எனது பதிமூன்று நூல்கள்

புதன், 30 நவம்பர், 2016

ஓங்காரச் சுனையில் மிருதங்க ஒலி.

களத்திர தோஷமும், புத்திர தோஷமும், காலசர்ப்பதோஷமும் இருந்தாலும்,

ஏழிலும் எட்டிலும் ராகுவோ கேதுவோ அமர்ந்திருந்தாலும்,

ஒன்பது கிரகங்களும் லக்னத்திலிருந்து ( ராகுவிலிருந்து கேதுவரை )  தலையும் வாலுமாய்ப் பக்கம் பக்கம் அமர்ந்திருந்தாலும் ( காலசர்ப்ப தோஷம் )

இம்மாதிரித்  தகராறு செய்யும் களத்திரன் ராகுவையும், ஞானகாரகன் கேதுவையும் கார்வார் செய்யணும்னா புகார் செய்யவேண்டிய கடவுள் பேரையூர் நாகநாத சுவாமிதான்.!

இக்கோயில் 1878 இல் ஆவணிமாதம் திங்கட்கிழமை திருவோண நட்சத்திரத்தில் இராமச்சந்திர மகாராஜா அவர்கள் உத்தரவுப்படி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.  அதன்பின் 99 ஆண்டுகள் கழித்து 1977 இல் மகராஜன் என்பவராலும், 1989 இல் அய்யாக்கண்ணு என்பவராலும் திருக்குடமுழுக்குப் பெருஞ்சாந்திவிழா நடைபெற்றிருக்கிறது.

காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் நமுணசமுத்திரம் தாண்டி அமைந்துள்ளது பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி ஆலயம் . 42 கிமீ தூரம். இக்கோயிலைப் பார்த்தவுடன் எங்கெங்கும் நாகம் கண்டு ஒரே மிரட்சியாகிவிட்டது. தரையில், மதிலில், கோபுரவாசலில், நந்தவனத்தில் எங்கெங்கும் நாகர்கள்.
ஒவ்வொரு ஞாயிறும் மாலை நாலரையிலிருந்து ஆறு மணிக்குள் ராகுகாலத்தில் அங்கே இருக்கும் நாகர் சிலைக்கும் நாகராஜனுக்கும் பால் அபிஷேகம் செய்து நெய்விளக்கு ஏற்றுகின்றார்கள். அழகழகான இளையவர்கள் கூட்டம் அதிகம். பார்த்ததும் அவர்கள் அழகுக்கு இன்னும் ஏன் திருமணமாகவில்லை என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அர்ச்சகர்கள் ஆறு மணிக்குள் பாலாபிஷேகம் செய்து முடித்து விடுகிறார்கள்.
அதன் பின் நாகராஜனுக்கும் நாகநாத சுவாமிக்கும் பெரியநாயகி அம்பாளுக்கும் அர்ச்சனை.
300 பேர் இருந்த இடம் ஆறுமணிக்குள் பளிச்சென்று கூட்டம் கலைந்துவிட்டது. ஒன்பது வாரம், பதினோரு வாரம் என வேண்டிக்கொண்டு இளைஞர்கள்தாம் தற்போது அதிகம் வருகிறார்கள்.
இங்கே இருக்கும் ஓங்கார வடிவ புஷ்கரணி கண்ணைக் கவர்ந்தது. அதுவும் சுற்றிலும் நாகர்கள் புடை சூழ ஒரு டெரர் சினிமா எஃபக்ட்டில் இருந்தது. பங்குனி மாதத்தில் அதன் மையத்தில் இருக்கும் ஓங்காரச்சுனையின் கரையில் செதுக்கப்பட்டிருக்கும் சூலத்தைத் தொடும் அளவு நீர் உயரும்போது பல்வேறு மிருதங்கங்களின் ஒலி கேட்பதாகச் சொல்கிறார்கள். சிவன் நாகலோகத்தில் நாகர்களுக்காக நடனமாடியபோது எழுந்த ஒலி அது. டமருகச் சத்தம்.
////
நான்கு யுகங்களைக் கண்ட ஆலயம், நாகராஜன்நாகக் கன்னிகைகள் வணங்கி வழிபட்ட தலம், ராகுகேது தோஷம் போக்கும் தலம், திருமணப்பேறு மற்றும் குழந்தைப்பேறு அருளும் இறைவன் என்பது உள்ளிட்ட பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாக நாகநாத சுவாமி திருக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயமானது, புதுக்கோட்டை மாவட்டம், பேரையூரில் வெள்ளாற்றங்கரைக்கு தெற்கே அமைந்துள்ளது.////

பதின்பருவப்பெண்கள் எதிர்கொள்ளும் மனம் உடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் :-பதின்பருவப்பெண்கள் எதிர்கொள்ளும் மனம் உடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் :-
ை இந்த இணைப்பிலும் பிக்காம்.
HAPPY TO SHARE MY ARTICLE IN AVAL VIKATAN. !

பெண்கள் டீன் ஏஜ் பருவத்தைச் சிக்கலின்றி கடக்க... அவசியம் செய்ய வேண்டியவை!

பேதை பெதும்பை  மங்கை  மடந்தை  அரிவை  தெரிவை பேரிளம்பெண் என்று கூறப்படும் பருவங்களில் மங்கையும் மடந்தையும் பதின்பருவத்துக்குரியது. எது நல்லது எது கெட்டது என்று முழுமையாக உணரமுடியாத ரெண்டுங்கெட்டான் பருவம். ஆனாலும் தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொள்ளும் பதின்பருவப் பெண் ஒரு பிரச்சனை என்றால் அம்மாவிடம்தான் தஞ்சம் புகுவார் .

பொதுவாக டீனெஜர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வையும் பார்ப்போம். 

பதின் பருவத்தில்தான் அதிகமா வளர்சிதை மாற்றம் ஏற்படுது. உடல் வளர்ச்சி போல மூளை வளர்ச்சியும் இந்தப் பருவத்தில்தான் அதிகம். அதுக்காகப் பெண்கள் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின், மினரல், நல்ல கொழுப்பு, இரும்புச்சத்து, கால்ஷியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கணும். #மீல் ப்ளானிங் முக்கியம்.

முதன் முதலில் தனது உருவத் தோற்றம். ஹெல்த் கான்ஷியஸ் அதிகம் இருக்கும். பரு, மரு, தலையில் முடி உதிர்தல், முகத்தில் கை கால்களில் அதிகம் ரோமம் வளர்தல் அவங்களுக்கு கவலையை உண்டாக்கும். தங்கள் உடை, தோற்றம் பற்றி அதிக கவலை இருக்கும். ஹீல்ஸ் அணிதல், டாட்டு குத்திக் கொள்ளுதல், உடலில் துளையிட்டு வளையங்கள் அணிந்து கொள்ளுதல்னு அவங்க விருப்பங்கள் வேறாக இருக்கும். கட்டாயப்படுத்தாம ஓரளவு பிடிச்சத செய்ய விடுங்க #சரியான வழிகாட்டுதல் முக்கியம்.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஸ்ட்ரோக் :-

ஸ்ட்ரோக் :-

ஸ்க்ரீன் சேவரில் வைத்திருந்த அஞ்சனாவின் கண்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜோ. பேசும் கருவிழிகள். பேச்சற்று நிறுத்தும் விழிகள். எத்தனை மொழிகள் இருந்தென்ன மொழியற்று அமரவைக்கும் இவள் பார்வை ஒன்றே போதாதா. எதற்காக மொழிகளுக்கு ஏங்குகிறோம், அது தரும் போதைக்கும் என  நினைத்தபடி மனமில்லாமல் ஸ்க்ரீனை மேலே தள்ளியபோது மெசெஜ் ஒன்று வந்திருந்தது அவளிடமிருந்துதான்

.
மூன்று குழந்தைப் புகைப்படங்கள். அன்று க்ரீமி இன்னில் எடுத்தது. குழந்தைப் பொண்ணு. இல்லை பயபுள்ள. பதினைந்து வயதில்தான் பெரியவளானாளாம். பத்துவயது வரை ஆண் என்றே எண்ணிக் கொண்டாளாம். சிரிப்பு வந்தது அவருக்கு. அழகான தோள்பட்டைகள். அதில் நிம்மதியாகச் சாய்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தது. எப்போது என்றுதான் தெரியவில்லை.


