எனது பதிநான்கு நூல்கள்

சனி, 29 ஜூன், 2019

காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.

1241. கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு பேசிக்கொள்ளும் முறையும் திருப்பூட்டும் முறையும் வைத்தல்.

வகைப்பழம் வாங்குவார்கள். அண்டா, வாளி, பேஸின்,தூக்குச்சட்டி, தட்டுகள், தாம்பாளங்களில் 9, 11, 16 என்று சீர் தட்டு கொண்டு வருவார்கள். வாழைப்பழம் ரஸ்தாளி அல்லது செவ்வாழையாக இருக்கும். இது 101 அல்லது 51 என்ற கணக்கில் இருக்கும். மஞ்சள் பூசிய தேங்காய் 11, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், மாதுளை, சாத்துக்குடி ஆகியன 21 இருக்கும். எலுமிச்சை 16 இருக்கும். வெற்றிலை பாக்கு ஒரு தட்டிலும், பூப்பந்து ஒரு தட்டிலும், பேரீச்சம்பழம் ஒரு தட்டிலும், ரொட்டி/வேஃபர்ஸ் ஒரு வாளியிலும் , மிட்டாய் ( சாக்லேட்/ஃபாரின் சாக்லேட் ) ஒரு தூக்குச் சட்டியில்  இருக்கும். கல்கண்டு ஒரு தூக்குச் சட்டியில் இருக்கும். இதில் சில முறைகளை அவர்கள் நமக்குத் திருப்பித் தருவார்கள்.


1242. மாப்பிள்ளை சாமான். இதில் வைக்கப்பட்ட டேபிள் ஃபேன் & டேபிள் லாம்ப் & அலார்ம் கெடிகாரம். வெளிநாட்டு ஐட்டம் என்பதால் எனாமலில் செய்த ஷிப் ஷேப்பில் உள்ளது. 

வெள்ளி, 28 ஜூன், 2019

மதுரையில் "மஞ்சளும் குங்குமமும்" வெளியீடு.

மதுரை தானம் அறக்கட்டளையின் நமது மண்வாசத்தின் ஐந்தாம் ஆண்டு ஆரம்ப விழாவில் எனது பத்தாவது நூலான ”மஞ்சளும் குங்குமமும் ”வெளியிடப்பட்டது.

பெண்கள் சுய உதவிக் குழுக்களின் தலைவி திருமதி சாந்தி மதுரேசன் அவர்கள் வெளியிட பிரபல வழக்கறிஞர் திருமதி செல்வகோமதி அவர்கள் பெற்றுக்  கொண்டார்கள்.

இக்கட்டுரைகள் நமது மண்வாசம் இதழில் சென்ற இரு ஆண்டுகளாக வெளிவந்தவை. மரபும் அறிவியலும் என்ற தலைப்பில் எழுதித்தாருங்கள் என நமது மண்வாசம் ஆசிரியர் திரு.ப. திருமலை அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவற்றை எழுதினேன்.

தானம் அறக்கட்டளையின் பட்டறிவு பதிப்பகம் மூலமே இக்கட்டுரைகள் தொகுத்து நூலாக்கம் செய்யப்பட்டது. ஜூன் 10, 2019 திங்களன்று தானம் அறக்கட்டளையின் அலுவலகக் கட்டிடத்தில் கான்ஃபரன்ஸ் ஹாலிலேயே வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டது. அன்பும் நன்றியும் திரு ப திருமலை சார், தானம் அறக்கட்டளை., & நமது மண்வாசம்.

