எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 நவம்பர், 2018

தாசன் தலைவனைப் போற்றும் திறம் :-


தாசன் தலைவனைப் போற்றும் திறம் :-

உலகம் புகழும் ( பார் அதி ) பாரதியை, பாரதத்தின் ‘பா’ ரதத்தை ஓட்டிச் சென்ற வழிகாட்டியை ( ‘பா’ ரதியை ) அவனின் தாசன் புகழ்கின்றான். தாசனுக்குள் இனிமைச் சரிவுகளாய்ப் புரண்ட தலைவனின் நினைவுகள் பிரவாகமாய் வருகின்றன.

அவன் தன் தலைவனைப்

“பைந்தமிழ்த் தேர்ப்பாகன் : அவன்
செந்தமிழ்த் தேனி : சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிக்குயில் : நாட்டினைப்
பகைக்கும் பகையைக் கவிழ்க்கும் பகைமுரசு :
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு மணக்கும் கற்பூரச் சொற்கோ “ எனப் புகழ்கின்றான்.

புதன், 28 நவம்பர், 2018

பத்மாவதி விவேகானந்தன் உரை :-


பத்மாவதி விவேகானந்தன் :-

கவிதைப் பட்டறையின் ( 2011 ) பத்மாவதி விவேகானந்தனின் பேச்சைக் குறிப்பெடுத்து இருந்தேன். அதைத் தொகுத்திருக்கிறேன். குறிப்பும் சரியாக இணைக்க வரவில்லை. வழக்கம்போல் புரிந்தவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். :) 

பெண்கள் எவ்வாறு கவிதை எழுதுகிறார்கள் ?.

கனிமொழி, சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, அரங்க மல்லிகா, தமிழச்சி, அம்பை, உமா மகேஸ்வரி, ஈழத்து அவ்வை, பூமணி ஆகியோரின் கவிதைகள் சிறப்பானவை.

பெண் மைய கவிதைகளை முறையாக எழுதியவர் கனிமொழி.

“ தாலியற்றவருக்கெல்லாம் இட்லிக்கடை வைப்பதுதானே தாசில்தார் உத்யோகம் “ என்று பிற்போக்கான வசனங்கள் நிறைந்திருந்தது ஒரு காலம்.

பெண் படைப்புகளில் முலைகள் என்ற குட்டி ரேவதியின் கவிதைத் தொகுப்பு விற்றுத் தீர்ந்தது.

ஔவையாரை – கிரேக்கக் கவிஞர் சாப்போவோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.

விவசாயக்கூட்டமைப்பு சபையின் அவசியமும் வாசகசாலையின் அத்யாவசியமும்.

1961. விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா. தென்னை வாழை இதுக்கெல்லாம் இன்சூரன்ஸ் எடுக்கலாம், எடுத்திருந்தா ஒரு பங்குப் பணமாவது திரும்பக் கிடைக்கும் என்பது தோப்பு உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்குமா. விவசாயிகள் நிலை கவலைக்குரியது. இவை நிலைபெற மூன்று நான்கு ஆண்டுகள் ஆகலாமாம். அதுவரை எதைப் பற்றிக்கொண்டு இவர்கள் வாழ்வார்கள். மத்திய அரசும் மாநில அரசும் களப்பணியை முடுக்கிவிட்டு நிவாரணம் மேற்கொள்ளவேண்டும். தகுந்த உதவித் தொகையும் சில ஆண்டுகள் வழங்க வேண்டும்.

#எல்லா விவசாய கிராமங்களிலும் விவசாய கூட்டமைப்பு சபை வேண்டும். அது பயிர்பாதுகாப்பு, விதை நேர்த்தி, உரம், பூச்சிமருந்து விழிப்புணர்வு, நீர் உபயோகம், இன்சூரன்ஸ் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் அமைய வேண்டும். மேலும் அரசே இவர்களின் நிலங்களின் அளவு பொறுத்தும் பயிரிடும் பயிர்கள்/செடிகள்/மரங்கள் பொறுத்தும் மிகக்குறைந்த அளவு இன்சூரன்ஸ் தொகை பிடித்து அதை அவர்கள் நஷ்டப்படும்போதும் ( MASSACRE ) இயற்கைப் பேரிடர் நேரும்போதும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். 

