எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 ஜூலை, 2013

தடாகத்தில் பூத்த தாமரை - 10

தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பாக திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி சகோதரி என்னிடம் எடுத்த பேட்டியை   முகநூலில் பகிர்ந்திருந்தார்.

அதை நான் இங்கு அப்படியே பகிர்ந்துள்ளேன். எம்மை ஊக்குவிக்கும் கலைமகள் சகோதரிக்கும் , தடாகம் இலக்கிய வட்டத்துக்கும் அதன் செயலாளர் சகோதரர் ரமலான் தீனுக்கும் நன்றி.

///தாமரை-10

நான் தேடிப் பெற்ற புதையல் - தேனம்மைலெக்ஷ்மணன்

இவர் , படித்தது இளங்கலை வேதியல் ( பாத்திமா கல்லூரி, மதுரை) , ( முதுநிலை அரசியல் அறிவியல்)


தற்போது புத்தக ஆசிரியர், சுதந்திர எழுத்தாளர், பத்ரிக்கையாளர்,( ஜர்னலிஸ்ட்), , கவிஞர், வலைப்பதிவர், சிறப்புப் பேச்சாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். இப்படி இவர் திறமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம் 

சனி, 27 ஜூலை, 2013

துபாய் ஹைக்கூ சிறப்பிதழ். தமிழ்த் தேர்.

எனது நண்பர் காவிரி மைந்தனிடம் இருந்து வந்த ஜி மெயில் இது.இதில் என் அன்பு சகோதரர் கவிமதி துபாய் சிறப்பிதழில் கவிஞர்கள் அனைவரது ஹைக்கூக்களும் இடம் பெற வேண்டும் என்று விழைகிறார். எனவே இதைப் படித்துவிட்டு  இதன் படி அனுப்புங்கள்.  
/////இச்சிறப்பிதழில் "தமிழ்த் தேர்"  கவிஞர் பெருமக்கள் அனைவரது ஹைக்கூ கவிதைகளும் வரவேண்டும் எனவே இச்செய்தியினை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

எனக்கு அனைவரது மின்னஞ்சல் முகவரியையும் அனுப்புக நான் தனித்தனியாக அனைவருக்கும் மடலிடுகிறேன்.

வியாழன், 25 ஜூலை, 2013

குற்றமும் தண்டனையும் (CRIME AND PUNISHMENT) எனது பார்வையில்.

தேனம்மை,மதுரை.

சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப்பின்
பு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது.

புதன், 24 ஜூலை, 2013

சவேராவில் ஒரு விழா.( பவர் ஆஃப் ப்ரஸ்.)

நியூயார்க்கிலிருந்து ப்ரகாஷ் எம் ஸ்வாமி என்ற பேர் தாங்கியபடி ஜூனியர் விகடனில் பல கட்டுரைகள் படித்திருக்கிறேன். நிருபராய் இருப்பதே சக்தி வாய்ந்த பதவிதான். அதிலும் உலகத் தலைவர்களைப் பேட்டி கண்டு எழுதுவது என்பது மிகப் பெரும் ஆற்றல்தான்.

செவ்வாய், 23 ஜூலை, 2013

யாரோ இருவருக்குள்..

யாரோ இருவருக்குள்
நிகழ்ந்தபடி இருக்கிறது சண்டை.
வேடிக்கை பார்த்தபடி
நகர்கிறார்கள் அனைவரும்.
சிலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
சிலர் தலை துண்டிக்கப்படுகிறது.
சிலர் வெடிவைத்துத் தகர்க்கப்படுகிறார்கள்.
சிலர் ராஜ்யக் கைதிகளாய்
சிலர் பிணைக் கைதிகளாய்

வெள்ளி, 19 ஜூலை, 2013

மனசு குறும்படம் எனது பார்வையில்

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=EfxE7-YKez4

 உணவு தானம் வழங்கும் அனைவரும் தாம்  தேவையானவருக்கு வழங்குகிறோமா இல்லையா என சிந்திப்பதில்லை என நச் சென்று சொல்லி இருக்கும் குறும்படம் இது.