பத்தாவது நூல் “ மஞ்சளும் குங்குமமும் “


ஆரம்பவிழாவுக்கு வந்திருந்த பெண்மக்கள். சந்தனம் குங்குமம்  ரோஜாப்பூவோடு வழக்கம்போல் நமது மண்வாசம் வழங்கும் கிஃப்ட் ஹாம்பர்களோடு விழா மங்கலகரமாக ஆரம்பித்தது. ( ஒவ்வொருவருக்கும் ஜூஸ், தண்ணீர் பாட்டில், விசிறி, நமது மண்வாசம், வெண்ணிற துவாலை, வழங்கப்பட்டிருந்தது சிறப்பு )

வியாழன், 27 ஜூன், 2019

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள். தினமலர் சிறுவர்மலர் - 20.

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள்.
ஒருவனுக்கு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அஸ்திரம் கொடுத்தும் அதைக் கொண்டு அவன் ஜெயிக்கமுடியவில்லை. ஏனெனில் அவற்றை அவன் நல்லனவற்றுக்குப் பயன்படுத்தவில்லை. தீயோரை ஆதரிக்கப் பயன்படுத்தினான். அதனால் அவை செயலிழந்தன. மும்மூர்த்திகளிடம் அந்த அஸ்திரங்களைப் பெற்ற பெருமைக்குரியவன் அஸ்வத்தாமன். அவனைப் பற்றியும் அந்த அஸ்திரங்கள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
துரோணர் கிருபி ஆகியோரின் மைந்தர் அஸ்வத்தாமன்.  இவன் சிறுகுழந்தையாயிருந்தபோது மிகுந்த வறுமையில்தான் வளர்ந்துவந்தான். துரோணர் கௌரவர்கள் பாண்டவர்களின் ஆசியராக ஆனபின்தான் ஓரளவு செல்வச்செழிப்பை எட்ட முடிந்தது. அதிலும் துரோணர் பாண்டவர்களில் அர்ஜுனனுக்கு மட்டுமே கவனம் செலுத்தி எல்லா அஸ்திர சஸ்திரங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்.
இருந்தும் தந்தையும் தனயனும் ஒருவர் மேல் ஒருவர் மிக்க பாசத்தோடுதான் வாழ்ந்து வந்தார்கள். ஏனெனில் துரோணர் பல்லாண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்தபின் பிறந்த பிள்ளைதான் அஸ்வத்தாமன். எனவே அஸ்வத்தாமனுக்கு சிரஞ்சீவித்தன்மை வழங்கும்படி கேட்டதால் ஈசனும் அஸ்வத்தாமனுக்கு அமரத்தன்மை வழங்கினார். அதனால் அவருக்கு இறப்பு என்பதே கிடையாது.

செவ்வாய், 25 ஜூன், 2019

கண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.

ஒரு சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்காக கண்டனூர் சென்றிருந்தபோது எடுத்தது. இவ்வீட்டின் முன்புற முகப்பில் இந்த ஓவியங்கள் அழகூட்டின. கோயில்களில்தான் துவாரபாலகர்கள் பார்த்திருப்போம். ஆனால் இங்கே வீட்டைக் காவல் காக்கும் வீரர்களை ஓவியத்தில் பார்த்து ரசித்தேன். படைச் சிப்பாய் போல் இரு கைகளிலும் வாள்சுமந்து நிற்கின்றான் இவ்வீரன். 


அவன் எதிரில் இன்னொரு பட்டாலைப் பத்தியில் அதே போன்றதொரு வீரன். இடுப்பில் ஒரு சுருக்குப் பை போன்ற ஒன்றும் அதை இடுப்பைச் சுற்றிக் கட்டிய குஞ்சலமும் அழகு.  போர்க்கோலத்தில் நீண்ட மீசையும் ரோமானியத் தொப்பியும் புஜங்களில் இந்திய மணிமாலைகளும் நெஞ்சில் ஆங்கிலேய சிப்பாய் போன்றதுமான ஒரு கலந்து கட்டிய காஸ்ட்யூம். 

ஞாயிறு, 23 ஜூன், 2019

வாசிப்பை சுவாசிப்போம்.

