செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

நட்பும் ..துணையும்..

அறிமுகம் ஆனவுடனே
முகம் பார்க்கக் குழைந்து
குரல் கேட்க விழைந்து
விருந்துண்ண அழைத்து
விடியுமட்டும் கதைத்து
முடியுமட்டும் முயன்று
முடிந்தவரை அடைந்து
நீர்த்துப் போகிறது அல்லது
மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது

நூல் நெய்த நட்பு...
****************

முகப்புத்தக நண்பர்கள்
தின அழைப்பில்
கூடிக் களிக்க முடியாமல்
உம்மணாமூஞ்சியாய்...

ஆங்கிலத் திரைப்படமும்.,
அறுசுவை உணவும்.,
ஷாப்பிங் மாலும்.,
குளிர்பதனக் காரும்.,

கேட்ட கேட்காத பொருட்களும்.,
மல்லிகைப்பூ வாசமுமாய்..
உறங்கும் போதுதான் உறைத்தது..

பூங்கொத்தும் புன்சிரிப்புமாய்..
கணவரே நண்பராய்., கைகோர்த்துக்
களிகொண்டு அலைந்தது..
**************************

நினைவுகள் நீந்திக்
கொண்டிருக்கும் மனதில்
வலை கொண்டு ஒவ்வொரு
மீனாய்ப் பிடித்துக்
கவனமாய் வெளியேற்றினேன்..
தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..
************************

மழை....
என் கைத்தலம் பற்றியது குடை..
பாதுகாப்பாய் என்னைச் சூழ்ந்து..
காற்று பறித்தெறிந்தாலும்..
நெளிந்து வளைந்து
விட்டுக் கொடுத்துப் போராடி
நம்பிய என்னை பத்திரமாய்
இலக்கில் சேர்த்து..

47 கருத்துகள் :

சீமான்கனி சொன்னது…

Me the 1st....

சீமான்கனி சொன்னது…

//நினைவுகள் நீந்திக்
கொண்டிருக்கும் மனதில்
வலை கொண்டு ஒவ்வொரு
மீனாய்ப் பிடித்துக்
கவனமாய் வெளியேற்றினேன்..
தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..//

ஆஹா...சுகமான வரிகள் தேனக்கா ரசித்தேன்...வாழ்த்துகள்....

வெறும்பய சொன்னது…

நினைவுகள் நீந்திக்
கொண்டிருக்கும் மனதில்
வலை கொண்டு ஒவ்வொரு
மீனாய்ப் பிடித்துக்
கவனமாய் வெளியேற்றினேன்..
தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..

//

மிகவும் ரசித்த வரிகள் ..

மற்ற கவிதைகளும் அருமை..

ராமலக்ஷ்மி சொன்னது…

எல்லாம் அருமை.

மழையைக் கைத்தலம் பற்றிய குடை மிகப் பிடித்தது.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

அருமை, திருமண நாள் தினமா (is today Marriage Day). வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வரிகள் அருமை.....வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வரிகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்............

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கனி.,வெறும் பய., ராமலெக்ஷ்மி., ராம்ஜி ( இல்லை ராம்ஜி :-)) ., பெயரில்லா..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

தஞ்சை மைந்தன் சொன்னது…

அருமையான கவிதைகள், நீங்க வாழ்கையின் சின்ன சின்ன விடயங்களை கூட கவித்துவமாய் பார்த்து வார்த்தைகளை எழுதுவது அழகு.........வாழ்த்துக்கள்

தஞ்சை மைந்தன் சொன்னது…

அருமையான கவிதைகள், நீங்க வாழ்கையின் சின்ன சின்ன விடயங்களை கூட கவித்துவமாய் பார்த்து வார்த்தைகளாய் எழுதுவது அழகு.........வாழ்த்துக்கள்

Balaji saravana சொன்னது…

//நீர்த்துப் போகிறது அல்லது
மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது//

சில நட்பின் துரோகம்!

//நினைவுகள் நீந்திக்
கொண்டிருக்கும் மனதில்
வலை கொண்டு ஒவ்வொரு
மீனாய்ப் பிடித்துக்
கவனமாய் வெளியேற்றினேன்..
தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..//

அருமை அக்கா!

அ.வெற்றிவேல் சொன்னது…

////நெளிந்து வளைந்து
விட்டுக் கொடுத்துப் போராடி
நம்பிய என்னை பத்திரமாய்
இலக்கில் சேர்த்து..///


///மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது
நூல் நெய்த நட்பு...///

இரண்டு நட்புகளையுமே என்ன அழகாய் சொல்கிறீர்கள்.. இலக்கைச்சேர்த்ததாகவும்,, விஷக்கடியாகவும்..

