எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2024

குட்டித் தமிழகம் ஆகி வரும் கொலோன் நகரம்

குட்டித் தமிழகம் ஆகி வரும் கொலோன் நகரம் – அன்னபூரணி சபாரெத்தினம்


த கேப்பிடல் என்ற நூலை எழுதிய கார்ல் மார்க்ஸ் பிறந்த இடம் ஜெர்மனியின் ட்ரையர் நகரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மார்க்ஸியத் தத்துவங்கள் பிறந்த ஜெர்மனி நகரில் இன்று பார்த்தால் வலசை வந்து வசிக்கும் இந்திய மற்றும் ஈழத் தமிழர்களின் திருப்பணியால் ஹாம் காமாட்சி அம்மன் கோவில், முருகன் கோவில், கந்தசாமி கோவில், கதிர்வேலாயுதசாமி கோவில், ஜெகன்னாத் கோவில், சிம்மாசலம் நரசிம்மர் கோவில், சாய்பாபா கோவில், இஸ்கான் கோவில்கள் என இந்தியக் கோவில்கள் அணி வகுக்கின்றன.  

யூரோப்பா முழுவதையும் சுற்றி ஓடும் ரைன் நதியின் கரையில் அமைந்துள்ளது கொலோன் நகரம். அந்தக் காலத்தில் யூ டி கொலோன் என்ற வாசனைத் திரவியம் தயாராகி உலகம் முழுக்க வலம் வந்தது இந்த ஊரில் இருந்துதான். இங்கே ஓவியம், கண்ணாடி, யுத்த தளவாடங்கள் என 25 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன.

நதிக்கரையோர நாகரீகம் தழைப்பதைப் போல் அந்த ரைன் நதியின் பெயரால் ரைன் தமிழ்ச் சங்கம் என்றொரு வாட்ஸப் குழுமம் இருக்கிறது. இதில் 70 க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பத்தினர் அங்கத்தினர்களாக இருக்கிறோம். எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தமிழ்ச் சங்கத்தில் இணைந்துதான் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, தமிழ்ச்சங்க நிகழ்வுகள், பரதநாட்டியக் கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள் ஆகியவற்றைத் தமிழர்களாகிய நாங்கள் கொண்டாடி வருகிறோம்.

யூ ட்யூபில் 2681 - 2690 வீடியோக்கள்.சினிமா விமர்சனங்கள்.

2681.சிப்பிக்குள் முத்து l கே.விஸ்வநாத் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VZggLcZTHdM


#சிப்பிக்குள்முத்து, #கேவிஸ்வநாத், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIPPIKKULMUTHU, #KVISWANATH, #THENAMMAILAKSHMANAN,2682.விருமாண்டி l கமல்ஹாசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VlQQE20G5-A


#விருமாண்டி, #கமல்ஹாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VIRUMANDI, #KAMALHAASAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 27 மார்ச், 2024

இசை குடிமானமும் இருபது லட்சமும்

 181.


3601. அத்தை கல்யாணத்தில் ஓலையில் எழுத்தாணி கொண்டு இசைகுடிமானம் எழுதுகிறார்கள் ஐயாவும் அத்தை மாமனாரும். 


இசைகுடிமானம் என்றால் திருமணப்பதிவு. Marriage Registration

யூ ட்யூபில் 2671 - 2680 வீடியோக்கள்

2671.வரங்கொடுப்பாய் ஷண்முகா l  ராம.லெ.ஸ்ரீனிவாசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HMNflZpac7c


#வரங்கொடுப்பாய்ஷண்முகா, #ராமலெஸ்ரீனிவாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #SRINIVASAN, #THENAMMAILAKSHMANAN,2672.கவலை நீங்கும் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=tICwMHUKMfs


#கவலைநீங்கும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 25 மார்ச், 2024

