புதன், 31 மார்ச், 2010

இருப்பு என்பது வலை

நிலவு பொழிவது போல் ஆளை விழுங்க.,
மழை பொழிவது போல் தழுவிக்கொள்ள.,
சட்டை உரித்த பாம்பாய் சுயம் உரிந்து கிடக்க.,
பச்சோந்தி போல சேர்ந்த வர்ணம் அடைந்தேன்..

அன்றிலைப்போல் அல்ல., கவரிமானும் அல்ல.,
அன்றன்று அடிக்கும் அலையில் கரை கடந்தேன்..
நிலையாமை யாக்கை அறிவேன்..
நிலையற்ற நிலை அடைந்தேன்..


எப்போதும் உண்டு ஒரு உண்மை...
ஏற்றாற்போல் மாற்றுகின்ற தன்மை...
எல்லோருக்கும் கைவந்தது கண்டேன்..
என்னுடைமையும் ஆகக் கொண்டேன்..

இப்படித்தான் இருப்பது என்பது ஒரு கலை....
எப்படியும் இருக்கலாம் என்பது ஒரு நிலை..
அப்படியும் இப்படியும் முடிவில்லாத தளை ...
எப்படி இருந்தாலும் இருப்பு என்பது வலை...

57 கருத்துகள் :

BALA சொன்னது…

wow...arumai arumai.......
//நிலையாமை யாக்கை அறிவேன்..//

great.................

seemangani சொன்னது…

//எப்படி இருந்தாலும் இருப்பு என்பது வலை...//

தேனமாவால் மட்டுமே இப்படி சும்மாவே சுபேரா எழுத முடியும்...சூச்சமமாய் எதையோ சொல்ல வருவது போல் தெரிகிறது,....அருமை...

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான கவிதை வரிகள் இயல்பாய் உள்ளது தேனக்கா..

மின்மினி சொன்னது…

கவிதை வரிகள் ரொம்பவே பீலிங் ஆயிருச்சி...

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா ரொம்ப நாள் கழித்து வந்து பின்னூட்டமிட்டதற்கு

thenammailakshmanan சொன்னது…

எல்லார் வாழ்க்கையும் ஏதோ ஒரு சமரசத்துல ஓடுது இல்லையா சீமான்கனி அதுதான்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன் நல்ல புரிதல் உங்களுக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி மின்மினி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

இராகவன் நைஜிரியா சொன்னது…

இருப்பு என்பது வலை...

அருமையாச் சொல்லியிருக்கீங்க தோழி.

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

புரியலையே தேனம்மா...

:(

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராகவன் ஆமாம் எல்லாமே வலைபோல்தான் இருக்கு

thenammailakshmanan சொன்னது…

Shanthi Vincent இன்றைய நாடு நடப்பும் அப்படிதான் உள்ளது. யாரும் அவர்களாக இல்லாததால் மனதில் குறை நாமும் கண்ணாடிபோல பிரதிபலிப்பதால் ஒருவித ஏக்கம்.//

முகப் புத்தகத்தில் சாந்தி சொன்னதுதான் உங்களுக்கு பதில் வசந்த்....

நேசமித்ரன் சொன்னது…

கட்டுத்தறி சந்தத்தில் கம்பன் விழா கவிதை

நிதர்சன ஞானம் நிறுத்தி சுடர்ந்திருக்கிறது முதல் தளிரன்ன
செந்தழல்

Chitra சொன்னது…

இப்படித்தான் இருப்பது என்பது ஒரு கலை....
எப்படியும் இருக்கலாம் என்பது ஒரு நிலை..
அப்படியும் இப்படியும் முடிவில்லாத தளை ...
எப்படி இருந்தாலும் இருப்பு என்பது வலை...


....... superrr! ரொம்ப நல்லா இருக்குங்க.

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன் தளிரன்ன செந்தழல் அவ்வப்போதுதான் சுடர்கிறது

thenammailakshmanan சொன்னது…

ரொம்ப நன்றீ சித்து உன்னோட பாராட்டுக்கு

Muniappan Pakkangal சொன்னது…

very nice Thenammai,eppadium irukkalaam,athaan indraya nilai-itz for most people.Still there are people -ippadithaan irukkanum.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ஆஹா!!!
அற்புதம்.