தங்கள் கவித்துதிற்கு பாராட்டுகள்

அ.வெற்றிவேல் சொன்னது…

////நெளிந்து வளைந்து
விட்டுக் கொடுத்துப் போராடி
நம்பிய என்னை பத்திரமாய்
இலக்கில் சேர்த்து..///


///மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது
நூல் நெய்த நட்பு...///

இரண்டு நட்புகளையுமே என்ன அழகாய் சொல்கிறீர்கள்.. இலக்கைச்சேர்த்ததாகவும்,, விஷக்கடியாகவும்..

தங்கள் கவித்துதிற்கு பாராட்டுகள்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வெற்றி நூல் கொடுத்தது நட்பு
கணவர் கொடுத்தது துணை..

அடுத்து வேண்டா எண்ணங்கள் மீன்..
வேண்டா நட்பாய்..

குடை எனக்குத்துணை.. வாழ்க்கைத்துணையாய்..

அ.வெற்றிவேல் சொன்னது…

அருமை தேனம்மை ..துணைக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசத்தை மிக அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள்.. என்னைத் திருத்தியமைக்கு நன்றிகள்

Chitra சொன்னது…

Super!

200 followers!!!! Congratulations!!!

யாதவன் சொன்னது…

ஆஹா சூப்பர் கவிதை கொள்ளை கொண்டுவிட்டீர்கள் பாராட்டுக்கள்

பத்மா சொன்னது…

அருமை தேனம்மை ..
புரிதல் வந்துவிட்டால் மந்திரிப்பு தேவை இல்லாமல் போய்விடும்

வானம்பாடிகள் சொன்னது…

நல்லாருக்குங்க.

Discovery book palace சொன்னது…

//அறிமுகம் ஆனவுடனே
முகம் பார்க்கக் குழைந்து
குரல் கேட்க விழைந்து
விருந்துண்ண அழைத்து
விடியுமட்டும் கதைத்து
முடியுமட்டும் முயன்று
முடிந்தவரை அடைந்து
நீர்த்துப் போகிறது அல்லது
மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது
நூல் நெய்த நட்பு...//

//நினைவுகள் நீந்திக்
கொண்டிருக்கும் மனதில்
வலை கொண்டு ஒவ்வொரு
மீனாய்ப் பிடித்துக்
கவனமாய் வெளியேற்றினேன்..
தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..// அருமையக்கா, வரிகள் பொருள் செரிந்தவையாக உள்ளது, படிக்க சந்தோஷமாகவும் சிந்திக்கும் படியும் உள்ளது,

சசிகுமார் சொன்னது…

எப்பவும் போல நல்லா இருக்கு அக்கா வாழ்த்துக்கள்.

VELU.G சொன்னது…

//நினைவுகள் நீந்திக்
கொண்டிருக்கும் மனதில்
வலை கொண்டு ஒவ்வொரு
மீனாய்ப் பிடித்துக்
கவனமாய் வெளியேற்றினேன்..
தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..
//

ரொம்ப நல்லாயிருக்குங்க

இன்றிலிருந்து கவிதாயினி என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறேன்
பெற்றுக்கொள்ளுங்கள்

அஹமது இர்ஷாத் சொன்னது…

தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..//

ரசித்த வரி.. சூப்பரா இருக்கு தேனக்கா..

ஹுஸைனம்மா சொன்னது…

//நட்பும் ..துணையும்.. //

நல்ல கவிதை..

அம்பிகா சொன்னது…

//தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..//
மழையு நல்லாயிருக்கு தேனம்மை.

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

"தேனினும் இனிமை."

கலாநேசன் சொன்னது…

நல்லாருக்குங்க.......

Tamilulagam சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

நட்புடன் ஜமால் சொன்னது…

பூங்கொத்தும் புன்சிரிப்புமாய்..
கணவரே நண்பராய்., கைகோர்த்துக்
களிகொண்டு அலைந்தது..]]

மிகச்சிறப்பு

rajasundararajan சொன்னது…

நீர்த்துப்போதல் அல்லது விஷக்கடி ஆதல்; கணவரே நண்பராய்க் களிகொண்டு அலைந்தது உறைத்தல்; கவனமாய் வெளியேற்றுதல்; பத்திரமாய் இலக்கில் சேர்த்தல்.

ஒரு குடையால் ஆகக் கூடியது! ஆமால்லே? (பெரும் படையாலும் ஆகாதது என்று காவிய கர்த்தாக்கள் முதுகுக்குப் பின்னால் முனுமுனுக்கிறார்கள்.)