சனி, 26 நவம்பர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். பெயிண்ட் பண்ணக் கற்றுத் தரும் விசுவநாதராவ். !

 சுமாரா 2005 லேருந்து வலைப்பூவுல எழுதிக்கிட்டு இருக்கார் நண்பர் விசுவநாத். ஆனா போனவாரம்தான் ஒரு பின்னூட்டம் மூலம் அவரோட ஹாஸ்ய உணர்வைத் தெரிஞ்சிக்கிட்டேன். மஹாராஷ்ட்ரால வசிச்சாலும் தாய் மண்ணையும் மொழியையும் மறக்காம ப்லாக் எழுதிட்டு இருக்கார் .

ப்லாகில் போய் பார்த்தா மனுஷன் நாலடியார், கபீர்தாஸ், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, ஆண்டாள் திருமொழி, அருணகிரிநாதர் திருப்புகழ், கீத கோவிந்தம், சுப்ரபாதம், நாச்சியார் திருமொழி, மதுராஷ்டகம், கந்தபுராணம், அய்யப்பன், பக்த ப்ரகலாதன் , சுதாமர், உத்தவ கீதை, அமர்நீதி நாயனார், மெய்ப்பொருள் நாயனார், கண்ணப்ப நாயனார், வள்ளி திருமணம், சிவபுராணம், ஏனாதி நாயனார், அரிச்சந்திரன், திருவாசகம், சுப்ரமண்ய புஜங்கம் என எல்லாவற்றுக்கும் எளிய முறையில் விளக்கம் அளித்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்ல. தான் வரைந்த தெய்வத் திரு உருவங்களையும் இணைத்திருக்கிறார். அரிய சேவை !! 

அதுனால அவர்கிட்ட அவரோட பெயிண்டிங் இண்டரஸ்ட் பத்தி சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டிருந்தேன். ிருவிளையாடல் ுமி சிவன் பாணியில் அவர் அனுப்பிய கேள்வி பதில் வடிவம் பார்த்து அசந்துட்டேன். செம !!! . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :)அப்புறம் ஒரு விம். யார் ுமி யார் சிவன்னு கேக்கக்கூடு. ஏன்னண்டுமே அவர்ான் :)


உங்களப்பத்தி கொஞ்சம் :மேடம் உங்களுக்கு ராஜராஜ சோழன் தெரியுமா ?

வெள்ளி, 25 நவம்பர், 2016

ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

546.ஏட்டுப் பள்ளிக்கூடம் , திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலம்  என்ற சொற்களைக் கேட்டிருப்பீர்கள். அமராவதி புதூர் என்ற ஊரிலும் திருப்பளாய்த்துறை என்ற ஊரிலும் குருகுலக் கல்வி முறை இருந்தது பற்றி என் பள்ளிப் பருவத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதென்ன ஏட்டுப் பள்ளிக்கூடம். அந்தக் காலத்தில் குழந்தைகளை முதன் முதலில் விஜயதசமி அன்றுதான் பள்ளியில் சேர்ப்பார்கள். இதற்கு சூள்பிடி என்றும் பெயருண்டு. 


///குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு  விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.////

மாணவர்கள் ஆசிரியருக்குக் குருதட்சணை ( தேங்காய் , பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தட்சணை ) சமர்ப்பித்துக்  கல்வி கற்பிக்க வேண்டி வணங்கி நிற்பார்கள். அப்போது பரப்பிய மஞ்சள் அரிசியில் அல்லது மணலில் கூட  ஆசிரியர் மாணவர்களின் கையைப் பிடித்து ஆட்காட்டிவிரலால்“அரி ஓம்” என எழுத வைப்பாராம். அதன் பின் 547.* ஏட்டில் எழுத்தாணி வைத்து எழுதக் கற்பிப்பார்களாம்.


கல்கியின் ஐந்து நாவல்கள் ( வால்யூம் 2 ) – ஒரு பார்வை.கல்கியின் ஐந்து நாவல்கள் ( வால்யூம் 2 ) – ஒரு பார்வை.

கல்கியின் நாவல்களைப் பற்றி எழுதுவது திருவண்ணாமலை தீபத்தைப் பற்றி வர்ணனை செய்வதுபோல. அனைவரின் காட்சிக்கும் புலனாகும் ஒன்றை நான் எப்படி தரிசித்தேன் எனப் புளகமுறக் கூறவே எழுதி உள்ளேன். J
 
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு ஆகியவற்றின் ரசிகை நான். அதே போல் முன்பே அலை ஓசை, தியாகபூமி, கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு படித்திருந்தாலும் திரும்ப ஒரு முறை இப்போதும் ரசித்துப் படித்தேன். படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.

பொதுவாக கல்கியின் நாவல்களில் என்னைக் கவர்ந்த அம்சம் இயற்கை வர்ணனை. அதிலும் நீல உத்தரீயத்தைப் விரித்துப் போட்டதுபோல விரியும் கடல் என்னை மயக்கி இருக்கிறது. நிலைப் பற்றியர்ணைகும் அப்பியே. ூக்கள் என்றால் த்ை விானூக்கும் மும் , பைக் என்றால் விம் விானைகும் சிறித்ுப் பக்கும் எழத்ு அவுடையு.

சரித்திரக் கதைகளில் நம்முன் ராஜபாட்டைகளும் கோட்டை கொத்தளங்களும் விரிவது போல சுதந்திரப் போராட்டக் கதைகளில் த்ங்கள், படையெடுப்பு, அரசியல் நிலை, உலக அரசியல், அரசியல்தலைவர்களின் செயல்டுகளை விவரித்தல், பொருளாதாரம், அறிவியல், நடப்பு மக்களின் மனோபாவம், காந்தி மகான் போன்றோரிடம் பேரன்பு , மக்கள் புலம்பெயர்தல் பற்றிய துயரம் ஆகியன கதாபாத்திரங்களின் உரையாடல் வழி வெளிப்படும். சினிமாத்துறை என்றால் அது சம்பந்தமான தேவையான விஷயங்கள் அனைத்தும் இடம் பெறும். நடுநடுவே அருமையான இசைப்பாடல்கள் வேறு., அவற்றை எந்த எந்த ராகத்தில் பாடவேண்டும் என்று குறிப்புகளோடு இடம் பெற்றிருக்கும்.

அலை ஓசை :- 

வியாழன், 24 நவம்பர், 2016

காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.

