25.
சேஞ்சுக்குற - திருமணம் செய்து கொள்கின்ற
லெக்குல - இடத்துல
பொறசாதி - மற்ற சாதிக்காரர்கள்
மேங்கோப்பு - வீட்டின் மேல் பாகம்
தார்சு - கான்க்ரீட் தளம்
சேயிற வயசு - திருமணம் செய்யும் வயசு
அரிய தாக்கல் - சிறப்பான சம்பந்தம்
அலைமோதிக்கினு - அலைந்து திரிந்து தேடிக்கொண்டு
திருப்பூட்டுதல் - தாலி கட்டுதல்
கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல் - திருமணத்துக்கு வந்திருந்த
அனைவரிடமும் தம்பதிகள் ஆசி பெறுவது
தன்மையாகப் பேசுதல் - மென்மையாக நடந்து கொள்ளுதல்
செவிமடுத்தல் - காது கொடுத்துக் கேட்பது
வாக்கப்படுதல் - திருமணம் செய்து கொள்ளுதல்
பொலிந்து கனிதல் - அதீத மகிழ்ச்சியில் அழகாதல்
26.
முகப்பு - வீட்டின் முன் பகுதி. வரவேற்கும் பகுதி
ஆம்பிள்ளையான் -கணவர்
மாசமாக இருப்பது - வயிற்றில் குழந்தையைச் சுமந்திருக்கும் நிலை
போரிடுதல் - பிள்ளைப் பேறு பார்த்தல்
பேரிட்டுக்குன - பேர் வைக்கப்பட்ட, பேர் இடப்பட்ட
ஆடுதோடாப் பாளை - ஆடுதொடா இலை
கைமருந்து - வீட்டு வைத்தியம், நாட்டு மருத்துவம்
ஆய்தல் - சுத்தம் செய்தல்
அரவம் - சத்தம்
பொட்டுப் போல - இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக, சொன்னபடி
கேட்டு
செட்டிய வீட்டுக் கெட்டி - செட்டிய வீட்டுக் கட்டுமானம். இறுக்கம்.
கொள்கைப் பிடிப்பு
புள்ளி - நகரத்தார் சேர்ந்த ஒன்பது கோயில்களில் நகரத்தார்களுக்குள்
திருமணம் செய்த ஜோடி புள்ளியாகக் குறிக்கப்படுவர்.
கைப்பிள்ளை - கைக்குழந்தை
முழுகாம - வயிற்றில் குழந்தையைச் சுமந்திருத்தல்
தொணை - துணை
இருக்கதுன்னும் - இருப்பது என்றும்
மே வேலை - துணி துவைத்தல், வீடு கூட்டுதல், பாத்திரம் கழுவுதல்
போன்ற வேலைகள் மேல் வேலைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)