“நீ கீறியது ஒரு முறை/ நான் கிளறிக் கொண்டது பலமுறை..” என்றொரு கவிஞர் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

// தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..//

இதுவே முக்காலும் சத்தியம்; நம்மைக் கொண்டு செலுத்தும் அக-விசை. இதுவும் இக் கவிதையில் தன் உணர்வுகள் தெளிவாக விளக்கம் பெற்றிருக்கிற தன்மையும் அருமை.

அப்பாதுரை சொன்னது…

நன்றாக இருக்கிறது. 'நூல் நெய்த நட்பு' புதுமை.

சே.குமார் சொன்னது…

அருமையான கவிதைகள்.

பாலு சொன்னது…

வணக்கம் சகோதரி...! கணவரை நண்பராக நினைப்பவர்கள் எத்தனை பேர்..//கணவரே நண்பராய் களி கொண்டு அலைந்தது //
//தப்பி ஒழிந்த ஒற்றை மீனாய் என்னுள்ளே நீ மட்டும் //
அழகான வரிகள்..சகோதரி..வாழ்த்துக்கள்..!

ஹேமா சொன்னது…

//மழையைக் கைத்தலம் பற்றிய குடை //

எல்லாமே அருமை தேனக்கா.
துணையாய் மாறிய நட்பு.
வாழ்த்துகள்.

sakthi சொன்னது…

கேட்ட கேட்காத பொருட்களும்.,
மல்லிகைப்பூ வாசமுமாய்..
உறங்கும் போதுதான் உறைத்தது..

பூங்கொத்தும் புன்சிரிப்புமாய்..
கணவரே நண்பராய்., கைகோர்த்துக்
களிகொண்டு அலைந்தது..

அருமை

sakthi சொன்னது…

மழை....
என் கைத்தலம் பற்றியது குடை..
பாதுகாப்பாய் என்னைச் சூழ்ந்து..
காற்று பறித்தெறிந்தாலும்..
நெளிந்து வளைந்து
விட்டுக் கொடுத்துப் போராடி
நம்பிய என்னை பத்திரமாய்
இலக்கில் சேர்த்து.

ரசித்தேன் மா

இளம் தூயவன் சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் சும்மா சொல்ல கூடாது அருமை.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

உண்மை உரைக்கும் கவிதை.

MATHI சொன்னது…

நினைவுகள் நீந்திக்
கொண்டிருக்கும் மனதில்
வலை கொண்டு ஒவ்வொரு
மீனாய்ப் பிடித்துக்
கவனமாய் வெளியேற்றினேன்..
தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..
************************

சி. கருணாகரசு சொன்னது…

மழை....
என் கைத்தலம் பற்றியது குடை..
பாதுகாப்பாய் என்னைச் சூழ்ந்து..
காற்று பறித்தெறிந்தாலும்..
நெளிந்து வளைந்து
விட்டுக் கொடுத்துப் போராடி
நம்பிய என்னை பத்திரமாய்
இலக்கில் சேர்த்து...//

மிக ரசித்தது.... தூள்!

கட்டு சேவல் சொன்னது…

படிச்ச பிறகு மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கு...வரிகள் எல்லாம் சூப்பர்கா ....அதிலும் மந்திரிக்க வேண்டியதும் தப்பிய ஒற்றை மீனும் ....அட ...!

சே.குமார் சொன்னது…

எப்பவும் போல நல்லா இருக்கு அக்கா வாழ்த்துக்கள்.

விஜய் சொன்னது…

துணையே முதல் நட்பு

வாழ்த்துக்கள்

விஜய்

சத்ரியன் சொன்னது…

//தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்.//

ம்...! அழகா இருக்கு அக்கா.

Jayaraj சொன்னது…

வெறும் வார்த்தை ஜாலமாக
யார் வேண்டுமானாலும்
கவிதை எழுதலாம்.

உணர்வுகளைக் கவிதையாக்கும்
வித்தை
உங்களுக்கு மட்டும்
மிக அருமையாக வருகிறது.

இறையனாரிடம் தருமி கூறியதுபோல
நீர்.... நீர் கவிதாயினி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி தஞ்சை மைந்தன்., பாலாஜி சரவணன்., வெற்றி., சித்ரா., யாதவன்., பத்மா., பாலா சார்., வேடியப்பன்., சசி., வேலு ., அஹமத்., ஹுசைனம்மா., அம்பிகா., கலாநேசன்., ஜெரி., தமிழுலகம்., ஜமால்., ராஜ சுந்தர் ராஜன்., அப்பாதுரை., பாலு., ஹேமா., குமார்., சக்தி., இளம் தூயவன்., சாந்தி., மதி., கருணாகரசு., கட்டு சேவல்., விஜய்., சத்ரியன்., ஜெயராஜ்.,

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...