எனது பதிமூன்று நூல்கள்

செவ்வாய், 30 ஜூன், 2020

அரியநாச்சி – ஒரு பார்வை.


அரியநாச்சி – ஒரு பார்வை.

குற்றப் பரம்பரை, பட்டத்து யானை தந்த ஆசிரியரின் இன்னொரு படைப்பு அரியநாச்சி. ஆனால் குற்றப்பரம்பரை தந்த ஆச்சர்ய வீச்சை பட்டத்து யானையும் அரியநாச்சியும் தரவில்லை.

விதம் விதமாய் சில டெய்ஸிக்களே..

டெய்ஸிக்களில் இத்தனை வகை இருப்பதை அன்றுதான் பார்த்தேன். எல்லா நிறத்திலும் இருக்கின்றன டெய்ஸிக்கள். மலர்ப் புன்னகையில் வீழுந்து எழுந்தேன். அந்த மென்னகையில் நீங்களும் கொஞ்சம் தோய்ந்து எழுங்களேன். திங்கள், 29 ஜூன், 2020

யாகசாலை - பலவான்குடி சிவன் கோவில்.


மார்ச் நான்காம் தேதியன்று பலவான்குடி நகரச் சிவன்கோவில் கும்பாபிஷேகத்துக்கான ஐந்தாம் கால யாகசாலையில் கலந்து கொள்ளும் பேறு கிட்டியது. 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில் இது.புதிதாக ஐந்துநிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுக் ( ஒன்பதாவது ) கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊரை அடைத்துப் பந்தல் போட்டு விருந்தும் விசேஷமும் அமர்க்களப்பட்டது. 

இரட்டையானைகள் உலா வந்தன.இரட்டைக் குதிரைகள் நாட்டியமிட்டன. கேரள செண்டை மேளத்தின் அதிரடிச் சத்தம். சிவாச்சாரியார்கள் உரையாற்றினார்கள். அதன் பின் ஹோம திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுப் பூரணாகுதி. ட்ரோன் வைத்து வீடியோவும் புகைப்படமும் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு தெய்வத்துக்கும் விதம் விதமான யந்திரங்கள் மந்திரங்கள் இருப்பதுபோல் விதம் விதமான ஷேப்பில் ஹோம குண்டங்கள் வண்ண வண்ணமான வடிவங்களில் கண்ணைக் கவர்ந்தன. ( அக்னிதான் எல்லா அவிர்பாகங்களையும் எல்லா தேவதைகளுக்கும் கொண்டு சேர்ப்பவர். பொதுவாக நன்கு உலர்ந்த சமித்துக்களையும் சாண உருண்டைகளையும் பயன்படுத்த வேண்டும். விதம் விதமான உருவங்களில் அந்தந்த ஹோம குண்டங்களில் தெய்வக் காட்சியைக் காணலாம். ஹோமம் செய்யும்போது கண் கலங்கி ஓடும் அளவு நெருப்பே இல்லாமல் புகை வரக் கூடாது. )

அந்த யாகசாலைக் காட்சிகள் உங்கள் பார்வைக்காக .ஒவ்வொரு சாமிக்கும் தனித்தனி யாக சாலை. ஒவ்வொரு காவல் தெய்வமும் கூட.

சனி, 27 ஜூன், 2020

வாரா வாரம் ஆரவாரம்.

2681. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லெக்ஷ்மி தங்க நெல்லிகனி பொழிந்த கதையும், பட்டினத்தார் கதையும், சபரியின் கதையும் என்றுமே அலுப்பதில்லை. துறவு என்பது அவ்வளவு எளிதானதுதானா ? அதிலும் சபரியின் பக்தி பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை..

2682. தத்வமஸியாக இருக்க விரும்புகிறோம்.. நிஜத்தில்.. நாமும் காமக் க்ரோத லோப மத மாச்சர்யங்களில் சிக்கிச் சீரழிகிறோம். தெய்வதத்தை உணர்கிறோம். ஆனால் அதாகவே மாற எத்தனை கல்பகோடி காலமோ.. எத்தனை பிறவியோ..