பசிக்காக பிரியாணி வாங்கி சாப்பிடும் ரவிக்குமார் அதைப் பசியோடு இருக்கும் இன்னொருவருக்குத் தர விரும்புகிறார்.தன் நண்பனோடு பைக்கில் பயணித்து ஒவ்வொருவராகக் கேட்க அவர்கள் கூறும் பதில்கள் வித்யாசம். ஒருவர் பணம் கேட்கிறார். ஒருவர் இவர்களையே உண்ண அழைக்கிறார். ஒரு பிச்சைக்காரர் உனக்கு வேணுமா பிரியாணி இதோ எடுத்துக்கோ என்கிறார். ஒரு கட்டிடத் தொழிலாளி நான் என்ன பிச்சைக்காரனா என்கிறார்.

அ.இலட்சுமணசாமி முதலியார் கவிதைப் போட்டி.

முகநூலில் மோகனாம்மா இந்தப் போட்டி பற்றிப் பகிர்ந்திருந்தார்கள்.

31. 7. 2013 கடைசித் தேதி.

பரிசுத் தொகை மொத்தம் ரூ . 25,000,

முதல் பரிசு - 12,000

இரண்டாம் பரிசு - 8, 000

மூன்றாம் பரிசு - 5,000.

தலைப்பு “ சுற்றுச்சூழல் சீர்கேடும் தீர்வுகளும். ”

வியாழன், 18 ஜூலை, 2013

தாய்மொழிப் பயன்பாடு பற்றி தினகரன் வசந்தத்தில் கருத்து..

தாய்மொழிப் பயன்பாடு என்று வரும்போது முதலில் கவனம் கொள்ளவேண்டியது எழுத்துப் பிழை.  இப்போது எழுத்துப் பிழைகள் மலிந்து வருகின்றன.

 விளம்பரங்களில் எழுத்துப் பிழை அதிகம். ”சீமாட்டி, புதிய பொழிவுடன் ”
என்று எழுதுகிறார்கள். விளம்பரப்பலகைகளைப் பார்த்தாலே ஆத்திரம்
ஏற்படுகிறது. 80 சதவிகிதம் எழுத்துப் பிழைகளோடு இருக்கின்றன.

புதன், 17 ஜூலை, 2013

நன்றி ஊடகம்.

தேனம்மை  லக்ஷ்மணன், தமிழ் இணைய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது படைப்புகள் பல்வேறு இணையதள பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சமூக சிந்தினைக் கொண்ட இவரது எழுத்துக்கள் வாசிப்பவரை தன்  வசமாக்கும். இவர் சும்மா என்கிற வலைப்பூவும, சமையல் கலைக்கு ஒன்று என இரு வலைப்பூ நடத்தி வருகிறார்.


ஊடகம்: நீங்கள் எழுத்து துறைக்குள் நுழைந்தது தற்செயலாகவா ? இல்லை  எழுத்து மீது உங்கள் ஆர்வம் காரணமாகவா ?

தேனம்மை லக்ஷ்மணன்: எழுத்து என்பது கல்லூரிப் பருவத்திலேயே இருந்தது.  2008 அக்டோபர் மாதம்., பாரதி பதிப்பகத்தின் குற்றமும் தண்டனையும் என்ற மொழிபெயர்ப்பு புத்தகம் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக குமுதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.. அதை எழுதியவர் என்னுடைய கல்லூரிப் பேராசிரியை திருமதி எம் ஏ சுசீலாம்மா அவர்கள்.. புது தில்லியில் இருக்கும் அவர்களை தொலைபேசியில் வாழ்த்தியபோது வலைத்தளத்தில் எழுதி வருவதைக் குறிப்பிட்டார்கள்..பின்னர் நானும் அவர்கள் உதவியால்  வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகிறேன்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.

தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 24, ஃபிப் , 2013 திண்ணையில் வெளிவந்தது.


திங்கள், 15 ஜூலை, 2013

கல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற கவிதை.. புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா.