வாசிப்பை சுவாசிப்போம்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்றார் ஃப்ரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ . உடற்பயிற்சி உடலுக்கு நயம் பயப்பதைப் போல வாசிப்பு மூளையைப் புத்துணர்வாக்கும் என்பது பொன்மொழி.
இன்றைய இளம் தலைமுறையினர் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் வரும் நாலுவரி மெசேஜை பார்வேர்டு செய்வதும் அதைப் படிப்பதுமே பொழுதுபோக்கு, இலக்கியம் என்றிருக்கிறார்கள். இது நுரையை மட்டுமே ஒருவர் உண்டு வாழ்வது போன்றது என்று திரு ஞானசம்பந்தன் அவர்களும் நமது மண்வாசம் நான்காம் ஆண்டு ஆரம்பவிழாவில் கடிந்து இருக்கிறார். உண்மையான பிரச்சனைகளை இனம்காணவும் நல்லிணக்கத்தோடு கூடிய நற்சமுதாயம் அமையவும் வாசிப்பு அவசியம்.
புத்தக வாசிப்பு உங்களுக்கு உலகத்தையும் மனிதர்களையும் வாசிக்கக் கற்றுக் கொடுக்கும். கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் தனது அக்னிச் சிறகுகள் நூலில் கூறி இருக்கிறார். அக்கனவுகளை வளர்த்தெடுப்பது நெறிப்படுத்தப்பட்ட நன்னூல் புத்தக வாசிப்பே.

சனி, 22 ஜூன், 2019

சாட்டர்டே போஸ்ட். மாணவர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விடியல் ப்ரகாஷ்

விடியல் ப்ரகாஷ் , முகநூல் சகோதரர். குமாரபாளையத்தைச் சேர்ந்தவர். நாற்பத்திரண்டு வயதாகும் இவர் எல் ஐ சி முகவர். சில ஆண்டுகளாக விடியல் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்குச் சேவை செய்து வருகிறார்.

அதுவும் அரசுப் பள்ளிகள்,  நகராட்சிப் பள்ளிகளாகத் தேர்ந்தெடுத்து அங்கே உள்ள மாணாக்கருக்கு நெகிழிப் பையின் தீமை, தண்ணீர்ச் சிக்கனம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மரக்கன்று நடுதல், சுகாதாரம் ஆகியன பற்றி விடியல் அமைப்பு மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.

அவரிடம் நம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது இதை எழுதித் தந்தார்.  ( விடியல் சேவையில் நீங்க ஈடுபடக் காரணமாய் இருந்த நிகழ்வு ஏதும் இருந்தா பகிருங்க. இல்ல உங்களைத் தூண்டியது எதுன்னு சொல்லுங்க போதும். புகைப்படங்களே எல்லாம் பேசுது.)

(திருமணம் ஆயிடுச்சா. உங்களுடன் இப்பணியில் ஈடுபடுபவர் யார் உங்களுக்குக் கரம் கொடுக்கும் தோழர்களையும் அறிமுகப்படுத்துங்க முடிஞ்சா இன்றிரவுக்குள்/இன்னும் ஓரிரு மணிகளில் விபரம் மட்டும் அனுப்புங்க. நாளைக்கு சனிக்கிழமை. போஸ்ட் போட்டுடுவேன்.) 

அவர் தன்னைப் பற்றியும் விடியல் பற்றியும் கூறியது இது.

எனக்கு திருமணமாகி விட்டது ஒரு பையன் ஒரு பெண் இருவரும் படிக்கிறார்கள் நான் பள்ளியில் படிக்கும் பொழுது போட்டிகள் மற்றும் விளையாட்டு என்பது அரிதான ஒன்று . இதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நலன் கருதி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எண்ணத்தில் நாமும் பெரியவனாகி வருமானத்திலிருந்து ஒரு பகுதியாக இந்த குழந்தைகளுக்கு செலவு செய்து வருகிறேன் . இது என்னோட சொந்த பணம் . எனக்கு யாரும் இந்த ஒத்துழைப்பு தருவதில்லை.  நானே சுயமாக நின்று இப் பணியை மேற்கொண்டு வருகிறேன் . உங்களை போன்ற நல்ல  மனம் படைத்தவர்களிடம் இறைவன் அருளால் என்னை உங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

