வியாழன், 18 மார்ச், 2010

ஐந்தொகை ..2

எல்லாவற்றிலும் வெல்பவன்
எல்லாவற்றையும் வெல்வதில்லை...

அழகான பெண்ணை., பொறாமைக் கண்கள்
எள்ளல் பார்வையில் அலங்கோலமாக்கி..

எல்லோரிடமும் இருக்கிறது ஏதோ ஒரு உறவின்
இருப்பதான இல்லாததான தழும்பு...


மரிக்க நினைத்த முருங்கையில்
நீள் கண்ணீராய்ப் பிஞ்சுகள்...

வெய்யிலிலும் மழையிலும் காத்து குலசாமி
வருடம் ஒருமுறையாவது பார்க்க வருவேனென்று..

51 கருத்துகள் :

Chitra சொன்னது…

அருமை.

சே.குமார் சொன்னது…

ainthogaiyil ainthum arumai thenammai.

vaazhththukkal.

வானம்பாடிகள் சொன்னது…

/எல்லோரிடமும் இருக்கிறது ஏதோ ஒரு உறவின்
இருப்பதான இல்லாததான தழும்பு...

மரிக்க நினைத்த முருங்கையில்
நீள் கண்ணீராய்ப் பிஞ்சுகள்...

வெய்யிலிலும் மழையிலும் காத்து குலசாமி
வருடம் ஒருமுறையாவது பார்க்க வருவேனென்று./

நல்லா இருக்கு. முக்கியமா இந்த வரிகள்:)

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

ஐந்தொகை அருமையிலும் அருமை தேனக்கா..

ராமலக்ஷ்மி சொன்னது…

//எல்லோரிடமும் இருக்கிறது ஏதோ ஒரு உறவின்
இருப்பதான இல்லாததான தழும்பு...

மரிக்க நினைத்த முருங்கையில்
நீள் கண்ணீராய்ப் பிஞ்சுகள்...

வெய்யிலிலும் மழையிலும் காத்து குலசாமி
வருடம் ஒருமுறையாவது பார்க்க வருவேனென்று..//

ஆமாங்க குறிப்பா இவை மூன்றும் வெகு அருமை.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ஹி......ஹி.....(எனக்கு) புரிந்து கொள்ள சற்று சிரமமாய் இருக்கிறது.

ஈரோடு கதிர் சொன்னது…

அருமை

தமிழ் உதயம் சொன்னது…

வெய்யிலிலும் மழையிலும் காத்து குலசாமி
வருடம் ஒருமுறையாவது பார்க்க வருவேனென்று..உண்மை... உண்மை... சில நேரம் கடவுள்களும் பரிதாபமாய் காட்சி தருகிறார்கள்

Dr.Rudhran சொன்னது…

எல்லாவற்றிலும் வெல்பவன்
எல்லாவற்றையும் வெல்வதில்லை...

let there be some beginning.

Muniappan Pakkangal சொன்னது…

In a kutty kavithai you ' ve touched so many things nicely Thenammai.

Vidhoosh சொன்னது…

அசைத்துப் போடுகிறது முருங்கைப் பிஞ்சுகள்... அருமையான வரிகள்.

கண்மணி/kanmani சொன்னது…

வெய்யிலிலும் மழையிலும் காத்து குலசாமி
வருடம் ஒருமுறையாவது பார்க்க வருவேனென்று..//
புரிஞ்சது போல இருக்கு.என் புரிதல் சரியான்னு தெரியலை...
எதுனாலும் ஏத்துக்கற மனம் வேணும் தேனு

விஜய் சொன்னது…

ஐந்தொகைக்கு பெருந்தொகையே பரிசாக தரலாம்

யதார்த்தம்

வாழ்த்துக்கள்

விஜய்

நேசமித்ரன் சொன்னது…

நட்சத்திரம் கொறித்து முத்தத்தால் வாய் துடைக்கும் வாழ்வு முருங்கைப்பிஞ்சுகள் தள்ளலாம் .

