பத்மாவதி விவேகானந்தன்
:-
கவிதைப் பட்டறையின் ( 2011 ) பத்மாவதி விவேகானந்தனின் பேச்சைக் குறிப்பெடுத்து இருந்தேன். அதைத் தொகுத்திருக்கிறேன். குறிப்பும் சரியாக இணைக்க வரவில்லை. வழக்கம்போல் புரிந்தவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். :)
கவிதைப் பட்டறையின் ( 2011 ) பத்மாவதி விவேகானந்தனின் பேச்சைக் குறிப்பெடுத்து இருந்தேன். அதைத் தொகுத்திருக்கிறேன். குறிப்பும் சரியாக இணைக்க வரவில்லை. வழக்கம்போல் புரிந்தவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். :)
பெண்கள் எவ்வாறு
கவிதை எழுதுகிறார்கள் ?.
கனிமொழி, சல்மா,
சுகிர்தராணி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, அரங்க மல்லிகா, தமிழச்சி, அம்பை, உமா மகேஸ்வரி,
ஈழத்து அவ்வை, பூமணி ஆகியோரின் கவிதைகள் சிறப்பானவை.
பெண் மைய கவிதைகளை
முறையாக எழுதியவர் கனிமொழி.
“ தாலியற்றவருக்கெல்லாம்
இட்லிக்கடை வைப்பதுதானே தாசில்தார் உத்யோகம் “ என்று பிற்போக்கான வசனங்கள் நிறைந்திருந்தது ஒரு காலம்.
பெண் படைப்புகளில் முலைகள் என்ற
குட்டி ரேவதியின் கவிதைத் தொகுப்பு விற்றுத் தீர்ந்தது.
ஔவையாரை – கிரேக்கக்
கவிஞர் சாப்போவோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.