விடியல் ஆரம்பம் கல்வி சேவை அமைப்பு


பணிகள்

1. நாட்டுக்காக உழைத்த தேசிய தலைவர்கள் பலரும் நாட்டுக்காக ரத்தம் சிந்தி பல்வேறு காலங்களில் சிறைச்சாலைகளில் அவர்கள் பட்ட சித்தரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைப்பற்றி  வளரும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களை பற்றி படிக்க வேண்டும், அதற்காகவே கட்டுரைப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் வைத்து அவர்களை ஊக்கப்படுத்துகிறோம்.

வெள்ளி, 21 ஜூன், 2019

பஸவங்குடி - பார்க்குகளா , ஃபிட்னெஸ் செண்டர்களா..

பஸவக்குடியில் எங்கள் வீட்டின் இருபுறமும் நூற்றைம்பது அடி தூரத்தில் ஒன்றும் ஐநூறு அடி தூரத்தில் ஒன்றுமாக இரு பார்க்குகள் உள்ளன. இந்த பார்க்குகளில் ஒரு விசேஷம் என்னவெனில் இரண்டுமே ஜிம் போல் அனைத்து எக்விப்மெண்ட்ஸுடன் இருக்கின்றன.

ஃபிட்னெஸ் செண்டர்களுக்கெல்லாம் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டாம். இங்கே உள்ள எக்விப்மெண்ட்ஸில் பயிற்சி செய்தால் போதும்.  பெங்களூரு மாநகராட்சி மக்கள் நலனில் அக்கறை எடுத்து பொதுமக்களுக்கு இம்மாதிரி வசதிகள் செய்து கொடுத்திருப்பதற்கு முதலில் பாராட்டுக்கள்.

தண்ணீர் கூட கேன் வாட்டர் வாங்க வேண்டாம். நேரடியாக வீட்டில் வரும் தண்ணீரே குடிதண்ணீர்தான். இல்லாவிட்டால் இங்கே இருக்கும் இந்த சில்ட்ரன்ஸ் பார்க்கில் 5 ரூபாய் கொடுத்து ஒரு கேன் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். இந்தபார்க்கை குழந்தைகள் பூங்காவுக்காக வழங்கிய பெருமனிதர் ”குர்பத் குண்டப்பா ஷாமண்ணா” அவர்களுக்கு வியப்பு கலந்த நன்றிகள் . !!!

இவரது தோற்றம்  ஜூலை 1864. மறைவு 12. 11. 1936. அப்போதிலிருந்தே இந்த இடம் குழந்தைகள் பூங்காவாக இருக்கிறது போலும்.


இம்மாதிரியான அடுத்தடுத்து அமைந்த ஐந்து நிலை சறுக்கு மரங்களை நான் இங்கேதான் முதன்முதலில் பார்க்கிறேன். !!!

வியாழன், 20 ஜூன், 2019

நான்கு நூல்கள் – ஒரு பார்வை.

நான்கு நூல்கள் – ஒரு பார்வை.

1.IN SEARCH OF ANCIENT WISDOM – IRRIGATION TANKS. BY S.M. RATHNAVEL & DR. P. GOMAHINAYAGAM.
பொதுப்பணித்துறையில் 36 வருடங்கள் சீஃப் என்ஜினியராகப் பணியாற்றிய திரு எஸ். எம் . ரத்னவேலு அவர்களும், அதே துறையில் பொறியாளராகப் பணியாற்றிய டாக்டர் பி கோமதி நாயகம் அவர்களும் இணைந்து எழுதியது இந்நூல்.