526. *கோட்டை கொத்தளங்கள் போல இரண்டடுக்கு மூன்றடுக்குக் கொண்டவை. கீழே பத்துப்படி உயர 527 .* செம்புராங்கற்கள். அதன் மேல் முதல் தளம். முதல்தளத்திலிருந்து 528.* கற்படிகள் கொண்ட மாடி அதன் மேல் இரண்டாம் தளமும் 529 .* மரப்படிகள் கொண்ட மூன்றாம் தளமும். கோட்டை போல் உயரமான வீடு இது . இன்னொரு வீட்டின் மதில் கடைசியில் போட்டிருக்கேன். 
530.*வளவு நடை . கீழ்வாசல் வற்றல் வறளி காயப்போட ஏற்ற இடம். மழைத்தண்ணீர் பிடிக்க, துணி காயவைக்க, பொங்கலிட , விளையாட என்று ஏக உபயோகம். ஐம்பூதங்களும் உலாவும் இடம் :)
531. *கீழ்வாசல் இரும்புக் கம்பி அடைத்துக் கூண்டில் உள்பாயும் வெளிச்சம் :)
532.*பித்தளை அல்லது தாமிரத் தாழ்வாரங்களுக்கு முன்னால் சிற்பமாகச் செதுக்கப்பட்ட தேக்குச் சட்டங்கள் - உட்டன் ரீப்பர் - வழியாக டிசைன் டிசைனாக வெளிச்சம் பாய்வது அழகு !
தூண்கள் கூடப் ப்ரகாசமாய்
533. தூண்களின் தாமிரப்பட்டயங்களில் வார்னிஷ் அடிச்சிருக்கு

100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும். . ஒரு பார்வை.

எஸ்ராவின் முன்னுரையில் கதைக்கரு, சொல்லும் முறை, மொழி,வடிவம், தனித்துவம் இத்தோடு பன்முகத்தன்மை பொறுத்துத் தேர்ந்தெடுத்ததாகக் கூறி இருக்கிறார். பிரைமா லெவி கூறிய ஒன்பது காரணங்கள் சிறப்பு.

அதோடு இதையும் சேர்த்துக்கலாம். ஏதேனும் மெசேஜ் சொல்லணும்னு நினைக்கிற, தனது வட்டார வழக்கில், பேச்சு மொழியில் கதை சொல்ல நினைக்கிற சாமான்யர்களும் சமீபமா வலைத்தளம்,முகநூலில் எழுத ஆரம்பித்து இருக்கிறவர்களும் கூட நல்ல கதைசொல்லிகளாக மாறிவருகிறார்கள்.

தொகுப்பில் நிறையக் கதைகள் துயரம் படிந்தவை. சிறுகுழந்தைகளின் பார்வையில் சொல்லப்பட்ட கதைகள் அநேகம்.  போன நூற்றாண்டுக்கான வாழ்வியல் விசாரம் பொதிந்த கதைகள்.

நல்ல தொகுப்பு ராமகிருஷ்ணன் சார்.


இனி ஒவ்வொரு கதையும் ஓரிரு வரிகளில்

1. புதுமைப் பித்தனின் காஞ்சனை. காஞ்சனை மனுஷியா அமானுஷ்யமா என யோசிக்க வைத்த கதை.

2. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் -ஹ்யுமரஸ். “ உங்களிடம் எல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம். உடன் இருந்து வாழ முடியாது “ என்று கடவுள் கந்தசாமிப் பிள்ளையிடம் சொல்லுமிடம் ஹைலைட். ! 

3. புதுமைப் பித்தனின்  செல்லம்மாள்- படிக்கப் படிக்கத் துன்ப முடிச்சு. பட்டணத்தில் போதிய வருமானமில்லாமல் பாசத்துக்குரிய ஆனால் ரோகம் பிடித்த மனைவியுடனான ஒரு ஜீவனின் வாழ்க்கை எப்படி எல்லாம் இம்சிக்கக்கூடும் என்பதை விவரிக்கும் கதை.

4. மௌனியின் அழியாச்சுடர் .- ”நாம் சாயைகள்தாமா ? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம். ” சாகாவரம் பெற்ற வார்த்தைகள். இருகூறாகத் தன் மன உணர்வுகளை எட்டி நின்று ( OBSERVE) யோசித்தல் நிகழும் கதை.

5. மௌனியின் பிரபஞ்ச கானம். -கவித்துவமான வர்ணனைகள் கொண்ட விசாரக் கதை.

6. கு. ப.இராஜகோபாலனின் விடியுமா - பயமும் பதட்டமுமாக ஓரிரவைப் பயணத்தில் கழித்து எதிர்பார்த்த பயம் நிதர்சனமானதும் ஏற்படும் விடுபட்ட மன உணர்வுக்கான கதை.

7. கு. ப. இராஜகோபாலனின் கனகாம்பரம் - மிகச் சிறந்த கதை. தம்பதிகளுக்குள் நிகழும் கருத்துவேறுபாடு பொசசிவ்னெஸ் காரணமாக எதன் பொருட்டும் வரக்கூடும் எனச் சொல்லிய நுண்மையான கதை. 

ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்:-

ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்:-

தேவையானவை :-

புதன், 23 நவம்பர், 2016

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும். ( அவள் விகடனில் )

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும் :-

அவள் விகடன் இணைப்பில் இங்கேயும் படிக்கலாம்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு யுக்திகள்!

அம்மி கொத்துறோம், அருகாமனை சாணை பிடிக்கிறோம்., சவுரி முடி வேணுமா, கூடை சேர் பின்னித் தரோம் என்று சொல்லி என்று வேவு பார்த்து உளவு சொல்லி கிராமப்புறங்களில் தனியா இருக்கும் இல்லத்தரசிகளைக் குறிவைத்து வீட்டில் கொள்ளை நடக்கிறது.  நகை பாலீஷ் பண்ணித் தரோம் என்று சொல்லி அவர்கள் கரைக்கும் சொல்யூஷனில் நகையை உருக்கி எடுத்துக் கொள்வதும் நடக்கிறது.

”ஒரே வெய்யில் தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் தாங்க  ” என்று விற்பனைப் பிரதிநிதி உடையில் கேட்ட ஒரு பெண்ணிற்கு இரக்கப்பட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பெண்ணைப் பின் தொடர்ந்து அவரும் இன்னும் சிலரும் உள்ளே வந்து கத்தியைக் காண்பித்து போட்டிருந்த நகைககளைக் கழட்டிச் சென்றுவிட்டிருக்கிறார்கள்.

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் பேசி அப்பா அம்மா மற்றும் வீட்டு விபரத்தை விசாரித்து வீட்டுக்கு வந்து அந்தப் பெண்ணின் அம்மாவிடம் அவரது கணவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன்னை ரேஷன் சாமான் வாங்க அனுப்பியதாகச் சொல்லி ரேஷன் கார்டு பணம் பைகள் வாங்கி  ஒரு ஆள் எஸ்கேப்பாகிவிட மாலை வரை பொருட்கள் வரும் என்று அந்தத் தாய் காத்திருக்கிறார். மகளும் கணவரும் வந்த பின்தான் உண்மை தெரிந்திருக்கிறது ஏமாந்தது.

செவ்வாய், 22 நவம்பர், 2016

அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும். MARUTHI & DUKE.