2683. பள்ளியில் தவறு செய்தால் முட்டி போடுவோம். பிரார்த்தனையின் போது முட்டி போடுவோம். இங்கே ப்ராணனை எடுக்க முட்டி போட்ட காட்சி கொடூரம். கொரோனா அவலங்களை திசைதிருப்ப ஒரு உயிரை பலியாக்கிட்டாங்களா ? இரவு முழுதும் தூக்கமில்லை. என்ன வாழ்க்கை இது. ? எங்கோ தொடங்கி எங்கோ முடியுது.

2684. நட்டநடு ரோட்டுல நாலு பாவிங்க கழுத்துமேல முட்டிய வச்சு கொல்ற வீடியோ.. பதறுது பாவிகளா. என்னாலயும் மூச்சுவிட முடில.. அப்பிடி என்ன கொலவெறி..

2685. ஒரு ஆட்டுக்குட்டி மாதிரி அந்தாள் செத்துப் போனான் . இப்ப நெனைச்சாக்கூட விதிர்விதிர்க்குது. ஒரு மாதிரி குழப்பமா இருக்கு. எந்த உறுத்தலுமில்லாம ஒருத்தன் மேல எப்பிடி முட்டி போட முடியும். அந்த முழங்காலை எல்லாம் வெட்டி எறியணும்னு கூட அன்னிக்குக் கோவம் வந்தது.

வெள்ளி, 26 ஜூன், 2020

காரைக்குடி டு குன்றக்குடி மை க்ளிக்ஸ். KARAIKUDI TO KUNDRAKKUDI.MY CLICKS.

காரைக்குடியிலிருந்து குன்றக்குடிக்குப் பாதரக்குடி வழியாகச் செல்லலாம். இன்னொரு வழி கழனிவாசல் வழியாக ஓ. சிறுவயலைக் கடந்து செல்லலாம்.

நடைப்பயணம் ஒன்று இந்தப் பாதை வழியாக மேற்கொண்டுள்ளோம் நானும் ரங்கமணியும் முன்பொருமுறை.புதன், 24 ஜூன், 2020

பூத்துச் சிரிக்கும் காய் கனி பொம்மைகள்.

காய்கனி உண்ணச் சொன்னா சாப்பிடாம ஓடும் பிள்ளைகளை இந்த லால்பாக் காய்கனிக் காட்சிக்குக் கூட்டிட்டுப் போனா நிச்சயம் விரும்பிச் சாப்பிடுவாங்க. வாங்க பூக்களால் செய்யப்பட்ட  காய் கனி பொம்மைகளைப் பார்த்து ரசிப்போம். 
எடுத்தவுடனே இரண்டு பூ(ண்டு)க்குண்டர்கள் வரவேற்கிறாங்க. GARLIC VANAKKAM. :) 

செவ்வாய், 23 ஜூன், 2020

சிக்கனம் பழகுவோம்.


சிக்கனம் பழகுவோம்.கொள்ளைநோய் கொரானா பரவிவரும் காரணத்தால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு, வேலைக்குறைப்பு, சம்பளக் குறைப்பு செய்துவருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கொரோனாவோடு பழகி வாழக் கத்துக்கிட்ட நமக்கு சிக்கனம் பழகுறது கஷ்டமா என்ன. தேவையற்றவைகளை வாங்கிக் குவித்தால் தேவையானவைகளை விற்க நேரிடும் என்கிறார் உலகின் மாபெரும் பணக்காரரான வாரன் பஃபே. வாங்கும் சம்பளத்தில் செலவுபோக மிஞ்சியதை மட்டுமே சேமிப்பதென்று இருக்காமல் குறிப்பிட்ட தொகையை சேமிப்பில் போட்டுவிட்டு மிச்சத்தையே செலவழிக்க வேண்டும் எனவும் சொல்கிறார்.
சிக்கனம் என்றால் என்ன? செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை. அநாவசியச் செலவுகளைக் குறைப்பது, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது இவைதான்  சிக்கனம். தனிமனித சிக்கனம் வீட்டை மட்டுமல்ல நாட்டையும் மேம்படுத்தும். பொருட்கள் விலை உயர்வதையும் அந்நியச் செலாவணி உயர்வதையும் உள்நாட்டுப் பணவீக்கத்தையுமே சிக்கனம் கட்டுப்படுத்தும்.  
சிங்கப்பூரின் பொருளாதாரம் உயர்ந்ததற்குக் காரணமே சிக்கனமும் சேமிப்பும்தான். ஏனெனில் கிராஸ் டொமஸ்டிக் ரேட் – மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பார்க்கும்போது சிங்கப்பூர் மக்களின் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரின் எகனாமிஸ்ட் BY TOH MUN HUNG சொல்கிறார்.

