நம்மை விளித்துத் தோழி ஆணையிட்டால் அதை சிரமேற்கொண்டு முடிக்காவிட்டால் எப்படி. அதான் :)
Rufina Rajkumar இந்த விளையாட்டில் என்னைச் சேர்த்திருக்கிறார். நன்றி ரூஃபி.
1. தூக்குத் தூக்கி.
”தூக்குத் தூக்கி” இந்தப் படத்தின் பாடல்கள் எனக்குப் பிடித்தன. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், சுந்தரி சௌந்தரி நிரந்தரியே,படம் முழுசா ஞாபகம் இல்லை ஆனால் இதில் முக்கியமா சிவாஜி சொன்னதையே திருப்பிச் சொல்லுவார். சின்னப் பிள்ளையில் அப்படி அம்மாவிடமும் தோழிகளிடமும் பேசிவாங்கிக் கட்டி இருக்கிறோம்ல. அதான் ரொம்பப் பிடிச்சிது :) ( கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கேட்பாள் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் நண்பன் இந்த ஐந்தையும் படத்தில் மெய்ப்பிக்க சிவாஜி முயற்சிப்பார். அதை சொல்லி என்னை யாரும் அடிக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொல்’கிறேன் :)
விளையாட்டின் விதிகள் எளிதானவை. தொடர்ந்து 10 நாட்களுக்கு, உங்களை மிகவும் பாதித்த, உங்கள் ரசனை/ சிந்தனையின் மீது ஓரளவேனும் ஆதிக்கம் செலுத்திய ஒரு திரைப்படத்தின் பிம்பம் ஒன்றை இங்கே பதிவிடவேண்டும். ஏதும் விளக்கவுரைகள் எழுதத் தேவையில்லை; படம் மட்டுமே போதுமானது; விருப்பமிருந்தால் படத்தின் பெயரைச் சொல்லலாம், மேலும் பலர் அதைப் பார்த்து ரசிக்க வாய்ப்பாக அமைய). தினம் உங்கள் நண்பர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும், விளையாட்டைத் தொடர்ந்து மேற்செலுத்திச் செல்ல.
நான் அழைப்பு விடுப்பது Revathi Narasimhan வல்லிம்மா அவர்களுக்கு
2.சபாபதி.
”சபாபதி” இந்தப் படம் என்னை பெரிசா பாதிச்சிச்சுன்னு, ஆதிக்கம் செலுத்துச்சுன்னுல்லாம் சொல்ல முடியாது. ஆனா சோவோட கண்ணு மாதிரி தெறிச்சு விழுறாப்புல முட்டைக் கண்ணோட டி ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது சிரிப்பு வரும். எங்க ஆயா வீட்டு ஐயா அடிக்கடி டெக்கில ( வி சி ஆர் ) போட்டுப் பார்ப்பாங்க. அப்போ பார்த்தது. ஏவிஎம் தயாரிப்பு. பர்ஃபெக்ட்.
நான் அழைப்பு விடுப்பது Kalyani Shankar நானானிம்மா அவர்களுக்கு.