எனது பதிமூன்று நூல்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

உய்யவந்த அம்மன் கோயிலில் வித்யாசமாய் ஒரு வேண்டுதல்.

புதுவயல் சாக்கோட்டையில் உய்யவந்த அம்மன் கோயில் உள்ளது. இங்கு இருக்கும் அம்மனை உய்ய வந்த தாயார் என்றும் உய்ய வந்த நாச்சியார் என்றும் சொல்கிறார்கள். அருமையான எளிமையான கோயில். கோபுரங்கள்தான் மூன்று நான்கு இருக்கு.
வெளியிலேயே உக்கிரம் தெரிகிறதல்லவா. கோபுரத்தில் முருகன்.
உள்ளே நுழைந்ததும் விநாயகர் முருகன் சன்னதி . நேரே அம்மன் சன்னதி.

தீமையைக் கெல்லும் தாய். கோபுரத்தில் உய்ய வந்த பெருமாளும் காட்சி தருகிறார். கூடவே மதங்க நடனம் ஆடும் கோபாலனும். உய்ய வந்த பெருமாள், உய்ய வந்த அம்மன் புராணம் தெரியவில்லை.

வியாழன், 29 செப்டம்பர், 2016

அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.

1021. கொடிக்கம்பம்னு போட்டுட்டு கொடிய என்ன பண்ணாங்க.. ?? அம்மா நீங்கதான் கேக்கணும். :(
#கண்டனூர்_நகர_சிவன்_கோயில்_ஊருணிக்கருகில்.


1022. மருதமலையில் ஒரு திருமண வீடு

1023.ஹோட்டல்ல ஸ்டே பண்ணும்போதெல்லாம் காஃபியும் டீயுமா குடிச்சே தீர்த்திருக்கேன் :)
#ARVEE_HOTELS.

புதன், 28 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்கான நூல்கள்.சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3.

இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நூல்கள் சிறார்களுக்குப்புத்திக் கூர்மை கொடுக்கும் நூல்கள். 
7. பஞ்ச தந்திரக் கதைகள் :-

பள்ளி ஆசிரியர்கள் எழுதும் சிறுவர் நூல்கள் சிறப்பானவையாக அமைகின்றன. ருக்மணி சேசஷாயி அம்மா அவர்கள் கூட ஒரு ஆசிரியைதான். அல்லும் பகலும் சிறுவர்களின் இயல்புகளையும் அவர்களின் குடும்ப பொருளாதார கஷ்டங்களையும் பக்கம் இருந்து பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதால் அவர்கள் எழுதும் சிறார் கதைகளும் சிறப்பானவையாகவே இருக்கும். அதே போல் நமக்குத் தெரிந்த பஞ்ச தந்திரக் கதைகளையே ஆசிரியர் கூறும்போது யதார்த்த உலகியல் நடைமுறைகளை எதிர்கொள்வது எப்படி என்பது இன்னும் நமக்குத் தெளிவாக விளங்குகிறது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ. விநாயகர் அகவல்.
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
ஏதோ ஒரு வங்கியில் என நினைக்கிறேன்.
வைரவன்பட்டி கோயில் வெளிப்புறச் சுவரில் வரவேற்கிறார் விநாயகர்.
அதே வைரவன் பட்டியில்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

கோவிலூர் மியூசியம்.

