எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

கொஞ்சம் ப்ளாஸ்டிக். மேசை விளக்கும் தந்தச் சீப்பும்

 165.


1821*.கிட்டத்தட்ட 500 வருடங்களாக (அதற்கு முன்னும் கூட இருக்கலாம்) காரைக்குடிப் பக்கம் கல்யாணச் சீரில் வைரம், தங்கம், வெள்ளியுடன், எவர்சில்வர், அலுமினியம், மங்கு, செம்பு, பித்தளை ( வெண்கலம்), இரும்பு, மரம், தகரம், மரவைகள், ப்ளாஸ்டிக், ரப்பர் ( குளுதாடிகள் , கப்புகள் ) ,கண்ணாடிச் சாமான்கள்,துணிமணிகள், மெத்தை பாய் தலையணைகள், அலமாரிகள்  வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது புதிதாய் 1822*.மெல்மோவேர், டஃபர்வேர், நான் ஸ்டிக் , காப்பர் பாத்திரங்களும், 1823*கிச்சன் எலக்ட்ரிகல் ( மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், கேஸ் அடுப்பு ) ஐட்டங்களும், வாஷிங் மெஷின், டிவி வகைகளும் பரப்பி வந்திருக்கிறார்கள்.

இதெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பு வரை பெண் வீட்டார் பெண்ணுக்குப் பரப்பிக் கொடுத்த சாமான்கள். அதன் பின் 1823*பெண்ணுக்குத் தனியாகவும் 1825*மாமியாருக்குத் தனியாகவும் ( இது பொங்கல் அடுப்பு, தவலை, கோலக்கூட்டு , சில வாளிகள், சம்புடங்கள், மங்கலப்பொருட்கள் மட்டுமே இருக்கும் ) , 1826*மாப்பிள்ளைக்குத் தனியாகவும் சாமான் பரப்பிக் கொடுப்பார்கள். இதில் ஐந்து ஜோடி சட்டை பாண்ட், பனியன், ஜட்டி, கைக்குட்டைகள், பாடி ஸ்ப்ரே, செண்ட் , ஷேவிங் செட், டேபிள் ஃபான், டேபிள் சேர், ரேடியோ, டேப் ரெகார்டர் போன்றவையும் இன்னும் குடை செருப்பு, சூட்கேஸ் போன்றவையும் இருக்கும். 

1827*மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்குப் பதினாறு புடவைகள் ( 7 பட்டு தொகை வாரியாக 35,000 இல் இருந்து பத்தாயிரம் வரை , 9 சிந்தடிக் சேலைகள்,) 5 சூடிதார்கள், 5 நைட்டிகள் அல்லது இரவு அணியும் சட்டை பாண்டுகள், பாடி, ஜட்டி, கைக்குட்டைகள், தலை அணிகள், மேக்கப் செட், சீப்பு, சோப்பு , பாடி ஸ்பிரே, செண்ட் வகையறாக்கள், பவுடர், ஸ்நோ, நெயில்பாலிஷ்கள், துண்டுகள், கைப்பைகள், வாட்ச், சாப்பாட்டுத் தட்டு, குடை, சில்வர் அண்டா, வாளி , கப், செருப்பு, இன்னபிறவற்றோடு 1828*வெள்ளியில் ஒன்று அல்லது சில சாமான்களும் ( ஒரு கிலோவிலிருந்து இருக்கும் ) 1829*தங்கத்தில் அல்லது 1830*வைரத்தில் பெண்ணுக்கு சில நகைகளும் கொடுப்பார்கள். 

