சிங்கை சௌந்தர்யநாயகி வைரவன்
திருமதி செளந்தர
நாயகி வயிரவன் 1972 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள், 23ஆம் தேதி, திரு: சுப்ரமணியன் செட்டியார் மற்றும்
திருமதி: மீனாட்சி ஆச்சிக்கு, நான்கு குழந்தைகளில், கடைசிக் குழந்தையாகப் பிறந்தார்.
இளமையிலேயே, இவருக்கு
வெளி உலகத்தில் நடப்பவற்றை அறிந்துக் கொள்ளும் அதீத ஆர்வம், காலை எழுந்தவுடன் முதலில்
நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், கூட்டுக்குடும்பச்சூழல், பல வயதினர்
மற்றும் பல தரப்பு மக்களோடு பழகும் வாய்ப்பு மட்டுமல்லாது, உலகில் நடக்கும் அநேகச்
செய்திகளைப் பகிர்ந்துக் கொள்ளும் அரிய வாய்ப்பையும் இவருக்குப் பெற்றுத் தந்திருந்தது.
இளமையிலேயே சரளமாக
மேடையில் பேசும் , தெளிவான சிந்தனையுடன் எழுதும், இனிமையான குரலில் பாடும் திறமைகள்
இவரிடம் இருந்தன. இத்திறமைகள் பல கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் வாய்ப்பை இவருக்குப்
பெற்றுத் தந்திருந்தன.
காரைக்குடியில்
பள்ளிப் படிப்பையும், சென்னை எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றில் பட்டப்படிப்பையும்
முடித்த இவர், 1993 ஆம் ஆண்டு, சிங்கப்பூர்க் குடியுரிமைவாசியான திரு: வயி: வயிரவனைத்
திருமணம் முடித்து, ஒரு வருட காலம் லண்டனிலும், அதைத் தொடர்ந்து, 29 ஆண்டு காலமாக சிங்கப்பூரிலும், கணவன்,
மகன் திரு: வயிரவன் சண்முக கண்ணன் (26) மகள் செல்வி: நாச்சம்மை சிவசந்தோசி வயிரவன்
(18)ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
இவர் குடும்பம், சிங்கப்பூரில்
பாரம்பரியம் மிக்க ஒன்று. இவருடைய மாமனார் திரு: ச. வயிரவன் செட்டியார், 40 ஆண்டு காலம், சிங்கப்பூரின்
லிட்டில் இந்தியாப் பகுதியில் 'ஸ்டார்லைட் கிளினிக்' என்ற புகழ் மிக்க மருத்துவமனையை
நடத்தி வந்தார். இவர் மாமனாரின் தந்தை திரு: வயி: சண்முகம் செட்டியார், மக்களுக்குச்
சேவையாற்றியதால், ஆங்கில அரசாங்கம் அவருக்கு, 'அமைதியின் நீதிபதி' என்ற பட்டம் வழங்கியது. இவருடைய
கணவர் தற்பொழுது, கணினி சம்பந்தப் பட்ட ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
திருமதி செளந்தர
நாயகி வயிரவன், 2000 ஆம் ஆண்டு இங்கிலந்து பள்ளியில் ;இதழியலில் டிப்ளமோ பட்டமும்,
2007 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில், தகவல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும்
பெற்றார்.
இதழியழிலில் அதிக
ஆர்வம் உடைய இவருக்குப் பத்திரிகைகளுக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருந்தது. கணினி அதற்குக்
கைக்கொடுத்தது. ஆக 2000ஆம் ஆண்டு, இவர் இந்திய வம்சாவழியினருக்காக
ஒரு இணையப் பத்திரிக்கையைத் தொடங்கினார். (http://www.singindvoice.info) அப்பத்திரிக்கை இவருக்குப் பல கதவுகளைத் திறந்தது.