காரைக்குடிக்கு அருகில் இருக்கும் கோவிலூரில் மியூசியம் ஒன்று இருக்கிறது. கோவிலூரில் இருக்கும் மடத்துக்குச் சொந்தமான செட்டிநாட்டுப் பாரம்பரிய அருங்காட்சியத்தை ஒரு திருமணத்துக்குச் சென்றபோது பார்த்து வந்தேன் . அங்கங்கே சில ஃபோட்டோக்களையும் சுட்டு வந்தேன் ரகசியமாக. :)
முன்பு இருந்த நாச்சியப்ப சுவாமிகள் ருக்மணி அருண்டேல் அவர்களின் நடனத்தைப் பல்வேறு புகைப்படங்களாக எடுத்தது காலரியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சனி, 24 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலிகார்னர் :- அகிலாவின் க்ளிக்ஸ் & கலர்ஸும் புகைப்பட அரசியலும்என் அன்பிற்கினிய தோழி அகிலாபுகழ். முகநூலில்தான் கண்டடைந்தோம்.
ஆனால் பலநாள் பழகியவர்போல உரையாடினோம். மிக அருமையான பெருமைப்படக் கூடிய நட்பு. கோவை இலக்கிய சந்திப்பில் எனது அன்ன பட்சியைப் பற்றி இலக்கியப் பார்வையை அழகாக முன்வைத்தார். அது புதிய தரிசனத்திலும் வெளிவந்தது. அநேக தருணங்களில் முகநூலில் இவர் போடும் கருத்துக்கள் என் மனதுக்கு இசைந்தவையாகவே அமைந்திருக்கும். அடிப்படையில் கவிதாயினியான ( 3 கிை நூல்கள் வந்திருக்கு ) இவர் க்ளிக்ஸ் & கலர்ஸ் என்ற புகைப்படப் பக்கத்தை உருவாக்கி நிர்வகித்து  வருகிறார். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காகக் கேட்டதும் உடன் எழுதித் தந்தார். 

கிளிக்ஸ் & கலர்ஸ் (Clicks & Colours)
(முகநூலில் இயங்கி வரும் புகைப்படக்குழு)

புகைப்படம் எடுப்பது என்பது எனக்கு ரொம்ப பிடித்தமான ஓன்று. எங்க அப்பா எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்த பொழுதுபோக்கு இது. திருமணம் முடிந்து, நான் தனிக்குடித்தனம் போகும்போது, அப்பா, என் கையில் ஒரு Yashica AW818 கேமரா கொடுத்தார். புகைப்படக்கலையில் ஆர்வம் என்பதை அமைதியாக கவனித்திருப்பார் போலும். அதுதான் அப்பா என்னும் மந்திரம்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

அதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள்.அதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள்.

உன்னை வரைந்த கைகளுக்கே ஒரு புத்தகத்தைப் பரிசளிப்பாயென்றால் அதற்குப் புகழுரை எழுதிய எனக்கு உன் மனதின் ஒரு பக்கத்தையாவது பரிசளிக்க மாட்டாயா என்ன ?

இளவேனிலும் முதுவேனிலும் மழையும், குளிரும் முன்பனியும் பின்பனியும் வருவதுதான் வாழ்க்கை சுழற்சி என்றால் உனக்கும் எனக்குமான தொடர்பு முன்பனியோடு மூடிப்போனதென்ன ?. இருக்கட்டும் என்றாவதுன் மனமேகம் விலகும்தானே. முழுநிலவாய் உன்னை அங்கங்கே கண்டும் விடையறியாமல் தவிக்கும் நான் உன் அதிரூபனையும் சிண்ட்ரெல்லாவையும் இரண்டாண்டுகளாய்ச் சுமந்து திரிகிறேன்.

போகட்டும் நான் துரத்தியது மாரீசப் பொய்மானல்ல என்கூடச் சிரித்துத் திரிந்த என் சகப் பெண்மான்தான். இது மானுக்கு மான் எழுதும் மனம் தகர்ந்த மடல் கூட. காரணம் தெரியாமல் கானோடு அலைகின்றேன். சரி போகட்டும் என்னோடு ஏதொன்றும் தெரியாமல். புதையட்டும் என்னுள்ளே என் வருத்தம் உனைத் தாக்காமல்.

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.


4. பீர்பாலின் நகைச்சுவைக் கதைகள் :-

அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையை தனது சாதுர்யப் போக்கால் நாசுக்காகச் சுட்டிக்காட்டி, எளிய மக்களின் துயருக்கு இரங்கி, மாபெரும் சக்கரவர்த்தியும் உணர்ந்து செயல்படும் வண்ணம் அமைந்தவை பீர்பால் கதைகள்.

