51. ஓடிய கால்கள் :- ஜி நாகராஜின் இக்கதை தப்பியோட முயன்ற ஒரு கைதியை லாக்கப் மரணத்துக்கு சாமர்த்தியமாக உள்ளாக்குவது குறித்தது. படித்த பதைப்பு இன்னும் போகவில்லை.
52. தங்க ஒரு :- கிருஷ்ணன் நம்பி . தங்க ஒரு வீடு கிடைக்காததை மிகவும் வித்யாசமான முறையில் செருப்பு அளவு வீட்டுக்காக உருவத்தை சுருக்கிக் கொள்ளும் மனிதனுடன் முடிகிறது. பட்டணத்தில் வீடு கிடைப்பது குதிரைக்கு கொம்பாக இருப்பதும் விலைவாசி ஏறி வயிற்றைச் சுருக்கிக்கொள்வதுமான முடிச்சு இறுக்கியது.
53. மருமகள் வாக்கு :- மிக அருமையான இக்கதை மாமியாரிடம் மருமகள் அந்தக் காலத்தில் எவ்வளவு கட்டுப்பட்டு கட்டுப்பெட்டித்தனமாக இந்திருக்க வேண்டியதிருக்கிறது என்பதை வலியுடன் புரிய வைத்தது. இதுவும் கிருஷ்ணன் நம்பி கதைதான் . இதில்தான் அவர் மிக துல்லியமாக வெளிப்படுகிறார்.
54.ரீதி :- பூமணி..கிராமத்தில் வாழும் எளிய ஆட்டுக்கார சிறுவர்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. பஞ்சமும் படிப்பறிவின்மையோடும் கூட அந்த ஊரின் மின்சாரமும் நீருமற்ற நிலையும் கிராமத்து பாஷையில் எழுதப்பட்டுள்ளது.
55. இந்நாட்டு மன்னர். :- நாஞ்சில் நாடன். விஷயங்களின் அடர்த்தியும் சரளமான நையாண்டியும் இவரது கதைகளின் ஸ்பெஷல். வோட்டுப் போடுவதன் தகிடுதத்தங்களை உரித்துப் போடுகிறது கதை.
56. அப்பாவின் வேஷ்டி:- பிரபஞ்சன். செம்புப் பட்டு வேஷ்டியின் கதை. நம் பெற்றோருடன் தொடர்பு கொண்ட பொருட்கள் அதனோடான நினைவுகள் நுண்ணியமானவை. மிக அருமையான கதை.
57. மரி என்ற ஆட்டுக்குட்டி :- இதுவும் பிரபஞ்சன் கதைதான். பெற்றோரின் அக்கறை இன்மையால் வீணாகும் பெண்குழந்தையின் கதை. ஆசிரியரின் மூலம் தானே திருந்துவது அழகு.
58. சோக வனம்:- சோ.தர்மன். மிகவும் சிக்கலான வாக்கிய அமைப்புகள் கொண்ட கதை. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கிளி, மயில், குயில், சிட்டுக்குருவிகள் மூலம் விளக்கிய கதை.
59. சிறகுகளும் பாறைகளும் :- மாலன். மனத்தைத் தொட்ட பெண்ணின் கதை. மெல்லிய உணர்வுள்ள கடினமான பெண்கள் இன்னும் இருக்கிறார்களா மாலன் என அவரைப் பார்த்தால் கேக்கணும். ஏனெனில் இன்று எல்லாமே மெக்கானிக்கலாக ஆகிவிட்டது.
60. ஒரு கப் காபி :- இந்திரா பார்த்தசாரதி. ஒரு கப் காபி எவ்வளவு மகத்தானது என்று புரியவைத்த கதை. கடைசியில் யதார்த்தம் முகத்தில் அறைகிறது.
61. மூங்கில் குருத்து :- திலீப்குமார். வருமானமின்மையின் கொடுமையை முகத்தில் அறைந்த கதை.
62. கடிதம்.:- மராத்திய மக்களை கதை மாந்தர்களாகக்கொண்டு புனையப்பட்ட கதைகள் இவை இரண்டுமே. வயதானவர்கள் கவனிப்பாரற்று இறப்புக்காகக் காத்திருக்கும் அவலமான நிலையைப் பட்டவர்த்தனமாக அறிவித்த கதை. இதுவும் திலீப் குமாரின் கதைதான்.
63. மறைந்து திரியும் கிழவன். :- சுரேஷ்குமார இந்திரஜித். யுத்த கைதிகள் அனுபவிக்கும் கொடுமைகளை ஒரு வயதானவர் மூலம் சொல்லும் கதை. ஆனால் கதையின் நாயகன் போல அது உண்மையா இல்லையா என நம்மாலும் உணர முடிவதில்லை.
64. சாசனம் :- கந்தர்வன். இதிலேயே ரொம்பப் பிடித்த கதை இதுதான். எளிய மக்களின் அன்பு மனமும் அவர்களின் சுயகௌரவமும் தங்கள் உரிமைகளும் இதில் தன்னையறியாமல் வெளிப்பட்டிருக்கும் விதம் அற்புதம்.
65. மேபல். :- தஞ்சை பிரகாஷ் .மன விகாரங்களையும் தனி மனித உணர்வுகளையும் பதிவு செய்த கதை. ஆண் குழந்தைகளுக்கு அம்மா மேல் அதீத பாசம் ஏற்படுவதுபோல் இங்கே பெண்குழந்தைக்கு ஓடிபஸ் காம்ப்ளஸ் போல அப்பா மேல் அதீத பாசம் உண்டாகிறது. தந்தை மகள் என்றாலும் எல்லைக்கோடு கிழிக்கும் சமூகத்தின் முன் மேபல் தனித்து நின்றுவிடுகிறாள்.