குலசாமிக்கு படைக்க நேர்சை நெஞ்சில் இருந்தாலும் ஆடு வாங்க இல்லாவிடில் வழிச்செலவுக்கேனும் காசு வேணும் போல ஐந்தொகை உலவும் மாந்தர்க்கு

கவிதை சுமார் ரகம் :)

நேசமித்ரன் சொன்னது…

நட்சத்திரம் கொறித்து முத்தத்தால் வாய் துடைக்கும் வாழ்வு முருங்கைப்பிஞ்சுகள் தள்ளலாம் .

குலசாமிக்கு படைக்க நேர்சை நெஞ்சில் இருந்தாலும் ஆடு வாங்க இல்லாவிடில் வழிச்செலவுக்கேனும் காசு வேணும் போல ஐந்தொகை உலவும் மாந்தர்க்கு

கவிதை சுமார் ரகம் :)

நேசமித்ரன் சொன்னது…

நட்சத்திரம் கொறித்து முத்தத்தால் வாய் துடைக்கும் வாழ்வு முருங்கைப்பிஞ்சுகள் தள்ளலாம் .

குலசாமிக்கு படைக்க நேர்சை நெஞ்சில் இருந்தாலும் ஆடு வாங்க இல்லாவிடில் வழிச்செலவுக்கேனும் காசு வேணும் போல ஐந்தொகை உலவும் மாந்தர்க்கு

கவிதை சுமார் ரகம் :)

நேசமித்ரன் சொன்னது…

நட்சத்திரம் கொறித்து முத்தத்தால் வாய் துடைக்கும் வாழ்வு முருங்கைப்பிஞ்சுகள் தள்ளலாம் .

குலசாமிக்கு படைக்க நேர்சை நெஞ்சில் இருந்தாலும் ஆடு வாங்க இல்லாவிடில் வழிச்செலவுக்கேனும் காசு வேணும் போல ஐந்தொகை உலவும் மாந்தர்க்கு

கவிதை சுமார் ரகம் :)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

கலக்கல் !

மீண்டும் வருவான் பனித்துளி !

ரிஷபன் சொன்னது…

மரிக்க நினைத்த முருங்கையில்
நீள் கண்ணீராய்ப் பிஞ்சுகள்...

மனதைத் தொட்ட வரி

D.R.Ashok சொன்னது…

அட அருமைங்க.. கவித.. :)

கோபிநாத் சொன்னது…

நல்ல கவிதை தேனம்மை. பார்மாலிட்டி பண்ணியாச்சு. நன்றி

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

யாரும் முறிக்க நினைக்கும் போதும் துளிர்த்துத் தொலைக்கிறது முருங்கை

ரோஸ்விக் சொன்னது…

யதார்த்தம்... :-)

padma சொன்னது…

ஐந்தும் அருமை அக்கா.எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு .

seemangani சொன்னது…

///எல்லாவற்றிலும் வெல்பவன்
எல்லாவற்றையும் வெல்வதில்லை...மரிக்க நினைத்த முருங்கையில்
நீள் கண்ணீராய்ப் பிஞ்சுகள்...

வெய்யிலிலும் மழையிலும் காத்து குலசாமி
வருடம் ஒருமுறையாவது பார்க்க வருவேனென்று..//

மிகவும் ரசித்தேன் அருமை...சகோ...

Mrs.Menagasathia சொன்னது…

கவிதையை ரொம்ப ரசித்தேன் அக்கா.

அக்பர் சொன்னது…

நல்லாயிருக்கு அக்கா.

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா

நன்றி குமார்

நன்றி பாலா சார்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி சை கொ ப

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஈரோடு கதிர் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

நன்றி ரமேஷ்

நன்றி ருத்ரன்...ரெண்டு வரியிலேயே இருக்கே எல்லாமும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி முனியப்பன் சார்

நன்றி வித்யா

நன்றி கண்மணி உங்க அன்பு வார்த்தைக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய்

நன்றி நேசன்

நன்றி பனித்துளி சங்கர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரிஷபன்

நன்றி அஷோக்

நன்றி கோபிநாத்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சாந்தி

நன்றி ரோஸ்விக்

நன்றி பத்மா

thenammailakshmanan சொன்னது…

நன்றி சீமாங்கனி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

நன்றி மேனகா

நன்றி அக்பர்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

மைதிலி கிருஷ்ணன் சொன்னது…

அக்கா கவிதை ரொம்ப நல்லா இருக்கு .. பத்து தடவை வாசித்தபிறகு தான் சரியா புரியுது. ஒரு சின்ன யோசனை.. உங்க கவிதைக்கு கீழே ஒரு சிறு குறிப்பு ஆங்கிலத்தில் அல்லது தமிழில் கொடுக்கலாமே .. பல தடவை வாசிப்பதை தவிர்க்க.

