எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஸ்வாலோஸ் நெஸ்டும், ஜெரோ க்ராஸும்

ஜெர்மனி கோலோனில் இருக்கும் இந்த சர்ச்சின் கட்டிடக்கலை, முகப்புச் சிற்பங்கள், மார்பிள் & கிரானைட் சிற்பத் தொகுதிகள், (புனிதர்கள் மட்டுமல்ல வித்யாசமான உருவங்களும் பொறிக்கப்பட்டிருப்பது), ஜன்னல் கண்ணாடிகளில் வரலாறு சொல்லும் வண்ண ஓவியங்கள், ஸ்வாலோஸ் நெஸ்ட் எனப்படும் மிகப்பெரும் இசைக்கருவி அனைத்தையும் இன்னும் ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறேன். 

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெரோ க்ராஸையும் ஆர்ச்பிஷப்களின்/புனிதர்களின் கல்லறைச் சிற்பங்களையும், இயேசுவின் வாழ்வியல் சிற்பங்களையும் சிலுவைப்பாதையையும் நீங்கள் இங்கே காணலாம். 

எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட இந்த அற்புத கதீட்ரலை ஜெர்மனி சென்றால் காண மறவாதீர்கள்.முழுக்க முழுக்க ஜெர்மானியக் கட்டிடக் கலையில் ரைன் நதிக்கரையில் இரட்டைக் கூம்பு வடிவக் கோபுரங்கள் கொண்டு அமைக்கப்பட்டது. 

வெளியே இருக்கும் இச்சிற்பங்கள் அபோஸ்தலர்களைப் போலத் தோன்றுகிறது.  இரட்டைக் கோபுரங்கள் கொண்ட கதீட்ரல் இது. 12 ஆம் நூற்றாண்டில் இருந்து15 ஆம் நூற்றாண்டு வரை கட்டியும் கட்டி முடிக்க முடியல. அதுனால் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளாக இதைக் கட்டி முடிச்சிருக்காங்க. அதுக்கு ஏத்த அளவு இதுல மார்பிள் வேலைப்பாடுகளும் உண்டு. 

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

கொஞ்சம் ப்ளாஸ்டிக். மேசை விளக்கும் தந்தச் சீப்பும்

 165.


1821*.கிட்டத்தட்ட 500 வருடங்களாக (அதற்கு முன்னும் கூட இருக்கலாம்) காரைக்குடிப் பக்கம் கல்யாணச் சீரில் வைரம், தங்கம், வெள்ளியுடன், எவர்சில்வர், அலுமினியம், மங்கு, செம்பு, பித்தளை ( வெண்கலம்), இரும்பு, மரம், தகரம், மரவைகள், ப்ளாஸ்டிக், ரப்பர் ( குளுதாடிகள் , கப்புகள் ) ,கண்ணாடிச் சாமான்கள்,துணிமணிகள், மெத்தை பாய் தலையணைகள், அலமாரிகள்  வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது புதிதாய் 1822*.மெல்மோவேர், டஃபர்வேர், நான் ஸ்டிக் , காப்பர் பாத்திரங்களும், 1823*கிச்சன் எலக்ட்ரிகல் ( மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், கேஸ் அடுப்பு ) ஐட்டங்களும், வாஷிங் மெஷின், டிவி வகைகளும் பரப்பி வந்திருக்கிறார்கள்.

இதெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பு வரை பெண் வீட்டார் பெண்ணுக்குப் பரப்பிக் கொடுத்த சாமான்கள். அதன் பின் 1823*பெண்ணுக்குத் தனியாகவும் 1825*மாமியாருக்குத் தனியாகவும் ( இது பொங்கல் அடுப்பு, தவலை, கோலக்கூட்டு , சில வாளிகள், சம்புடங்கள், மங்கலப்பொருட்கள் மட்டுமே இருக்கும் ) , 1826*மாப்பிள்ளைக்குத் தனியாகவும் சாமான் பரப்பிக் கொடுப்பார்கள். இதில் ஐந்து ஜோடி சட்டை பாண்ட், பனியன், ஜட்டி, கைக்குட்டைகள், பாடி ஸ்ப்ரே, செண்ட் , ஷேவிங் செட், டேபிள் ஃபான், டேபிள் சேர், ரேடியோ, டேப் ரெகார்டர் போன்றவையும் இன்னும் குடை செருப்பு, சூட்கேஸ் போன்றவையும் இருக்கும். 