அரியலூருக்குச் சென்றிருந்தபோது ஹோட்டல் மாருதியிலும் அடுத்த நாள் மதுரை ட்யூக்கிலும் தங்கினோம்.

செல்ஃபோனில் எடுத்த அநேக ஃபோட்டோக்கள்  பழைய லாப்டாப்பில் ஜாமாகி விட்டன. ஹ்ம்ம். ஒன்பது நிலை ராஜ கோபுரம் கொண்ட அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள்/கலியபெருமாள் கோயிலில் ஒரு பன்னிரண்டு அடி ஸ்தம்பம் கலியுக வரதராக வணங்கப்படுது. இவர்தான் மூலவர். இவரை ஆஞ்சநேயர் தாங்கிப் பிடிச்சு இருக்கார். மிக அருமையான இக்கோயிலின் ஸ்தலவரலாற்றை இங்கே பாருங்க.குருவேலப்பர் கோயிலுக்கும் போனோம்.

இந்த இரு இடங்களிலும் தரிசனம் செய்துட்டு ஹோட்டல் மாருதிக்குத் திரும்பும் முன்னே கீழே ஸ்ரீ ரங்காவில் டிஃபன் சாப்பிட்டோம். நல்லா இருந்தது. :)

இந்த ஹோட்டலில் இருந்த ஆளுயரக் கண்ணாடி கண்ணைக் கவர்ந்தது. செல்ஃபோனில் எடுத்துத் தங்கிப் போன அதன்மிச்ச சொச்சமாகச் சில புகைப்படங்கள் இங்கே.

வழக்கம்போல போனதும் காஃபி. :)

எதுக்கு இரண்டு செட் ஆஃப் ஸ்விட்சஸ்னு எடுத்தேன்.
மறுநாள் காலை காரிடாரில் சூரிய ஒளி .சைடில் ஃபயர் எக்டிங்யுஷர்

கூடை வேணுமா..


காரைக்குடியில் இருந்து குன்றக்குடி வழியாக பிள்ளையார்பட்டி செல்லும் வழியில்  குபேரன் கோயில் உள்ளது. அதற்குத் திரும்பும் வழியில் ஒரு கூடைக்கடை இருக்கு. அதில் விதம் விதமான கூடைகள் விற்பனைக்கு வைச்சிருக்காங்க. வள்ளியம்மை கூடைகள், கூல்டிரிங்க்ஸ் & ஸ்நாக்ஸ் நு கடை பேரு.

இதன் உரிமையாளர் விஜி ஒரு போராடி ஜெயித்த பெண்மணி. அவங்களோட கூடைகளை நான் புகைப்படம் எடுத்து வந்தேன். அந்தப் பக்கமா போறவங்க தேவை ஏற்பட்டா அவங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமா கூடை வாங்கிப் பாருங்க. தரமான கூடைகள்.


ஞாயிறு, 20 நவம்பர், 2016

தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.

1121. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. ( இன்று ) அவர் நல்லவராவதும் தீயவராவதும் சோஷியல் நெட் வொர்க் கையிலே.

1122. குழந்தைகளால் நிரம்பி வழிகிறது முகநூல்.. :)
.
.ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கும், ஃபேபி ஃபுட்ஸும் தான் மிஸ்ஸிங்

1123. தீபாவளிதான் முடிஞ்சுருச்சே.. லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாம் வைச்சிருந்தும், ரூல்ஸ்படி சரியா ஓட்டியும் இன்னும் அப்பாவி டூவீலர்களை ரோட்டில் பிடித்து ஏன் நிறுத்துறீங்க.

1124. நளாயினி கண்ணகி சாவித்ரின்னு அடுத்த புயலுக்குத் தமிழ்ப் பேரா வைங்க. நீலம் காத்ரீனான்னு வைக்காம. ! :)

1125. Age aaga aaga fat aa mattumilla..dwarf aavum aagitu iruken 👻

1126.எத்தனை முறை ப்லாக் போஸ்டைப் போட்டாலும் டிவிட்டர் போல நீ ஏற்கனவே போட்ட போஸ்ட் இது என லொட்டு லொசுக்கு காரணம் சொல்லாமல் இங்கிட்டு வாங்கி அங்கிட்டுப் போட்டுக்குது கூகுள்.

1127.Tv la pattu partha kooda net pack gali aayidumonnu tension aa irukey. Hahaha. #net_addict

1128.போட் ஓட்டுறவங்கள எல்லாம் அரசு பஸ் ட்ரைவரா போட்டிருக்காங்க. உயிரைக் கையில பிடிச்சிட்டு உக்கார்ந்து வரவேண்டியதா இருக்கு. பஸ் வேற 1008 ஸ்பேர் பார்ட்ஸோட சில்லறை சிதர்றாமாரிக் குலுங்குது. மழை பேஞ்சா ஓட்டைக் கப்பலாட்டம் எல்லா ஜன்னல்லயும் ஒழுகுது. எங்க ஓடி உக்கார்றதுன்னு தெரியாம பிடிக்க சரியான கம்பியும் இல்லாம தாவு தீர்ந்திடுச்சு. பிபி ஹை ஆயி தலை 180 டிகிரில சுத்துது. உடம்போ 360 டிகிரில.. யப்பா சாமி என்ன உயிரோட எறக்கி விட்ருன்னு கெதறாததுதான் மிச்சம். இந்த ஸ்டேடஸ போட தப்பிச்சு வந்திருக்கனாக்கும் ..

1129.தர்ம தரிசனம். ஒரு தர்ம சங்கடம். பழனி கோயிலில் திருக்கல்யாணம் அன்று தெரியாமல் சென்று க்யூவில் மாட்டி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து சன்னதி திறந்தார்கள்.

சனி, 19 நவம்பர், 2016

சாட்டர்டே போஸ்ட். செந்தில்குமாரை மாற்றிய சங்ககிரி துர்க்கத்தின் சம்பவம்.

கூட்டாஞ்சோறு என்ற பதிவில் எழுதி வரும் சகோ செந்தில்குமாரின் பல இடுகைகளைப் படித்திருக்கிறேன். ஏர்போர்ட்ஸ், ரயில்வேஸ்டேஷன் மட்டுமல்ல. மத்திய ஆப்ரிக்க நாடுகளில் வாழும் பெண்களுக்கு நடந்து வரும் கொடுமைகள் பற்றியும் இவரது பதிவுகள் விழிப்புணர்வை உண்டாக்கியது.

இவர் தினத்தந்தியில் ஃப்ரீலான்சராகவும் ”அக்ரி டாக்டர்”, “ஹாலிடே நியூஸ்” ஆகிய பத்ரிக்கைகளின் இணை ஆசிரியராகவும் இருக்கிறார். ”சிறந்த விவசாயப் பத்ரிக்கையாளர் “ விருதும் வாங்கியவர் !.

என்னுடைய குல்பர்கா கோட்டை பற்றிய கட்டுரை ஹாலிடே நியூஸில் இடம்பெறச் செய்தவர். தொடர் முயற்சியாளர். கிட்டத்தட்ட 6000 கட்டுரைகள் எழுதி இருக்காராம். மயக்கம் போட்டு விழுந்திடாதீங்க. :) 

இவரிடம் இந்த வார சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது விழிப்புணர்வு உண்டாக்க வேண்டிய ஒரு விபரம் பற்றிப் பகிர்ந்து கொண்டார். தலைப்பைப் பார்த்தவுடனே பகீர் என்றது. இன்னும் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன. சீக்கிரம் விமோசனம் பிறக்க வேண்டும் .


