எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 மார்ச், 2010

இனி இது சேரி இல்லை (A SLUM NO MORE)


இனி இது சேரி இல்லை (A SLUM NO MORE)

ஸ்லம் நோ மோர்...இனி இது சேரி இல்லை

உறவினர் ஒருவரிடம் இருந்து குறுந்தகவல் வந்தது..
வாராவாரம் காந்தி ஸ்டடி சென்டரில் (சென்னை) புத்தகவிமர்சனம் நடக்கிறது ..6 .45 லிருந்து 7 45 வரை....இந்தவாரம் " ஸ்லம் நோ மோர்" என்ற புத்தகம் பைரவனால்ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் சாருகேசியால்"இனி இது சேரி இல்லை " என்று தமிழில் மொழியாக்கம்செய்யப்பட்டது பற்றிய விமர்சனம்..



அது சேரியாய் இருந்த ஒரு இடத்தை சிறப்பாக மற்றியமைத்தது பற்றி பேசுகிறது .."முயற்சி திருவினை ஆக்கும்" என்பதற்கு ஒரு உதாரணம் அந்த இடம் ..!!!

மாங்கொல்லையில் குடிசை போட்டு இருந்த மக்கள் 1982 இல்சென்னை விரிவாக்கத்திட்டம் செய்யக்கருதி அஷோக் நகர்எல்லைக்குள் அன்னை சத்யா நகர் என்ற இடத்திற்குஇடப்பெயர்ச்சி செய்யப்படுகிறார்கள் .. அதற்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 12><20> ஸ்கொயர் ஃபீட் இடமும் தலைக்கு100 ரூபாயும் வழங்கியது அரசாங்கம்..

மக்கள்வாழ்க்கை மாறிவிடுகிறதா என்ன ..?

எங்கும் குடிசையும்.,குப்பையும் .,கூளமும் ...... சாக்கடை வசதியும்., தண்ணீரும்., மின்சாரமும் இல்லாமல் ....நினைக்கவே கடினமாய் இருக்கிறதுஅல்லவா...?

சென்னையில் வெலிங்டன் ஹாஸ்பிடல் என்ற ஒரு மருத்துவமனை இருந்தது ..அதை சென்னையின் பல பெரிய மனிதர்கள் சேர்ந்து நடத்தி வந்தார்கள்.. அதை நடத்த முடியாத போது அதன் சொத்து., இடம் மற்றும் கட்டடம் விற்கப்பட்டு (அங்கு சங்கரநேத்ராலயா உள்ளது இப்போது)

" சென்னை வெலிங்டன் கார்ப்பொரேட் ஃபவுண்டேஷன்" என்ற ட்ரஸ்ட்டாக உருப்பெற்றது.. அதில் இருந்து வருடா வருடம் வரும் ஒரு கோடி ரூபாயை பல நல்ல விஷயங்களுக்குபயன் படுத்தி வருகிறது அந்த ட்ரஸ்ட்...

அந்த ட்ரஸ்ட்டின் மிக முக்கிய அங்கத்தினரான பைரவன் அந்த ட்ரஸ்ட் சுமார் 2000 இல் அந்த அன்னை சத்யா நகரை தத்தெடுத்து இன்று சர்வ வசதிகளோடும் வாழும் சூழலில் மாற்றி அமைத்ததை புத்தகமாக எழுதி உள்ளார்...

அதுதான் ...A SLUM NO MORE ..அரிய முயற்சி கூட...

2000த்தில் அந்த இடத்தை செப்பனிட முயன்ற போது அரசாங்கத்துக்குவரி கட்டவில்லையாதலால் எந்த வசதியுமே செய்யப்படவில்லை...எனவே இந்த ட்ரஸ்ட் அரசிடம் பேசி 20 வருஷ டாக்ஸை 2 வருடமாககுறைத்தது... பாக்கியை மானியமாகத்தர அரசு ஒப்புக்கொண்டது...அடுத்து சென்னை வெலிங்டன் கார்ப்பொரேட் ஃபவுண்டேஷன் பெருமுயற்சியெடுத்து ஒவ்வொரு வீட்டையும் கட்டித்தந்தது.. கழிவறை .,குளியலறை.,தண்ணீர் வசதி., மின்சாரம் .,சாக்கடை வசதி எல்லாமே.!!!.