#இது எனது கோரிக்கை. 

1962. வண்ணமயமான மதியப்பொழுது
என்னை நிறைத்திருந்தது.
சூரியக் கலவையில்
இறகுகள் ஒளிர்ந்திருந்தன.
பூமியின் பசுங்குளிர்
நாசியெங்கும் நிறைய
பறக்கத்தொடங்கி இருந்தேன்.
தேன்நிறைந்த பூவில்
செம்மாந்து ஓய்வெடுத்தேன்.
திப்பியாய் ஒட்டிக்கொண்டன கால்கள்.
பறக்கத்துடிக்கும் மனதை
பசையாய்ப் பிடித்திருக்கின்றன இதழ்கள்.
சூரியன் கவிழும் நேரத்துக்காய்க்
காத்திருக்கிறேன்
குவியும் இதழ்களுக்குள்
உயிர் உணவாய்ச் சிறைப்பட

1963. உள்ளன்போடு பழகுபவர்களை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். நம் உயிர்ப்பை நம்மைவிட நேசிப்பவர்கள், நம் இருப்பைக் கொண்டாடுபவர்கள் அவர்களே. !

திங்கள், 26 நவம்பர், 2018

இபுன் பதூதா மால். IBN BATTUTA MALL.

இபுன் பதூதா மால். IBN BATTUTA MALL.
மகன் போதித்த ஞானம்.தினமலர். சிறுவர்மலர் - 45.

மருதவாணன் கொடுத்த ஞானம்.


காவிரிப்பூம்பட்டிணத்தில் பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்பவர் தன் மனைவி ஞானகலையுடன் வசித்து வந்தார். திரை கடல் ஓடித் திரவியம் தேடிய வணிகக் குடும்பம். எனவே அவர்களுக்குக் கோடிக்கணக்கில் சொத்து இருந்தது. வீட்டின் வாயில் எல்லாம் வெள்ளிக் கதவுகள், வீட்டுக்குள்ளோ முழுவதும் ரத்தினக்கம்பளங்கள், பாத்திரங்கள் எல்லாம் தங்கம், வீட்டினுள் உள்ள செல்வச் செழிப்பில் பாலாறும் தேனாறும் ஓடியது. வைரமும் வைடூரியமும் இழைத்த நகைகளை அவர்களது ஒரே மகள் அணிந்திருப்பாள்.
இவ்வளவு இருந்தும் அவர்களுக்கு ஒரு ஆண்மகவு இல்லையே என்ற குறை இருந்தது. இறைவனை வேண்ட அந்தக் குறையும் போக்க திருவெண்காடன் என்றொரு மகன் தோன்றினார். அவருக்கும் அவரது சகோதரிக்கும் உரியபருவத்தில் திருமணம் நடைபெற்றது. திருவெண்காடரின் மனைவி பெயர் சிவகலை. திருவெண்காடருக்கும் பல்லாண்டுகளாக மக்கட் செல்வம் இல்லாதிருந்தது.
வீடு முழுக்கப் பொன்னும் வெள்ளியும் நவநிதியமும் குவிந்து கொண்டே இருந்தது. ஆனால் அதை ஆளப் பிள்ளையில்லை. தங்கத் தொட்டிலும், வெள்ளிப் பாலாடைச்சங்கும், நடைவண்டியும் ஆடுகுதிரையும் அந்த வீட்டுக்கு ஒரு பாலன் இன்றித் தவித்தன. திருவெண்காடரின் இல்லறம் நல்லறம்தான் ஆனால் பிள்ளைவரம் இல்லையே.

சனி, 24 நவம்பர், 2018

சாட்டர்டே போஸ்ட். திரு. வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன் கூறும் ஹ்யூமன் லைஃப் வால்யூ.

திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் பன்முகத் திறமை கொண்டவர். இன்வெஸ்ட்மெண்ட்ஸ், இன்சூரன்ஸ், சிறுதொழில் முனைவோருக்கான வழிகாட்டும் பணியைச் செய்து வருகிறார். அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரது கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

 காந்தி ஸ்டடி செண்டரில் நடந்த ஒரு புத்தக விமர்சனம் பற்றி  என் உறவினரும் புத்தகப் பிரியருமான சென்னை பங்குச்சந்தையின் இயக்குநர் திரு நாகப்பன் அழைப்பை குறுந்தகவலில் பகிர்ந்திருந்தார்கள்.  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் அதை ஆர்கனைஸ் செய்துவந்த குழுமத்தில் இடம்பெற்றிருந்த திரு ஸ்ரீனிவாசன் சாரைத் தொடர்பு கொண்டு சேவாலயா பற்றியும், இனி இது சேரி இல்லை என்ற நூல் பற்றியும் அறிந்து அவற்றை எழுதும் வாய்ப்புக் கிட்டியது.

வெள்ளி, 23 நவம்பர், 2018

வேற்றுப் பொருள் வைப்பணி :-


வேற்றுப் பொருள் வைப்பணி :-

அணிக்கு நூற்பா :-

”முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்கு
பின்னொரு பொருளை உலகறி பெற்றி
ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப் பொருளே “

அணி விளக்கம் :- ஒரு சிறப்புப் பொருளை வலியுறுத்தற் பொருட்டு ஒரு பொதுப்பொருளை ( உலகறிந்த பொருளை ) அதனோடு தொடர உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பணியாகும்.

வியாழன், 22 நவம்பர், 2018

அகத்திணை மரபுகள் :-


அகத்திணை மரபுகள் :-

1.அகத்திணைப் பாடல்களில் ஒருவரின் பெயர் சுட்டப் பெற்றிருக்காது.

“சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் “ என்பது அகத்திணைப் பாடல்களுக்குள்ள சிறப்பு மரபாகும்.

2.இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் மட்டுமே வாழும் தலைவன் தலைவியருக்கு அன்றி அனைத்துக் காலகட்டத்துக்கும், அனைத்துத் தலைவன் தலைவியருக்கும் அன்பு கொண்டோர் அனைவருக்கும் பொதுவானதாகும்.

3.ஆண்கள் மடலேறுவதாகக் குறிக்கப்படுமே தவிர பெண்மக்கள் மடலேறுவதாகக் குறிக்கப்படமாட்டாது. பெண்கள் மடலேறுவது முறையன்று.

20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இருவர் கவித்திறன். :-


20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இருவர் கவித்திறன். :-

20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் என்று கூறப் போந்தால் அதில் சிறப்பாகப் பலர் இருக்கின்றார்கள். குறிப்பாகக் கூறப் போந்தால் கண்ணதாசன் அவர்களையும் மு. மேத்தா அவர்களையும் குறிப்பிடலாம். இவர்கள் இருவரும் முன்பு இலக்கணப்படி கவிதைகள் ( மரபுக்கவிதைகள் ) எழுதி விட்டுப் பின்பு புதுக்கவிதையை எழுதியவர்கள்.

கவிஞர் கண்ணதாசன் :- ( முன்னாள் அரசவைக் கவிஞர் )

1.விரக்தி :-

“போனால் போகட்டும் போடா :- இந்த
பூமியில் நிலையாய் வாழ்பவர் யாரடா “

புதன், 21 நவம்பர், 2018

கவிதைப் பட்டறையில் மூவர் உரை .. சிறு குறிப்புகள்.


கவிதைப் பட்டறையில் மூவர் உரை .. சிறு குறிப்புகள்.