திங்கள், 22 ஜூன், 2020

இரணிக்கோவிலின் சிற்பக்கூட்டம்.

இரணிக்கோவிலைப் பற்றிப் பல்வேறு தருணங்களிலும் எழுதியாயிற்று. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது. இங்கே இருக்கும் காளி, பெருமாள் கோவில், ஆட்கொண்ட நரசிம்மர், அஷ்டலெக்ஷ்மி மண்டபம், நவ துர்க்கைகள், தூண் சிற்பங்கள், குபேரர், விதான வண்ண ஓவியங்கள்  என.

இங்கே இருக்கும் பைரவருக்கு ஷண்பக சூர சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் மூன்று கல் தூண்கள் நிறுவப்பட்டு மழை நீர் சேகரிப்பும் அந்தக் காலத்திலேயே செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ராட்டையும் தேசியக் கொடியும் காந்தி அடிகளுமே விதானச் சிற்பமாக இருந்த அதிசயத்தையும் பார்த்தோம்.

இனி தூண்களிலும் பக்கச் சுவர்களிலும் இருக்கும் எழிலார்ந்த சிற்பத்தொகுதிகளைப் பார்ப்போம்.

கம்பீரமான ஐந்துநிலை ராஜகோபுரம் இக்கோவிலின் எழிலுக்கு முதல் சாட்சி. முன்னே இருப்பது அஷ்டலெக்ஷ்மி மண்டபம்.

கருவறையில் அபிஷேகம், அலங்காரம், ஆட்கொண்ட நாதருக்கு.

வெள்ளி, 19 ஜூன், 2020

லால்பாகில் ஒரு சாரல் நடை.

லால்பாகில் தினம் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் ஏராளம். வாங்க நாமும் போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வரலாம். :) 

வியாழன், 18 ஜூன், 2020

உல்லாசிகளும் உழைப்பாளிகளும்.

ஹைதையில் உள்ள கலாச்சார கிராமமான ( கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடிகளும் உண்டு ) சில்பாராமத்தில் கைவினைக் கலைஞர்களையும் உழைப்பாளி மக்களையும் கௌரவப்படுத்தும் விதத்தில் டாப்ளோ போல சிலைகள் அமைத்துள்ளார்கள்.

அங்கேயே வெய்யில் கால உல்லாச விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. போட்டிங் இருக்கிறது. அதோடு இந்த மாதிரி ஏர் பலூனில் தண்ணீரில் ஆட்டமும் போடலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமே.

காற்று நிரப்பிய இந்தப் பந்து/பலூனில் பிள்ளைகள் ஏறியவுடன் இந்த கறுப்பு ஜிப்பை ஒட்டி விடுகிறார்கள். அதன் பின் பிள்ளைகள் உள்ளே தவழலாம், உருளலாம், ஓடலாம். இணைப்பாக கயிறும் உள்ளது. அவர்கள் தடுமாறினால் இழுத்துப் பிடித்து நிறுத்தி வெளியே கொண்டு வரலாம். இந்த உல்லாச பலூனில் ஏற கட்டணம் உண்டு.

பணம் படைத்தவர்க்கான உல்லாச விளையாட்டுகள் இன்னும் பல உண்டு. :)


புதன், 17 ஜூன், 2020

பேர் பெற்ற வீடு.

காரைக்குடி கானாடுகாத்தான் மற்ற செட்டிநாட்டு ஊர்களில் வீட்டுக்கெல்லாம் பெயர் உண்டு. இது பற்றி முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன். இது 1581.மல்லுப்பட்டியார் வீடு. பொதுவாக செட்டிநாட்டு ஊர்களில் வீடுகள் மேற்குப் பார்த்துத்தான் கட்டப்படுகின்றன. கிழக்கில் பின் வாசல் இருக்கும். 

திங்கள், 15 ஜூன், 2020

ரோஜாப் பூந்தோட்டம் - 2.