அத்துடன் முடிந்ததா ...? என்றால் இல்லை... ஆண்கள் மிதமிஞ்சி மதுவருந்தி மனைவிகளை துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள் ..

அதற்காக CWCF (CHENNAI WELLINGTON CORPORATE FOUNDATION )நிறைய ப்ரோக்ராம்களை நடத்தி CTK ஹாஸ்பிட்டலில் சேர்த்து குடிகாரர்களைத் திருத்தியது.. மேலும் மக்களுக்கு விழிப்புணர்ச்சிஏற்படுத்த ,"வில்லுப்பாட்டு ஆறுமுகம் " போன்ற கலைஞர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியது ..

மேலும் "பெண்கள் சுய உதவிக் குழுக்கள்" அமைத்து மற்றும்தொழில் தொடங்க கடனுதவி செய்து., சிறு சிறு தொழில்களில் ஈடுபடுத்தித் தங்களுக்குத் தாங்களே பொருட்களை விற்கவும்., வாங்கவும் .,வளப்படுத்திக் கொள்ளவும் உதவியது ..

இப்போது சிமெண்ட் தரை நடைபாதை...!!.

"குடி இருப்போர் நலச்சங்கம் " என ஜொலிக்கிறது சத்யா நகர்...!!!

ஆம்...!! எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!! என்று CWCF மக்களை சுயசார்புஉள்ளவர்களாக மாற்றி விட்டது...

சொல்வது கூட எளிதாகச் சொல்ல முடியவில்லை.. செய்த அவர்களுக்குஎவ்வளவு கடினமாக இருந்திருக்கும்....அந்த மக்களின் சார்பாக CWCF க்குஒரு வலைத்தளவாசியின் சல்யூட் இது.....!!!!

ஆம் இனி அது சேரி இல்லை...!!!


டிஸ்கி.:- வாராவாரம் நடக்கும் அந்த மீட்டிங்கில் புதுப் புத்தகங்கள்மட்டுமல்ல பழைய புத்தகங்களின் விமர்சனமும்நடை பெறுவதால் விரும்புவோர் கலந்து கொள்ளலாம் .....அனுமதி இலவசம்....
நன்றி:-எனக்கு மேலதிக விபரங்களைத்தந்துதவிய திரு .வெற்றி விடியல் ஸ்ரீநிவாசனுக்கும் திரு .சேவாலயா முரளிக்கும் நன்றி

வெளிவந்து இருக்கு ..

43 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. என் மனக்கனவுக்கு ஒருவர் உயிர் கொடுத்திருக்கிறார் என்பதை அறியும்போது சந்தோஷமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!!


    .......... true.
    akka, Congratulations!!! (youthful vikatan)

    பதிலளிநீக்கு
  4. பகிர்வு கடந்து ஒரு மெல்லிய மகிழ்வும் பரவசமும் மிளிர்கிறது வாக்கியங்களுக்கு இடையே...

    :)

    பதிலளிநீக்கு
  5. சேரியை செழுமையாக்கிய அவருக்கு என் சல்யூட்...நல்லத் தகவல்..

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு தேனம்மை. அவசியமான பதிவும் கூட.

    பதிலளிநீக்கு
  7. " A Slum nomore" - Title says it all akka... Excellent



    //எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!!//

    இலவசங்களை வாரி இரைத்து மக்களை ஈனமாய் வசப்படுத்தும் இன்றைய இலவச நாயகர்களின் காதுகளில் இந்த வாக்கியங்கள் இடியாய் முழங்கட்டும்...

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல் தேனக்கா..

    எ. க. ப. பெ.அழைப்பையேற்று போட்டேன் பதிவு வந்துபாருங்கள்..

    பதிலளிநீக்கு
  9. //CWCF மக்களை சுயசார்புஉள்ளவர்களாக மாற்றி விட்டது...//

    அவர்களுக்கும் பதிவிட்ட உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வுங்க. இப்படி நிறையபேர் முன்வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. விகடனுக்கு வாழ்த்துகள்.

