ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாட்டை அலுக்காம சலிக்காம லட்சக்கணக்கா கேட்டுக்கிட்டு இருக்கிற இளைஞர்களுக்கு தெரியுமா கூடங்குளம் பிரச்சனை.. மின்சாரம் எப்பிடி எல்லாம் நமக்கு கிடைக்குதுன்னு.. அனல் மின்சாரம், நீர் மின்சாரம்., அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரம். எல்லாம் எவ்வளவு பயன் தருது.. இதனோட நன்மை தீமை என்னன்னு..
அனல் மின்சாரம் நிலக்கரியிலும்., நீர் மின்சாரம் அணைகளில் இருந்தும்., அணு மின்சாரம் அணுவை பிளப்பது மற்றும் இணைப்பது மூலம் கிடைக்குது. இதில் நீர் மின்சாரமும்., அனல் மின்சாரமும் அதிகளவில் சேமிக்கப்பட முடிவதில்லை. அதிக அளவு பயனுக்காக அணு மின்சார உலைகள் அமைக்கப்படுது.. ஆனால் இதன் கழிவுகள் அச்சமூட்டுபவையாக உள்ளன. பல லட்சக்கணக்கான ஆண்டுகள் இதன் கழிவுகளை பராமரிக்கணும். இதன் செலவு மின்சார உற்பத்தி செலவை விட அதிகம்..இதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் இன்றைய தேவைக்கு அவசியம் என்றாலும் பலர் வாழ்வில் உலை வைக்கும் இந்த உலை தேவையா என பார்ப்போம்.
இந்த அணு உலை அமைக்கப்படுவதை பலர் எதிர்க்கிறார்கள். அதன் காரணங்கள் சுனாமி போன்ற அழிவுகள்., இயற்கை சீற்றங்களான பூகம்பம் போன்றவற்றாலும் அணு உலையில் மிச்சமிருக்கும் அணுக் கழிவுகளால் மிகப்பெரும் ஆபத்து நிகழக்கூடிய சாத்தியங்கள் இருக்கு. இது அமைக்கப்படும் முன்பே பல முறை யோசிக்கப்பட்டு இருக்க வேண்டும். இப்போது முடியும் தருவாயில் பெரும் பணத்தைக் கொட்டி அமைக்கப்பட்ட அணு உலை அந்தப் பகுதி மக்களுக்கு அச்சமூட்டுவதாயிருக்கிறது. எந்த திட்டமும் மக்கள் வாழும் பகுதிகளில் அரசாங்கத்தால் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறி ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு தனியார் முதலாளிகளும்., அரசாங்கமும் வேறு அல்ல. ஆனால் அதன்படி வழங்கப்படுவதுமில்லை. அவங்க இடம்., வாழ்வாதாரம் எல்லாம் பறிபோய் விடுகிறது. நர்மதா அணைத்திட்டமும் இப்படித்தான் மேதா பட்கரின் பெரும் போராட்டத்தால் தடுக்கப்பட்டது.
நம் நாடு தொழில் துறையில் முன்னேற வேண்டுமென்றால் இந்த பவர் ப்ராஜெக்டுகள் எல்லாம் அவசியம் என்று ஒருகருத்து இருக்கு. ஆனா இந்த மாதிரி மக்களின் பயத்தின் மேல் அமைக்கப்படுவது தேவையா என்ற கேள்வியும் இருக்கு.வெளிநாடுகளில் பல அணு உலைகள் இருக்கின்றன. இந்தியாவில் இருப்பது 6 மட்டுமே என ஒரு சாரார் கூறும் போது இல்லை வெளிநாடுகளில் இருக்கும் சிலவும் மூடப்பட்டு வருகின்றன. என இன்னொரு சாரார் சொல்கின்றார்கள்.. இந்த சமயத்தில் நாம் ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு விபத்தையும்., போபாலில் நடந்த விஷவாயுக் கசிவையும்., செர்னோஃபில்லில் நடந்த அணு உலை விபத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதில் எத்தனை எத்தனை அப்பாவி உயிர்கள் எந்த விபரமும் தெரியாமல் மாண்டன என்று.
யாருக்கோ எங்கோ நடப்பதுதானே என நீங்க பாட்டுக்கு ஹெட்போனில் பாட்டு கேட்டுகிட்டு போகலாம்.. ஆனால் அது உங்களையே தாக்கினா அதன் பதில் என்ன சொல்லுங்க.. உங்களால முடிஞ்ச அளவு மின்சார உபயோகத்தை குறைக்கவாவது செய்ங்க. வீட்டில் இருக்கும் மின் பொருட்களை பட்டியலிடுங்கள். டி. வி., ஃப்ரிட்ஜ்., வாஷிங் மெஷின்., சி டி ப்ளேயர்., எம் பி 3., கம்ப்யூட்டர்., லாப்டாப்., ஏ சி., ரைஸ் குக்கர்., மைக்ரோவேவ் அடுப்பு., இண்டக்ஷன் அடுப்பு., மிக்ஸி., க்ரைண்டர்., ஜூசர்., காஃபி மேக்கர்., ட்ரெட் மில்., வாட்டர் ப்யூரிஃபையர், வாட்டர் ஹீட்டர் ..வாட்டர் மோட்டார்., இது போல எத்தனை லைட்டுகள்., ஃபான்கள் பத்தாததுக்கு பாட்டரி சார்ஜுடு வெஹிக்கிள்ஸ் வேற உபயோகிக்கிறீங்க நீங்க..