////பொம்பளப் புள்ளன்னா கொன்றுவாங்க.. இல்லம்மா..////


சகோ தேனம்மை லெக்ஷ்மணன் எனது இளமை கால நிகழ்வுகள் ஒன்றை எழுதி அனுப்ப சொல்லியிருந்தார். அதற்காக எழுதியது.

வெள்ளி, 18 நவம்பர், 2016

பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

எத்தனையோ இடங்களில் காஃபி, டீ குடிச்சிருப்பீங்க. ஆனா நான் குடிச்ச காஃபிலயே பெஸ்ட் காஃபி எதுன்னு கடைசில சொல்லி இருக்கேன். ட்ரெயினில் ஏசியில் பயணிக்கும் போதும் வெளியூர் போகும்போதும் தங்கும் ஹோட்டல்களில் காஃபி/ஃப்ளாஸ்கில் பார்சல் காஃபி வாங்கி அருந்தியது உண்டு. முக்காவாசி கச்சடா காஃபியாதான் இருக்கும். அந்த நேரத்துக் கடமையைத் தீர்க்கன்னு. கட்டாயமா காலை, பத்து மணிக்கு, மாலைன்னு மூணு நேரம் காஃபி குடிக்காட்டா எனக்கு பயங்கர டென்ஷயாயிடும் :) :) . அதுனால எது கிடைக்குதோ இல்லையோ ரங்கமணி காஃபியை ஃப்ளாஸ்க் ஃப்ளாஸ்கா ஆர்டர் பண்ணிடுவார். :)

பொதுவா ஃபில்டர் காஃபி குடிச்சவங்களுக்கு எந்த காஃபியும் ஒத்துப் போறது கஷ்டம். ஹைவேல பூரா கும்பகோணம் டிகிரி காஃபின்னு போட்டிருப்பாங்க. எல்லாம் கன்னா பின்னான்னு சிக்கிரி போட்ட காஃபி.

மதுரையிலயும் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன்லயும் ஃபில்டர் காஃபி பேஷ் பேஷ். நன்னாயிருக்கும். சென்னைல புரசைவாக்கம் ஸ்கை வாக்ல கல்மனே காஃபி சூப்பரா இருக்கும். காரைக்குடி ஜெய்னிகாவிலும் இனிய காஃபி சர்ப்ரைஸ்.

சீக்கிரம் டிக்காக்‌ஷன் இறங்குதுன்னு காஃபிக்கு இப்ப பர்கொலேட்டர் பயன்படுத்தினாலும் ஃபில்டர்ல போடுற காஃபிக்கு ஈடு இணை இல்லை. வாரம் ஒரு முறை பீபெரி & செலக்டோ காஃபித்தூள் ஃப்ரெஷா நரசூஸ்லயும் காஃபிடேலயும் வாங்கணும் .

ஃபில்டர வாட்டிட்டு அதுல துளி சர்க்கரை போட்டுட்டு அதன் மேல் ஐஞ்சு ஸ்பூன் நரசூஸ், ஐஞ்சு ஸ்பூன் காஃபிடே, அதும் மேலே கால் டீஸ்பூன் சிக்கிரி தூவி கொதிக்கிற வெந்நீரை ஊத்தி மூடி வைக்கணும். அதே போல மூணு தரம் அஞ்சு நிமிஷத்துக்கு ஒருக்கா தண்ணி ஊத்தி டிக்காஷன் எடுத்து ஃப்ரெஷா காய்ச்சின பசும்பால்/ஆவின் பால்ல ( கொஞ்சம் தண்ணி சேர்த்துக் காய்ச்சலாம் .. இல்லாட்டி குண்டாயிடுவீங்க :) ரெண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஆத்திக் குடிக்கணும்

இதுக்கும் ஒரு விதிமுறை இருக்கு. முதல்ல ஒரு டம்ளர்ல சர்க்கரையை போட்டு அதுல டிக்காக்‌ஷன விட்டு அதும் பின்னாடி பாலை சூடா ஊத்தி நல்லா நுரை வர டபரால ஆத்தி குடிச்சா .. இந்த ருசியான காஃபி குடிக்கவே ஆத்தை விட்டே போமாட்டேள்.. வீடே சொர்க்கம்னு ஆயிடும்.

ஆனா ஒரு அக்கப்போர் நடந்து போச்சு சில வாரம் முன்னாடி..  ஆத்தைவிட அருமையான காஃபி போட்டு காஃபிக்காகவே ரூம்போட்டுத் தங்கலாமான்னு பண்ணிட்டாங்க ஒரு ஹோட்டல்காரங்க. அவங்க அருமை பெருமை எல்லாம் கடோசில சொல்லியிருக்கேன். :)
இது ஏதோ ஏர்போர்ட்ல குடிச்சதுன்னு நினைக்கிறேன்.பெங்களூரான்னு சரியா ஞாபகம் வரல.
வேறெங்கே காரைக்குடி ஜெய்னிகா தான்.
துபாய் போனபோது இண்டிகோ ஃப்ளைட்டுல.
இதுவும் சென்னை ஏர்போர்ட் காஃபிதான்.

பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

481.* பெண்பிள்ளை புஷ்பவதி ( பூப்பெய்துதல் , பெரிய பெண்ணாக ஆதல் ) ஆனால் பேரனுண்டா அல்லது பேரன் பிறந்திருக்கிறானே எனக் கேட்பார்கள். ஏனெனில் சமைதல் என்பது  பெண் தனது குழந்தையை ( அம்மா அப்பாவுக்கு ஒரு பேரனை)ச் சுமக்கும் அளவு உடல் பக்குவம் அடைந்திருக்கிறாள் என்பதைச் சொல்லவே இவ்வாறு குறிக்கப்பட்டது. மங்கள நீராட்டு என்று ஏதும் செய்ய மாட்டார்கள் .

சமைந்தது தெரிந்ததும் எண்ணெய் சீகைக்காய் தேய்த்துத் தலை குளிக்க வைத்து கோலமிட்ட இடத்தில் தடுக்குப் போட்டு அமரவைத்து கீரை விதை கொடுத்து தண்ணீரோடு விழுங்கச் சொல்வார்கள்.தலை வாழை இலையில் பருப்பு மசித்துப் பாயாசத்தோடு சாப்பாடு போடுவார்கள்.

ஆனால் பதினாறு நாள் தினமும் அதிகாலையில் பச்சை முட்டை, அதே அளவு நல்லெண்ணெய், குடிக்கச் சொல்வார்கள்.  ( பாசிப்பருப்பு +பச்சரிசி +கருப்பட்டி, வெல்லம்+ நல்லெண்ணெய்+ நெய்யில் செய்த ) கும்மாயம்,  தினம் ஒரு பலகாரம் செய்து கொடுப்பார்கள். இடுப்பு பலம் பெற எண்ணெய்க் குளியல் உண்டு.  கீரை, நெய், காய்கறி , பயறு வகை, காய்கறி/அசைவ சூப்பிகள், அசைவம் சார்ந்த சத்துள்ள உணவு வகைகள் கொடுக்கப்படும்.