ரோஜா என்றதும் நேரு மாமா நினைவுக்கு வந்தால் நீங்கள் 70ஸ் கிட் என்று அர்த்தம். :) இங்கே அநேக நிற ரோஜாக்கள் வரிசை கட்டி நிற்கின்றன.  

ரோஜா இதழ்களை நீரில் போட்டு அருந்தினாலே சுவாசப் புத்துணர்ச்சியும் வாயில் நறுஞ்சுவையும் கிடைக்கும். 


திருமணங்களில் ஜோதிகா மாலை என்று ஒன்று ரோஜாவின் இதழ்களைக் கொண்டு தயாரிப்பதுதான். 

கோவில் மாலை அல்லது திருமண மாலையில் உதிர்ந்த ரோஜா இதழ்களைக் காயவைத்து ஸ்நானப் பொடி, சீகைக்காய்ப் பொடி ( இதனுடன் போட்டு அரைப்பார்கள் )  தயாரிக்க உபயோகிப்பார்கள். 


அலமாண்டா சைஸ்லில் மஞ்சள் ரோஜாக்கள். 

சனி, 13 ஜூன், 2020

யட்சிணிகளும் யட்சர்களும் சிம்மயாளியும்.

தூண்களில் சிம்மங்களும் சிம்மயாளிகளும் அணிவகுக்கும் நகரத்தார் கோவில்களில் இரணியூரும் மாத்தூரும் முக்கியமானவை.

நேமமும் இரணியூரும் மாத்தூரும் சிற்ப அழகுக்காகவும் இறையருள் பெறவேண்டியும் தரிக்கத்தக்க ஸ்தலங்கள். வாருங்கள் இச்சிற்பங்களைக் கண்டு களித்து வருவோம். 

இந்த நிலைவாசல் சிற்பத்தில் கல்லிலே கலைவண்ணம் கண்ட அழகு அதிசயிக்க வைக்கிறது. மரச்சட்டத்தில் செதுக்குவதுபோல் கல்லிலே விதானம் வித்யாசம். 

தழைந்திருக்கும் தாமரை மொக்குகளும் கஜலெக்ஷ்மியும் சிம்மங்களும் ஆட்கொண்டநாதர் சந்நிதிக்குக் கட்டியம் கூறுகிறார்கள். மிருகங்கள்மேல் மனிதாபிமானத்தோடு அன்பு செலுத்துவதை இச்சிற்பங்கள் காட்சிப்படுத்துகின்றன.

வெள்ளி, 12 ஜூன், 2020

கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும். 

1571. சுவாமிக்குக் காசு முடிந்து வைத்தல் -  திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகளின் போது ஊரில் இருக்கும் எல்லாச் சாமிக்கும் நிகழ்வு நல்லபடியாக நிறைவேற வேண்டுமென்று காசு முடிந்து வைப்பார்கள். இது அந்தக்காலத்தில் நாலணா, எட்டணா என்ற அளவில் இருந்தது. சோமண்ணன் என் அம்மாவிடம் இந்தப் பணத்தைப் பெற்று ( விட்டுப் போன சாமிகளையும் அவரே சொல்லுவார் – நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில், கீழ ஊரணிப் பிள்ளையார் கோவில், முத்தாளம்மா, முத்துமாரி, அத்திமரத்துக்காளி என்று இன்னும் பல சாமிகள் உண்டு ) கோவில்களில் செலுத்தி விடுவார்.

1572. படிஅளத்தல் :- உக்கிராணத்துக்குப் பொருட்களைக் கொடுக்கும் முன் தலைமைச் சமையல்காரரிடம் அரிசி அளந்து கொடுப்பார்கள். வீட்டின் பெரியவர் தலைப்பாகை கட்டிச் சாமி வீட்டில் எதிரில் தடுக்குப் போட்டு அமர்ந்து இருப்பார். அவர் முன் அரிசி நிறைந்த பாத்திரமும் மரக்கால் அல்லது படியும் இருக்கும். தலைமைச் சமையற்காரர் வீட்டுப் பெரியவரிடம் ஒரு பெரிய அண்டாவில் அரிசி அளந்து போடச் சொல்லி வாங்கிக் கொள்வார். சாமியைக் கும்பிட்டு விட்டு வீட்டுப் பெரியவரும் ஒரு கைப்பிடி முதலில் போட்டுவிட்டு அதன்பின் மரக்காலிலோ படியிலோ அரிசி அளந்து அண்டாவில் போடுவார்.