15.கர்ப்பத்தைக் கண்டறிதல் மற்றும் ட்ரைமெஸ்டர் எனப்படும் பேறுகால சிகிச்சைகள்

 15.கர்ப்பத்தைக் கண்டறிதல் மற்றும் ட்ரைமெஸ்டர் எனப்படும் பேறுகால சிகிச்சைகளும்


பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் தாமதத் திருமணங்களாலும் கடந்த பத்தாண்டுகளாகக் கர்ப்பத்துக்குப் பின்னால் மட்டுமல்ல கர்ப்பம் தரிக்கும் முன்னும் செக்கப் செய்துகொள்வது என்பது வழக்கமாகி இருக்கிறது. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு உடல் கோளாறு ஏதும் இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும்.

 

இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்., ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் கோளாறு இல்லாமலிருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா மேலும் எல்லாத் தடுப்பு ஊசிகளும் ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொள்வது ப்ரி கன்சப்ஷன் செக்கப் எனப்படுகிறது  PRE CONCEPTION CHECK UP ஐ PRE CONCEPTION CLINIC சென்று செய்து கொள்வது அவசியம். அதன் பின் கருத்தரிப்பது நல்லது.

யூ ட்யூபில் 2661 - 2670 வீடியோக்கள்

2661.ஆட்டோ கொள்ளையா, கொடையா? l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6z-BuG7s9cg


#ஆட்டோகொள்ளையாகொடையா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AUTO, #THENAMMAILAKSHMANAN,2662.நிலங்களுக்கும் ரேஷன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3GFuTxdKwOI


#நிலங்களுக்கும்ரேஷன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#LAND, #THENAMMAILAKSHMANAN,

சனி, 23 மார்ச், 2024

வீடு அர்ச்சனா

வீடு அர்ச்சனா


ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா என்ற பாடலில் இரட்டை ஜடையுடன் பெரிய பொட்டோடு எளிமையான அழகுடன் காட்சியளிப்பார் அர்ச்சனா. ஜோடி பானுசந்தர். நடுநடுவே பரதநாட்டிய உடையில் அபிநய முத்திரைகளில் அபாரமான வடிவழகோடு திகழ்வார். அதே பாடலின் முடிவில் பாலுமகேந்திராவின் ஆஸ்தான கதாநாயகிகளின் உடையான டைட் பெல்ஸ், டாப்ஸில் கடற்கரையில் ஆடல் இடம்பெற்றிருக்கும். அலையுடன் போட்டிபோடும் கூந்தலுடன் வெகு ஸ்லிம்மாக அழகாக இருப்பார்.

பானுப்ரியா, சுஜாதா போன்றதொரு தீர்க்கமான பார்வை, தெளிவான நடை, உடை, பாவனை, வெகுளிப் புன்னகை, யதார்த்த சினிமாக்களின் நாயகி, தனித்துவத்துடன் நடிக்கும் நடிகை, எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர், சவாலான கதாபாத்திரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் நடிப்பவர் அர்ச்சனா. ஆர்ட் ஃபிலிம் நடிகை என்று கூட முத்திரை குத்தப்பட்டவர். ஒரியா உட்பட ஆறு மொழிகளில் 30 படங்களில் நடித்தவர். அதிலும் பிரபலமான இயக்குநர்களின் படத்தில் நடித்தவர்.

யூ ட்யூபில் 2651 - 2660 வீடியோக்கள்

2651.தேரோடும் பழநி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vbojcJdSsVU


#தேரோடும்பழநி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,2652.ஆதிசேஷா l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=YxdghuIjR-w


#ஆதிசேஷா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AADHISESHA, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 21 மார்ச், 2024

கழனிவாசல் ஸ்ரீ இடைச்சியம்மன் திருக்கோவில்

 காரைக்குடி கழனிவாசலில் அமைந்துள்ளது இடைச்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் 1989 ஆம் வருடம் யாதவ சமூகத்தினரால் அமைக்கப்பட்டது. 

