புதன், 24 ஜூலை, 2013

சவேராவில் ஒரு விழா.( பவர் ஆஃப் ப்ரஸ்.)

நியூயார்க்கிலிருந்து ப்ரகாஷ் எம் ஸ்வாமி என்ற பேர் தாங்கியபடி ஜூனியர் விகடனில் பல கட்டுரைகள் படித்திருக்கிறேன். நிருபராய் இருப்பதே சக்தி வாய்ந்த பதவிதான். அதிலும் உலகத் தலைவர்களைப் பேட்டி கண்டு எழுதுவது என்பது மிகப் பெரும் ஆற்றல்தான்.
முதலில் மொழியறிவு, பின் அதை சுவாரசியமாகவும் உண்மையாகவும் பகிர்தல். இந்த இரு கோணங்களிலும் நான் அவரது கட்டுரைகளை விரும்பிப் படித்திருக்கிறேன்.  இவர் முகநூலில் நண்பரானவுடன் தன் தாய் தந்தையின் பிறந்தநாளைப் பற்றி எழுதி இருந்தார். தற்போது இருப்பவர்களிடம் ஆசி கேட்பது போலவே அமைந்திருந்தது இவரது எழுத்து.


சென்னை வடக்கு ரோட்டரி சங்கம்  இவருக்குப் பாராட்டுவிழா  ஒன்றை நிகழ்த்தி விருது வழங்கப் போவதாகவும்  அதற்கு வருமாறும் முகநூல் நண்பர் , இந்த க்ளப்பின்  ப்ரசிடெண்ட்  முரளி   க்ளப்பின் சார்பாக அழைப்பு விடுத்திருந்தார்.  தங்கை கயலுக்கும் முரளியும், ப்ரகாஷ் எம் ஸ்வாமியும் நல்ல நண்பர்கள் என்பதால் அவருக்கும் அழைப்பு வந்திருந்ததால் இருவரும் சேர்ந்து  சவேரா ஓட்டலில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டோம். சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினோம்.


22.2. 2012 அன்று நிகழ்ந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ( முகநூல் நண்பரும் கூட )   சென்னை மேயர் திரு. சைதை துரைசாமி  கலந்து கொண்டு ப்ரகாஷ் எம் ஸ்வாமிக்கு ( FOR THE SAKE OF HONOUR AWARD )  ஐ அளித்தார். இதில் இன்னும் பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். குமரி அனந்தன் திடீரென்று விசிட் செய்து ப்ரகாஷ் எம் ஸ்வாமியின் பத்ரிக்கைத் துறை சேவையைப் பாராட்டியதோடு அவர் அனுப்பிய ஒரு செய்தியால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டது. அதனால் குமரி அனந்தன் எப்படி பாதிக்கப்பட்டார் என நகைச்சுவையாக விவரித்தார்.


நான் கல்லூரிக் காலங்களில் படித்து மகிழ்ந்த சிவசங்கரி மேடம், எக்ஸ்னோரா தலைவர் பி.நிர்மல், நகைச்சுவை நடிகர் சார்லி, இசையமைப்பாளர் பரத்வாஜ், முகநூல் நண்பர் கிருஷ்ணமூர்த்தி,  கண்ணன் சாம்பசிவம், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜா மேடம் ஆகிய அனைவரையும் ஒருங்கே காண முடிந்தது.


பவர் ஆஃப் ப்ரஸ் ப்ரகாஷ் எம் ஸ்வாமி என்ற தலைப்பில் முகநூலில் நிறைய புகைப்படங்கள் போட்டிருக்கிறேன். இப்போதுதான் நேரம் கிடைத்தது வலைத்தளத்தில் பகிர. எப்போது பகிர்ந்தாலென்ன பவர் ஆஃப் ப்ரஸ் இப்போது மட்டுமல்ல எப்போதுமே  ப்ரஸ் என்பது பவர்ஃபுல்தான். !7 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி...

Balasubramanian Munisamy சொன்னது…

அருமை தேனம்மை.வானொலி கேட்டவர்கள் பிரகாசு.எம் சுவாமியை மறந்திருக்க முடியாது.நானும் கடந்த செப்டம்பர் மாதம் தினமணியும் தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய அணைத்து தமிழ் அமைப்புகள் மாநாட்டில் சந்தித்தேன் .நல்ல மனிதர் வாழ்த்துகள்

சே. குமார் சொன்னது…

நல்ல பகிர்வு... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

தங்கம் பழனி சொன்னது…

பகிர்ந்த விதம் அருமை..!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி பாலா

நன்றி குமார்.

நன்றி தங்கம் பழனி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

kayal சொன்னது…

Super akka :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...