அதன் பின் 486,*மிட்டாய்த்தட்டு/சடங்குத்தட்டு வைத்தல் என ஒன்று வைத்து உறவினர் பங்காளிகளை அழைப்பார்கள். வீட்டில் சமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதலில் 487.*குங்குமம் சந்தனம் அடங்கிய ஸ்டாண்டில் கண்ணாடி பதித்த வெள்ளித் தட்டு ஒன்று இருக்கும். சடங்கு கேட்க வந்தவர்கள் சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்வார்கள்.

அதன் பின் ஆறு அல்லது நான்கு தொன்னைகள் கொண்ட வெள்ளி மிட்டாய் ஸ்டாண்டில் பிஸ்கட்கள், வேஃபர்ஸ் , வெளிநாட்டு சாக்லெட்டுகள், தேங்காய் மிட்டாய், கல்கண்டு, இன்னபிற இனிப்புகள் இருக்கும், இவற்றையும் வந்தவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

அதன் பின் 488.*கலர்/பனீர் லெமன் சோடா/காளிமார்க் பானம்/ரசனா/டாங்க்/ஃப்ரூட்டி/ஆப்பி/இன்னபிற கூல்ட்ரிங்க்/காஃபி/டீ இன்னபிற பானங்கள் அருந்தி விட்டு வெள்ளி வெற்றிலைத் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொள்வார்கள். 

அவ மக 489.*சமைஞ்சிட்டாளா இல்லாட்டி பேத்தி சமைஞ்சிட்டாளா என்று பேச்சு வழக்கில் கேட்பதுண்டு. வீட்டுக்கு வருபவர்கள் 490.*பேரனுண்டா அல்லது பேரன் பிறந்திருக்கிறானே எனக் கேட்பார்கள்.

சடங்கு கழித்தல் :- பதினாறாம் நாள் சடங்கு கழிப்பார்கள்.நடுவீட்டுக் கோலமிட்ட இடத்தில் தடுக்குப் போட்டுப் பெண்ணை நிற்கவைத்து 482 *நொச்சி இலையில் சுட்ட அடையைத் தலை, தோள்பட்டை, மடித்துக்கூட்டிய முழங்கை, பாதங்கள் ஆகிய ஏழு இடங்களில் வைத்து வேப்பந்தழையால் அல்லது குச்சியால் தட்டி அத்தை சடங்கு கழிப்பார்கள். அன்றைக்கு 483.*சடங்குக்கு 484.*பங்காளிகள்,  485.* தாயாதிகள்- தாயபிள்ளைகளுக்கு சடங்குக்கு வடிப்பார்கள். சைவ, அசைவப் பந்திகள் தனித்தனியாக இருக்கும்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அருகிவரும் சீர் செனத்தி முறைகளை ஆவணப்படுத்தவே இவற்றை உறவினர் இல்லத் திருமணங்களிலும் சடங்கு இல்லங்களிலும் படம் பிடித்தேன்.

குழந்தை பிறந்தால், பேத்தி சமைந்தால், திருமணத்தின் போது பெண்ணுக்கு,மாமியாருக்கு, மாப்பிள்ளைக்கு என சாமான்கள் பரப்புவது வழக்கம். சாமான்களை அடுக்கி வைப்பதை 491*சாமான் பரப்புதல் என்று சொல்வார்கள். அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.
ஒரு உறவினரின் பேத்தி சமைந்தபோது எடுத்தது. நகைகள், புடவை, வெள்ளிச் சாமான்கள், பிள்ளையார்.
$93*முறைக்குக் கொடுக்கும் பழங்கள்.
இது ஒரு திருமணத்தில் 493.*பெண்ணுக்குப் பரப்பிய சாமான்கள்.

வியாழன், 17 நவம்பர், 2016

புன்னகைப் பூக்கள். குளுமை குளுமை கூல் கூல்.

லால்பாகில் எடுத்த பல்வேறு வகையான பூக்கள் உங்கள் பார்வைக்கு. 
நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. :)

செம்பருத்தி செம்பருத்திப் பூவைப் போல பெண்ணொருத்தி.
இந்தப் பூ பாப்பி பூவா தெரில.
இதுவும் டைகர் ஃப்ளவரான்னு தெரில..
அடுக்கடுக்காய் எத்தனை இதழ்கள். :)

பாம்பின் கண். ஒரு பார்வை. ( THE EYE OF THE SERPANT )பாம்பின் கண். ஒரு பார்வை.

தியடோர் பாஸ்கரன் அவர்கள் 1997 இல் ஆங்கிலத்தில் எழுதிய திரைப்படத்துறை பற்றிய நூல் THE EYE OF THE SERPANT. இது 97 ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் தங்கத்தாமரை (SWARNA KAMAL) தேசிய விருது பெற்றது.  இது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கிழக்குப் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பு நூல் என்றே தெரியாத அளவு சரளமாக மொழி பெயர்த்திருப்பவர் திரு லதானந்த் அவர்கள்.

பழைய புகைப்படங்கள், ஒலியின் வருகை, சினிமா வரலாற்றில் மைல் கற்கள், ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலான தகவல்கள் என ஒரு சிறந்த கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நூல். விடுதலைக்கு முன்னான அரசாங்கமும் அரசியலும் விடுதலைப் போரும் அதன் தொடர்ச்சியான சினிமா வெளியீடுகளும் சமகாலப் படைப்புகளும் அதன் பின் அரசியல் அரங்கில் அவை நிகழ்த்திய திருவிளையாடல்கள் பற்றியும் தமிழ் மொழிக்கான மறுமலர்ச்சி பற்றியும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது பற்றியும் அதே சமயம் மக்களின் ஆன்மீகநம்பிக்கையைச் சிதைக்காமலும் எப்படி எடுக்கப்பட்டன என்பது பற்றியும், சாதி போன்ற பாரம்பரியக் கட்டமைப்பைத் தாக்கியும், சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டனவாகவும், எந்த எந்த ஆங்கில/சர்வதேசப் படங்களில் இருந்து இவை எடுக்கப்பட்டன என்பதையும் வட்டார வழக்குப் படங்களையும் ஆவணப்படுத்திச் செல்கிறது இந்நூல்.

மௌனப் படங்களின் ஆரம்பநாட்கள் சுவாரசியமானவை. முதல் தியேட்டர், ( எலக்ட்ரிக் தியேட்டர் & கெயிட்டி) முதல் பேசாப் படம் ( கீசக வதம் ), முதல் பேசும் படம் ஆகியன பற்றிப் பேசுகிறது இந்நூல். ஒலியின் வருகை, வசனகர்த்தாக்கள், பாடல்கள், உரையாடல்கள், திரைப்படங்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்களோடு தமிழ் சினிமாவின் மைல் கற்களையும் சினிமாக் கலைஞர்களுடனான சத்தியமூர்த்தியின் நட்பு திரைத்துறையில் அவர் கொண்டிருந்த ஈர்ப்பு திரைக் கலைஞர்களை தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்திய விதம் ஆகியவற்றைப் பேசுகிறது நூல்.

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது சினிமா என்றால் மிகையாகாது. திரைப்படமாக எடுக்கப்பட்ட கல்கியின் தியாக பூமி அதில் சிறப்பான ஒன்று. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அதற்கு ஆதரவான படங்கள் எடுக்க அரசாங்கமே ஊக்கம் கொடுத்ததாம் !.

புதன், 16 நவம்பர், 2016

எனப்படுவது எனது பார்வையில் :-எனப்படுவது எனது பார்வையில் :-


எனப்படுவது என்றொரு தலைப்பை இதற்கு முன் கேட்டதில்லை. எனவே இதை டிஸ்கவரியில் வாங்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடமாக குங்குமத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே எனப்படுவது.