கோபுரத்தில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணரும் துவாரபாலகியரும் சிங்கங்களும் காவல் தேவதைகளும் காட்சி அளிக்கிறார்கள். 

கோயிலின் இடப்புறம் ஸ்ரீ நாகநாதருக்குக் குட்டியாகத் தனிச்சந்நிதி. 

யூ ட்யூபில் 2641 - 2650 வீடியோக்கள்

2641.சிங்கைநகர் முருகனே வருக வருக l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/v1l4JE2lf5M


#சிங்கைநகர்முருகனே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,2642.தித்திக்கும் திருப்புகழ் - 16 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Tq_TQNrmJKc


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 19 மார்ச், 2024

மேப்போனதும் சோமாத்தியும்

176.


2021.தோதுக்குத் தக்கன - தங்கள் நிலைமைக்குத் தக்கவாறு, தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு


2022.வடிச்சு உண்கிற வேலை - சோறு வடித்து உண்பதை இப்படிக் குறிப்பார்கள். வெறுமன வடிச்சு உங்கிற வேலை. அதைக் கூடச் செய்யத்தெரியாதா என. மற்ற வேலைக்கு ஆள் வைத்திருப்பார்கள். 


2023.ஊடமாட - நடுவில், ஒரு விஷயத்தின் அல்லது நிகழ்வின் நடுவில். கூடவே வந்து உதவி செய்தல். 


2024.காலக்கொடுமை - கெட்ட காலம். இது நல்ல காலம் அல்ல, அல்லது ஒரு விஷயத்தின் வீர்யத்தை வெளிப்படுத்த இப்படிச் சொல்வதுண்டு. அவளுக்கு இப்படி நடக்கலாமா காலக் கொடுமை என்பார்கள். 

யூ ட்யூபில் 2631 - 2640 வீடியோக்கள்.

2631.பன்னிரு கை வேல் விருத்தம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=f6qCJgEToaU


#பன்னிருகைவேல்விருத்தம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,2632.வெள்ளிக்கிழமை l விநாயகர், முருகன், சிவன் வழிபாடு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=rkSjhfKCG4U


#வெள்ளிக்கிழமை, #விநாயகர்முருகன்சிவன்வழிபாடு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#FRIDAY, #SIVA, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 14 மார்ச், 2024

எனது 25 ஆவது நூல் “செட்டிநாட்டுக் கதை”களின் முன்னுரை

 முன்னுரை:- இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வர்க்க, இன பேதமின்றி மத்தியர தர குடும்பப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் செட்டிநாட்டின் மொழி வழக்கிலும், செட்டிநாட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் ப்ரத்யேகப் பிரச்சனைகளைப்  பற்றியுமாய் ஆக்கப்பட்டுள்ளது இந்நூல். இது எனது இருபத்தி ஐந்தாவது நூல். 

செட்டிநாட்டுக் கோட்டை வீடுகள், உணவுவகைகள், உறவு முறைகள், சுவீகாரம், திருமண நடைமுறைகள், கணவனை இழந்த முதிய பெண்களின் தனிமை, உடல்நலிவு, எச்சூழலிலும் தன்னை இழந்துவிடாத மாண்பு, செட்டிநாட்டுச் சொல்வழக்கின் சிறப்பு, கணவன் மனைவி பந்தம், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான பிணைப்பு, தங்களிடம் பணிபுரிபவரையும் தங்களைப் போல எண்ணும், நடத்தும் குணம்,  அத்தோடு அந்தக்கால ஆண்களின் செயல்பாடுகள், திருமணம் தாண்டிய உறவுகள், சமயத்தில் பெண்களே பெண்களுக்குப் பிரச்சனை ஆகுதல், எப்போதும் தங்களிடம் பணிபுரிவோரிடம் கொள்ளும் நம்பகத்தன்மையும், அதிலும் ஓரிரு சிலர் திடீரெனக் கொள்ளும் நம்பிக்கையின்மையும் எனக் கடந்த இரு நூற்றாண்டு காலச் செட்டிநாட்டின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்தச் சிறுகதைகளைப் படைத்துள்ளேன்.  