தமிழ்நாடு இயல் இசைச் சங்கத்தின் கவிதைப் பட்டறையில் ஒருநாள் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பேசப்பட்ட சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். ( கிட்டத்தட்ட 2011 இருக்குமென நினைக்கிறேன். குறிப்புகளைப் பார்த்தால் நான்தான் எழுதி இருக்கிறேன். ஆனால் பிராமியா, தெலுங்கா, மலையாளமா, கன்னடமா தெரியவில்லை. சிறு குறிப்பெல்லாம் குட்டிக் குறிப்பாக இருக்கிறது. புரிந்தவரை புரிந்து கொள்ளுங்கள். J

விக்கிரமாதித்தன் :- உரைநடையை மடக்கிய பாணி கவிதைகள் இப்போ அதிகம்.  

க நா சு, புதுமைப்பித்தன், குபரா, தேவதச்சன், சுகுமாரன், தேவதேவன் ஆகியோர் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.  உயிர்மை, உயிரெழுத்து, காலச்சுவடு ஆகியனவும்.

கர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.

சோதனைக்கு உள்ளாக்கிய ஜோதி.ந்த விஷயத்திலும் நானே பெரியவன் என்ற கர்வம் இருந்தால் அது அழிவுக்கே வழிவகுக்கும். அப்படி நானே பெரியவன் என்று மும்மூர்த்திகளில் இருவர் சண்டையிட்டால் என்ன ஆகும். ஈசன் அந்த கர்வத்தை எப்படிக் களைந்தார் என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.  
ரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற அகந்தை ஏற்பட்டது. முதன் முதலில் பொருட்களையும் மனிதர்களையும் படைப்பதால் தானே பெரியவன் என்றும் தன்னால் படைக்கப்பட்ட அந்தப் பொருட்களைக் காப்பவர்தான் விஷ்ணு என்றும் ஆகையால் தானே பெரியவன் என்று கூறினார் படைப்புக் கடவுள் பிரம்மா. பொருட்களைப் படைத்தல் பெரிதல்ல. படைக்கப்பட்ட பொருட்களையும் மனிதர்களையும் காத்து வருதலே அரும்பணி என்றும் அதனால் தானே பெரியவன் என்றும் விஷ்ணு கூறினார்.
இவ்வாறு இவர்கள் இருவரும் சண்டையிட்டபடி இருந்ததை ஈசன் பார்த்தார். இருவரிடமும்  ஒன்றும் சொல்லாமல் சிவன் ஜோதி ரூபமாக விண்ணையும் பாதாளத்தையும் தொட்டபடி நின்றார். ”என் அடிமுடியை அறிந்து சொல்பவரே பெரியவர்” என்று ஜோதியில் இருந்து சக்தி வாய்ந்த அசரீரி புறப்பட்டது.

திங்கள், 19 நவம்பர், 2018

ஷெங்க் னுவும் ஷெங்க்னானும்.


ஷெங்க் னுவும் ஷெங்க்னானும். .


இருமணம் இணையும் திருமணங்களில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சீனாவும் எதிர்கொள்கிறது. சீனாவிலும் தாமதத் திருமணங்கள் நிகழ்கின்றன. ஷாங்காயிலும் பெய்ஜிங்கிலும் ஐந்து லட்சம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து ( விடப்பட்டு )  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு 20 வயதுக்கும் மேல் பலவருடங்கள் திருமணம் ஆகாமல் தனித்து வாழும் பெண்களை ”ஷெங்க் னு”  என்று அழைக்கிறார்கள். சிறு கிராமங்களில் அதிகம் சம்பாத்தியம்/வருமானம் இல்லாமல்  அதன் காரணமாகத்  திருமணமாகாமல் தனித்து வாழும் ஆண்களை ”ஷெங்க்னான்” என்று அழைக்கிறார்கள். இது ஒரு சமூகப் பிரச்சனை ஆகிவருகிறது.