அக்பர் பாதுஷா, அவரின் அமைச்சர் பீர்பால் இவர்களை நாம் மறக்கவே முடியாது. மகேஷ்தாஸ் என்பது இவரது இயற்பெயர். இவரைப் பற்றிய கதைகள் எல்லாம் சிரிப்பூட்டும் சிந்தனைக் கதைகள். இதை மொழி பெயர்த்தவர் திரு. ஏ. எஸ். வழித்துணை ராமன்.

சிரிப்பாகத் தோன்றும் அதே கணம் சீரிய சிந்தனையையும் மனிதர்களின் அற்ப வழக்கங்களையும் எண்ணங்களையும் கசடுகளையும் சமூக , அரசியல் நடைமுறைகளையும் சிறிய எள்ளலோடு சொல்லும் கதைகள். விகடகவியாக இருந்தவர் அமைச்சராக உயர்ந்து ராஜா பீர்பால் ஆனார்.

வியாழன், 22 செப்டம்பர், 2016

சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

சென்னையில் வசிக்கும் பெரும்பாலோர் கட்டாயம் சென்றிருக்கக்கூடிய இடம் திருவல்லிக்கேணியில் உள்ள ரத்னா கேஃப். இதன் இட்லி சாம்பார் சுவையில் மயங்காத சென்னைவாசிகளே இருக்க முடியாது. திருவல்லிக் கேணி என்றால் பீச், பார்த்த சாரதிப் பெருமாள் , இராகவேந்திரர் கோயில்களோடு ரத்னா கஃபேயிலும் எட்டிப் பார்த்துவிட்டு வரலாமே எனத் தோன்றும். பாரம்பரியப் பெருமை மிக்கது இந்த ஹோட்டல். எனக்கு தெரிஞ்சே 30 வருஷமா இதே இடத்தில் இருக்கு அந்த ஹோட்டல். இங்க இட்லிதான் ராஜான்னா சாம்பார் ராணி. எவ்ளோ வேணாலும் கிடைக்கும்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் வந்திருக்கு. சென்னை வரைக்கும் போயிட்டு அதுல போகாம வருவேனா.

அசோக்  நகரிலிருந்து கோயம்பேடு போய் அங்கேருந்து பஸ்ஸுல ட்ரிப்ளிகேன். அங்க ரத்னா கஃபேல சாப்பிட்டு லேட்டாயிட்டதால ஆட்டோல கே கே நகருக்கு விடு ஜூட்.

புதன், 21 செப்டம்பர், 2016

கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.

1001.நீர் நிறைய மீனிருக்க
மனங்கொத்திப் பறக்கிறது
வலசைப் பறவை.

1002. கடைசி விருந்தைப் போல
மறக்காத ஓவியமாகிறது
கடைசி உரையாடலும்.

1003.நிலையற்ற சந்திரனையும்
நறுங்கும் சூரியனையும் தூரப் போட்டு
நட்சத்திரங்கள் சிதறும்
சொற்சித்திரங்களில்
லயிக்கிறது பூமி.

1004.விதையாய் முளைத்துப் பெருகும்
உன் ஞாபகங்களை
எப்படிப் புதைப்பது.

1005.கடலில் நீந்திய மீனுக்குத் தொட்டிச் சிறை.பெருநகரத்தில் உலவியவனின் தீபகற்பமாய்க் குடும்பம்.  தனித்தனித் தீவுகளாய் மனிதம். அலையில் மின்னும் சூரியனாய் நம்பிக்கை

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

திருக்கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் என்னைக் கவர்ந்த இடங்கள் அதன் ஊருணிகள்தான். நன்கு மகிர மகிர நீர் நிறைந்து தெப்பக்குளங்கள் அழகுறக் காட்சி அளிக்கும். ஊரணி ( ஊருணி) , குளம், புஷ்கரணி, தடாகம், வாவி, தீர்த்தக் குளம்,  எல்லாமே ஒன்றுதான். கோயிலுக்குச் செல்வோர் முதலில் இந்தத் தீர்த்தத்தைத் தம்மேல் தெளித்துக் கொண்டு ( ப்ரோக்‌ஷணம் செய்து கொண்டு ) கால்களை சுத்தம் செய்து கொண்டு உள்ளே சென்று இறைவனை வணங்குவர்.

