எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஜூன், 2015

கல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். பாகம் - 2.


மத்யப் ப்ரதேஷ். ஜபல்பூரில் மிலிட்டரி ஹாஸ்பிட்டலில் பணிபுரியும் குமார் என்பவர் எழுதிய கடிதம் இது.

பேட்டைவாய்த்தலை , பழங்காவேரி திருச்சியைச் சேர்ந்த ஜி ரவீந்திரன் எனது கவிதை பாலசந்தரின் கறுப்பு வெள்ளைப் படம் மாதிரி இருந்ததாக எழுதி இருக்கிறார். :)

ஞாயிறு, 28 ஜூன், 2015

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

வெக்கையைப் போல் தகிக்கிறது
சின்னவன் இல்லாத படுக்கை
காற்று சுழலாத ஜன்னல்போல்
காலியாகக் கிடக்கிறது தொலைக்காட்சிப் பெட்டி
அவர்களின் எச்சில் சுமந்த தலையணைகள்
பக்கம் ஒன்றாக அநாதையாகக் கிடக்கின்றன.

வெள்ளி, 26 ஜூன், 2015

அன்ன பட்சி பற்றி கலையரசி.

என் வலையுலக சகோதரி கலையரசி. அவர் தன்னுடைய ஊஞ்சல் வலைப்பூவில் அன்னபட்சி பற்றி மிக அழகானதொரு விமர்சனம் கொடுத்திருக்கிறார்.  படித்தேன். படித்”தேன்”. அதை இங்கே பகிர்வதில் இன்புறுகிறேன்.. அஹா மிக அருமை கலையரசி :) கவிதைகள் எழுதிய பொழுது பெற்ற இன்பத்தை விட  உங்கள் விமர்சனம் படித்துப் பேருவகை அடைந்தேன். நன்றிம்மா. எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை.

துரை அவர்கள் சொன்னது போல் கவிதைகள் சுவையா கருத்துரை சுவையா என்று சொல்லலாம். மனம் உண்மையிலேயே தடுமாறுகிறது. அன்பும் நன்றியும் பா :)

இதை அவர்களின் வலைத்தளத்திலும் படிக்கலாம். அதற்கான இணைப்பு இங்கே.
http://www.unjal.blogspot.in/2015/02/blog-post_98.html.

////என் பார்வையில் - 'அன்னபட்சி' - கவிதைகள்

‘அன்ன பட்சி’ - கவிதைகள்
ஆசிரியர்:- தேனம்மை லெஷ்மணன்
இவரது வலைப்பூ:- சும்மா
முதல் பதிப்பு:- ஜனவரி 2014
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம் கைபேசி:- 9994541010
இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.  ஏற்கெனவே ‘ங்கா’ என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது. 

வியாழன், 25 ஜூன், 2015

செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

கிட்டத்தட்ட  40 லட்சத்துக்கு இந்த சூர்யப் பலகை ஒன்று சமீபத்தில் விலை போயிருக்கிறது. அதை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று  2 1/2 கோடிக்கு விற்பனை செய்கிறார்கள் என்று கேள்வி.

சூர்யப் பலகைகளில் பொதுமையான தன்மை சில உண்டு. தெய்வீக உருவச் சிலைகள் அமைக்கப்பட்டது சூர்யப் பலகை.  சில வேறுபாடுகளுடன் அமையும் ஆனால் நிலைப்பலகைகள் ஒவ்வொருவீட்டுக்கும் ஒவ்வொரு கதவுக்கும்கூட வித்யாசமாக அமையும். நிலைப் பலகையில் தெய்வீகச் சிலைகள், இயற்கைக் காட்சிகள், தாமரைப் பூக்கள், சூரியகாந்திப் பூக்கள், சிறுபூக்கள், பறவைகள் ( பட்சிகள் )  அமையும்.

இந்த இணைப்பைப் படித்துவிட்டு இந்தப் படங்களைப் பாருங்க. :)

http://now.rtbi.in/pudhuvayal/index.php?option=com_content&view=article&id=78&Itemid=64&lang=ta

95.  சூர்யப் பலகை.