இந்த தாமதத் திருமணங்களுக்கான காரணங்கள் சீனாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஏன் உலக அளவிலும் ஒன்றுதான். சீனாவிலும் மணமகன்கள்  மணப்பெண்களை விட வயதில் சிறிதாவது மூத்தவர்களாக, நல்ல உயரம், நிறம், பர்சனாலிட்டியுடன் உயர் கல்வித்தகுதியும் , கைநிறைந்த சம்பாத்தியமும் இருப்பவராக இருத்தல் இன்றியமையாத விஷயமாகும்.    

காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.


1121. காத்தியலுக்கு வடிக்கிறது -  கார்த்திகை மாதம் சோமவாரங்களில் குன்றக்குடியில் பாட சாலையிலும், வீடுகளில் மற்றும் பூசை வீடுகளில் முருகனுக்காகக் கார்த்திகைப் பூசை செய்து சோறு வடித்து பள்ளயம் போட்டு ஊரோடு அன்னதானம் செய்வது.  

1122. எக்கிப்புடும் - கூட்டம் எக்கிப்புடும் என்று சொல்வார்கள். அதிகக் கூட்டமாக இருப்பது. நெருக்கடி மிகுந்த இடம். விசேஷம், திருவிழா போன்றவற்றில் ஆள் பேர் அதிகம் சேர்வது. 

1123. கெந்துனாப்புல - காலில், பாதத்தில், பாதத்தின் அடிப்புறம் அடிபட்டிருந்தால் அல்லது முள் போன்றவை குத்தி இருந்தால் கெந்துனாற்போல் நடப்பது. காலை சரியாக ஊன்றாமல் நடப்பது. உடற்குறைபாடு உடையவர்கள் நடந்து வருவது. 

1124. கோவில் நாடி - கோவிலை நோக்கி. சாமி கும்பிடச் செல்வதைக் குறிப்பது. 

1125. கருதலையோ - ( தம்மை ) நினைக்கவில்லையோ. எண்ணவில்லையோ, ஒரு விஷயத்தைப் பொருட்டாகக் கருதவில்லையோ என்ற பொருளில் வருவது. 

1126. வாஞ்சால - பாசம், பரிவு, அன்பு, வாஞ்சாலை, அதீத பாசம். உடல், மனம் சம்பந்தப்பட்ட உறவில் வரும் பாசம் , உறவினர் மேல் கொள்ளும் அன்பு. 

1127. தெகட்டுதல் - திகட்டிப் போதல். ஒரு விஷயம் அதீதமாகக் கொடுக்கப்பட்டால் ஏற்படும் உணர்வு. அதீதம். இனிப்பு திகட்டும். அதேபோல் இனிமையான விஷயங்களும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் திகட்டும்.  

சனி, 17 நவம்பர், 2018

சிந்தையைப் புதுப்பிக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.

எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.  பேச்சைப்போல எழுத்துக்களும்  கம்பீரமாய் இருப்பது சுசீலாம்மாவிடம் மட்டுமே.

மனச்சோர்வு அடையும் போதெல்லாம் இக்கடிதங்களைப் படித்துப் புத்துணர்வு கொள்வேன்.

பாடங்களில் அக்கறை கொள்ளச் சொல்லும் அன்பான அறிவுரை. அதற்கு உதாரணமாய் வனவாசம் கொள்வதை எடுத்தாண்டிருக்கும் அழகு. முத்திரையைப் பதிக்க வைக்கும் உத்வேகமான பேச்சு.

அய்க்கண் சிறுகதைகளில் கையாளப்படும் உத்திகள் :-


அய்க்கண் சிறுகதைகளில் கையாளப்படும் உத்திகள் :-

முன்னுரை :- அய்க்கண் சிறுகதைகள் அனைத்தும் சிறப்பானவை. அவர் தான் வாழ்ந்து வந்த செட்டிநாட்டின் மணம் பலவற்றில் கமழுகின்றது. இவர் கதைகள் இவர் ஊர்ப்பற்றை விளக்குகின்றன. இவருடைய கதாபாத்திரங்கள் இலச்சியங்களைக் கொண்டவர்களாகவே அமைவார்கள். சிறுகதையில் ஒரே வகை உணர்ச்சி, ஒரு பாத்திரத்தின் உணர்ச்சி மிகுத்துக் கூறப்படும். அந்த உணர்ச்சியைப் பெற வைக்க அவர் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிக்க அழுத்தம் கொடுத்திருப்பார்.