எனக்கு எப்போதும் ஏதோ ஒரு மையல் அந்த மகிர்ந்து கிடக்கும் நீரின் மீதும், பசியப் படர்ந்து கிடந்து கிளர்ச்சியைத் தூண்டும் பசுமைகளின் மீதும். சில ஊரணிகள் ப்ளேக்ரவுண்ட் மாதிரி காலியாக இருந்தாலும் சிறிதளவாவது நீர் இருக்கும்

பொதுவாக தென்னகக் கோயில்களின் கட்டுமானங்களில் சிறந்தது இந்தத் திருக்கோயில் புஷ்கரணிகள்தான். இவை பெரும்பாலும் சதுர வடிவில் அமையும். நாற்புறமும் படிகள். நாற்புறமும் ஒவ்வொரு கரையிலும் இரு இடங்களில் படிகள் இருக்கும். சில செவ்வக வடிவிலும் வெகு அரிதாக சில வட்ட வடிவிலும் அமைவதுண்டு.

நல்ல கட்டுமானத்தோடு தூர் வாரப்பட்டுப்பராமரிக்கப்படும். மேலும் இக்குளங்களில் ஈசான்ய மூலையில் ஒரு கிணறு கட்டாயம் இருக்கும். இன்னும் ஊரணிக்குள்ளே  சில பல இடங்களிலும் இருக்கலாம். ஊரணியில் நீர் வற்றிய தருணங்களில் இவற்றில் சிலர் நீர் இறைப்பதை காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் பார்த்திருக்கிறேன்.

தெப்பம் மிதக்கும் காட்சியை மனக்கண்ணுள் கொண்டுவரும் தெப்ப மண்டபத்தோடு இருக்கும் இத்திருக்குளம் காரைக்குடி திருக்கோயிலூரில் உள்ளது . என்றைக்கும் நீர் குறையாது. இம்மாதிரிக் குளங்களுக்கு கம்மாய் - கண்மாய் போன்ற மற்ற நீர் தேங்கும் இடங்களில் இருந்து நீர் வரத்து இருந்துகொண்டே இருக்கும்.
இது அதே திருக்கோயிலூரில் உள்ளே நுழைந்ததும் காணப்படும் ஊரணி. படிகளின் கட்டமைப்புகளையும் கரைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதையும் பாருங்கள்.
ஸிக் சாக் போல இறங்கும் படிகள் பிரம்மாண்டக் குளம்.
அதே குளத்தில் ஏதோ மினார் போன்ற அமைப்பு, உப்பரிகை போன்றும் தோன்றுது. அடுத்துப் போகும்போது பார்த்து வரணும். படிகளுக்கும் கம்பீர பார்டர். செம்புறாங்கற்களினால் அமைக்கப்பட்டிருக்கு.
இது காரைக்குடியில் செக்காலைச் சிவன் கோயில் ஊரணி. நான் பார்த்த மிக அழகான ஊரணிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் தாமரை பூத்த தடாகம்தான்.படிகள் நாற்புறமும் இறங்குவது அழகோ அழகு.
இது வைரவன்பட்டி திருக்கோயிலின் புஷ்கரணி. வைரவதீர்த்தம். இதன் படிமுகத்தைப் பாருங்களேன் கொள்ளை அழகு. யானை போன்ற ஒரு அமைப்பு இருக்கு.தூரத்தே பாருங்கள் இதற்குத் தண்ணீர் வரத்து எங்கிருந்தோ வந்து பொங்கி ஊத்துது (படியை ஒட்டிப் பாருங்கள்)

திங்கள், 19 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1

வா மணிகண்டன் சொன்னது போல சினிமாவாகவோ, வீடியோவாகவோ, தொலைக்காட்சி கார்ட்டூனாகவோ பார்க்கும்போது ஏற்படும் சிந்தனையற்ற மொந்தைத்தனத்தைவிட அவற்றையே புத்தகங்களில் படிக்கும்போது மனக்கண்னில் தோன்றும் சித்திரங்கள் உருவாக்கும் அதிசய உலகம் அற்புதமானது. புத்தக வாசிப்பு கற்பனா சக்தியை மேம்படுத்தும். கிரியேட்டிவிட்டியையும் தூண்டும்.