அது என்ன எனப்படுவது..? கண்ணாடி எனப்படுவது, தற்கொலை எனப்படுவது, சபதம் எனப்படுவது, தண்டனை எனப்படுவது, சிறை எனப்படுவது, கடிதம் எனப்படுவது, கடத்தல் எனப்படுவது, வளர்ப்புப் பிராணி எனப்படுவது, தூது எனப்படுவது என்று சற்றேறக்குறைய 38 தலைப்புக்களில் உள்ள கட்டுரைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பொருட்கள் உணர்வுகள் செயல்கள் என எல்லையற்று விரிந்த என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம் என இதைப் பதிப்பாசிரியர் கூறி இருக்கிறார்.

நாம் அறிந்த விஷயங்களின் அறியாத பகுதியையும் தெரியத் தருகிறது எனப்படுவது. அதன் பூர்வீக, சரித்திர பூகோள இதிகாச வரலாற்று இலக்கியம், கலை, அறிவியல், அரசியல் முக்கியத்துவத்தையும் அதன் பௌதீக குணங்களையும் இரசாயன மாற்றங்களையும் சென்ற நூற்றாண்டுகளிலும் சமகாலகட்டத்திலும் அவற்றுக்கான இடம்பற்றியும் பல்வேறு பார்வைகளில் பகிர்கின்றன கட்டுரைகள். ஆசிரியர் லதானந்த் தான் சந்தித்த வாசித்த தன்னை ஏதேனும் ஒரு வடிவத்தில் பாதித்த அனைத்து விஷயங்களையும் எளிமையான வடிவில் எல்லாக் கோணங்களிலும் சீர்தூக்கிச் செதுக்கித் தந்திருக்கிறார். 

தனது தாய் ராஜலெட்சுமி திருஞான சம்பந்தம் அவர்களுக்கும், பெரியம்மா வள்ளியம்மாள் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் இந்நூலை சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர்.

இக்கட்டுரைகளின் சிறப்பு என்னவென்றால் இவற்றோடு தொடர்புடைய பழமொழிகள், சொலவடைகளையும் சேர்த்துக் கொடுத்திருப்பதுதான். இலக்கியத்திலிருந்து மட்டுமல்ல இந்தி ஆங்கிலத் திரைப்படங்களில் இருந்தும் உதாரணங்கள் கொடுத்து சிறப்பாக எழுதி இருக்கிறார். 

செவ்வாய், 15 நவம்பர், 2016

இன்னுமொரு நான் - எனது பார்வையில்..இன்னுமொரு நான் எனது பார்வையில்..


வார்த்தைகளின் நர்த்தனக்காரி ராஜாமகளின் இன்னுமொரு நான் படித்தேன். படித் தேன் ருசித் தேன். முகநூலில் நிலைத்தகவல்களிலேயே ஓரிரு வார்த்தைகளில் கலக்கி வருபவர் நான் ராஜாமகள் என்னும் தேன்மொழி என்னும் தேனு ( இன்னுமொரு தேனக்கா J ). பெண்குரலாய் ஒலிக்கும் இக்கவிதைத் தொகுப்பைத் தன் தாய் கோதைநாயகி அம்மாவுக்கு  சமர்ப்பணம் செய்திருப்பது மிகப்பொருத்தமே.

மிக இயல்பான சொல்லாடல் மிக்க எழுத்து !. சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் மயக்கும் கவிதைகள். எதுகை மோனையிலும் சந்தத்திலும் இனிமையோ இனிமை. மொழியால் தொடமுடியாத உயரங்களை மொழியைக் கொண்டே தொடவைக்கும் ஆணவமே கவிதை என முன்னுரையில் வவேசு அவர்கள் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

அரங்கனின் ஆண்டாளாய் நான் தரிசித்திருந்த கோதையின் இன்னுமொரு நான் என்னையே நான் பார்க்கும் கண்ணாடியாயிருந்தது. ம் என்ற தலைப்பில் கூட ஒரு கவிதை !. என்னை அசைத்த கவிதைகள்  மீட்டப்படாத வீணை, இறுக்கம், நன்றி, க’வலை’, நலமே, கபர்தார், மியாவ், போதும், அனர்த்தம் ஆகியவை.

என்னை அசத்திய கவிதை வரிகள் சில.

வியாழன், 10 நவம்பர், 2016

காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

1.கருப்பட்டியார் வீடு

2. சுவரொட்டியார் வீடு - செவரக் கோட்டை என்ற ஊரில் இருந்து (கல்லுப்பட்டிக்கு அருகில் உள்ளது ) வலசை வந்தவர்களை செவரக் கோட்டையார் வீடு என்று சொல்வார்கள். பேச்சு வழக்கில் மருவி சுவரொட்டியார் வீடு என்று ஆகி விட்டது.

3. ஆற்காட்டார் வீடு- குன்றக்குடிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்காடு என்ற ஊரிலிருந்து வலசை வந்தவர்கள்.

4. நெய் வாசலார் வீடு – நெய்வாசல் என்ற ஊரிலிருந்து வந்தவர்கள்

5. வேகுப்பட்டியார் வீடு – வேகுப்பட்டி என்ற ஊரிலிருந்து வந்தவர்கள்.

6. ஆத்தங்குடியார் வீடு – ஆத்தங்குடி என்ற ஊரிலிருந்து வந்தவர்கள்

7. ஆவுடையான் செட்டியார் வீடு – திருவாலங்காட்டில் பசுமடம் வைத்து பால் கட்டளை நிறைவேற்றி வருபவர்கள் வீடு. ஆ என்றால் பசு. திரு என்றும் அர்த்தம்.

புதன், 9 நவம்பர், 2016

பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

1101. பாபநாசத்துக்குப் பின் சர்வநாசம்.. முடிவெடுக்க 2 வருஷமாம்.. எப்பிடி கௌதமி..புத்திசாலிங்களையும் காதல் புரட்டிப் போட்டுடுது. ஒண்ணுமில்லாம ஆக்கிடுது. பட் பொண்ணப் பத்தி சொல்லாம பிரிஞ்சிருக்கலாம். something odd..

http://tamil.oneindia.com/news/tamilnadu/gowtami-kamal-separted-266125.html

1102. எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை போயிடுதும்பாங்கள்ல அது போல இருக்கு.. சில விஷயங்களைக் கடக்க கஷ்டமா இருக்கு .. கொடுமைடா.. ஹ்ம்ம்ம்.

https://www.youtube.com/watch?v=ahUWAp50xGY

1103.BRAIN.. BRAIN.. EVERYWHERE..

1104. பட்டாசா., ட்ரான்ஸ்ஃபார்மரா.. கரெண்ட் கட்..

1105. IF SOMEONE DOESN'T APPRECIATE YOUR PRESENCE MAKE THEM TO APPRECIATE YOUR ABSENCE..!!!

1106. The e mail you entered does not belong to any account. ---- appidinnu varumpothu vara kovam mathiri epavumey vanthathillai.

1107. Dinam koncham pothum

செவ்வாய், 8 நவம்பர், 2016

காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

அம்மை அப்பன் என்று முடியும் பெயர்கள் காரைக்குடிப் பக்கங்களுக்கே உரித்தான ஒன்று. அவற்றில் சிலவற்றையும் இங்கே இடப்படும் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன்.