யூ ட்யூபில் 2621 - 2630 வீடியோக்கள்.

2621.தித்திக்கும் திருப்புகழ் - 8 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VBl3XTRFBgo


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2622.கருப்புச்சாமியைத் துதிப்போம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=YFV1766AAcg


#கருப்புச்சாமியைத்துதிப்போம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPUSAMY, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 11 மார்ச், 2024

கஜேந்திரனைக் காத்த கருடவாகனன்

 கஜேந்திரனைக் காத்த கருடவாகனன்


முனிவர்களின் சாபம் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் ஒரு மன்னனும், ஒருகந்தர்வனும் விளையாட்டாக நடந்துகொண்டார்கள். அதன் கொடுமையான விளைவுகளையும் அனுபவித்தார்கள். ஆனால் தன் பூரண சரணாகதியின் மூலம் மோட்சம் பெற்றான் அம்மன்னன்.

பாண்டிநாட்டை ஆண்டுவந்தான் இந்திரத்துய்மன் என்னும் மன்னன். மிகச் சிறந்த பெருமாள் பக்தன். பெருமாளுக்குப் பூசை செய்யாமல் அன்னம் தண்ணீர் அருந்தமாட்டான். அப்பேர்ப்பட்ட பக்தனுக்கும் ஒரு முனிவர் மூலமாக சோதனை வந்தது. ஒருநாள் அவன் விஷ்ணு பூசை செய்து கொண்டிருந்தபோது அகஸ்திய முனிவர் அங்கே வந்தார். இந்திரத்துய்மனின் பூசையோ முடிவதாயில்லை. தொடர்ந்து கொண்டேயிருந்தது. பார்த்தார் அகஸ்திய முனிவர். வேண்டுமென்றே மதியாமல் நடக்கிறானோ மன்னன் என்ற கோபம் உண்டானது அவருக்கு.

ஒருவழியாகக் கடைசியில் பூசையை முடித்துவிட்டு நடந்து வந்தான் மன்னன் முனிவரை வரவேற்க. பார்த்துக் கொண்டிருந்த முனிவருக்கோ அவன் மதர்த்த யானைபோல் அமர்த்தலாக வந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது. உடனே தன் கமண்டலத்திலிருந்து நீரை எடுத்து வீசினார் ”பிடிசாபம்! மதிக்காமல் மதங்கொண்ட நீ யானையாகக் கடவது” விதிர்த்து வணங்கினான் மன்னன்.

யூ ட்யூபில் 2611 - 2620 வீடியோக்கள்

2611.ஃப்ளாட் வாங்குவது என்பது புத்திசாலித்தனமான முதலீடா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=wfHenXBimck


#ஃப்ளாட், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#FLAT, #INVESTMENT, #THENAMMAILAKSHMANAN,2612.சிறகு முளைக்கும் சிட்டுகள் பள்ளி செல்லும் பறவைகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=WLaZuMfp4uI


#சிறகுமுளைக்கும்சிட்டுகள்பள்ளிசெல்லும்பறவைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KIDS, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 8 மார்ச், 2024

முள்ளும் மலரும் ரஜினிகாந்த்

முள்ளும் மலரும் ரஜினிகாந்த்


ஸ்டைல் மற்றும் மேனரிஸங்களால், வசீகரமான பாடிலைன் மற்றும் ஹேர்ஸ்டைலால், கன்னடத் தமிழ் உச்சரிப்பால், அஸால்டான நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரஜினி. மஸ்குலைன் இல்லையென்றாலும் ஒரு ஆல்ஃபா மேல் ஆகவே காட்சி தருபவர் ரஜினி. எம்ஜியார் சிவாஜி, ரஜனி கமல் போன்ற உச்ச நடிகர்கள் பற்றி ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது. பத்துப் பன்னிரெண்டு படங்களை மட்டுமே குறிப்பிடலாம். முழுசாக சொல்லணும்னா ரெண்டு வால்யூம் புக்தான் போடணும்.  