66.அரசனின் வருகை :- உமா வரதராசன். ஆள்பவர்களின் எதேச்சதிகாரத்தைப் பிட்டு வைத்த கதை. ஈழம் போன்ற தேசத்தில் மக்கள் எப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் எனவும் விவரித்த கதை. முடிவு அருமை.
67. நுகம். :- எ. எக்பர்ட் சச்சிதானந்தம். கீழ்நிலை ஊழியர்கள் நடத்தப்படும் விதம். அவர்களைக் குறித்தும் மேல்நிலையில் இருந்துகொண்டே அநியாயம் செய்பவர் குறித்தும் அலசும் கதை. கிறிஸ்தவப் பின்னணியில் எழுதப்பட்டிருப்பது அங்கேயும் இப்படியா என்ற உணர்வை உண்டாக்கியது.
68. முள். சாரு நிவேதிதா. வித்யாசமான பாச உணர்வுகளை படம் பிடித்த கதை .டீச்சர் மேலோ பக்கத்துவீட்டுப் பெண்ணின் மேலோ ஏற்படும் ஒரு விதமான அன்புணர்வு இக்கதையில் அத்தையின்மீது ஏற்படுவது குறித்து எழுதப்பட்டுள்ளது வித்யாசம்.
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும். :- சுப்ரபாரதிமணியன். கதை என்னவோ கோழித் தலைக்கறிக்காக சண்டையிடும் இரு சிறுவர்கள் பற்றியதுதான் என்றாலும், முடிவில் அம்மாவினுள் இருக்கும் இன்னொரு ராஜகுமாரி வெளிப்படும் விதம் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
70. வனம்மாள். :- அழகிய பெரியவன். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கதையாகப் படைத்திருக்கிறார். மரமி என்று கதாநாயகியை அழைப்பது பொருத்தம்தான். மரத்தைக் குழந்தைபோல நேசம் செலுத்துவதை உணர்த்திய கதை.
71. கனவுக்கதை :- சார்வாகன். இது நிஜமாகவே கனவுக்கதைதான். :) யதார்த்தத்தில் நடக்க வாய்ப்புக் குறைவு.
72. ஆண்மை :- எஸ். பொன்னுத்துரை. இளமை நினைவுகள் ததும்பும் ஈழத்து தமிழ்க்கதை. உடலீர்ப்புக்கொண்ட பதின்பருவக் காதலைவிட ஆளுமை மிக்க மத்திய வயதுக் காதலுக்கு மென்மையான கவர்ச்சி உண்டு என்று சொல்லிய கதை.
73. நீக்கல்கள்.:- காந்தன். டெஸ்ட் ட்யூப் குழந்தை உருவாக்கத்துக்காக மருத்துவமனைக்குச் செல்லும் ஒருவனின் சஞ்சல அனுபவங்களே கதை.
74. மூன்று நகரங்களின் கதை :- க. கலாமோகன். நாடு விட்டு தப்பி அகதியாக வெளிநாட்டில் அடைக்கலமாகும் வேலையில்லா ஒருவனின் துயரக் கதை. பணம்தான் பிரதானம் என்று ஆகிவிட்ட உலகில் பாசத்தைக் கூட வெளிப்படுத்தமுடிவதில்லை என்பது நூறு சதம் உண்மை.
75.அந்நியர்கள். :- ஆர். சூடாமணி. இரு சகோதரிகள் என்றாலும் இருவரும் பலவருடம் கழித்துச் சந்திக்கும்போது இருவருக்குள்ளும் இருக்கும் ரசனையும் எண்ணங்களும் வேறுபடுவதை துல்லியமாக உணர்த்தும் கதை. ஆம் ஒன்றாகவே ஒரே தாயின் வயிற்றில் பிறந்து வளர்ந்தாலும் எவ்வளவு வருடங்கள் கூட இருந்தாலும் அவர்கள் ஆட்படும் சூழ்நிலைகள், பார்க்கும் உலகம் , எல்லாம் உணர்த்துவது தாம் பரஸ்பரம் அந்நியர்கள்தானென்று. பல வருடங்கள் கூட வாழ்ந்தாலும் கணவன் மனைவி கூட சில சமயம் இந்த நுண்ணிய விபரங்களை உணர்ந்துகொள்ள முடியும் என்பதே எனக்கு இக்கதை மிகப் பிடிக்கக் காரணம்.
தஞ்சை பிரகாஷின் மேபலைத்தான் குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் சாசனமும் அந்நியர்களும் மிகப் பிடித்ததால் மேபல் பின்னுக்குப் போய்விட்டாள்.
நூல் :- 100 சிறந்த சிறுகதைகள்.
தொகுப்பு :- எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :- டிஸ்கவரி புத்தக நிலையம்.
பக்கம் :- 1092.

நல்ல புத்தாக்கம். வாங்க ஆசை. சார்வாகன் என் அப்பாவின் நண்பர்.
பதிலளிநீக்குவாசிப்பு அனுபவத்தை உணர்த்துகின்ற பதிவு.
பதிலளிநீக்குnandri Sriram. kattayam vangkalam. ada appadiyaa. mikka santhosham. :)
பதிலளிநீக்குnandri Jambu sir.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நல்ல புத்தகம்
பதிலளிநீக்குnandri Gowry !
பதிலளிநீக்கு