வீட்டில் நிறைய நூல்கள் இருந்தாலும் இந்த சிறுவர் இலக்கியங்கள் & காமிக்ஸ் நம்மை என்றும் கவர்பவை. சிறுபிள்ளைப் பருவத்துக்கு இட்டுச் செல்பவை. எனவே அவற்றை ஒரு நாள் ஆசையுடன் படித்தேன். படித்ததைப் பகிர்கிறேன்.

1.அரிச்சந்திரன் கதை:-

சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.

N.Rathna Vel added 2 new photos — .
September 10 at 1:06pm ·

நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைத் தொகுப்பு)

எழுதியவர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்
honeylaksh@gmail.com

பக்கங்கள் 108 – விலை ரூ.80

ஆசிரியர் பற்றி:

எங்கள் இனிய நண்பர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் பதிவுகளில் நட்பு, முகநூலிலும் தொடர்ந்தது. இது அவர்களின் 5வது புத்தகம்.

சிவப்பு பட்டுக் கயிறு
அருமையான முகப்பு,
அருமையான கட்டமைப்பு, அச்சு.

படித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் இவரது புத்தகங்கள் வெளியாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும்.436. வலைப்பீரோ - சமைத்த பொருட்களை வைக்கும் அலமாரி
437. ரேடியோப் பெட்டி அலமாரி - ரேடியோ வைக்கும் அலமாரி.  இுள்ே குமிழ் ிருகும் பெரிய ேடியோ,எலிமினேட்டர், ஒயர்கள் இருக்கும். :) !

438. குளுதாடிதண்ணீர் ஜாடி. ( ாக்கல்லத் ூக்கிப் போட்டத் ண்ணீர் குடிக்குமில்லையா அந்தைப் ஜாடி )

439 மங்குச் சாமான் - இரும்பில் எனாமல் பெயிண்ட் அடித்தது போல் உள்ள சாமான்

440. வெங்கலச் சாமான் - பித்தளைப் பாத்திரம் 

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மை க்ளிக்ஸ். நொறுக்ஸ். MY CLICKS.

ஃபுட் ஃபோட்டோகிராஃபி என்பது புகைப்படத்துறையில் முக்கியமான ஒண்ணு. இதுல வீட்ல செய்ததும் கடையில வாங்கினதும் தியேட்டர்ல தின்னதும் கோயில் ப்ரசாதமும் ( அது நொறுக்ஸ் இல்லியா என்ன :) ஜங்க் ஃபுட்டும், ட்ரைஃப்ரூட்ஸும் நட்ஸும் ஏன் ரஸ்குமே நொறுக்ஸ்ல கலந்திருக்கு.

எனக்குத் தெரிஞ்சபடி எடுத்திருக்கேன். என்னோட லூமிக்ஸ்லயும் செல்ஃபோன்லயும்.

பாகர்வாடி. இது மைதால பண்றது. இனிப்பு புளிப்பு உப்பு எல்லாம் கலந்திருக்கும். இதுல வெல்லமும் புளியும் வர தனியாவும் சேர்க்கிறாங்கங்கிறது ஆச்சர்யம்.
சோன் பப்டி. ரொம்பப் பிடிச்சது. இது ஹல்திராம்ஸ் . ரெண்டுமே.

ஆனா சோன் பப்டியை செய்றதை யூ ட்யூப் வீடியோல பார்த்தீங்கன்னா சாப்பிடவே மாட்டீங்க. ஒரு தாம்பாளத்துல மைதா சீனி உருண்ட கலவையைக் கொட்டி நெய் தொட்டு நாலஞ்சு பேர் உருட்டி உருட்டி நூடுல்ஸ் மாதிரி பிசைஞ்சுகிட்டே இருப்பாங்க. கடைசியாத்தான் இந்த க்ரிஸ்டலைஸ் ஃபார்ம்ல வருது.
ஜிலேபி பிடிக்காதவங்க உண்டா.உளுந்து மாவை அரைச்சு எண்ணெய்ல சுட்டு சர்க்கரைப் பாகுல நனைச்சு வைச்சிருப்பாங்க. தேன் மிட்டாய் மாதிரி உள்ளே பாகு கசியுமே.
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் & வெஜ் கபாப்ஸ். க்ரீமி இன்ல எடுத்தேன்.

