திங்கள், 21 ஆகஸ்ட், 2017

குருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்

பிதாரில் 1948   இல் கட்டப்பட்ட  இந்த குருத்வாரா  சீக்கியர்களின்  சிறந்த வழிபாட்டுத்தலம். இது முதல்  குரு குருநானக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இதில்  தர்பார் சாஹிப் , திவான் ஹால் , லங்கர் கானா மூன்று கட்டிடங்கள்   உள்ளன .


இதில் தர்பார் சாஹிப்பில் சீக்கியர்களின்  புனித நூலான குருகிரந்தசாஹிப் வைக்கப்பட்டுள்ளது,
சீக்கிய குருக்கள்
நாங்கள் சென்றபோது புனர் நிர்மாணத்தில் இருந்தது. 

தடாகம்
இந்த குருத்வாராவில்  குளியல் தடாகமும் அமிர்தகுண்டம் எனப்படும் புனித தீர்த்தச்  சுனையும் உள்ளன.
இந்தச்  சுனை உருவானதே   ஒரு அதிசய நிகழ்வால்தான்.
1510 இல் இருந்து 1514 வரை  தென்னிந்திய பகுதிக்கு விஜயம் செய்த குருநானக் அவர்களைக் காண வந்த மக்களுக்கு ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறையைப் போக்கவே தனது பாதுகையால் சில கற்களை அகற்றி இச்சுனையை உருவாக்கினாராரம். எனவே அந்த அமிர்தகுண்டில் குருநானக்கின் பாத வடிவம் தங்கத்தால் செதுக்கி வைத்து வழிபடப்படுகிறது.


அனைவரும் அதில் சுத்தி செய்து தலையில் தெளித்து அருந்துகின்றனர்.

போஸ் கொடுத்த சீக்கியர்  குரு இடுப்பில் கத்தியுடன். !

இங்கே நாங்களும் தலையில் முக்காடிட்டு ( கர்ச்சிப்பால் மூடி ) சென்று வணங்கினோம். அன்று நான் குர்த்தா & பைஜாமா அணிந்ததால் துப்பட்டா அணியவில்லை எனவே அங்கே இருந்த செக்யூரிட்டி ஒரு கர்சீப் வழங்க அதனால் தலையை மூடிச் சென்று வணங்கினோம்.

கரா  பிரசாத் எனப்படும் கோதுமை அல்வா பிரசாதம் வழங்கினார்கள். நெய் வழிய மிக ருசியாக இருந்தது அது. ! அடுத்து பிதார் கோட்டைக்குப் போவோம் வாங்க :)

4 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

குரு நானக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் குருத்வாரா பற்றி அறிந்தோம்.

பரிவை சே.குமார் சொன்னது…

படங்களும் பகிர்வும் அருமை அக்கா.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்கள் செமையா இருக்கு குருத்வாரா பற்றிய தகவலும் தெரிந்து கொண்டோம்...

Thenammai Lakshmanan சொன்னது…

Nandri Jambu sir

Nandri Kumar sago

Nandri Geeths.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...