கல்யாண முருங்கை :-
******************************
நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித் தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு.எல்லாம் அவள் தப்பேதானா.. சிந்திக்க சிந்திக்க சுய வெறுப்பில் ஆழ்ந்தாள் அவள்.
நிலவு தேய்ந்து கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் முழுதாக மறைந்து பின் வளரும். தேய்வதும் வளர்வதும் பூமியின் நிழல்படுவதால். மனதையும் மனிதத்தையும் மூடும் நிழல்களால் வாழ்வும் உணர்வுகளும் நம்பிக்கைகளும் கூடத் தேய்ந்தும் வளர்ந்தும் கொண்டிருந்தன. தோட்டத்தில் இருந்த கல்யாண முருங்கை மரத்திலிருந்து சிவப்புப் பூக்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன அவள் கண்களைப் போல.
பால்கனியில் அமர்ந்திருந்த சுபத்ராவின் மேல் பாலொளியைத் தடவிக் கொண்டிருந்தது நிலா. கன்னங்களில் வழிந்த நீர்க்கோடுகள் பளபளத்துக் கொண்டிருந்தன. அர்ஜுனும் அங்கே வருந்திக் கொண்டிருப்பான். ஆனால் நிமிர்த்தமுடியாத அளவு வளைந்து உடைந்து போயிருந்தது அவர்களின் குடும்பமெனும் கப்பல். அதன் மாலுமிகள் இருவருமேதான் அதைக் கவிழ்த்து மூழ்கடித்துச் சென்றவர்கள்.