கோபுர தரிசனம்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள். கோயிலுக்குச் செல்ல இயலாவிட்டாலும் ஆறு கால பூஜைகளின் போதும் வீட்டிலிருந்தே ஜன்னல் வழி கோபுரங்களை தரிசிக்க முடியும் அம்மா வீட்டிலும், கணவரது பாட்டியாரின் வீட்டிலும் இருந்து.

நான் சென்ற சில கோயில்களின் கோபுரங்கள் உங்கள் தரிசனத்துக்காகப் பகிர்ந்திருக்கிறேன்.

இது பிள்ளையார் பட்டிக் கோயில். பிகநக விடுதியில் இருந்து எடுத்தது. கோபுரம் சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது.

இது காரைக்குடியின் கொப்புடைய அம்மன் கோயில் கோபுரம். மாலைநேர எதிர்வெய்யில் என்பதால் இரு புகைப்படங்களிலும் க்ளேரிங்.. வித்யாசமான கோபுரம். இதன் முன் பக்கங்களில் ஒரே கல்லில் தொங்கும் கல் சங்கிலிங்கள் - செயின்கள் செதுக்கி இருப்பாங்க. மிக அழகாக இருக்கும்.

இது சாக்கோட்டை வீர சேகர உமையாம்பிகை கோயில் கோபுரம். மிகப் பிரம்மாண்டமானது. கோயில் கோபுரத்தின் நிழல் அதிலேயே விழும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கு. செவ்வக வடிவ ஒன்பது நிலை கோபுரம்.
இதுவும் சாக்கோட்டை உய்யவந்த அம்மன் கோயில் கோபுரம். மிகச் சக்தி வாய்ந்த அம்மன்.

வியாழன், 15 செப்டம்பர், 2016

மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.417. மார்கழித் திருவாதிரைப் புதுமை - அந்தக் காலத்தில் செய்தது இப்போது வழக்கொழிந்து விட்டது.   பெண் பிள்ளைகளுக்குச் செய்யப்படும் பிறந்தநாள் போன்ற ஒரு விழா. சர்வ ஆபரணமும் அணிந்த சர்வ அலங்காரம் செய்த குழந்தையைத் தங்கத் தட்டிலோ, வெள்ளித் தட்டிலோ உட்கார வைத்துத் தூக்கி ஆலத்தி போல சுத்தி இறக்குவார்களாம். திருஷ்டி கழியச் செய்வது இது. 


”திருவாதிரை நாச்சியாரே செங்கோடி அம்மனே
திருவாதிரை கும்பிட திருவே எழுந்திரு
மாச்சலைப் பாராமல் மயிலே எழுந்திரு
கூச்சலைப் பாராமல் குயிலே எழுந்திரு

ஆத்திமனப் பத்தேறினாலும் ( – பத்தே நாமம் )
அரிசிக் கடகாம் பத்தேறம – (பத்தே நாமம் )
கொம்பும் கொழையும் பத்தேறினாலும் ( - பத்தே நாமம்)   
ஓரட சுட்டு உரியில வைச்சு …. ” சிறிது மறந்துவிட்டதாகச் சொன்னார்கள் இருவருமே.

ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ. விநாயகர் அகவல்.
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

காரைக்குடி நகரச் சிவன் கோயில் பிரகாரத்தில் கோலோச்சும் விநாயகர்.
அதே சிவன் கோயில் முன்புறம்.
அங்கேயே ஓவியமாய் விதானத்தில்.
கேகே நகர் ரோட்டில்

புதன், 14 செப்டம்பர், 2016

மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) MY CLICKS. முள்ளும் மலரும்.

சில புகைப்படங்கள் எடுத்ததும் பார்க்கும்போது நமக்கே அசத்தலாத் (!) தோணும். ஹிஹி. அவைகளைப் பகிர்கிறேன். போஸ்ட் போஸ்ட்டுங்கோ.