சிவாஜிராவ் கெய்க்வாடா இருந்து சிவாஜியா நடிச்சவரின் வாழ்க்கைச் சரித்திரம் மற்றும் அவர் பெற்ற விருதுகள் பற்றி எல்லாம் உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். அதுனால இந்தக்கட்டுரை நான் ரசித்த அவரோட நடிப்பின் பல்பரிமாணங்களையும் திரும்ப ரீவைண்ட் பண்ணிப் பார்க்கத்தான். 1975 இலிருந்து 2023 வரை அவர் நடித்த 170 சொச்சம் படங்களில் 100 படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

யூ ட்யூபில் 2601 - 2610 வீடியோக்கள்.

2601.பாடுங்களேன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bf6-C4dpn1U


#பாடுங்களேன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PADUNGKALEN, #THENAMMAILAKSHMANAN,2602.ஆராதனைப் பாடல் - 3 l திருவருட்பா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=5ss_pwMrxhk


#ஆராதனைப்பாடல், #திருவருட்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AARADHANAIPADAL, #THIRUVARUTPA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 6 மார்ச், 2024

சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

 180.


3581.Be Safe. Chennai Makkas.


3582.இயற்கைப் பேரிடர்கள் அச்சமுற வைக்கின்றன. அஸ்ஸாமில் வெள்ளம், ஒரிஸ்ஸாவில் வெள்ளம் செய்தியாகத் தெரிந்தது. 

இன்று தமிழ்நாட்டில் என்றவுடன் தசையாடுகிறது. நெல்லை தூத்துக்குடி, குமரி நண்பர்களே பத்திரமாய் இருக்கீங்களா..

யூ ட்யூபில் 2591 - 2600 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

2591.பார்த்திபன் கனவு l கல்கி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6FJJkLSqZ2Q


#பார்த்திபன்கனவு, #கல்கி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PARTHIBANKANAVU, #KALKI, #THENAMMAILAKSHMANAN,2592.ஹரித்ரா நதி l ஆர் வி எஸ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=gDmCRQPd2qs


#ஹரித்ராநதி, #ஆர்விஎஸ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#HARIDHRANATHI, #RVS, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 3 மார்ச், 2024

காரைக்குடி கொப்புடைய அம்மன் திருக்கோயில்

 காரைக்குடியின் காவல் தெய்வம் கொப்புடையம்மன். கல்லுக்கட்டியில் அமைந்துள்ள இக்கோயிலைச் சுற்றிக் கடைவீதி அமைந்துள்ளது. 

மூன்று நிலை இராஜ கோபுரத்துடன் எடுப்பான அழகிய கோவில் இது. உள்ளே நுழைந்ததுமே தாயின் கருவறைக்குள் இருப்பது போன்ற நிம்மதி ஏற்படும். 

எங்கள் பாட்டிகள் , பாட்டையாக்கள், ஐயாக்கள், ஆயாக்கள், அப்பத்தாக்கள் மற்ற உறவினர்கள் அனைவரின் காலடித்தடங்களும் இங்கே நான் மானசீகமாக உணர்வேன். அவர்களின் சுவாசம் கலந்த கோவில் எனக்கு மிக விசேஷமானது. 

வருடா வருடம்  பழனிக்கு நடைப்பயணமாகவும், காவடி கட்டியும் புறப்படும் நூற்றுக்கணக்கான புனித மக்களின் காலடித் தடங்களும் அவர்களின் வேண்டுதல்களும் கலந்த காற்று நம்மையும் ஆற்றுப்படுத்தும். 