சூர்யப் பலகை பற்றி என் ராமு மாமா விரிவாக ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்கள். இவை அனைத்தும் தேக்கில் செய்யப்பட்டவை என்பது சிறப்பு. அதுதான் தலைமுறை தாண்டியும் நீடித்து வருகின்றன. சில புதுசாக இருந்தாலும் பல பழையனவாக ஆகிவிட்டன.  வருடம் ஒரு முறையாவது பார்த்துப் பராமரித்து கரையான் இருந்தால் மருந்தடித்து பாலிஷ் செய்துவைத்தால் இன்னும் அதிக ஆண்டுகள் இவை நீடிக்கும்.

இது மெயின் நிலையில் பதிக்கப்படுவது. முகப்புக்கும் பட்டாலைக்கும் இடைப்பட்ட கதவு நிலை இதுதான்.

///1.துவார பாலகர் 2.,3,4 வள்ளி,தெய்வானையுடன் முருகன் 5. நாரதர் 6. கவரி வீசும் பெண் 7.திருமால் 8.மீனாட்சி 9.சுந்தரேஸ்வரர் 10. கவரிப்பெண் 11.பிரம்மன் 12,13,14 வினாயகரும் அவருக்குப் படையல்கள் சுமந்து நிற்கும் கணங்களும் 15 துவாரபாலகர். வாயில் நிலையில் சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் காட்டி இல்லத்திற்கு புனிதம் சேர்க்கும் அருமையான சிற்பத்தொகுதி 16. சிங்கம் , 17. சூர்யப் பலகை. ///


96. இது சாமி வீட்டு நிலைக்கதவு. அன்னப் பறவைகளும் பூக்களும்.கீழே சூரியகாந்திப் பூக்கள் போன்ற வடிவம்.

புதன், 24 ஜூன், 2015

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி.


42. புளியமுத்தில் ஒற்றையா இரட்டையா. ( பிஸ்தா ஓட்டில் )


ஒற்றையா இரட்டையா பம்பையா பரட்டையா. என்று சொல்லி விளையாடும் விளையாட்டு இது. வீட்டில் முன்பு எல்லாம் கோடைகாலங்களில் வருடத் தேவைக்கான புளி வாங்கி சுத்தம் செய்வார்கள் அந்தப் புளியமுத்து ஒரு படி இரண்டு படி கூட இருக்கும். அதில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு இருவர் முதல் பலர் வரை விளையாடலாம் இந்த விளையாட்டு. இப்போது மாதத் தேவைக்குக் கடைகளில் புதுப்புளி வாங்கி விடுவதால் புளியங்கொட்டை எல்லாம் பார்க்க முடிவதில்லை. எனவே சால்டட் பிஸ்தா வாங்கும்போது அதன் ஓட்டை உரித்து இது போல் விளையாடுவதுண்டு. இருவருக்கும் சமமான எண்ணிக்கையில் புளியமுத்து வைத்துக் கொள்ளணும். இருவரில் ஒருவர் கை நிறைய புளியமுத்து அல்லது பிஸ்தா ஓட்டை வைத்துக் கொண்டு எதிர் ஆட்டக்காரரிடம் ஒத்தையா இரட்டையா பம்பையா பரட்டையா என்று கேட்கணும். அதாவது அவர் கைக்குள் வைத்திருக்கும் முத்துகள் ஒற்றைப்படை எண்ணிக்கை கொண்டனவா அல்லது இரட்டைப்படை எண்ணிக்கை கொண்டனவா அல்லது பம்பையா பரட்டையா என்றால் ஒன்றுமில்லையா என்று அர்த்தம். பரட்டை அல்லது மொட்டை என்றால் கையில் முத்து இல்லை என்று அர்த்தம். இப்போது பம்பையா பரட்டையா என்பதை மொட்டை என்று சொல்கிறார்கள். பம்பை என்பது சந்தத்துக்காக சேர்த்துக் கொள்வது. 

செவ்வாய், 23 ஜூன், 2015

கிழக்குப் பறவைகள்.3.4.86.

4.*அறியாமைதான்
நிரப்பப்படவேண்டும்
என்றிருந்தால்
என்னுடைய குடங்கள்
காலியாகவே இருக்கட்டும்.

*கிழக்குப் பறவைகள்
மேற்கு நோக்கிப்
பறப்பதிலும்
சிறகைச் சிதைத்துக்கொள்ளும்.

கல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். - பாகம் 1.