செவ்வாய், 9 ஜூன், 2020

நடைவழிப் பயணமும் நாணலும்.

2661.ஜன்னல் வழியாக யாரையாவது பார்த்தால் வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்பதுபோல் புதிதாயிருக்கிறது

2662. நமக்கு இருக்கும் உடல் உபாதைகள், சிற்சில பிரச்சனைகளோடும் கொரோனாவால் அவதிக்குள்ளாகி அன்றாடக் கடமைகளை நடத்த சிரமப்படுபவர்களைத்  தொலைக்காட்சியில் பார்க்கும்போது, ( முடிந்தபோது முடிந்ததை பக்கத்தில் இருக்கும் சிலருக்கு கொடுத்து உதவினாலும் ) நாம் வீட்டில் சமைத்துச்  சாப்பிடுவது கூட ஏதோ குற்றம்போல் மனதைச் சங்கடப்படுத்துகிறது..

2663. என்னன்னவோ குறிக்கோள்களுடன் இருந்து , அடையாளமற்ற இல்லத்தரசியாகி பிள்ளைகள் வளர்ந்தபின் ஏற்பட்ட விரக்தி, வெறுமையைக் களையவே எழுத வந்தேன். நதியின் போக்கில் நானொரு நாணல். உங்கள் நடைவழிப் பயணத்தில் தென்பட்ட கோபுரங்களுக்கருகில் நானொரு குடில். சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை அறிவேன். இருக்கும்வரை இன்னும் சிறப்பாய்க் கொடுக்க முயல்வேன்.

2664. விசிறிகள் பலவகை..

ஞாயிறு, 7 ஜூன், 2020

பொய்க்கால் மயிலும் பித்தளைச் சிம்மங்களும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்டுக்கு உணவருந்தச் சென்றபோது அங்கே இருந்த கலைப்பொருட்கள் சேமிப்பு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதிலும் இந்த மிகப் பிரம்மாண்டமான சூரியனார் மிகுந்த மனங்கவர்ந்தவராகி விட்டார். 


இரும்பு வலைக்கவசமணிந்த வாளும் கேடயமும் ஏந்திய  ஊர்க்காவல் காவல் வீரன். சுடுமண் சிற்பம்.

ஸ்பீக்கர் பூவும் பெல் பூவும்.

ஹைபிஸ்கஸ், ஹோலிஹாக் இவற்றைத்தான் ஸ்பீக்கர் பூன்னு சொல்லி இருக்கேன். பார்க்க செம்பருத்திப்பூ மாதிரி இருக்கும் இவற்றின் இதழ்கள் குட்டையானவை. ஓரளவு கெட்டியானவையும் கூட. 
சனி, 6 ஜூன், 2020

மாத்தூர் - சில சிறப்புகள்.

கொங்கணச்சித்தர் தாமிரத்தைத் தங்கமாக்கி ஐநூறு மாற்றுத்தங்கம் உருவாக்கிய இடம், அவரை ஐநூற்றீசுவரர் ஆட்கொண்ட கோவில், நட்சத்திர விருட்சங்கள் நிரம்பிய கோவில், இயற்கை சாளரமுறையில் கருவறை வரை அமைக்கப்பட்ட கோவில், திருவோடு மரமும் வில்வமரமும் இருக்கும் கோவில், மாப்பிள்ளை நந்தி எனப்படும் சிம்ம நந்தி ( கல்யாண நந்தி அருள் பாலிக்குமிடம்) , ஆயுள் வழங்கும் ஆனந்த முனீஸ்வரரும், ஐநூற்றீசுவரரும் அருளாட்சி செய்யுமிடம், இரட்டை பைரவர்களுடன் காலபைரவர் காட்சி தரும் ஸ்தலம் ,பல நூற்றாண்டுகள் தாண்டியும் காட்சி தரும் ஸ்தல விருட்சமான மகிழ மரம், சிம்ம யாளிகள், நகர விடுதி, பசுமடம் ஆகியன உள்ளன. பசு ஸ்தோத்திரம் எழுதப்பட்டிருப்பது இங்கே மட்டுமே.


