எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
100 BEST TAMIL STORIES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
100 BEST TAMIL STORIES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

100 சிறந்த சிறுகதைகளில் 76 - 100ம் அதில் சிறந்த கருப்பு ரயிலும் பத்ம வியூகமும்.

100 சிறந்த சிறுகதைகளில் 76 - 100ம் அதில் சிறந்த கருப்பு ரயிலும் பத்ம வியூகமும்.

76. சித்தி :- மாஅரங்கநாதன்ஒரு ஒட்டப்பந்தயவீரன் பற்றிய கதைமாபெரும் வெற்றி பெற்ற வீரனாக இருந்தாலும் தன்னுடைய ஓட்டத்தைத் தவிர எதையும் அவன் கற்றுக்கொள்ள விழையவில்லை என்பது கசப்புணர்வு தரும் முடிவாக அமைந்துள்ளதுஒரு விளையாட்டு வீரனின் உணர்வுகள் சாகடிக்கப்படும்விதம் பற்றியும் கதையூடே வருவது சிந்திக்கத்தக்கது.

77. புயல் :- கோபிகிருஷ்ணன்மத்தியதர வர்க்கத்து கணவன் மனைவி பற்றிய கதைவெளியுலகில் ஏற்படும் வினோத அனுபவங்கள் பற்றி கணவன் முடிவில் மனதுள் அங்கலாய்ப்பது யோசிக்க வைத்ததுஅப்பா அம்மா பண்ணின பாவம் பிள்ளைகள் மேல் விடியும் என்பது போல கணவன் பண்ணின பாவம் மனைவி மேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாக நினைவில்லை என்று நினைக்கும் கணவன் செய்த பாவம் என்னவென்றால்  ஒரு மாது போட்ட கோலத்தை மிதித்ததும் கடையில் இன்னொரு மாதுபக்கம் தான் பிடித்த சிகரெட் புகை சென்றதால் அவர் முகம் மாற (அந்த சிகரெட்டைப் போட்டு மிதித்ததும்தான்) வைத்ததும்தான்.

புதன், 27 செப்டம்பர், 2017

100 சிறந்த சிறுகதைகளில் 51 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.

100 சிறந்த சிறுகதைகளில் 51 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.

51. ஓடிய கால்கள் :- ஜி நாகராஜின் இக்கதை தப்பியோட முயன்ற ஒரு கைதியை லாக்கப் மரணத்துக்கு சாமர்த்தியமாக உள்ளாக்குவது குறித்ததுபடித்த பதைப்பு இன்னும் போகவில்லை.

52. தங்க ஒரு :- கிருஷ்ணன் நம்பி . தங்க ஒரு வீடு கிடைக்காததை மிகவும் வித்யாசமான முறையில் செருப்பு அளவு வீட்டுக்காக உருவத்தை சுருக்கிக் கொள்ளும் மனிதனுடன் முடிகிறதுபட்டணத்தில் வீடு கிடைப்பது குதிரைக்கு கொம்பாக இருப்பதும் விலைவாசி ஏறி வயிற்றைச் சுருக்கிக்கொள்வதுமான முடிச்சு இறுக்கியது

வெள்ளி, 2 டிசம்பர், 2016

100 சிறந்த சிறுகதைகளில் 26 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.

100 சிறந்த சிறுகதைகளில் 26 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.

26. அசோகமித்திரனின் பிரயாணம். குருதேவருடனான அச்சமூட்டிய பயணம் எதிர்பாராதவிதமாக முடிவது சோகம் என்றாலும் முடிவில் ஒரு வினோதமும் காத்திருக்கிறது.

27. ஜெயகாந்தனின் குருபீடம். தன்னைத்தேடுதலை உணர்த்திய அற்புதமான கதை.

28. ஜெயகாந்தனின் முன்நிலவும் பின்பனியும். மனதை நெகிழ்வித்த கதை. இருந்தும் பக்கத்திலிருக்கும் குழந்தையை விடத் தன் பேரனே உசத்தி என்று கருதும் தாத்தாவின் குணபிரதிபலிப்பு நன்றாகப் படைக்கப்பட்டிருக்கு. முடிவில் லேசான பாசம் அத்திபோலக் பூக்கிறது

வியாழன், 24 நவம்பர், 2016

100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும். . ஒரு பார்வை.


100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும்

எஸ்ராவின் முன்னுரையில் கதைக்கரு, சொல்லும் முறை, மொழி,வடிவம், தனித்துவம் இத்தோடு பன்முகத்தன்மை பொறுத்துத் தேர்ந்தெடுத்ததாகக் கூறி இருக்கிறார். பிரைமா லெவி கூறிய ஒன்பது காரணங்கள் சிறப்பு.

அதோடு இதையும் சேர்த்துக்கலாம். ஏதேனும் மெசேஜ் சொல்லணும்னு நினைக்கிற, தனது வட்டார வழக்கில், பேச்சு மொழியில் கதை சொல்ல நினைக்கிற சாமான்யர்களும் சமீபமா வலைத்தளம்,முகநூலில் எழுத ஆரம்பித்து இருக்கிறவர்களும் கூட நல்ல கதைசொல்லிகளாக மாறிவருகிறார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...