திங்கள், 30 ஆகஸ்ட், 2010

எய்தது என்ன....?

அவரவரே நிரம்பிய
அட்சய பாத்திரமாயிருக்க..
அடுத்தவரிடம்
பிட்சைப் பாத்திரம் ஏந்தி..

குத்திய முள் எல்லாம்
பிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...

பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?
எய்தது என்ன..?


ஏதோ ஒரு உடல் மினுங்க
பட்டுப்புழுவாய் இலை விழுங்கி
கூடு செய்து
கூண்டோடு கொடுத்து...

செக்கைச் சுற்றும் மாடாய்
அச்சைச் சுற்றும் பூமியாய்
வீட்டைச் சுற்றும் மனைவியாய்..

வேலையோடு போராடும்
என் பின்னால் உன் பார்வை
துளைத்து துளைத்து
ராஜ பிளவை..

போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..

டிஸ்கி :- இது சென்ற வார 21 . 8 . 2010 இளமை விகடனில் வெளி வந்துள்ளது ..

33 கருத்துகள் :

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா.

ராமலக்ஷ்மி சொன்னது…

குமுறும் உள்ளத்தின் வெளிப்பாடு. விகடனில் வாசித்து விட்டிருந்தேன்.

//பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?//

சிந்திக்க வைக்கும் இக்கேள்வி எல்லோருக்கும் பொருந்தும். அருமை.

நட்புடன் ஜமால் சொன்னது…

போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..]]

பின்றிங்க போங்க ...

அ.வெற்றிவேல் சொன்னது…

////போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்////

அசத்தல் தேனம்மை..எப்படி இதெல்லாம்.. தமிழாய் தமிழுக்காய் என்று தங்களின் கவிதை ‘ழ” இதழில் பார்த்தேன்.. நீங்கள் தான் தமிழாய்..தமிழுக்காய் இருப்பது போல் தெரிகிறது.. மற்றுமொரு நல்ல கவிதை

வெறும்பய சொன்னது…

போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..

//

நல்லாயிருக்கு ..

Chitra சொன்னது…

வாழ்த்துக்கள், அக்கா!

கோமதி அரசு சொன்னது…

நல்ல கவிதை தேனம்மை.

இளமை விகடனில் படித்தேன் வாழ்த்துக்கள்!

ஜோதிஜி சொன்னது…

விகடனின் படித்தேன். வாழ்த்துகள் தேனம்மை.

பா.ராஜாராம் சொன்னது…

// வேலையோடு போராடும்
என் பின்னால் உன் பார்வை
துளைத்து துளைத்து
ராஜ பிளவை..

போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..//

பட்டென அறுபடுகிறது ஆண்மை! மக்கா, நல்லாருக்கு.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

போகமும்,மோகமும்
போதுமென்றாலே,
யோகமும்,ஞானமும்,
வந்து சேருமே!!

அன்பன்,

ஆர்.ஆர்.ஆர்.

sakthi சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை

விகடனில் படித்தேன் உடன்

பதிவேற்றிருக்கலாமே

Mrs.Menagasathia சொன்னது…

very nice,congrats akka!!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

very nice, thanks for sharing

அன்புடன் அருணா சொன்னது…

நல்லாருக்குப்பா!

asiya omar சொன்னது…

தேனக்கா அருமை.வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

//போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..//

பின்றீங்க தேனம்மை :-))

ஹேமா சொன்னது…

இளமை விகடனில் வாசித்திருந்தேன்.நல்லதொரு கவிதை...எப்பவும்போல தேனக்கா.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வேதனையுடன் முடியும் கவிதை.

நல்லாயிருக்கு அக்கா.

ஜெய்லானி சொன்னது…

சூப்பர் கவிதை

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான கவிதை... வாழ்த்துகள் தேனக்கா..

இளம் தூயவன் சொன்னது…

செக்கைச் சுற்றும் மாடாய்
அச்சைச் சுற்றும் பூமியாய்
வீட்டைச் சுற்றும் மனைவியாய்..

நல்ல வரிகள்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

இங்கும் அங்கும் அலையும் மனதின் குமுறல் நல்ல முறையில் வெளியிட்டு இருக்கிறீர்கள். மிகவும் பிடித்த வரிகள் ''பார்வையால் உண்ட ராஜ பிளவை.''
அருமை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

Standing Ovation to the Last three lines.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான கவிதை.வாழ்த்துகள்

காவேரி கணேஷ் சொன்னது…

ராமலக்ஷ்மி சொன்னது…
குமுறும் உள்ளத்தின் வெளிப்பாடு. விகடனில் வாசித்து விட்டிருந்தேன்.

//பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?//

சிந்திக்க வைக்கும் இக்கேள்வி எல்லோருக்கும் பொருந்தும். அருமை.


repeattttttt

சசிகுமார் சொன்னது…

அருமை அக்கா

சே.குமார் சொன்னது…

//குத்திய முள் எல்லாம்
பிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...//

அக்கா என்ன சொல்வது என்று தெரியவில்லை....
கவிதை அருமை...
விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

D.R.Ashok சொன்னது…

கடைசி 2 பேராவும்.... பா.ரா. சொன்னதும் தான் என் கருத்தும் :)

Ananthi சொன்னது…

வாழ்த்துக்கள் தேனக்கா... :)
அருமையா இருக்கு..

கமலேஷ் சொன்னது…

அருமையா இருக்கு..

விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா....

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சை கொ ப., ராமலெக்ஷ்மி., ஜமால்., வெற்றீ., வெறும்பய., சித்ரா., கோமதி அரசு.,ஜோதிஜி., பாரா., ஆர் ஆர் ஆர் ., சக்தி ., மேனகா., ராம்ஜி., அருணா, ஆசியா., அமைதிச்சாரல்., ஹேமா., அக்பர்., ஜெய்லானி., ஸ்டார்ஜன்., இளம் தூயவன்.,வல்லி சிம்ஹன்., ஜெரி., டி வி ஆர்., கணேஷ்., சசி., குமார்., அஷோக்., ஆனந்தி., கமலேஷ்., செந்தில்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...