திங்கள், 17 ஜூன், 2019

முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும். தினமலர் சிறுவர்மலர் - 19.

முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும்.
முக்கனிகள் என்றதும் மா பலா வாழை என்று நினைத்திருப்பீர்கள். இங்கே முக்கனிகள் என்று மா, நாவல், நெல்லி ஆகிய கனிகள் பற்றியும் அவற்றோடு சம்பந்தப்பட்ட முத்தமிழ்ப் பாட்டி ஒருவர் பற்றியும் கூறப்போகிறேன். கவனமாகக் கேளுங்கள் குழந்தைகளே.
கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது வருகிறார் கலகக்கார நாரதர். அவர் கையிலோ ஒரு மாங்கனி. அதை பவ்யமாக சிவபெருமான் அருகில் சென்று கொடுக்கிறார்.கையில் கனியை வாங்கிய சிவன் அதை அன்னை பார்வதியிடம் கொடுத்து பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொல்கிறார்.

வியாழன், 13 ஜூன், 2019

காங்கையும் கண்ணாடி வளையங்களும்.

2221. ஜாம்பவானும் சாம்பனும்

2222. நெருப்புச் சட்டியில் இருந்து என்னை ஃப்ரிட்ஜுக்குள் போட்ட மாதிரி இருக்கு. ஜில் ஜில் பெங்களூரு

புதன், 12 ஜூன், 2019

செல்லாத பணம் – ஒரு பார்வை.


செல்லாத பணம் – ஒரு பார்வை.

வரதட்சணைக் கொடுமையாலோ சந்தேகத்தின் அடிப்படையிலோ, தீக்குளித்து இறக்கும் பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இக்கதையைப் படித்ததும் அவற்றின் தீவிரம் புரிந்தது.

இமையத்தின் மற்ற நூல்களை நான் படித்ததில்லை. சென்ற வருடம் காரைக்குடியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மரப்பாச்சி அரங்கத்தில் இந்நூலை வாங்கி வந்தேன். மிகை கற்பனை, இயற்கை வர்ணனைகள், காதல் ரசங்கள் ஏதுமின்றி யதார்த்தத்தை உள்ளது உள்ளபடி நிகழ்வுகளின் வழியாகவே சொல்லிச் சென்றிருக்கிறது இக்கதை. கதாநாயகி ரேவதி மட்டுமே ஒருமுறை மனதுக்குள் பேசுகிறாள், கனவு காணுகிறாள் அவ்வளவே.

செவ்வாய், 11 ஜூன், 2019

பெடலிங்க் குதிரையும் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸும்.

2201. ஜென்சியின் குரலில் நிறம் மாறாத பூக்கள் பாடலில் ராதிகா அணிந்ததுபோல் ஃப்ரில் வைத்த மாக்ஸி அணிந்திருக்கிறேன்.மலேஷியாவில் இருந்து சபாபதி மாமா வாங்கி வந்தது :) ப்ரில் வைத்த ஜெர்சி பாவாடைகள், டபுள் நெட்டட் டாப்ஸ், சாட்டின் ஹவுஸ்கோட் எல்லாம் அப்போதைய ஃபேஷன், இப்ப விளம்பரங்களில் கையில் ஃப்ரில் வைத்த ப்ளவுஸஸ். :) பேஷன் திரும்பிருக்குபோல :)

2202. பெடலிங் குதிரையில் பெரியம்மா பேரன்


திங்கள், 10 ஜூன், 2019

நமது மண்வாசம் ஐந்தாவது ஆண்டு தொடக்க விழாவில் மஞ்சளும் குங்குமமும் வெளியீடு.

எனது பத்தாவது நூலான ”மஞ்சளும் குங்குமமும் ” நமது மண்வாசம் இதழின் ஐந்தாவது ஆண்டுத் தொடக்க விழாவில் வெளியிடப்படுகிறது. மதுரையில் 10.6.2019, திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடாக எனது நூல் மலர்கிறது.