    மீன் பிடிக்க கற்று கொடுப்பதே சிறந்தது

    அழகா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  12. சேரியை தத்தெடுத்து சீராக்கிய அந்த தொண்டு நிறுவனத்திருக்கு மிக்கநன்றி, இன்னும் பல கிராமங்கள் இந்த நிலையில் தான் உள்ளது. இது போல் ஒவ்வொரு தொண்டு நிறுவங்களும் செய்தால் நம் நாட்டில் குடிசைகளை ஒழிக்கலாம். இதை பதிவுலகுக்கு தெரிய படுத்திய உங்கள் பணி சிறந்தது. தொடரட்டும் உங்கள் சேவை பணி.

    பதிலளிநீக்கு
  13. அன்னை சத்யநகர் அருகிலிருந்தும் அது பற்றி தெரியா வரலற்றினை தெரிந்துக்கொண்டேன்.. நன்றிங்க தேனம்மை நல்லதோர் பகிர்வு... :)

    பதிலளிநீக்கு
  14. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
    .
     
     
    (Pls ignore if you get this mail already)

    பதிலளிநீக்கு
  15. நன்றி உங்கள் கட்டுரைக்கு

    பதிலளிநீக்கு
  16. {{{{{{{{{ Chitra கூறியது...
    எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!!

    .......... true.
    akka, Congratulations!!! (youthful vikatan) }}}}}}}}}}}}}}


    ஹா ஹா ஹா ஹா ஹா

    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  17. பகிர்வுக்கு நன்றி !

    இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று மாலை இட்டுவிடுகிறேன் .

    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  18. நாங்கெல்லாம் ராவான ரவுடிக .மலையையே உருட்டுவோம்ல !


    மீண்டும் வருவான் RDX ANNIYAN

    பதிலளிநீக்கு
  19. அருமை, சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  20. எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!!

    சரியாக சொன்னீங்க அக்கா.. சேரியை சரி செய்தவருக்கு என் சல்யூட்.. நல்ல பகிர்வு அக்கா..

    பதிலளிநீக்கு
  21. நல்லதொரு பகிர்வு!! விகடனில் வெளிவந்ததற்க்கு வாழ்த்துக்கள் தேனக்கா!!

    பதிலளிநீக்கு
  22. ஆக்கப்பூர்வமான தகவலைத்தந்து இருக்கின்றீர்கள் சகோதரி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. வானம்பாடிகளை வழிமொழிகிறேன்..

    பதிலளிநீக்கு
  24. நல்ல பகிர்வு...நிறையா புத்தகங்கள் பற்றி எழுதுங்க.........நன்றி

    பதிலளிநீக்கு
  25. நல்ல விழிப்புணர்வுடன் கூடிய பதிவு.

    பதிலளிநீக்கு
  26. பேசிக்கொண்டு இருப்பதை விட செய்து காட்டி இருக்கிறார் பைரவன்.

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  27. இந்த மாதிரி பாசிடிவ் பதிவுகள்தான் இப்போதைய தேவை..

    பதிலளிநீக்கு
  28. நன்றி ராமசாமி கண்ணன்

    நன்றி டாக்டர் ப. கந்தசாமி உங்க முதல் வருகைக்கு வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  29. நன்றி சித்ரா

    நன்றி நேசன்

    நன்றி புலிகேசி

    பதிலளிநீக்கு
  30. நன்றி சை கொ ப

    நன்றி சங்கவி

    நன்றி கோபிநாத்

    பதிலளிநீக்கு
  31. நன்றி சை கொ ப

    நன்றி சங்கவி

    நன்றி கோபிநாத்

    பதிலளிநீக்கு
  32. நன்றி பாலா சார்

    நன்றி நட்புடன் ஜமால் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    நன்றி சசிகுமார்

    பதிலளிநீக்கு
  33. நன்றி சாந்தி

    நன்றி அஷோக்

    நன்றி மெஹர்

    பதிலளிநீக்கு
  34. நன்றி சிவசங்கர்

    நன்றி பனித்துளி சங்கர்

    நன்றி பலாபட்டறை சங்கர்

    பதிலளிநீக்கு
  35. நன்றி பிரபு

    நன்றி மலிக்கா

    நன்றி ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  36. நன்றி திவ்யாஹரி

    நன்றி முனியப்பன் சார்

    நன்றி மேனகா

    பதிலளிநீக்கு
  37. நன்றி ஸாதிகா

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி மயில்ராவணன்

    பதிலளிநீக்கு
  38. நன்றி அக்பர்

    நன்றி விஜய்

    நன்றி ரிஷபன்

    பதிலளிநீக்கு
  39. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...