எல்லாப் புகழும் சுசீலாம்மாவுக்கே !!!. :)

கல்கியில் ”கிராமத்துத் திருவிழா “ கவிதை வெளிவந்தவுடன் வாசகர் கடிதங்கள் வரத் தொடங்கின. முதன் முதலில் பாராட்டு மழை.. ஒரே இன்ப வெள்ளம். :) இதை  எல்லாம் சுசீலாம்மாவிடம் சொன்னபோது அவர்கள் வந்த கடிதங்களை எல்லாம் ஃபைல் பண்ணி வைக்க சொன்னார்கள். அந்த ஃபைலில் இருந்து ஒரு பதினைந்து கடிதங்களைப் பகிர்கிறேன்.

நிறையப் பேர் கவிதையாகவே கடிதம் எழுதி இருக்கின்றார்கள். சிலர் தாங்கள் இயற்றிய கவிதைகளையும் பார்வைக்கு அனுப்பி இருந்தார்கள். !

இது பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்வியியல் கல்லூரியில் இருந்து மஹிலா என்பவர் எழுதியது. சில சமயம் இது ஒருவரா மூன்று பேரா என்று யோசித்திருக்கிறேன் :)


திங்கள், 22 ஜூன், 2015

இறைவன்.3. இறைவன் :-

*கூடையிலே பழங்கள்
விற்பதற்காய்.

*கூடைக்காரன் பயணம்
முட்கள் விதைத்த
ஒற்றையடிப்பாதையில்.

ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்

281. சுகத்துல வாழ்த்தவும் சோகத்துல பங்கெடுத்துக்கவும் நமக்குன்னு மக்கள் இருக்காங்கன்னு முகநூல்ல பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு மக்காஸ் வாழ்க வளமுடன். :)

282. ஒரே ஒரு தரம் 250 லைக் எல்லாம் வந்ததும் see more,see more nu  க்ளிக் பண்ணிப் பார்க்க முடியலையே. 1000, 2000 லைக்ஸ் வாங்குறவங்க எல்லாம் பொறுமைசாலிதான். :)

283. ட்விட்டர்ல இன்னிக்கு 45 நோட்டிஃபிகேஷன் ஓ மை கடவுளே.. நன்றி மக்காஸ். நம்மள யாருமே படிக்கிறதில்லையோன்னு நினைச்சு சோகமா இருந்தேன். :)

284. எழுத்தாளரே இப்பவெல்லாம் நாளானா மதம் பத்திதான் எழுதுறாங்க. துறவிகள் என்ற நினைப்பில். :)

ஞாயிறு, 21 ஜூன், 2015

உள்ளுணர்வின் மொழிபெயர்ப்பு.30.3.86.

2. உள்ளுணர்வின்
மொழிபெயர்ப்பு.
*மதிய வெய்யிலின்
அக்கினிப் பொறியாய்
பாலையின்
பாறை வெடிப்பாய்
செடியின்
நாவறண்ட சித்திரையாய்

சனி, 20 ஜூன், 2015

சாட்டர்டே போஸ்ட். விளையாட்டு வீரர்களின் வாழ்வு குறித்து கரூர் மாவட்ட கால்பந்து செயலாளர் குமரன் கருப்பையா

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை விளையாட்டுக்குரியதல்ல என்கிறார் மதிப்பிற்குரிய நண்பர் குமரன் கருப்பையா.


கரூர் மாரத்தான், கிரிக்கெட் பற்றி தமிழ்க் குஷி எஃப் எம்மில் கிரிக்கெட் ஃபீட்ஸ், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத் திறப்புவிழா என்று அதிரடியாக விளையாட்டிலும் விளையாட்டுச் செய்திகளைப் பேசுவதிலும் பகிர்வதிலும், கலந்து உரையாடுவதிலும் அதற்காகப் பாடுபடுவதிலும் முதலிடத்தில் இருப்பவர் நண்பர் குமரன் கருப்பையா.தமிழ்க் குஷி எஃப் எம்மில் ஆர் ஜேயாக பணிபுரிவது தனக்குப் பிடித்த ஹாபி என்பார் குமரன்.

வெள்ளி, 19 ஜூன், 2015

சகடை.28.3.86


1.சகடை உருண்டது
விடியலின் வெளிப்பாடாய்.

காற்றின் இரத்தம்
இலைகளில் உறையும்.

( மனசு )
மாமரத்துக் காகங்கள்
திசைக்கொன்றாய்.