புலவன் புலிகேசி சொன்னது…

//எல்லாவற்றிலும் வெல்பவன்
எல்லாவற்றையும் வெல்வதில்லை...//

அனுபவித்த உண்மை...

செந்தில் நாதன் சொன்னது…

//எல்லாவற்றிலும் வெல்பவன்
எல்லாவற்றையும் வெல்வதில்லை...//

எவ்வளவு உண்மை!!

//மரிக்க நினைத்த முருங்கையில்
நீள் கண்ணீராய்ப் பிஞ்சுகள்...//

திரும்ப திரும்ப படிக்க வைத்த வரிகள்..

:)

சத்ரியன் சொன்னது…

//அழகான பெண்ணை., பொறாமைக் கண்கள் எள்ளல் பார்வையில் அலங்கோலமாக்கி..//

எதார்த்தம் + அப்பட்டமாய்...!

//மரிக்க நினைத்த முருங்கையில்
நீள் கண்ணீராய்ப் பிஞ்சுகள்...//

ஏன் அப்படி நினைச்சதோ...?
(ஒருவேளை வீட்டு தோட்டத்தில் நிகழ்ந்ததோ?)

//வெய்யிலிலும் மழையிலும் காத்து குலசாமி
வருடம் ஒருமுறையாவது பார்க்க வருவேனென்று..//

இது கொஞ்சம் ஓவரா இல்லியா?

கவிதையா பிடிச்சிருக்குங்க.

சசிகுமார் சொன்னது…

//மரிக்க நினைத்த முருங்கையில்
நீள் கண்ணீராய்ப் பிஞ்சுகள்...//

என்னை கவர்ந்த வரிகள் அக்கா, எப்படி உங்களால மட்டும் எப்புடி இதெல்லாம் அடி பின்றீங்க

senthilkumar சொன்னது…

எல்லோரிடமும் இருக்கிறது ஏதோ ஒரு உறவின்
இருப்பதான இல்லாததான தழும்பு...


இங்கே ஏதோ நெருடல் என் மனசுக்குள்
உங்களின் எழுத்துக்கலுக்கு
செந்தில்குமாரின் வணக்கங்கள்......

vidivelli சொன்னது…

ஐயையோ சத்தியமா எனக்குத்தெரியாதுங்க......
உப்பிடியே வந்தாப்போல நாய்க் குட்டியைக் கண்டதும் எட்டிப் பார்க்க தோன்றிச்சு....
நாய்க் குட்டி என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
உங்கட மனசும் நாய் போல வருமா....!!!!!!!!!!

உங்கட பதிவுகளும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க....

thenammailakshmanan சொன்னது…

நன்றி மைதிலி

நன்றி முருகவேல்

நன்றி செந்தில்நாதன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சத்ரியன்

நன்றி சசிகுமார்

thenammailakshmanan சொன்னது…

நன்றி செந்தில் குமார்

நன்றி விடிவெள்ளி

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

நட்புடன் ஜமால் சொன்னது…

இருப்பதான இல்லாததான தழும்பு...]]


அருமையான சொல்லாடல் ...

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜமால்

உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ஜி கௌதம் சொன்னது…

சும்மா வலைப்பூக்களை வட்டமடித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம் நின்று பாராட்ட வைக்கிறது உங்கள் படைப்பு.

First one is the Best one.
கடைசியும் என்னைக் கவர்ந்தது.

தொடர்ந்து எழுதுங்களேன்..

thenammailakshmanan சொன்னது…

நன்றி கௌதம் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...