திருமணத்தின் போது பெண்ணுக்குக் கொடுக்கும் 1831*சீதனப் பணத்தை இப்போதெல்லாம் அப்படியே மாப்பிள்ளை வீட்டார் முழுதாகவே பெண் பெயரிலேயே டெபாசிட் போட்டு விடுகிறார்கள். ( வேண்டாம் என்று சொன்னால் பையனிடம் ஏதும் குறையோ என்று பேச்சு எழுவதால் இதைத் தவிர்க்க இப்படிச் செய்கிறார்கள். ) அந்தக்கால முறைப்படி சீதனப் பணத்தில் சிறிது 1832*மாமியாருக்கான பின் முறை என்று கொடுப்பார்கள். அதே போல் 1833*பேசி முடித்துக்கொள்ளும்போது மணமகளுக்குத் 1834*தாலிக்குப் பொன் தட்டும்போது  (மாப்பிள்ளை வீட்டில் இருந்து பொன் தாலி போட வேண்டும். தாலியை முன்பே பெண் வீட்டார் செய்து வைத்து விடுவதால் அதற்குப் பதிலாக 1835*பெண் வீட்டாருக்கு ஒரு பவுன், 3 அல்லது 5 அல்லது 16  இதுபோல் 1836*தோதுக்குத் தக்கன  கொடுப்பார்கள். இதையே சிலர் தங்கள் 1837*மருமகளுக்கு நகையாகச் செய்து போட்டு விடுகிறார்கள்.  

மேலே கூறியுள்ளதில் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பெண் வீட்டார் வெள்ளியில் சில பாத்திரங்கள் வைப்பதோடு சரி, அது போக பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் உடைகள், சாமான்கள் கொடுப்பதில்லை. சிலர் வீடுகளில் மட்டுமே இந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். 

ஆனால் இப்போதும் மாப்பிள்ளை வீட்டார் 1838*பெண்ணுக்குச் சாமான் பரப்புகிறார்கள். சாதாரணக் கல்யாணத்தில் கூட (உடைகள் ஒரு லட்சம்) தையல்கூலி ( 45,000) உட்பட இதுவே சுமார் ஒன்றரை லட்சம் உடை மற்றும் மற்ற பொருட்களுக்கான செலவு ( பத்தாயிரம்) ஆகிறது.  தாலிக்குப் பொன் தட்ட 3, 5, 16 பவுன் பெண் வீட்டாருக்குக் கொடுக்கிறார்கள். மேலும் பெண்ணுக்கு ஒரு கிலோ முதல் வசதிக்குத் தக்கபடி வெள்ளிப் பாத்திரம் ( வேவுக்கடகாம், குடம், குத்து விளக்கு போன்றவை) வைக்கிறார்கள். 

எனவே மாப்பிள்ளை வீட்டிற்கும் பெண் வீட்டிற்கும் இன்றைய நடைமுறையில் செலவுக் கணக்கு ஒன்றுதான். மேலும் அவர்கள் மாப்பிள்ளைக்குக் கொடுப்பதை ( வைர மோதிரம், செயின் , ப்ரேஸ்லெட் )  இவர்கள் பெண்ணின் பெற்றோருக்குக் கொடுத்து விடுகிறார்கள்.  இது போக வீடியோ, சாப்பாட்டு செலவு, உறவுமுறைகளுக்கான உடைகள், சீர் முறைகள் , இன்விடேஷன், வீடியோ, வண்டி வாகன வசதிகள், திருமண ஹால் எடுத்தால் அதற்கான வாடகை எல்லாம் சேர்த்துக் குறைந்தது 7 முதல் பத்து லட்சம் வரை செலவாகிறது. 

நிற்க. இது எல்லாம் என் திருமணத்தில் எங்கள் அம்மா வீடு பரப்பிக் கொடுத்த சாமான்கள். இதில் புழங்கியது போக மிச்சமிருக்கும் சாமான்கள் கானாடுகாத்தானில் ஒரு கண்ணாடி பதித்த மர அலமாரியில் அடைபட்டுக் கிடந்தன. அவை உங்கள் பார்வைக்கு .


1839*#இது டேபிள் லாம்ப். மேசை விளக்கு. 


1840*மூடி போட்ட ஸ்கேல் அளவு 50 செமீ நீளப் பென்சிலும், 1841*இருபக்கமும் மூடியைத் திறந்து எழுதக்கூடிய பச்சை, சிவப்பு மசி கொண்ட நிப் பேனாக்களும். டூ இன் ஒன். 

பென்சிலில் ஒரு 1842*குடைக்காம்பு போல ஒரு கொக்கி.

