலுகள் ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்த விமர்சனக் கட்டுரை 7,10,2012 திண்ணையில் வெளிவந்துள்ளது. 


செவ்வாய், 7 மே, 2013

கோடைகாலமும் நீர்க்கடுப்பும். :-

கோடைகாலமும் நீர்க்கடுப்பும். :-

கோடைகாலம் வந்தாலே நிறைய பிரச்சனைகளும் படையெடுக்க ஆரம்பிச்சுடும். அதில் நீர்க்கடுப்பு முக்கியமானது. இது கோடை காலத்தில் மட்டுமல்ல.. உடம்பில் நீர்ச்சத்து குறையும்போதெல்லாம் ஏற்படும். இதற்கு முதல் படி தண்ணீர் நிறைய குடிக்கணும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலுடன் குறைவாகப் போகும். நினைத்து நினைத்துக் கடுத்து சிறுநீர் வரும்.  இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூசில் ஒரு சிட்டிகை, உப்பு, ஒரு சிட்டிகை ஜீனி கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் குடித்தால் குணம் கிடைக்கும். எலுமிச்சை சாறு ஒத்துக்கொள்ளாமல் சளிபிடிக்கும் என்றால் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

வியாழன், 2 மே, 2013

சுசீலாம்மாவின் கடிதம்

சுசீலாம்மாவின் கடிதம்.

இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது அருகி விட்டது. ஷார்ட் மெசேஜஸ்தான். குறுந்தகவல்கள். நீண்ட வாக்கியங்கள் பேசுவது கூடக் குறைந்து விட்டது. கம்யூனிகேஷனுக்குத் தேவையான வார்த்தைகள் மட்டுமே புழக்கத்தில் வந்துவிடும் என்று தோன்றுகிறது.

மொத்தமே 10 வார்த்தைகள்  போதும்.  ஆமாவா, மொக்கை, அவ்வ்வ்வ், கலக்கல் மாமு, வேணும், வேணாம், வரேன், வல்லை, பிடிக்குது . பிடிக்கலை.. இது மாதிரி மணிரத்னம் பட ஸ்டைல்ல பேச்சு குறைஞ்சுகிட்டே வருது எல்லார்கிட்டயும்.

புதன், 1 மே, 2013

புற்று.

ஓட்டின்மேல் காயவைத்தால்
கருட நிழல்.
ஓரமாய்ப் போடப் போனால்
பாம்பின் தடம்.
முள்செடியில் மாட்டி
கிழிகிறது துணி
சகதியில் அழுத்தும்போது
இரத்தச்சகதியின் அசதி.
Related Posts Plugin for WordPress, Blogger...