புதுவயலில் ஒரு ஹீரோ ஹோண்டா ஷோரூம். அட நம்புங்க.. சின்னூண்டு  ஊர்ல இவ்ளோ பைக்கு  :)
ஒரு திருமண வீட்டில் கிடைத்த பூ பட்ட பாடு :)


செல்லமாய் மடி மடியாய்த் தாவி அமர்ந்திருந்தது. :)


எங்கள மடியில வைச்சிக்க மாட்டீங்களாக்கும்னு கோபமா ரெண்டு காக்டஸ் தொட்டில உக்காந்திருக்காங்க. பக்கத்துல ஃப்ரெண்டா கை கொடுக்கும் பிரண்டையார்.

மகான்கள் ரெசிப்பீஸ் & கோலங்கள்.மகான்கள் ரெசிப்பீஸ்.

1.மாம்பழ கேசரி.
2.பொட்டுக்கடலை மாவுருண்டை
3.நீர் தோசை.
4.பாசிப்பயறு கொழுக்கட்டை
5.காபூலி சன்னா காய்கறி சுண்டல்
6.சாமைீரப் பொங்கல்.
7.பரங்கிப்பிஞ்சுத் துவட்டல்
8.மாதுளங்காய் தயிர்ப்பச்சடி
9.பப்பாளிக்காய் மிளகுப் பொரியல்.
10.ஜவ்வரிசிப் பருப்புப் பாயாசம்

1.மாம்பழ கேசரி :-

தேவையானவை:- வெள்ளை ரவை – 1 கப், நெய் – முக்கால் கப், சர்க்கரை- 2 கப், மாம்பழம் – 1, மாங்கோ எஸன்ஸ் – சில துளிகள், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.

செய்முறை:- வெள்ளை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். சிறிது நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து வைக்கவும்.மாம்பழத்தைத் தோல் சீவி ஒரு பகுதியை சிறு துண்டுகளாகச் செய்து மீதியை மசித்து வைக்கவும். ரவையில் இரண்டு கப் கொதிநீர் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து சர்க்கரையைப் போடவும். சர்க்கரை கரைந்து ஒட்டாமல் வேகும்போது நெய்யை ஊற்றவும். மாம்பழச் சாற்றையும் ஊற்றி இறக்கப் போகும் முன் மாம்பழத் துண்டுகள், முந்திரி, கிஸ்மிஸ் போட்டுக் கலந்து எஸன்ஸ் ஊற்றி நன்கு கலக்கி நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றவும். நிவேதிக்கவும்.  

2.பொட்டுக்கடலை மாவுருண்டை

தேவையானவை:- பொட்டுக்கடலை – 2 கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து நைஸாக சலிக்கவும். சர்க்கரையையும் பொடித்துச் சலிக்கவும். நெய்யை உருக்கவும். பொட்டுக்கடலைப் பொடி, சர்க்கரைப் பொடி , ஏலப்பொடி, உப்பு கலந்து நெய்யை சூடாக ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும். நிவேதிக்கவும்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்

981.Sarithira mukkiyathuvam vaayntha sila uraiyadalgal namakku eeno ketkamalee poividukindrana. Oru kuttipaapuvin kural mattum kaathukalil sangeethamai olikkirathu.

#pappakkalin_ulagam 😘

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சில உரையாடல்கள் நமக்கு ஏனோ கேட்காமலே போய்விடுகின்றன. ஒரு குட்டிப் பாப்பாவின் குரல் மட்டும் காதுகளில் சங்கீதமாய் ஒலிக்கிறது.

#பாப்பாக்களின்_உலகம்_ரிதம்


982. உடன்படும் கருத்துக்களோடு உடன்படாத கருத்துகளும் இருந்தால் லைக் போடுவது உவப்பானதாக இல்லை.