எவ்வளவு பிரம்மாண்டமான கோயில் வாசல். இங்கே புள்ளிகள் அதிகம் என்பதால் வரவும் அதிகம். அதனால் மாத்தூர்க் கோயிலும் விடுதியும் ( இப்போது தங்கும் அறைகளும் உள்ளன )  எப்பவுமே அழகாகப் பராமரிக்கப்படும்.

வெள்ளி, 5 ஜூன், 2020

எனது பதிமூன்றாவது நூல் “ ஆ.. ஆ.. ஆ.. ஆத்திச்சூடிக் கதைகள் “

அதென்ன ஆ..ஆ.. ஆ.. என்று கேட்கின்றீர்களா. ”ஆராவமுதனும்,ஆதித்யாவும், ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்” என்ற தலைப்பைத்தான் டிஸ்கவரி உரிமையாளர் சகோதரர் வேடியப்பன் அவர்கள் ஷார்ட் ஃபார்மில் ஆ.. ஆ.. ஆ.. ஆத்திச்சூடிக் கதைகள் என்று மாற்றிக் கொடுத்துள்ளார். :)

வியாழன், 4 ஜூன், 2020

அமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்”

எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”.

///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெ ஜெயலலிதா அம்மாவுக்கும், மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்.///

இந்நூல் மின்னூலாக அமேஸானில் கிடைக்கிறது. விலை ரூ. 49. 

https://www.amazon.in/dp/B0881NQHLM

பெண் அறம் : PEN ARAM 

இந்த இணைப்பைச் சொடுக்கினால் நீங்கள் அமேஸான் தளத்துக்குச் சென்று வாங்கலாம். அமேஸானில் உங்களுக்கு அக்கவுண்ட் இருந்தால் என் எல்லா நூல்களையும் படிக்கலாம்.  

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் ).

படிச்சுப் பார்த்துட்டு கருத்தைச் சொல்லுங்க மக்காஸ். 

புதன், 3 ஜூன், 2020

பெங்களூரு டு பிருந்தாவன். மை க்ளிக்ஸ். BENGALURU TO BRINDHAVAN. MY CLICKS.

பெங்களூரூ டு பிருந்தாவன். மை க்ளிக்ஸ். 

பெங்களூருவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டினா வழியாக மைசூரை அடைந்தோம். வழியில் பத்மநாப ஸ்வாமி கோவில், சாமுண்டி ஹில்ஸ், திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில் ஆகியவற்றை இடுகைகளாகவே போட்டிருக்கிறேன்.

எனவே சாலையில் பயணிக்கும்போது பேருந்திலிருந்து எடுத்த புகைப்படங்கள் இங்கே அணிவகுக்கின்றன. பெங்களூருவும் மைசூருவும் செடி கொடி வகைகள் நிறைந்து கானகம் போல் செழிப்பானவை. 

மசூதி, சர்ச், இந்துக் கோவில்கள் என அனைத்துக்குமே பஞ்சமில்லை. நீர் வளத்தாலும் நல்ல செழிப்பமான ஊர்கள். மன்னராட்சி இல்லாவிட்டாலும் மைசூரு உடையார் மன்னர்களின் மேல் மிகுந்த அபிமானம் கொண்ட மக்கள். ஸ்ரீரங்கப்பட்டினாவில் ஒரு கடையின் முன்புறம் குழலூதும் கிருஷ்ணன்.

செவ்வாய், 2 ஜூன், 2020

ரோஜாப் பூந்தோட்டம் - 1

முள்ளில்லா ரோஜா,ரோஜாப் பூந்தோட்டம், ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம், ரோஜா ரோஜா, ரோஜா மலரே ராஜகுமாரி.. என்றெல்லாம் பாடல்கள் கேட்டிருப்பீர்கள். தோட்டத்தின் ராஜா என்றைக்கும் ரோஜாதான். 