1843*டூ இன் ஒன் சோப்பு டப்பா. சோப்பு டப்பாவே பிரஷாகவும் பயன்படும். இதுவும் டூ இன் ஒன் உபயோகம். 

மர்லின் மன்றோ பதித்த சோப்பு டப்பா. ( சரோஜா தேவி சோப்பு டப்பா இல்லீங்கோ :) 

சோப்பு டப்பாவில்  நீர் தேங்காமல் வழிய துவாரங்கள்.

1844*சிகரெட் ஆஷ் ட்ரே. இது தகரம். 
1845*.தந்தப் பேனா இல்லை, ப்ளாஸ்டிக் பேனாதான். 

1846*ப்ளாஸ்டிக் கப்பல். பேப்பர் வெயிட். நடுவில் வெயிட் வைச்சிருக்காங்க. 


1847*குழந்தைகளுக்கான பீப்பீ ஊதல். ரப்பரில். 


1848*உள்பக்கம் மணி அடிக்கும் கிலுகிலுப்பை. வெளிநாட்டுச் சரக்கு, மலேயா இறக்குமதி. 

இதுவும் 1849*கிலுகிலுப்பைதான். ப்ளாஸ்டிக். 

1850*இது இன்னொரு வகை. உள்ளே ஒரு குழந்தை சேரில் அமர்ந்து ஆடும் போஸில் வைக்கப்பட்டுள்ளது. 

இதுதான் 1851*செட்டியார் கோம்ப் எனப்படும் சீப்பு. கறுப்புக் கலரில் இருக்கும் இந்தச் சீப்பில் கைப்பிடி பக்கம் கூர்மையாக இருக்கும். இதை 1852**வாகு/வகுப்பு எடுக்கப் பயன்படுத்துவார்கள். நெளி நெளியாக இருக்கும் முடியை இச்சீப்பைக் கொண்டு சீவிக் கொள்வார்கள். ( அந்தக்காலப் புகைப்படத்தில் பார்த்தால் தெரியும். கிராப்புத் தலைக்காரர்கள் நெளிநெளியாக மடிப்பு மடிப்பாக வாரிக் கொள்வார்கள். சீப்பின் மேற்புறம் கொண்டு தலை முடியை ஆங்காங்கே வளையம் வளையமாக, மடிப்பாக அமுத்தி விடுவார்கள் ! )

அதன் பக்கத்தில் இருப்பது 1843*தந்தச் சீப்பு. வேலைப்பாடுகளுடன் கூடியது. 1844*மாப்பிள்ளைக்கு வைக்கும் சாமான்களில் வைத்தது. பக்கத்தில் இருப்பது 1845*நகை சுத்தம் செய்யும் பிரஷ். எவ்வளவு நீளமான பிரஷ் குச்சங்கள். கைப்பிடியும் கை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கு.! 


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

 

1. ஆச்சியும் அய்த்தானும்

 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

 

3. அயித்தையும் அம்மானும்.

 

4. ஆயாவின் வீடு.

 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

 

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

 

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

 

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

 

10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

 

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

 

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

 

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

 

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

 

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

 

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

 

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

 

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

 

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

 

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

 

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

 

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.

 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

 

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

 

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!!

 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

 

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

 

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

 

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும். 

 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

 

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.

 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

 

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்.

 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்.

 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

 

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

 

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

 

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

 

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.

 

45. அகத்திலும் அகத்திலும்எங்கள் ஆத்தாள் ”.

 

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

 

47. வெற்றிஇணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

 

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

 

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்.

 

50. கோவிலூர் மியூசியம்.

 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

 

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும்ரெங்காவும்.

 

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

 

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..

 

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.

 

58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.

 

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

 

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.

 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

 

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

 

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

 

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.

 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.

 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.

 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

 

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )

 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.

 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

 

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்காலஎழுத்துக்களும்.

 

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும்.

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும்.

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-

 

81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச்சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.

 

85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.

 

87. இந்த சீர் போதுமா ?!

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு. 

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

 

97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.

 

98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.

 

99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .

 

100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.

 

101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.

 

102. பழம்பெரும் வீடுகள்.