நாகப்பன், நாகம்மை
சாத்தப்பன், சாத்தம்மை
வள்ளியப்பன், வள்ளியம்மை
மெய்யப்பன் மெய்யம்மை
செல்லப்பன் செல்லம்மை
அடைக்கப்பன் அடைக்கம்மை
முத்தையா முத்தாத்தா
உடையப்பன் உடையம்மை
உலகப்பன் உலகம்மை
சேக்கப்பன் சேக்கச்சி
தேனப்பன் தேனம்மை
ஏகப்பன் ஏகம்மை
நாச்சியப்பன் நாச்சம்மை
அழகப்பன் அழகம்மை
நல்லப்பன் நல்லம்மை
கண்ணப்பன் கண்ணம்மை
சோலையப்பன் சோலைச்சி
வேலப்பன் வேலம்மை
ஏகப்பன் ஏகம்மை

வெள்ளி, 4 நவம்பர், 2016

நந்தினி :-                   நந்தினி

ந்த ஆஸ்பத்திரியின் வெளி கேட் வரை அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் நின்றுகொண்டும் நகர்ந்து கொண்டும் ஒழுங்கற்ற அசைவோடும் இரைச்சலோடும் உணர்ச்சி வசப்பட்டும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது.

“அந்த டாக்டரம்மாள வரச் சொல்லு. என் புள்ளய கொன்னுட்டா.. இப்ப என் மாப்பிள்ளையும் தூக்கு மாட்டி செத்துட்டாரு.” பச்சைபிள்ளைபோல மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தார் கதிரேசன்.

”பொம்பளையா அவ.. அவளுக்கு மனசாட்சி இல்ல. இந்த ஆசுபத்ரியே வேணாம்னே. கொலைகாரப் பயலுவ. ஒழுங்கா கெவனிக்க மாட்டானுவ. போன வருஷம் நம்ம வெள்ளையன் மகளும் பிரசவத்துல செத்துப் போச்சுல்ல.. “ என்று கூடவே சேர்ந்து யார் யாரோ குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

”டாக்டரம்மா வந்தாத்தான் வாங்கிட்டுப் போவோம்.”

சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை

பட்டுகயிற்றை எப்பிடி இடுப்பை சுற்றி கட்டுகிறோமோ, அது மாதிரி இந்த புத்தகமும் சமூகத்தை சுற்றி சகல இடத்திலும் சாமனியதளங்களில் இலகுவாக பயணிக்கிறது.அறுத்து போடும் பட்டு கயிற்றில் உயிர் ஏற்றி ஆரம்பிக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு.

புதன், 2 நவம்பர், 2016

கோயமுத்தூரும் கர்நாடகாவும்.

1081. கரண்ட் இல்லாட்டி என்ன UPS இல்லாட்டி என்ன சூரிய வெளிச்சம் இருக்கே. ஹையா ஜாலி.. :)

1082.. தமிழ்நாட்டுல கரண்ட் இல்ல, கர்நாடகாவுல தண்ணீ இல்ல ஒரு மிடில் க்ளாஸ் தமிழன்/தமிழச்சி எங்குமே வாழ முடியாதா ?

1083. எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சில முட்டாள்தனங்கள் கூடவே இருக்கின்றன..

1084. ஐ ட்ராப்ஸ் போட்டா மூணு மணி நேரத்துக்கு மசமசன்னு இருக்கும்னாங்க. ஆனா ரோடெல்லாம் 4 சூரியன், 4 சந்திரன் தெரியுதே. :)

1085. அந்த ஏசிய ஆஃப் செய்ங்க.

ஏசியே போடலையே...

ஐயோ இந்த கோயமுத்தூரு என்ன இந்தக் குளிரு குளிருது.. :)

1086. எவ்ளோ பெரிய உள்ளம் இந்த ராஜாவுக்கு. !!!
அதியமான் கோட்டம். ஔவையும் அதியனும் நெல்லிக்கனியும்.

காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும்.

முகநூல் நண்பர்கள் சந்திப்பில் முக்கிய இடம் வகிப்பது க்ரீமி இன்னும் காஃபிடேயும்தான். அடுத்ததாக ஆவின் ஜங்க்‌ஷனிலும் சந்தித்தோம்.

காஃபி டேயில் ஒரு காஃபி 70 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இதுவும் ஒவ்வொரு காஃபிக்கும் ஒவ்வொரு விலை உண்டு. அநேகமாக ஒரே மாதிரி ஹார்ட் போட்ட டிசைனில் கேப்பசினோ/கேஃப் லேட்டே, ஹசல்நட் லேட்டே இதெல்லாம் நார்மல் டேஸ்ட் . நல்லா இருக்கும் ( ஃபில்டர் காஃபி குடிச்ச வாய்க்கு ) :) அங்கேயே பர்கர், பிஸ்ஸா, மஞ்சீஸ், டோஸ்டிஸ்ஸாவும் சூப்பர்.
அதேபோல் க்ரீமி இன்னில்  ஒரு ஐஸ்க்ரீமும் 70 ரூபாயில் ஆரம்பித்து பல சைஸ்களிலும் ரேஞ்சிலும் இருக்கு.ஃப்ரைட் ஐஸ்க்ரீம், வெஜ் சீஸ் பால், ஃப்ரென்ச் ஃப்ரைஸ் இன்னும் பல கிடைக்கும். ப்ளாக் கரண்ட், நட் பட்டர் ஸ்காட்ச் ஆல்மோண்ட் ஷேக் நட்டி மேனியா சூப்பர். 

துள்ளுவதோ இளமை - எலும்பு - மூட்டு : A - Z பெட்டகம்.

துள்ளுவதோ இளமை - இது ஒரு நூல் அறிமுகம் &  பார்வை மட்டுமே. 305 எலும்போட பிறக்கும் நாம் பதின்பருவத்தை எட்டும்போது 206 எலும்புகளோட உறுதியாயிடுறோம். போன் மாஸ் டென்சிட்டி, ஆஸ்டியோ போராசிஸ், ஆர்த்தரைட்டீஸ், பேக் பெயின் , ஜாயிண்ட் பெயின், வயசானா குட்டையாறது, கால்சியம் குறைபாடு, எலும்பு முறிவு  இதெல்லாம் ஏன்னு  எலும்பு பத்தி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கையேடுன்னே இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.

எங்கே போனாலும் சிறிது நேரம் உக்கார்ந்திருந்து எழுந்து சென்றாலே பொத் பொத் என்று விழுந்து வைக்கும் நம்மைப் போன்றோருக்கு இந்த நூல் ஒரு எலும்பு பைபிள் எனலாம். :)  (உடல் எடையைக் கால் தாங்குவதில்லை. )

சௌந்தர பாண்டியன் போன் & ஜாயிண்ட் ஹாஸ்பிட்டலைச் சேர்ந்த டாக்டர்கள் சிவமுருகன், ரவி சுப்பிரமணியன், பார்த்திபன், பிரகாஷ் செல்வம், சரவணன், மிலின் ஜெய்ஸ்வால், கௌதம் ராஜ் ஆகியோர் அனுபவங்களை சாருகேசி எழுத்தாக்கம் செய்திருக்கிறார். இது மங்கையர் மலரில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு. பயனடைந்தவர்கள் பாராட்டும் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கு.
Related Posts Plugin for WordPress, Blogger...