ரோஜாவைப் பதியமிட்டு வளர்த்தாலே வளரும். செடியின் தண்டை வெட்டி ஊன்றுதல்தான் பதியமிடுதல். இது தொட்டியிலும் வளரும் செடி.பால்கனிச் செடின்னும்சொல்லலாம். வீட்டுக்கு அலுவலகத்துக்கு அழகூட்டக்கூடியது மட்டுமல்ல. நறுமணமும் நிறைந்தது. இதிலிருந்து செண்ட், ஸ்ப்ரே எல்லாம் தயாரிக்கிறாங்க. குல்கந்து, ரோஸ்வாட்டர் ( ரோஸ் மில்க் )  போன்றவையும் தயாரிக்கிறாங்க. இதில் சிறிதளவு விட்டமின் சி யும் இருக்குங்குறது ஆச்சர்யப்படத்தக்க செய்தி. இனி லால் பாகில் ஃப்ளவர் ஷோவில் நான் எடுத்த விதம் விதமான ரோஜாக்கூட்டத்தைப் பார்ப்போம் வாங்க. வெள்ளை, வெளிர் மஞ்சள், வெளிர் பிங்க் நிற ரோஸ்கள். 

திங்கள், 1 ஜூன், 2020

தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

1561. கோவில் மாலை வருதல் :- கோவிலில் பாக்கு வைத்து மணமக்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்தபின் திருமணத்தன்று முதல்நாள் கோவில் மாலை வரும். இதை சங்கு ஊதி வாங்கி வைத்துக் கொண்டு வந்த அர்ச்சகருக்கு ( குலதெய்வக் கோவிலில் இருந்து கொண்டு வரும் வேளாருக்கும் ) சில்வர் வாளியில் பழம் தேங்காய் பிஸ்கட்  பணம் வைத்துக் கொடுப்பார்கள்.

1562. நிச்சயம் செய்தல் :- திருமணத்தன்று முதல்நாள் மாப்பிள்ளை வீட்டிலோ பெண் வீட்டிலோ கல்யாணத்தைப் பேசி முடித்து நிச்சயம் செய்து கொள்வார்கள். காலைப் பலகாரம் பேசி முடித்துக் கொள்ளும் வீட்டில் நடைபெறும். இதற்கு மாப்பிள்ளை வீட்டார் பதினொன்று பதினாறு என்ற வகையில் சீர்வரிசை எடுத்துச் செல்வார்கள். அண்டாவில் மஞ்சள் தடவிய தேங்காய் 31, வாழைப்பழச் சீப்பு ( மலைப்பழம் அல்லது செவ்வாழை ) 51 அல்லது 101, சாத்துக்குடி - 16, ஆரஞ்சு - 16, ஆப்பிள்- 16, திராட்சை - 2 கிலோ, மாதுளை - 16, எலுமிச்சை - 21, பேரீச்சம்பழம் - பெரிய பாக்கெட், கல்கண்டு - 1 கிலோ, வெளிநாட்டு பிஸ்கட் - 1 டின் , வேஃபர்ஸ் - 1 டின்,  வெளிநாட்டுச் சாக்லெட் - 1 டின், வெற்றிலை - 5 கவுளி, பாக்கு - 1 கிலோ, மல்லிகைப் பூ - 3 பந்து, இவை வைக்க சில்வர் அண்டா, பேஸின், வாளிகள் தூக்குச் சட்டிகள் எடுத்துச் சென்று பரப்புவார்கள். பெண் வீட்டில் இந்த முறையில் கொஞ்சம் திருப்பித் தருவார்கள்.   

1563. முகூர்த்தம் வைத்தல்/ கழுத்துருவுக்குப் பொன் தட்டுதல்/ கொடுத்தல் :- கழுத்துருவைப் பெண் வீட்டில் முன்பே செய்து வைத்திருப்பார்கள். அதனால் மாப்பிள்ளை வீட்டில் பொற்கொல்லரை அழைத்துச் சென்று புதிதாகப் பவுனைக் கொடுத்துத் தட்டித்தரச் சொல்லி அதைக் கழுத்துரு செய்யும்போது சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள். அந்தக்காலத்தில் ஏழுநாள் திருமணம் என்பதால் பொன் கொடுத்துத் தட்டிச் சேர்த்துக் கொள்ளச் சொல்லும் பழக்கம் இருந்தது. இந்த நாளிலும் அது ஒரு நாள் திருமணமாகச் சுருங்கிய பின்னும் இந்த முறைகளைப் பின்பற்றுகிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...