1827*மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்குப் பதினாறு புடவைகள் ( 7 பட்டு தொகை வாரியாக 35,000 இல் இருந்து பத்தாயிரம் வரை , 9 சிந்தடிக் சேலைகள்,) 5 சூடிதார்கள், 5 நைட்டிகள் அல்லது இரவு அணியும் சட்டை பாண்டுகள், பாடி, ஜட்டி, கைக்குட்டைகள், தலை அணிகள், மேக்கப் செட், சீப்பு, சோப்பு , பாடி ஸ்பிரே, செண்ட் வகையறாக்கள், பவுடர், ஸ்நோ, நெயில்பாலிஷ்கள், துண்டுகள், கைப்பைகள், வாட்ச், சாப்பாட்டுத் தட்டு, குடை, சில்வர் அண்டா, வாளி , கப், செருப்பு, இன்னபிறவற்றோடு 1828*வெள்ளியில் ஒன்று அல்லது சில சாமான்களும் ( ஒரு கிலோவிலிருந்து இருக்கும் ) 1829*தங்கத்தில் அல்லது 1830*வைரத்தில் பெண்ணுக்கு சில நகைகளும் கொடுப்பார்கள். 

திருமணத்தின் போது பெண்ணுக்குக் கொடுக்கும் 1831*சீதனப் பணத்தை இப்போதெல்லாம் அப்படியே மாப்பிள்ளை வீட்டார் முழுதாகவே பெண் பெயரிலேயே டெபாசிட் போட்டு விடுகிறார்கள். ( வேண்டாம் என்று சொன்னால் பையனிடம் ஏதும் குறையோ என்று பேச்சு எழுவதால் இதைத் தவிர்க்க இப்படிச் செய்கிறார்கள். ) அந்தக்கால முறைப்படி சீதனப் பணத்தில் சிறிது 1832*மாமியாருக்கான பின் முறை என்று கொடுப்பார்கள். அதே போல் 1833*பேசி முடித்துக்கொள்ளும்போது மணமகளுக்குத் 1834*தாலிக்குப் பொன் தட்டும்போது  (மாப்பிள்ளை வீட்டில் இருந்து பொன் தாலி போட வேண்டும். தாலியை முன்பே பெண் வீட்டார் செய்து வைத்து விடுவதால் அதற்குப் பதிலாக 1835*பெண் வீட்டாருக்கு ஒரு பவுன், 3 அல்லது 5 அல்லது 16  இதுபோல் 1836*தோதுக்குத் தக்கன  கொடுப்பார்கள். இதையே சிலர் தங்கள் 1837*மருமகளுக்கு நகையாகச் செய்து போட்டு விடுகிறார்கள்.  

மேலே கூறியுள்ளதில் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பெண் வீட்டார் வெள்ளியில் சில பாத்திரங்கள் வைப்பதோடு சரி, அது போக பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் உடைகள், சாமான்கள் கொடுப்பதில்லை. சிலர் வீடுகளில் மட்டுமே இந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். 

ஆனால் இப்போதும் மாப்பிள்ளை வீட்டார் 1838*பெண்ணுக்குச் சாமான் பரப்புகிறார்கள். சாதாரணக் கல்யாணத்தில் கூட (உடைகள் ஒரு லட்சம்) தையல்கூலி ( 45,000) உட்பட இதுவே சுமார் ஒன்றரை லட்சம் உடை மற்றும் மற்ற பொருட்களுக்கான செலவு ( பத்தாயிரம்) ஆகிறது.  தாலிக்குப் பொன் தட்ட 3, 5, 16 பவுன் பெண் வீட்டாருக்குக் கொடுக்கிறார்கள். மேலும் பெண்ணுக்கு ஒரு கிலோ முதல் வசதிக்குத் தக்கபடி வெள்ளிப் பாத்திரம் ( வேவுக்கடகாம், குடம், குத்து விளக்கு போன்றவை) வைக்கிறார்கள். 