M.S.R. கோபிநாத் சொன்னது…

கவிதை நன்றாக இருந்தது தேனம்மை. எதுகை மோனையுடன் அருமை.

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை தேனம்மை.

//
இப்படித்தான் இருப்பது என்பது ஒரு கலை....
எப்படியும் இருக்கலாம் என்பது ஒரு நிலை..//

மிக அருமை.

ஜெகநாதன் சொன்னது…

இருப்பு என்பது வலை..
இது இருப்பது வலைத்தளமா :)

Vidhoosh(விதூஷ்) சொன்னது…

ரசித்தேன். வரிகளை மகிழ்கிறேன்.

தமிழ் உதயம் சொன்னது…

தத்துவம்- இப்போ உங்களுக்கு கை வந்த கலை...
ஆச்சர்யத்தோட- இப்போ அதிசயிப்பதே எங்கள் நிலை...

சசிகுமார் சொன்னது…

நல்ல கவிதை அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் சொன்னது…

ஊஹூம். இப்படித்தான் இருப்பது தளை:)

DREAMER சொன்னது…

கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க!

-
DREAMER

அஹமது இர்ஷாத் சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது.

அம்பிகா சொன்னது…

\\இப்படித்தான் இருப்பது என்பது ஒரு கலை....
எப்படியும் இருக்கலாம் என்பது ஒரு நிலை.\\
அருமையான வரிகள் தேனம்மை

அக்பர் சொன்னது…

இதுதான் எங்கள் நிலை. அருமை

ஸாதிகா சொன்னது…

அடி//தூள்..பின்னிட்டீங்க.கை கொடுங்க.சூப்பர்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

/////////இப்படித்தான் இருப்பது என்பது ஒரு கலை....
எப்படியும் இருக்கலாம் என்பது ஒரு நிலை..
அப்படியும் இப்படியும் முடிவில்லாத தளை ...
எப்படி இருந்தாலும் இருப்பு என்பது வலை...
//////////


குறும்பு

ப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ?

Mrs.Menagasathia சொன்னது…

எதுகை மோனையுடன் கவிதை சூப்பர் அக்கா..

ப்ரொபைல் போட்டோவில் இருப்பது நீங்களா அக்கா???அழகா சாந்தமா இருக்கிங்க...

PPattian : புபட்டியன் சொன்னது…

கொஞ்சம் Traditional நடையில் அழகு கவிதை..

ஸ்ரீராம். சொன்னது…

கடைசி நான்கு வரிகள் கவர்ந்து விட்டன. நிதர்சனம்

Ammu Madhu சொன்னது…

super

Jayaraj சொன்னது…

philosophical
play of words
traditional style
good attempt

thenammailakshmanan சொன்னது…

நன்றி முனியப்பன் சார் சைகாஸ் பற்றீய பதிவு அருமை

thenammailakshmanan சொன்னது…

விருதுக்கு நன்றீ சை கொ ப

thenammailakshmanan சொன்னது…

நன்றி கோபி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி உங்க கருத்துக்கும் வருகைக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜெகனாதன் கருப்பு சாமி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

thenammailakshmanan சொன்னது…

நன்றீ வித்யா உங்க கருத்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரமேஷ் உங்க கருத்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி சசிகுமார் உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா சார் உங்க கருத்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி ட்ரீமர் உங்க இடுகை அற்புதம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி அகமது இர்ஷாத் உங்க மதராச பட்டணம் பாடல் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி அம்பிகா உங்க கருத்துக்கு

thenammailakshmanan சொன்னது…

உண்மை அக்பர் வருந்தாதீர்கள் காலம் மாறும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸாதிகா தோஹா மியூஸியம் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றீ பனித்துளி சங்கர் பாம்பிலிருந்து மருந்து இடுகை அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றீ மேனகா பான் கேக் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றீ பட்டியன் தப்பில்லாது அடுத்த இடுகை எப்போ?

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ஸ்ரீராம் காய்கறி இடுகை சூப்பர்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ அம்மு திருப்பாவை சூப்பர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜெயராஜ் உங்க கருத்துக்கும் வரவுக்கும்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...