புகார், தரங்கம்பாடி.
ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
ஆக்ரோஷ அலைகள்
என்றால் கிழக்குக் கடற்கரையோரம் பாண்டி, காரைக்கால், புகார், தரங்கம்பாடியில் பார்க்கலாம்.
சென்னை திருவான்மியூர் கோவளம் பகுதிகளிலும் வாட்டர் கரண்ட் எனப்படும் வெகுவேக ஆள் இழுக்கும்
அலைகளின் கொந்தளிப்பு உண்டு.
சிங்கப்பூரிலும்
கூட சிலாஸோ கடற்கரை கூட அலைவேகத்தைச் சமாளிக்கப் பாறைகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல்தான் பாண்டியும். புகாரிலும் தரங்கம்பாடியிலும் கூட அந்தத் தடுப்பு முறைகளைப்
பார்த்தேன்.
புகார் , தரங்கம்பாடி
சென்றிருந்தபோது என்னைக் கவர்ந்த விஷயம் இந்த அலைகள்தான். ஆனால் அதே சமயம் பயமாகவும்
இருந்தது. சிலேரென்று பாறைமேலும் தெறித்து ஆள் நனைத்து ஆள் அடித்து நின்றிருந்த பாறையில்
இருந்து வழுக்க வைத்தது.
பாலசந்தர் படங்களில்
இம்மாதிரி அலைகளைப் பார்க்கலாம். ( மோகம் என்னும் தீயில் என்ற பாடலில் சிவகுமார் தவம்
செய்வதுபோல் பாறையில் அமர்ந்திருக்க அவரை விழுத்தாட்டுவது போல வந்து செல்லும் அலைக்குத்
தக்க பாடல்தான் ) ) வெகு வேக ஆக்ரோஷ அலைகள் கொஞ்சம் கவர்ச்சியானவைதான். அதே சமயம் ஆபத்தானவையும்
கூட.
கோவாவில் விதம்
விதமான கடற்கரைகளும் அதன் நிலப்பரப்புகளும் அழகு,. பாறை, மண், கல், பச்சைப்பாறைகள்,
மணல் என்றிருக்கும் எல்லாவகை பீச்சிலும் நண்டு சிப்பி கிடைக்கும். பிச்சாவத்தில் இருந்து
பரங்கிப்பேட்டை பீச் வரை அரை நாள் படகில் சென்று சிப்பிகள் பொறுக்கிச் சேர்த்த அனுபவம்
மறக்க இயலாது.
மும்பை அஷ்டலெக்ஷ்மி
கடற்கரையும் பாறைகளாலானது. ஜுகு பீச்சில் மணலில் நடக்கலாம். அலை பற்றி ரொம்ப ஞாபகமில்லை.
கேட்வே ஆஃப் இண்டியா கடற்கரை படகுப் பயணத்துக்கானது. எலிஃபேண்டா குகைக்கு மட்டுமில்ல
சும்மா ஒரு ரவுண்ட் அடிச்சும் கொண்டு வந்து விட்டுடுவாங்க.
சென்னை மெரினா,
விஜிபி கடற்கரைகள் வாக்கிங்க் ஸ்தலங்கள். நடந்து நடந்து கால் வலிக்கும். சுனாமி தவிர
மத்த நேரத்துல ரொம்ப படுத்தாது. ஆனாலும் காவல்துறையினர் குளியலாடுறவங்களை கட்டுப்படுத்திக்கிட்டுத்தான்
இருக்காங்க.
கேரளா கோவளம் கொச்சு
வெளி கடற்கரைகள் கொஞ்சம் வித்யாசம். கடலை ஒட்டியே ஏகப்பட்ட தென்னை மரங்கள். அதிலும்
கோவளம் வெளிநாட்டினரின் சொர்க்கம். கடற்கரைக் கடைகளில் குடிக்கலாம், கடல் உணவுகள் தின்னலாம்.
அர்த்த ராத்திரியிலும் நீந்தலாம். கடற்கரை தாழ்வான இடத்தில் இருக்கு.
மகாபலிபுரம் கடற்கரையைவிடக்
கவர்ந்த இடம் அதன் கோயில்கள்தான். திருச்செந்தூர் கடலில் நீராடலாம். மணப்பாடு உவரி
கடற்கரைகள் நாம் பள்ளமான ஊரில் இருப்பது போல் தோற்றம் காட்டும். எப்பவேணா உன்ன மூழ்கடிப்பேன்கிறமாதிரி.
கன்யாகுமரி கடற்கரையும் அலைகளின் சொர்க்கலோகம்தான். இங்கே மாதிரி சிப்பிப் பொருட்களின்
கடையை எங்கேயும் பார்க்க முடியாது.
ஷார்ஜா கார்னிஜ்
பகுதிகளில் கடல் உள்வாங்கி ஏரி அமைப்பில் இருப்பதால் அலையே இருக்காது. அதில் உள்ள வாக்கிங்
பாத்தில் உயரக் கட்டிடங்களையும் ஈச்ச மரங்களையும் மசூதியையும் பார்த்தபடி நடக்கலாம்.
சோம்நாத்தின் கடற்கரை அலைகள் மென்மையானவை. ஆனால் அங்கே ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை. அமானுஷ்யமானவை . அங்கே குளியலாட அனுமதி இல்லை. தங்குமிடத்திலிருந்து கடலைப் பார்க்கலாம். கடற்கரைக்குச் சென்றாலும் கடலைப் பார்க்கலாம். அது ஏனோ ஆள்விழுங்கிக் கடற்கரை போன்று அச்சத்துடனே பராமரிக்கப்படுகிறது. நிறையப் பேரைக் கடல் கொண்டிருக்கிறது.
ராமேஸ்வரம் கடற்கரைதான்
அலையே இல்லாத பீச். தேவிபட்டினத்தில் கூட அவ்வளவு அலை இல்லை. ஆனால் சேதுக்கரையில் செம
அலை. எப்படித்தான் நம்ம ஹனுமான் ஜி ராமருக்காக அந்த ஆக்ரோஷ அலைகளில் பாலம் அமைத்தாரோ.
ஒரு விஷயத்தில்
அமிழ்வதை அலை என்ற சொல்லால் குறிப்பதுண்டு. உணர்வலைகள், நினைவலைகள், ஆனந்த அலைகள் என்று.
இந்த் ஆக்ரோஷ அலைகளிலும் கொஞ்ச நேரம் கால் நனைத்துப் பாருங்கள். புத்துணர்வாக இருக்கும்.
ஆனாலும் ஜாக்கிரதையா நில்லுங்க. J
நான் கால் நனைத்த
ஆக்ரோஷ அலைகள்.
அப்பிடி சொல்றத விட என்னை நனைத்த ஆக்ரோஷ அலைகள்னு சொல்லலாம்
இவை புகார் அலைகள்