எனவே மாப்பிள்ளை வீட்டிற்கும் பெண் வீட்டிற்கும் இன்றைய நடைமுறையில் செலவுக் கணக்கு ஒன்றுதான். மேலும் அவர்கள் மாப்பிள்ளைக்குக் கொடுப்பதை ( வைர மோதிரம், செயின் , ப்ரேஸ்லெட் )  இவர்கள் பெண்ணின் பெற்றோருக்குக் கொடுத்து விடுகிறார்கள்.  இது போக வீடியோ, சாப்பாட்டு செலவு, உறவுமுறைகளுக்கான உடைகள், சீர் முறைகள் , இன்விடேஷன், வீடியோ, வண்டி வாகன வசதிகள், திருமண ஹால் எடுத்தால் அதற்கான வாடகை எல்லாம் சேர்த்துக் குறைந்தது 7 முதல் பத்து லட்சம் வரை செலவாகிறது. 

நிற்க. இது எல்லாம் என் திருமணத்தில் எங்கள் அம்மா வீடு பரப்பிக் கொடுத்த சாமான்கள். இதில் புழங்கியது போக மிச்சமிருக்கும் சாமான்கள் கானாடுகாத்தானில் ஒரு கண்ணாடி பதித்த மர அலமாரியில் அடைபட்டுக் கிடந்தன. அவை உங்கள் பார்வைக்கு .


1839*#இது டேபிள் லாம்ப். மேசை விளக்கு. 

திங்கள், 26 ஏப்ரல், 2021

எடைக்கு எடை சமன் செய்த அன்பின் இலை..

பொன்னல்ல பெரிது..
எடைக்கு எடை  சமன் செய்த அன்பின் இலை/ தங்க துலாபாரத்தை சமன் செய்த துளசிதளம்

ஒரு பொருளையோ மனிதரையோ அடைய பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுக்கலாம். ஆனால் அப்பொருளையோ மனிதரையோ உண்மையான உள்ளன்பு இருந்தால் மட்டுமே ஆத்மார்த்தமாகப் பெற முடியும். கூடை கூடையாய்ப் பொன்னைக் கொட்டியும் ஒருத்தி பெற முடியாத அன்பை ஒரே ஒரு இலையை உள்ளன்போடு கொடுத்து அடைந்தாள் இன்னொருத்தி. அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பகவான் கிருஷ்ணருக்கு சத்யபாமா, ருக்மணி என்ற இரு மனைவியர் . இருவரும் அவர்மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள்.
சத்யபாமாவின் திருமணத்தின்போது அவளது தாய்வீட்டில் இருந்து பொன்னையும் பொருளையும் மலைபோல் சீராகக் கொட்டி அனுப்பி இருந்தார்கள். அது போக கிருஷ்ணருக்குத் தேரோட்டியாக ஒரு சமயம் அவள் செயல்பட்டாள் என்ற பெருமை வேறு அவள் மனத்தில் மமதையை ஏற்படுத்தி இருந்தது.

வியாழன், 22 ஏப்ரல், 2021

பேச்சுப் போட்டியில் நடுவராக..

காரைக்குடி புத்தகத் திருவிழா கடந்த மாதம் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதை ஒட்டி மாணாக்கருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. செய்யுள் மனனப் போட்டியாக பாரதி பாரதிதாசன் பாடல்களில் இருந்து 40 வரிகளைச் சொல்லும் போட்டியில் பல்வேறு பள்ளிகளின் மாணாக்கர்கள் கலந்து கொண்டு சிறப்பாக ஒப்பித்தனர்.

இந்நிகழ்வை நடத்தியவர் ஆசிரியரும் குழந்தைக் கவிஞர் திரு அழ. வள்ளியப்பா அவர்களின் புதல்வியுமான திருமதி தேவி நாச்சியப்பன் ஆவார்கள். இவர் இப்புத்தகத் திருவிழாவின் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி சந்திரா மற்றும் திருமதி ஸ்வேதா ( கார்த்திகேயன் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ) ஆகியோரோடு மூன்று நடுவர்களுள் ஒருவராகப் பங்கேற்றேன்.///



செவ்வாய், 20 ஏப்ரல், 2021

லெதர் தொழில் பற்றி சாரதா ராமநாதன் அவர்களுடன் ஒரு பேட்டி.