இலட்சியவாத கதாநாயகர்கள், கதாநாயகிகள். :-

புதன், 14 நவம்பர், 2018

விஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும்.

1941. இங்கிட்டு எல்லோரும் நலம். அங்கிட்டு எல்லோரும் நலமா ;)

1942. அங்ஞாடே அங்ஞாடே என்ன அர்த்தம் . அங்க ஆடா. அங்கிட்டா .. அங்கிட்டு ஆடா ஹாஹா யார்பா எழுதினது இந்தப் பாட்டு.

1943. படிக்கும் ஒவ்வொரு நூலுக்கும் என்னை ஒப்புக் கொடுக்கிறேன். மிகச் சிறந்த தவமாய் அமைகிறது அது.

1944. 100 சிறந்த சிறுகதைகளில் நான் தேர்வு செய்த முதல் சிறப்பான கதை நீர்மை. திரு. நா. முத்துசாமி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி. 😔

1945. முத்த விதைகள்

முத்த விதைகள் விழுந்தவுடனேயே
பூக்கத்தொடங்குகிறது
தேகம்.

நண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் - 43.

நண்பனால் நலம்பெற்ற சுதாமா.
வந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்ணனும். அந்த குருகுலக் கல்வி முறையில் அரசனும் ஒண்ணுதான் ஆண்டியும் ஒண்ணுதான். அனைவரும் குருவின் கட்டளை ஏற்றி செயலாற்றி வரவேண்டும். அவர் அனைவருக்கும் சமமாகவே கற்பிப்பார். அனைவரையும் சமமாகவே நடத்துவார். அனைவருக்கும் சமமாகவே வேலைகள் கொடுப்பார்.
ருமுறை அவரது வயலில் மடையை அடைக்கும் பொறுப்பை கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார் குரு. ஆனால் கிருஷ்ணருக்கோ உடல் நலமில்லாமல் இருந்தது. அவருக்குப் பதிலாக சுதாமா தான் அந்த வேலையை நிறைவேற்றுவதாகக் கூறிக் காலையில் சென்றார். மதியம் ஆயிற்று, மாலை ஆயிற்று, இரவும் ஆயிற்று. காற்றும் குளிரும் மழையும் சுற்றி அடிக்க சுதாமாவைக்காணவில்லை. மறுநாள் அதிகாலை கிருஷ்ணர் குருவிடம் இது விபரம் தெரிவித்து வயலில் சென்று பார்த்தால், வெள்ளமாய்ப் பொங்கி வரும் மடையை அடைக்க இயலாமல் அந்த மடை வரப்பில் தன் உடலை வைத்து அடைத்துப் படுத்துக் கிடந்தார் சுதாமா. மடையை அடைக்கா விட்டால் பயிர்கள் அழிந்து மூழ்கிவிடுமே.
இதைப்பார்த்ததும் கிருஷ்ணரின் கண்களில் நீர் துளிர் விட்டது. எப்பேர்ப்பட்ட தியாகம். தனக்காக தன் உடலையே வைத்து அடைத்த அந்த நண்பன் சுதாமா கிருஷ்ணரின் அத்யந்த நண்பனாக ஆகிப்போனான்.

திங்கள், 5 நவம்பர், 2018

குணம் அழகு தரும். தினமலர். சிறுவர்மலர் - 42.


குணம் அழகு தரும்


மிக அழகாக இருக்கிறோம் என்ற கர்வத்தால் மற்றவரை மதியாமல் நடந்தாள் ஒரு பெண். அதனால் அந்த அழகி அரக்கியாக மாறும்படி சாபம் கிடைத்தது. அரக்கியாக இருந்தாலும் அறத்தைப் பின்பற்றி வாழ்ந்ததாலும் நல்குணத்தைப் பேணியதாலும் திரும்ப அவள் சாப விமோசனம் பெற்று அழகானாள். அது எப்படி என்று பார்ப்போம் குழந்தைகளே.