ஒரு சில முறை ஆயாவுடன் இங்கே மார்கழி திருப்பள்ளி எழுச்சிக்கு வந்து வணங்கி சூடாக வெண்பொங்கல் வாங்கிச் சாப்பிட்டது நினைவில் ஆடுகின்றது. ஆறாவயல் பாட்டியுடன் வந்து பூச்சி பொட்டுக் கடிக்காமல் இருக்க அவற்றின் மண் உருவை வாங்கி வேண்டுதல் குதிரைகளின் அருகில் சேர்ப்பித்ததும் கூட.  எங்கள் ஐயா ஆயாவின் சஷ்டியப்த பூர்த்திக்கும் இங்கே வணங்கிவிட்டுத்தான் வீட்டிற்கு வந்தோம்.ஆயா வீட்டில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களுக்கும் மாப்பிள்ளை அழைப்பு இங்கே இருந்துதான் நடைபெறும்.

முன்பு இக்கோயிலின் நுழைவுப் பகுதியில் வாயிலை ஒட்டி மேற்பக்கத்தில் கல் வளையங்கள் தொங்குவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். கோயில் முழுவதும் தூண்களில் தாமரை பூத்த கொடுங்கைகள் வெகு அழகு. 

கல் திருப்பணியால் ஆன கோயில் இது. உள்ளே உள்ள தூண்கள் ஒன்றில் பைரவர் காட்சி அளிக்கிறார். 

யூ ட்யூபில் 2581 - 2590 வீடியோக்கள்

2581.தித்திக்கும் திருப்புகழ் - 2 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PZzZT0xYeEY


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2582.சிறுவாபுரி முருகன் l அருட்கவி கு.செ.ராமசாமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Wc60V7Yj9Dc


#சிறுவாபுரிமுருகன், #அருட்கவிகுசெராமசாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIRUVAPURIMURUGAN, #ARUTKAVIKUSERAMASAMY, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 1 மார்ச், 2024

பெண் பரிமாணங்கள் - 4. பாசுரங்களுக்குக் கோலமிடும் காயத்ரி

 காயத்ரி பொதிகை மங்கையர் சோலை குழுமத்தில் இருக்கிறார். மார்கழி முழுவதும் தினம் ஒரு பாசுரத்துக்குக் காவிக் கோலம் வரைந்து அசத்தி இருந்தார். பாசுரத்துக்குக் கோலம் என்பது புதுமையான விஷயம் என்பதால் இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது அவர் கூறியவை இவை. 
கோலக்கலை , எனது  பார்வையில் 
      
                      கோலம்  என்பது ஒரு 'வரைகலைப் பிராத்தனை'. 64 கலைகளில் ஒன்றான கோலக்கலை , நம் வீட்டு வாசலின் அடையாளம். கோலம் என்ற சொல் அழகு, ஒப்பனை, வரிசை என பல பொருள் கொண்டுள்ளது.  வேதகாலம் தொட்டே கோலம் போடும் வழக்கம் இருந்தது என்பதை   யாக சாலை  பூஜையின் போது ,ஹோம குண்டத்தை கோலத்தின் மீது வைத்து , மஞ்சள் ,குங்குமம் ,பூவினால்  அலங்கரித்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன .  அபிஷேகம், ஆராதனை ,பூஜை போன்றவற்றை இசைப் பாடல்களாக பாடி  கடவுளிடம் பிரார்த்தனையை செலுத்துவது போல் , கோலம் மூலமாக நம் பிரார்த்தனையை செலுத்துவதும் ஒரு வழக்கம் தான். 

யூ ட்யூபில் 2571 - 2580 வீடியோக்கள்.

2571.பெருவழக்கு l திருவருட்பா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vgnTgtDL_KE


#பெருவழக்கு, #திருவருட்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERUVALAKKU, #THIRUVARUTPA, #THENAMMAILAKSHMANAN,2572.தேவி சரணம் l சக்குளத்து பகவதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=twmtqomFaiI


#தேவிசரணம், #சக்குளத்துபகவதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DEVISARANAM, #SAKKULATHUBAGAVATHI,  #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...