லெதர் தொழிலில் வெற்றி பெற ரகசியங்கள்

பெண் தொழில் முனைவோர் சாரதா ராமநாதன் அவர்களுடன் பேட்டி

 

பேட்டி, கட்டுரை: தேனம்மை லெட்சுமணன், காரைக்குடி

 

++++++++++++++++++++

எப்போதிலிருந்து லெதர் கம்பெனி நடத்தி வருகிறீர்கள் ?

 

நாங்கள் 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் மெஷினரி   வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தோம். பின்னர் 2009 ஆம் ஆண்டு lease-க்கு நடத்தி வந்தோம். 2010 ஆம் ஆண்டு சொந்தமாக கட்டிடம் கட்டி மிஷின்கள் சொந்தமாக வாங்கி தொடங்கினோம்.

 

இந்த வியாபாரத்தில் ஈடுபடத் தூண்டுதலாய் இருந்தது எது?

 

என் கணவர் இத்துறையில் 15 வருட அனுபவம் பெற்றவர். நான் இத்துறையில் அக்கவுண்ட்ஸ் வேலையில் 3 வருட அனுபவம் பெற்றேன். இருந்த அனுபவத்தால் நாங்கள் இணைந்து தொழில் தொடங்குவோம் என்று முடிவு செய்தோம். இந்தத் தொழிலில் எங்கள் இத்தவர்கள் மற்றும் எங்களுக்குத் தெரிந்தவர்கள் சாதரணமாக வந்து வேலை கற்றுக் கொண்டு இன்று மிகப் பெரிய அளவில் தொழில் செய்வதைப் பார்த்து நாங்களும் தொழில் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

 

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

மிஸஸ் குவாரண்டைனுடன் இன்ஸ்டாவில் ஒரு பேட்டி.

மிஸஸ் குவாரண்டைன் என்ற பெயரில் இன்ஸ்டாவில் உள்ள முத்தாள் எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம். இவர் ஐபிசிஎன் நடத்திய இளம் தொழில் முனைவோருக்கான முதல் விருது பெற்று அதை வாங்கத் தன் குழுவினருடன் துபாய் சென்று வந்த பெருமைக்குரியவர். 


அவர் தற்போது திருமணமாகி டெல்லியில் செட்டிலாகி உள்ளார். தனது தந்தையின் அலுவலகத்துக்கு டெல்லியில் இருந்தே சில பணிகளைச் செய்து கொடுத்தும் வருகிறார். 

வியாழன், 8 ஏப்ரல், 2021

மக்களோடு துறவெய்திய மன்னன்

மக்களோடு துறவெய்திய மன்னன்


அளவற்ற பொன், பொருள், மண், மனை, பதவி, படை கொண்ட ஒரு மன்னன் துறவெய்தும் போது அவனுடைய குடும்பத்தினரும் துறவெய்தினார்கள். இன்பம் தரும் லோகாயதப் பொருட்களை விடுத்து அவர்கள் அனைவரும் தாபதர் பள்ளிகளில் அடைக்கலமானது ஏன் ?. அனைவருக்கும் ஒரே சமயம் இப்படித் துறவு மனப்பான்மை வரக் காரணமென்ன ? அப்படித் துறவுக்கு மக்களை இட்டுச் சென்ற மன்னன் யார் என்பதை எல்லாம் பார்ப்போம். வாருங்கள் குழந்தைகளே.

திங்கள், 5 ஏப்ரல், 2021

வாடிகன் என்னும் தனி தேசம்.. !!!

 யூரோப் டூரின் நான்காம் நாள் இத்தாலி வந்தடைந்தோம். வெனிஸை சுற்றிப் பார்த்தபிறகு ஐந்தாம் நாள் காலையில் ரோம் நகரத்தையும் மதியத்தில் வாடிகன் சர்ச்சையும் காணச் சென்றோம். 

கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் புனித நகரம். போப்பின் தனியாட்சிக்கு உட்பட்ட தனிதேசம் வாடிகன். இதற்கென்று தனி ரயில் நிலையம், தனி போஸ்ட் ஆஃபீஸ், முத்திரைகள், நாணயங்கள் உண்டு. இந்தத் திருச்சபை, புனிதர்கள், அற்புதங்கள்  சம்பந்தமாக நூலகமும், அருங்காட்சியகமும் கூட உண்டு.