இது போல எல்லா அலுவலகங்களிலும்., கடைகளிலும் ஏசி யின் பயன்பாடு அதிகரிச்சுகிட்டு இருக்கு.. இத்தனை மின் பொருட்களை உபயோகிச்சுகிட்டு நாம க்ளோபல் வார்மிங்கை அதிகப்படுத்திக் கிட்டு இருக்கோம்.. இயற்கையை சிதைச்சுகிட்டு இருக்கோம். இதை எல்லாம் நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நம் சந்ததியினருக்கும் வெறும் நிலத்தைக் கூட விட்டு வைப்போமா தெரியாது.
பெரிய தொழிற்சாலைகளிலும்., வணிக வளாகங்களிலும்., கல்லூரி விடுதிகளிலும்., அரசு அலுவலகங்களிலும் சோலார் எனர்ஜி பயன்படுத்தப்படவேண்டும். அதை சேமிக்கும் வழி முறைகளையும் அதிகப்படுத்த வேண்டும். சோலார் குக்கர்கள்., சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தலாம். சாதாரண க்ளைமேட் உள்ள நம் நாட்டில் ஏசி யின் பயன் பாடு குறைக்கப்பட வேண்டும். இயற்கை காற்றையும் அனுபவியுங்கள்.. தேவையற்ற இடங்களில் லிஃப்டை உபயோகிக்காம படியை உபயோகியுங்க. தேவையற்று ஓடும் லைட் ஃபான்களை அந்த ரூமை விட்டு வெளியே வரும்போது அணைத்து விடுங்கள். தேவையின் பொருட்டே மின் சாதனங்களை சிக்கனமாக உபயோகியுங்கள்..
தெருக்களில் காலை முதல் மாலை வரையும் கூட தெரு விளக்குகள் அநாவசியமாக சில சமயம் எரிவதைப் பார்க்கலாம். இந்த மாதிரி அநாவசியமான மின்சார உபயோகம் பார்த்து சரிசெய்யப்பட வேண்டும், ஒலி பெருக்கிகள்., கூட்டங்களில் கண்ணைப் பறிக்கும் விளக்குகள் எல்லாம் கூட தவிர்க்கப்படலாம்.
ஒரு பிரஜையா சக பிரஜைகளுக்கு நீங்க செய்யக்கூடிய உதவி என்னன்னா அவங்க துன்பத்துல பங்கெடுத்து ஆறுதல் அளிப்பதுதான். அதுக்கு முதல் கடமையா இன்னிலேருந்து மின்சாரத்தை அளவோடு பயன்படுத்துவோம்னு உறுதி எடுத்துக்குங்க..
டிஸ்கி:- இந்தக் கட்டுரை இன் அண்ட் அவுட் சென்னை டிசம்பர் 1-15 2011 இதழில் வெளிவந்தது.

அற்பங்களை
பதிலளிநீக்குதேடியே நாம் பயணிக்கிறோம்
மனிதர்கள் சுயம் உணரவேண்டும்
நல்ல கட்டுரை கவிதாயினி
அருமையான கட்டுரை..,
பதிலளிநீக்குஒரு பொருளின் தேவை அதிகரிக்கும் போது ஏதாவது ஒரு வகையில் அந்த பொருளை உற்பத்தி செய்து பயன்படுத்துவது தவிற்க்க இயலாததாகிவிடுகிறது ..!
கட்டுரை ஆழமான கருத்துகள் கொண்டு அழகாக சொல்லுது - கடை பிடிக்கலாமே.
பதிலளிநீக்குவிழிப்புணர்வைத் தரும் நல்ல கட்டுரை தேனம்மை!
பதிலளிநீக்குநாம க்ளோபல் வார்மிங்கை அதிகப்படுத்திக் கிட்டு இருக்கோம்.. இயற்கையை சிதைச்சுகிட்டு இருக்கோம். இதை எல்லாம் நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நம் சந்ததியினருக்கும் வெறும் நிலத்தைக் கூட விட்டு வைப்போமா தெரியாது.
பதிலளிநீக்குகனமான உண்மை !
ஒரு பிரஜையா சக பிரஜைகளுக்கு நீங்க செய்யக்கூடிய உதவி என்னன்னா அவங்க துன்பத்துல பங்கெடுத்து ஆறுதல் அளிப்பதுதான். அதுக்கு முதல் கடமையா இன்னிலேருந்து மின்சாரத்தை அளவோடு பயன்படுத்துவோம்னு உறுதி எடுத்துக்குங்க..
பதிலளிநீக்குசிறப்பான சிந்தனை !
நன்றி செய்தாலி
பதிலளிநீக்குநன்றி வரலாற்று சுவடுகள்
நன்றி மனசாட்சி
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி ராஜி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
super katturai it is so useful
பதிலளிநீக்குsuper katturai
பதிலளிநீக்குThanks🙏
பதிலளிநீக்கு