புஜ்ஜுவின் அம்மா
புஜ்ஜுவின் அப்பா
என்றே அழைக்கப்படுகிறோம்
அக்கம் பக்கத்தவர்களால்
அவரவர்க்கெனப் பெயரிருந்தும்

புஜ்ஜுவின் தோழி
புஜ்ஜுவின் பூனை
எல்லாம் அவள் சார்ந்தே
குறிப்பிடுகிறோம்
நாமும் பெயரற்று..

புதன், 10 ஜூலை, 2013

நன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.

மேலே நீங்கள் பார்க்கும் போட்டோவில் இருப்பவர்கள் தோழி தேனம்மையும், கயல்விழியும்.
 ஒரு இரண்டு மூன்று மாதம் முன்பு எதேச்சையாக இந்த போட்டோவை பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் ஒரு ஈர்ப்பு இதில் ஏதோ ஒன்று இருப்பதை போல தோன்றியது. உடனே இந்த போட்டோவை பேஸ்புக்'கில் "நட்பு"  என்று மட்டும் எழுதி வெளியிட்டேன். அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

ஃபேஸ்புக் பரணிலும் குங்குமத்திலும் கவிதை.


முகநூலில் ஸ்டேடசாக போட்ட கவிதை ஒன்றை ஃபேஸ்புக் பரணில் பகிர்ந்திருக்கிறார்கள். அது குங்குமத்திலும் வெளியாகி உள்ளது.

அந்தக் கவிதை.

கிறுக்கல்கள் என்கிறார்கள்
ஒற்றை வார்த்தையால்
எல்லாம் சிதைக்கும் மனிதர்கள்..

திங்கள், 8 ஜூலை, 2013

பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..

பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்.:-

பதினைந்து வருடங்களுக்கு முன்பு மும்பைப் புறநகர்ப் பகுதிகளில் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மீது அமிலம் வீசப்பட்ட செய்தி படித்து அதிர்ச்சியாய் இருந்தது. வேலைக்குச் சென்று உழைத்துக் களைத்து வரும் மகளிர் மீது கடும் வெறுப்புக் கொண்ட சிலர் செய்த அக்கிரமச் செயல் அது.

வியாழன், 4 ஜூலை, 2013

பணம் செய்ய விரும்பு...


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


புதன், 3 ஜூலை, 2013

சாலைகளைப் பின்தொடராதீர்கள்...

வாயில்படியில் கால்வைத்ததும்
சாலைகளைத் துரத்தத் துவங்குகிறீர்கள்
உங்கள் அந்தரங்கத்தை மறைக்கும்
லங்கோடு போல அது நீண்டு கிடக்கிறது.
அதே பாதையில் சென்று சுற்றிச் சுற்றி
உங்களை முடிந்துகொள்கிறீர்கள்.
இரத்தினக் கம்பளங்களில்., சிவப்பு விரிப்புகளில்
மையல் கொள்கிறீர்கள்.
பூக்களும் முட்களும் புற்களும் கொண்ட
பாதையைத் தவிர்க்கிறீர்கள்.

செவ்வாய், 2 ஜூலை, 2013

நன்றி வீடு திரும்பல் மோகன்குமார்.


கேள்வி:தொடர்ந்து கவிதை எழுதுவது எப்படி சாத்தியமாகிறது? அத்தகைய மனதை தொடர்ந்து தக்க வைப்பது கடினமாயிற்றே?

பதிவர் தேனம்மை லட்சுமணன்

கவிதை என்பது ஒரு சம்பவம் போல என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சி., துக்கம்., சோகம்., விரக்தி, வெறுப்பு., அசூயை., கோபம்., வீரம்., தன்னம்பிக்கை ., என எல்லா நிலைகளிலும் சில உணர்வுகள் கவிதைவரிகளாய்ப் பிரசவிக்கின்றன.

திங்கள், 1 ஜூலை, 2013

தினமலரில் சிறுகதை. ஹலோ சரண்யா. ( கத்திக் கப்பல்/ எப்ப வருவ..?)

ப்ப வருவ எப்ப வருவ..
கர்ப்பம்தான் பத்து மாசம் ..
உன்னைக் காணவுமே பத்து மாசம் ..
வருடத்தில் இரண்டு மாதம் 
வந்துசெல்லும் என் வசந்தம்..
நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...
Related Posts Plugin for WordPress, Blogger...