எனக்கு போப் இரண்டாம் ஜான் பால், புனித ஃப்ரான்ஸிஸ் ஆகிய போப்பாண்டவர்களை செய்திகள் மூலம் பரிச்சயம் உண்டு. ஆனால் அங்கே 250 க்கும் மேற்பட்ட ( 266) போப்பாண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். 


பிரம்மாண்ட சர்ச்சுக்குள் செல்வதற்குள் ஏகப்பட்ட செக்யூரிட்டி செக்கிங்க்ஸ். அதன் பின் பல்வேறு தளங்களில் கன்வேயரிங் பெல்ட் மூலம் உள்ளே நுழைந்தோம். செயிண்ட் பீட்டர்ஸ் ஸ்கொயரில்/புனித பீட்டர் சதுக்கத்தில் முதன் முதலாக வரவேற்றது ஒரு ஸ்தூபி/ஸ்தம்பம். உயரமாக நாற்சதுரத் தூண் போல அமைந்த ஒபிலிக்ஸ் எனப்படும் நீள் பிரமிட் வடிவம்.  இதே போல் வடிவத்தை ஃப்ரான்ஸிலும் பார்த்தேன்.  இதேபோல் ஒபிலிக்ஸ் துருக்கி, எகிப்திலும் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

சனி, 3 ஏப்ரல், 2021

சில்வர்ஃபிஷ் வள்ளியம்மை அருணாச்சலத்துடன் ஸ்டார்ட் அப் & பிஸினஸ் நியூஸுக்காக ஒரு பேட்டி.

திருமிகு. வள்ளியம்மை அருணாச்சலம் பதிப்பக உலகின் புதிய விடிவெள்ளி. அவர் அடிப்படையில் மென்பொறியியல் துறையில் டீம் லீடராகப் பணிபுரிகிறார். வாசிப்பினால் ஈர்க்கப்பட்ட அவர் 40 ப்ளஸ் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். இந்த வருடப் புத்தகத் திருவிழாவில் சில்வர்ஃபிஷ் என்றொரு ஸ்டாலை அமைத்து அதில் புத்தக விற்பனையிலும் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார். சில்வர் ஃபிஷ் பதிப்பகத்தின் மூலம் மாதாந்திரியும் இன்னும் பல நூல்களை பதிப்பித்தும் வெளியிட உள்ள அவரிடம் திரு. சேதுராமன் சாத்தப்பன், திரு.ஹுமாயூன் ஆகியோர் நடத்திவரும் ஸ்டார்ட் அப் & பிஸினஸ் நியூஸ் என்னும் மின்னிதழுக்காகப் பேட்டி ஒன்று எடுத்தேன். அதை இங்கே தருகிறேன். 

///1.உங்கள் சுயவிபரம், குடும்பம் பற்றிக் கூறுங்கள்
2. கிண்டில் அமேஸான் ஆகிய ஆன்லைன் வாசிப்புத் தளங்கள் பெருகிவிட்டபோது அச்சுப் புத்தகங்களுக்கான தளம் இருக்கிறதா.
3. உங்களை வாசிப்பிற்கும் எழுத்துக்கும் பதிப்புத் தொழிலுக்கும் கொண்டு வந்தது எது
4. சில்வர் ஃபிஷ் என்று உங்கள் புக் ஸ்டாலுக்குப் பெயரிட்டுள்ளீர்கள். அது பற்றி
5. மென்பொறியியல் துறையிலிருந்து கொண்டே புக்ஃபேரில் புத்தக விற்பனை செய்த அனுபவம் எப்படி இருந்தது.
6. என்னன்ன நூல்கள் அதிகம் விற்பனை ஆயின
7. உங்கள் முதல் நூல் பற்றியும் அதை எழுதத் தூண்டியது எது என்பது பற்றியும்
8. இந்தியச் சந்தையில் அச்சு புத்தகங்களுக்கான எதிர்காலம் என்ன
9. இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் நூல்களுக்கான வரவேற்பு எப்படி
10. பதிப்புத்துறையில் இன்னும் என்னென்ன சாதிக்கலாமென்று திட்டமிட்டுள்ளீர்கள்.
11. பதிப்புத் துறைக்குப் புதிதாய் வர விரும்புபவர்களுக்கு உங்கள் அட்வைஸ்.