 

103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

 

104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

 

105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.

 

106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.

 

107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.

 

108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்

 

109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.

 

110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.

 

111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.

 

112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.

 

113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.

 

114. காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.

 

115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.

 

116. காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.

 

117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.

 

118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.

 

119. காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.

 

120. காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.

 

121. காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.

 

122. கண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.

 

123.காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.

 

124.காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.

 

125.காரைக்குடிச் சொல்வழக்கு. சிலேட்டு விளக்கும் சாரட்டும்.

 

126.காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்

 

127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.

 

128. காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.

 

129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்.

 

130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.

 

131.காரைக்குடி முனியையா கோயில்.

 

132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

 

133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

 

134. வட்டாரப் பழமொழிகள் - 1.

 

135. வட்டாரப் பழமொழிகள் - 2.

 

136. வட்டாரப் பழமொழிகள் - 3.

 

137. வட்டாரப் பழமொழிகள் - 4.

 

138. வட்டாரப் பழமொழிகள் - 5.

 

139. வட்டாரப் பழமொழிகள் - 6.

 

140. வட்டாரப் பழமொழிகள் - 7.

 

141. வட்டாரப் பழமொழிகள் - 8.

 

142. வட்டாரப் பழமொழிகள் - 9.

 

143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

 

144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

 

145. மாத்தூர் - சில சிறப்புகள்.

 

146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

 

147. பேர் பெற்ற வீடு.

 

148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

 

149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

 

150. பூசைச் சாப்பாடு.

 

151. அரசாணிக்கால் ஊன்றுதலும் மாத்துக் கட்டுதலும்.

 

152. பூரங்கழித்தலும் பெண் எடுக்கிக் காட்டுதலும்

 

153. மணவறைச்சடங்கும் மாமவேவும்.

 

154. பணத்திருப்பேடும் குடிவழியும்.

 

155. ஸ்ரீதனப் பணமும், காய்ச்சி ஊற்றுதலும்

 

156. பிள்ளை எடுக்கிக் கொடுக்கும் துண்டும் சிட்டிச்சாமான்களும்.

 

157. குளுதாடிகளும் காய்கறி மரவைகளும்.

 

158. நாலு கட்டு உள்ள கோட்டையூர் வீடு.

 

159. படைப்பு வீடு சில க்ளிக்ஸ்.

 

160. முன்னோர்களின் ஓவியங்களும் ஓவியப் படங்களும்.

 

161.ஜெகஜ்ஜாலப் புரட்டனும் இரிசி மட்டையும்

 

162.காப்புக் கட்டுப் புதுமையும் கார்த்திகைப் புதுமையும் சுவீகாரப் புதுமையும் திருவாதிரைப் புதுமையும்

 

163.பொங்கல் - சில குறிப்புகள்

 

164.போகணியும் காப்பித்தட்டும் பால்பானைச் செம்பும் கூஜாவும்

 

 165. கொஞ்சம் ப்ளாஸ்டிக். மேசை விளக்கும் தந்தச் சீப்பும்

 

டிஸ்கி :- இவற்றையும்பாருங்க.

 

1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம்

 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

 

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

 

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

 

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

 

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

 

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

 

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

 

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்..எம். ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

 

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

 

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

 

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் )

 

13. வைரமே வைரம்...

 

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்.

 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

 

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


3 கருத்துகள்:

  1. நல்ல நினைவுகள். இப்படியான பொருட்கள் எல்லாம் இப்போது கிடைக்கிறதா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே ரசனைமிக்க இருக்கு. சீப்பு சோப்பு டப்பா இப்போதும் இருக்கிறதோ? வகிடு எடுக்கும் கூர் பகுதியுடன் மற்றும் ப்ரஷ்ஷுடனான சோப்பு டப்பா..

    உங்கள் சீர் சாமான்கள் அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இப்போது கிடைப்பதில்லை துளசி சகோ. அதுதான் போஸ்ட் போட்டிருக்கேன்.

    நன்றி கீத்ஸ். இப்போது இவை கிடைப்பதில்லை.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...