27.
பச்ச மண்ணு - பச்சைக்குழந்தை , பச்சை மண்ணுப் போல இசைவாயிருத்தல்
பச்சக் குட்டி - சின்னப்பிள்ளை
பச்ச நத்தம் - சிறு குழந்தையைக் குறிப்பது. நத்தம் என்றால் ரத்தம்
என்று அர்த்தம்
அப்பச்சி - தந்தை
ஆத்தாமை - ஆற்றமுடியாத மனவருத்தம்
ஊர்த்தாக்கல் - ஊர் நிலவரம், ஊர் விஷயங்கள்
கோயில் மாலை - நகரத்தாரில் திருமணம் செய்தால்தான் திருமண அத்தாட்சியாக
புள்ளியாகக் குறிக்கப்பட்டு நகரத்தார் சார்ந்த ஒன்பது கோயில்களில் இருந்து கோயில் மாலை
வரும்.
பத்தாவது கோயில் - பல்வேறு ஜாதி மதத்தில் காதல் கடிமணம் புரிந்து
கொள்வோரையும் நகரத்தாராகஅங்கீகரிப்பதற்காக சிலர் புதிதாக உருவாக்க நினைக்கும் ஒரு கோயில்
பிரிவு
மேக்கொண்டும் - மேற்கொண்டு, அதன் பிறகும்
பெண்ணுக்கு மறு கல்யாணம்,மூன்றாம் கல்யாணம் - சில பெண்கள் இப்போதெல்லாம்
சகஜமாக இரண்டாம் மூன்றாம் திருமணம்செய்து கொள்கிறார்கள்.
வராகன் - அந்தக் காலத்தில் 3500 ரூபாய் ( பவுன் விலை மிகக்குறைவாக
விற்ற காலம். ) வராகன் என்றால் பவுன்
பட்டம் சுத்துதல் - தாய் வீட்டினர் தோளில் வெள்ளைப் புடவையைப்
போட்டுக் கொண்டு கணவனை இழந்த மகளை மாப்பிள்ளையின் சடலத்தோடு மூன்று முறை சுற்றி வருதல்,
சுற்றி வந்து அதன் பின் அவள் மேல் வெள்ளைச் சீலையைப் போடுதல்
தாலியைக் கழட்டிப் பாலில் போடுதல் - இச்சடங்கு கணவனின் சடலம்
எடுத்துச் செல்லப்பட்ட பின் அந்த இடத்தில் கணவனை இழந்த பெண் அமர்ந்திருக்க அவளைப் போலவே
கணவனை இழந்த பெண்கள் சூழ பால் வைத்தபாத்திரத்தில் அவளது தாலிச்சங்கிலியைக் கழட்டிப்
போடச் சொல்வார்கள்.
ஈடுதாடாக - வாட்ட சாட்டமாக
எறு நெற்றி - முடி நெற்றியில் ஏறி அதிக அளவு முன் நெற்றி தெரிவது.
வந்த தாக்கல் - வந்த திருமணச் செய்திகள், வந்த சம்பந்தங்கள்
ஒச்சம் - உடற்குறை
வீட்டிற்குக் கூட்டிக் கொள்ளுதல் - தாய் வீட்டில் பிள்ளை பிறந்ததும்
தங்கள் வீட்டிற்குத் தாயையும் சேயையும் மாமியார் வீட்டினர் அழைத்துக் கொள்ளுதல்
பெரியத்தா - பெரியம்மா
இஞ்ச - இங்க
பங்கு வீடு - பல உரிமையாளர்கள் உள்ள வீடு, பல பங்குகள் உள்ள
வீடு
முழுக்கு - தீட்டு
28.
வாஞ்சாலை - அன்பு, பிரியம், உளப்பூர்வமான பாசம்
ஒரக்க - உரக்க
ரெண்டு பேத்தையும் - ரெண்டு பேரையும்
ஒய்யாரமாக - அழகாக, மகிழ்வோடு
ஆதுரம் – பற்றுதலாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)