இது போக நீங்கள் சொல்ல நினைப்பனவற்றையும் எழுதி அனுப்புங்கள். 
அன்புடன் 
தேனம்மைலெக்ஷ்மணன்///


 1.உங்கள் சுயவிபரம்குடும்ப பற்றிக் கூறுங்கள்

 


எனது பெயர் வள்ளியம்மை அருணாச்சலம். மென்பொறியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என் கணவர் திரு. நாராயணன் அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் பெண் கல்லூரியில் இரண்டாமாண்டும்இரண்டாவது பெண் எட்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். 

 

2. கிண்டில் அமேஸான் ஆகிய ஆன்லைன் வாசிப்புத் தளங்கள் பெருகிவிட்டபோது அச்சுப் புத்தகங்களுக்கான தளம் இருக்கிறதா.

 

இளைய தலைமுறையினரின் வாசிக்கும் தளம் மாறி இருக்கிறது என்பது உண்மைதான். எளிதாக ஒரு சில விஷயங்கள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்வது என்பது வரவேற்கத்தக்க விஷயம்தானேஇதனால் வாசிக்கும் மக்கள் அதிகமாகி இருக்கின்றனர். அச்சுப் புத்தகங்களை வாசிக்கும் வாசகர்களும் கணிசமான அளவில் இருக்கவே செய்கிறார்கள். ஆன்லைன் புத்தகங்களை ஆரம்பத்தில் வாசித்துப் பழகினாலும்பின்னர் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வீட்டில் வைத்துக் கொள்வதுதேவையானபோது குறிப்பெடுத்துக் கொள்வதுபுத்தகங்களை பரிசளிப்பது இது போன்ற தேவைகளுக்காக புத்தகங்களை வாங்குகிறார்கள். எனவேஅச்சுப் புத்தகங்களுக்கான தளம் என்பது இருக்கவே செய்கிறது.

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

வாடிகன் சர்ச்சில் காவிய ஓவியங்களும் பலி பீடங்களும்.

 யூரோப் டூரின் போது வாடிகன் சர்ச்சில் மொஸைக்கில் வரையப்பட்ட/செதுக்கி ஒட்டப்பட்ட சில ஓவியங்களைப் பார்த்தேன். கவர்ந்த சிலவற்றைக் காமிராவால் சிறைப்பிடித்தேன். அவை உங்கள் பார்வைக்கு. 

மகதலேனாவை மறக்க முடியுமா உங்களால். பைபிளில் எனக்குப் பிடித்த ஒரு பெண் அவள். ஏசுபிரானே, “ உங்களில் தவறு செய்யாதோர் அவள் மீது கல்லெறியுங்கள் “ என்று அவள் மீது உன்மத்தத்துடன் கல்லெறிந்து தாக்குதல் நடத்திய கூட்டத்திடம் அறிவுறுத்திய கருணைக்குரியவள்.

இங்கே பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்டோஃபோரோ ரோன்கல்லி  வரைந்த அசல் ஓவியத்திலிருந்து, அனனியாஸ் & சபிரா என்ற தம்பதியின் தண்டனையை குறிக்கும் மொசைக் ஓவியமும் பலிபீடமும் (1725-1727). செயின்ட் பீட்டரிடம் பொய் சொன்ன பிறகு, சபீரா அப்போஸ்தலருக்கு முன்பாக தரையில் விழ பின்னணியில் இரண்டு இளைஞர்கள் அவரது கணவர் அனனியாஸின் சடலத்தை எடுத்துச் செல்கின்றனர். 

பொய்யைத் தண்டிக்கும் பலிபீடம். 

ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ப்ளேக் நோய் பாதிப்பின் போது ரோம் நகர மக்களைக் காத்த  புனிதர் இவர். பெயர் செயிண்ட் செபஸ்டியன். இவர் பெயரால் அமைந்த இந்த ஓவியத்தின் முன்பு பலி பீடமும் ( பூசையின் போது பயன்படுவது ) , போப் இரண்டாம் ஜான் பாலின் கல்லறையும் அமைந்துள்ளது. 

Related Posts Plugin for WordPress, Blogger...