மகாபாரதத்தில் அரக்கு மாளிகை தீப்பற்றும்போது சுரங்க வழியாகத் தப்பிச் சென்றார்கள் அல்லவா பஞ்சபாண்டவர்கள் அவர்கள் கங்கையைக் கடந்து வந்து சேர்ந்த இடம் இடும்பவனம். அங்கே இடும்பன், இடும்பி என்ற அரக்கனும் அரக்கியும்  வசித்து வந்தார்கள். இருவரும் அண்ணன் தங்கை. அரக்கியாக இருந்தாலும் இடும்பி யாரையும் துன்புறுத்த மாட்டாள்.

ஆனால் அன்று காலை நேரம் வெகுகோபத்தோடு விழித்தான் இடும்பன். மனித நடமாட்டமும் வாசனையும் அடிக்கிறதே. “ அடி தங்காய். இடும்பி, பக்கத்தில் மனித வாசனை அடிக்கிறது. அது ஆபத்து. நம் இடத்தை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். ஆகையால் அவர்களைக் கொன்று விட்டு வா “ என்று கூறித் திரும்பிப் படுத்தான்.

சனி, 3 நவம்பர், 2018

ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் சிவப்புப் பட்டுக் கயிறு.

ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி அரங்கில் எங்கள் நூல்களுடன் தோழி நிம்மி சிவா :) 

நிம்மி சிவா & ராஜ் சிவா இருவருமே எழுத்தாளர்கள். இவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். ஷார்ஜாவில் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு எனது நூலையும் தனது கைகளில் ஏந்தி சிறப்பிடம் அளித்திருக்கிறார் தோழி நிம்மி சிவா. பெருமை மிகு இத்தம்பதிகள் ஜெர்மனியில் இருந்து ஷார்ஜாவுக்கு வந்து புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது ஆச்சர்யமும் மகிழ்வும் அளித்தது. மிக்க மகிழ்ச்சியும் அன்பும் நிம்மி.

வெள்ளி, 2 நவம்பர், 2018

மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப் பொருத்தம் பாருங்க.


மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப்பொருத்தம் பாருங்க.

”நிறுத்துங்க .. எல்லாத்தையும் நிறுத்துங்க. “ ஒரு திருமணக்கூடத்தில் ஒலித்த குரல் இது. சினிமாவில் வர்ற மாதிரி வில்லன்கள் யாரும் வந்து அந்தத் திருமணத்தை நிறுத்தவில்லை. கரெக்டா தாலி கட்டும் சமயம் மணமேடையில் மணமகன் முன் சர்வாலங்கார பூஷிதையாக நின்றுகொண்டு இருந்த கல்யாணப் பெண்ணின் குரல்தான் அது.
அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார்கள் கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினர்கள். ”பையனைப் பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்லி நிறுத்தி இருக்கலாமே. மணவறைக்கு வந்துட்டு இதென்ன அக்கிரமம் ?” என்று கொந்தளித்தார்கள் மாப்பிள்ளை வீட்டார்.  
அந்தப் பெண் மணமேடையை விட்டு இறங்கி வந்து “ எங்க அப்பா அம்மா கிட்ட இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்பதை சொல்லிட்டேன். ஆனால் அவங்க கட்டாயப்படுத்தியதால் ஒன்றும் செய்ய முடியாமல் இங்கே வந்து சொல்ல வேண்டியதாப் போச்சு “ என்றார்.
இரண்டு மாதங்களாக மணமகன் மணமகள் இருவருமே போனில் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். அப்போதும் ஒருவருக்கொருவர் பிடிக்குது பிடிக்கலைன்னு சொல்லிக்கொள்ளவில்லையா என்று கேட்டால் சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்கிறார் மணப்பெண்.
Related Posts Plugin for WordPress, Blogger...