983. Tvn Tvnarayanan கூடிக் குலவி, சேர்ந்து உண்டு, குடும்பமும் நட்பும் ஒருசேர
இயற்கையை ரசித்து , உள்ளுரை இறைவனையும் நினைத்து கூடி பேசி மகிழும் கூட்டணி, உண்மையிலேயே வெற்றிக் கூட்டணி.. ஆனந்தம் இங்கிருந்து தான் ஆரம்பம்..அருமையான சொல்லாடல்; எளிமையான உரையாடல், நலம் பயக்கும் நட் பொருளாடல்! இன்றைய காலக் கட்டத்தேவையான செய்தியும் கூட...அருமை தேனம்மை அவர்களே...ரசித்தோம், ருசித்தோம் அதன் கருத்தையும், மகிழ்வையும்..வாழ்க, வளர்க வெல்க! நண்றி.. இறைவன் தங்களுக்கும்.குடும்பத்தாருக்கும், சகல நலமும் வளமும் சேர்க்கட்டும்..ஆயுராரோக்ய ஸெளபாக்ய மங்களம் நின்று நிலைக்கட்டும்; மகிழ்ச்சி பெருகட்டும்.

கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)

கோயம்புத்தூருக்குச் செல்வோர் ரொம்ப சௌகரியமாகத் தங்க ஓரிடம் வேண்டுமென்றால் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் ஆர்வியில் தாராளமாகத் தங்கலாம்.

மிகப் பிரம்மாண்டமான முன்புறம் & படிகள், மிக எடுப்பான வரவேற்பரை. மிகச் சுத்தமான அறைகள் , நடைபாதைகள் , லிஃப்ட், சமையல் கூடம், சலவையகம், துப்புரவான கழிவறை, குழியலறை, வசதியான படுக்கைகள், அலமாரிகள், வெண்டிலேஷன், மிகப் பெரும் ஜன்னல் திரைச்சீலைகளுடன். டிவி, ஏசி என அசத்தல்தான்.

காலையிலும் மாலையிலும் திரையைத் தள்ளி விட்டு ஜன்னலோரம் அமர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பார்த்தபடி காஃபி அருந்துவது மிகப் பிடித்தமான ஒன்று. காலையில் பேப்பர் வரும். காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்டுக்கான ஸ்லிப்பும் வரும்.

திங்கள், 12 செப்டம்பர், 2016

மதுரை புத்தகக் கண்காட்சியில் “சிவப்புப் பட்டுக் கயிறு “ நூல்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ஸ்டால் எண். 205 இல் எனது சிறுகதைத் தொகுதி “சிவப்புப் பட்டுக் கயிறு ” நூல் கிடைக்கிறது. 

டிஸ்கவரியின் வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கிறது. இன்றே கடைசி. அடுத்து தூத்துக்குடியில் செப்டம்பர் 20 புத்தகத் திருவிழாவிலும் கிடைக்கும். படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க மக்காஸ் :) 
டிஸ்கி:- 

பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான தேனம்மை லெஷ்மணனின் இக்கதைகள் அனைத்து பெண் மனங்களின் வழியாக வெளிப்படும் அவர்களின் ஆற்றாமையையும்,அன்பையுமே களமாகக் கொண்டுள்ளன.மிக எதார்த்தமான இக்கதைக் களங்களின் வழியாக தான்சார்ந்த பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கும் அதே நேரத்தில்,இவ்வாழ்க்கையின் அர்த்தமிழந்துபோன அன்றாட நிகழ்வுகள் சில எப்படி பெண்களின் பார்வையில் வேறோரு கோணத்தில் அதே துடிப்புடன் உயிர் பெற்றுவிடுகிறது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக கதைகள் நெடுக பதிவாகியுள்ளன.

ஆன்லைனில் வாங்க.

லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.

செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல்  பற்றி படித்துப் பாருங்கள் பகுதியில் வந்துள்ளது.

நான் ஃப்ரீலான்சிங்காகப் பணிபுரிந்த லேடீஸ் ஸ்பெஷலில் சாதனை அரசிகள், ங்கா, ஆகியனவும் நூல் முகத்தில் வெளிவந்துள்ளன. சிவப்புப் பட்டுக் கயிறு நூலையும் அறிமுகப்படுத்திய ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...