வியாழன், 18 ஜூன், 2015

அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

261. கண்ணுக்குக் கண் , பல்லுக்குப் பல் மாதிரி ஆயிடுது சில லைக்குக்கு லைக். :) மொய் லைக் ..:)

262. கசியும் புன்னகைக் கீற்றொன்று போதும் மனிதர்களைப் ப்ரகாசமாக்க.

263. கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் முயற்சி கூட எல்லாவற்றையும் சாதிக்கும்

264. நட்புடா நண்பேன் டா என்பதெல்லாம் சினிமாவில்தான். உரிய நேரத்தில் போடாத ஒற்றை லைக் முறித்துவிடுகிறது முகநூல் நட்புக் கிளையை.

265. சில கதைகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படிக்கும்போதே அதன் தாக்கத்தில் மனச் சிக்கலுக்கு ஆளாகி விடுவோம்
போலிருக்கிறதே. சிறந்த எழுத்து என்பது என்ன..? இதுதானா. ?

266. think twice b4 sharing. _ எனக்கு சொல்லிக்கிட்டேன். :)

267. அப்போதைய பிள்ளைகளுக்கு பெரியவர்களிடம் பயம் இருந்தது.
இப்போதைய பெரியவர்களுக்குப் பிள்ளைகளிடம் பயம் இருக்கிறது.
ஆகக்கூடி இருக்கும் ஒரே விஷயம் பயம் மட்டுமே.

புதன், 17 ஜூன், 2015

நான் செய்த கைவினைப் பொருட்கள். - ENGRAVING.

வீடு விட்டு வீடு மாற்றிக் கொண்டிருக்கும் பொழுதில் இந்தப் பொருட்களை எல்லாம் பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளில் போட்டு பாக் செய்வதுண்டு. கிட்டத்தட்ட 25 வீடு மாறி இருப்போம். :) வீட்டிற்கேற்ப பொருட்களை அடுக்கி வைத்துக் கொள்வதுண்டு.

முன்பெல்லாம் சென்ற அன்றிலிருந்து சமையல் & சாப்பாடு செய்வதோடு ,  ஒரு வாரம் பத்து நாளில் செட் செய்துவிடுவேன். இப்போது எல்லாம் ஒவ்வொரு பெட்டியாகப் பிரித்து அடுக்க ஒரு மாதம் கூட எடுக்கிறது :) இத்தனைக்கும் அந்த அந்த ஊரிலேயே முடிந்தவற்றைப் போட்டு விடுவதும் உண்டு. சில கைவேலைப்பாடுகளை மட்டும் சுமந்து திரிகிறேன். {{இந்த பழைய சாமான்களில்  என்னுடைய பழைய டைரிகளும், கல்லூரிக்கால ஃபைல், படைப்புகள் வெளிவந்த புத்தகங்கள், வாசகர் கடித ஃபைல், ஃபோட்டோ ஆல்பங்கள், அலங்காரப் பொருட்கள் இன்னபிறவும் உண்டு. :) }}

என்க்ரேவிங்:-

இது நான் நெய்வேலியில் இருந்தபோது திருநாவுக்கரசு அண்ணனின் மனைவி அன்பு அண்ணியின் தோழியிடமிருந்து கற்றுக் கொண்டேன். நாவல்டீஸில் இதுக்கான அலுமினிய ஷீட் கிடைக்கும். அளவு சொல்லி வாங்கிக் கொள்ள வேண்டும். ஹாண்ட் என்க்ரேவிங் டூல்ஸ் என்று பம்பரம் சைஸில் இரண்டு வாங்கிக் கொண்டேன். ஒன்று ஓரம் செதுக்க இன்னொன்று உள்ளே செதுக்க.

படத்தை ட்ரேஸ் செய்து கொண்டு அதன் மேல் ஹாண்ட் என்க்ரேவிங் டூலை வைத்து வலமும் இடமும் மிக லேசாக அசைத்தபடி கார்பன் கோடுகளில் செதுக்க வேண்டும். ஓரத்துக்கு கொஞ்சம் பெரிய சைஸ் கார்னர் உள்ள டூல் என்பதால் கொஞ்சம் பெரிய பெரிய வி, வி யாக வரும். உள்ளே செதுக்க சின்ன சைஸ் கார்னர் உள்ள டூல் என்பதால் சரிகை வேலைப்பாடு போல வரும். மிக என் ஜாய் செய்து வரைந்த வெல்கம் லேடி இவள். அதன்பின் கறுப்பு சிவப்பு பெயிண்ட் அடித்தேன் :) ப்ளெயினாகவும் வைக்கலாம்.
ஹாஸ்டலில் இருக்கும்போது இந்த மேட்டித்துணியில் நடுவீட்டுக் கோலம் பின்னி இருக்கேன். இது எம்ப்ராய்டரி நூலாக க்ராஸ் க்ராஸா தைக்கணும். நாமே மாடல் வைச்சிக்கிட்டு எண்ணி எண்ணித் தைக்கணும். கொஞ்சம் ஃபினிஷ் பண்ணாம வைச்சிருந்தேன். அத அம்மா அப்புறம் ஃபினிஷ் பண்ணி தடுக்கா தச்சிட்டாங்க. :) கீழே பிரம்புத் தடுக்கு. அதுக்கு விளிம்புல நீலக்கலர் துணி எல்லாம் தைச்சவுடனே ஜோரா இருக்குல்ல :)

ஞாயிறு, 14 ஜூன், 2015

செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

செட்டிநாட்டின் வீடுகளில் பெரும்பாலும் தேக்குமரம், ஆத்தங்குடிக் கல், பித்தளைத் தாழ்வாரம், பட்டியக் கல் போன்றவை சிறப்பு. கொண்டுவிக்கச் சென்றவர்கள் என்பதால் பெல்ஜியம் கண்ணாடி, மலேயாச் சாமான்கள், ரெங்கோன் ( செய்கோன் ) சாமான்கள், சிங்கப்பூர் சாமான்கள், சிலோன் சாமான்கள் அநேகர் வீடுகளில் இருக்கும். 

இது கடியாபட்டியில் உள்ள ஒரு வீட்டின் முகப்பு. முன்புறத் தோற்றம். கேரள பாணியில் சில அமைப்புகளும் முகலாய சிற்ப பாணியில் சிலவும்,கோயில் கோபுரங்கள் போன்று நடுவில் உயர்ந்தும் அமைக்கப்பட்டிருக்கும் முகப்புகள்.

சில வீடுகள் ஆங்கிலோ இந்திய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 
ஆல்வீடும் ஊஞ்சலும். மேலே உள்ள மேங்கோப்பு மரத்தால் ஆனது. அது முழுக்க ஓவியங்களால் அழகு செய்யப்பட்டுள்ளது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அளவு உள்ள 80. தொங்கு விளக்குகள் (  மங்கு ஷேட் உடன் உள்ள குண்டு பல்புகள் ). தூசி படியாமல் இருக்க 81. சுவற்றலமாரிகளில் உள்ள கண்ணாடிக்கும் மற்ற பீரோக்களுக்கும் 82. துணி உறைகள்.  83. இரட்டையாக மடிக்கப்படும் ஜன்னல் கதவுகள். தரையில் 84. ஆத்தங்குடி டிசைன் கற்கள்.

வளவுக் கதவில் 85. எனாமல் பெயிண்டிங்கில் இரட்டை மயில்.மேலே 4 எனாமல் ரோஜாக்கள்.

சனி, 13 ஜூன், 2015

சாட்டர்டே போஸ்ட். டி வி என் சாரின் இன்னும் சில பகிர்வுகள். ரிலாக்ஸ் ப்ளீஸ்.

///முகநூலில் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு நாராயணன் சார் அவர்கள் தினமும் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்து இருப்பார்கள். அந்த இன்சொற்களையும் வாழ்த்துகளையும் படிக்கும்போதே நாட்கள் இனிமை மயமாகிவிடும். மனிதநேயமிக்க பண்பாளர். :)

 அவர் எனக்கு அனுப்பிய இன்னும் சில பதிவுகளை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.  ////

 *********************************************************

எனதன்புக்கும் மரியாதைக்கும் உரிய தேனம்மை அவர்களே..
இறைவன் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் சகல
நன்மைகளும் அருள் பாலிப்பாராக.!


தங்களை முகநூலில்  மட்டுமல்ல, நேரிலும் சந்திக்க எங்கள்
குடும்பத்தார் அத்துணை பேருக்கும் விருப்பம்.
விரைவில் நிறைவேற வேண்டும் என்று நம்புவோம்.
பெற்றோரிடம் எங்களது அன்பையும் மரியாதையையும்
தெரிவித்துக் கொள்கிறோம்..

நான் எழுதுவதை எப்போது வேண்டுமானாலும்
சேர்த்துக் கொள்ளுங்கள். தோன்றும் போது எழுதி விடுகிறேன்.
உங்கள் வசதிக்கேற்ப செய்து கொள்ளுங்கள்.

என்றும் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் உங்களுக்காகவும்
குடும்பத்தாருக்காகவும், அனுதினமும் எங்களிடம் உண்டு.

வாழ்க, வளர்க, வெல்க!

 


தமாஷ் - ரிலாக்ஸ் ப்ளீஸ்......(நகைக்காக மட்டும், பகைக்கல்ல)
------------------------------

-------------------------------------------------------------------------

1. ஏங்க குடிச்சு குடிச்சு ஒங்க மூளயக்
கெடுத்துக்கிறீங்க..?
.

வெள்ளி, 12 ஜூன், 2015

கல்கியிலிருந்து முதல் செக்.

கல்கியில் வெளியான கிராமத்துத் திருவிழா என்ற கவிதைக்காக எனக்கு அனுப்பப்பட்ட செக் இது. கல்லூரிப் பருவத்தில் முதல் சம்பளம்.

(  EARN WHILE YOU LEARN - என்று லைப்ரரிக்கெல்லாம் சில பிள்ளைகள் சென்று புக் அடுக்கிக் கொடுத்து பாக்கெட் மணி சம்பாதித்துக் கொண்டிருந்த காலம். ! )

புதன், 3 ஜூன், 2015

அமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)


நண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :)

/////http://tamilonline.com/thendral/authnew.aspx?aid=10009

     தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன்
April 2015

செவ்வாய், 2 ஜூன், 2015

எரு முட்டை. ( புதிய தரிசனம் )


ரு முட்டை :-

ணலில் ஒளிர்ந்து கொண்டிருந்தன எரு முட்டைகள். மெல்ல மெல்ல கங்குகளைப் போலாகி ஒளிரும் நெருப்பின் முன் சாம்பல் நிற இருளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். கண்ணீர்க் கோடுகள் தீயாய் நீண்டு மண்ணில் சொட்டுச் சொட்டாக விழுந்து லேசாக மண் வாசத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

இன்னிக்கு தெலுங்கானாவுக்கு பர்த்டே. ஜெய் தெலுங்கானான்னு இங்கே சொல்லிட்டா எந்த ப்ராப்ளமும் இல்லை.. :) :) :) 

301. இன்னிக்குக் காலையிலதாங்க உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு நினைச்சேன்.
.
ஒரு மூணு நாலு பேர் ரெண்டு நாளா நான் ஃபோன் பண்ணும்போது இப்பிடியே டயலாக் விடுறாங்க.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் சாயங்காலம் ஃபோன் பண்றவரைக்கும் என்னதான் பண்ணாங்களோ.

302. சிலருக்கு அம்மாகிட்ட இருந்து ஃபோன் வந்திருக்கு. உங்களுக்கு வந்திச்சா..எனக்கும்தான் வந்திச்சு..
!
!எங்க அம்மாகிட்டயிருந்துங்க.

திங்கள், 1 ஜூன், 2015

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

சமீபகாலமா எதை எடுத்தாலும் ரேட்டிங்க்தான். ஒரு பொருளை வாங்கப் போனாலும் சரி ஒரு அலுவலகத்தில் வருடாந்திர முடிவிலும் சரி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சரி. ரேட்டிங் போட்டு அவர்களைத் தரம்தாழச் செய்வதில்தான் முனைப்பாக இருக்கிறது உலகம்.

முன்பு எல்லாம் பொருட்களுக்கு ரேட்டிங்க் வைத்து விற்பதில்லை. தரமான பொருட்களையே நாம் வாங்கினோம் என்பதல்ல. அவ்வளவு சுகாதாரக் கேடும் நோயும் ப்ளாஸ்டிக் உபயோகமும் , மரபணு மாற்றப் பயிர்களும் உரங்களும் தாக்காத காலகட்டத்தில் இருந்தோம். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இன்றைப் போல பெருவாரியாக விதம் விதமான காய்ச்சல்களும் தொற்று நோய்களும் இல்லை. கொஞ்சம் ஆரோக்கியமாகவே இருந்தோம் என்று சொல்லலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...