சனி, 8 ஜூன், 2019

அவள் விகடனில் அசத்தல் அப்பாக்களும் அன்பு மகள்களும். ( அப்பா ரொம்ப ஸ்பெஷல் )

அவள் விகடனில் அசத்தல் அப்பாக்களும் அன்பு மகள்களும்.

அவள் விகடனின் நிருபர் தினேஷ் இந்தத் தலைப்பில் பேட்டி எடுத்து இருந்தார். அப்பாவைப் பற்றிப் பொதுப்படையாகப் பகிர்ந்திருந்தேன். அதில் நான் கூறியதில் அழகானதை எடுத்துப் போட்டிருக்கிறார். அன்பும் நன்றியும் தினேஷ் & அவள் விகடன். என் கூட இருக்கும் எழுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

வியாழன், 6 ஜூன், 2019

காதல் பொதுமறை – ஒருபார்வை.


காதல் பொதுமறை – ஒருபார்வை.

அமீரகத்தில் தமிழ்த்தேர் உலாவரக் காரணமானவர் காவிரிமைந்தன். கவியரசு கண்ணதாசன் பற்றி இரு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். இவரது நூலான காதல் பொதுமறை காதலர் தினத்தன்று எனது காதல் வனம் நூலோடு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்பட்டது.

இவர் எழுதிய நெறிபிறழாக் காதல் கடிதங்களின் /கட்டுரைகள் /கவிதைகளின் தொகுப்பு இந்நூல். காதல் வேதம் என்பதால் பொதுமறை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்நூலில் 143 கடிதங்கள் / கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதென்ன 143 என்ற கணக்கு .  அது I LOVE YOU வின் கணக்காக இருக்கலாம். எல்லாம் ஒரு யூகம்தான் J

புதன், 5 ஜூன், 2019

அழகப்பர் முன்னாள் மாணவர் பூங்கா. ALAGAPPA ALUMNI PARK.

ஒரு மாலை நேரம் இந்தப் பூங்காவுக்குச் சென்று வந்தோம். அழகப்பா கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அமைத்த பூங்கா இது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5. 30 மணிக்கு இப்பூங்காவின் திறப்புவிழா நடைபெற்றுள்ளது.

இது மேலாண்மையியல் வளாகத்தின் எதிர்ப்புறம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் கோட்டையூர் ஸ்ரீராம் நகர் செல்லும் பாதையில் ஸ்ரீ ப்ரசன்ன மஹாலின் எதிர்ப்புறம் ரயில்வே ட்ராக்கை ஒட்டி அமைந்துள்ளது.

அப்போதைய துணைவேந்தர் சுப்பையா அவர்கள் தலைமையேற்க பேராசிரியரும் முன்னாள் மாணவருமான ஆதிச்சபிள்ளை அவர்கள் திறந்துவைத்திருக்கிறார்கள்.

காரைக்குடியிலேயே மிகப் பிரம்மாண்டமான பூங்கா. உள்ளே செல்ல எண்ட்ரன்ஸ் டிக்கெட் உண்டு !. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபாதை பாவப்பட்டுள்ளது. வாருங்கள் பார்ப்போம்.

எல்லாப் பூங்காக்களையும் போல் இங்கேயும் ப்ளேகிரவுண்ட் உள்ளது.

செவ்வாய், 4 ஜூன், 2019

துடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும். தினமலர் சிறுவர்மலர் - 18.

துடுக்குத்தனத்தால் ஒளியை இழந்த சூரியனும் சோமனும்
எப்பவும் எங்கயும் நம்ம துடுக்குத்தனம் செல்லுபடி ஆகாது. அகந்தையும் ஆணவமும் விளைவிக்கும் அவமானத்தை துடுக்குத்தனமும் விளைவிக்கும். சாதாரண மக்கள் மட்டுமில்ல. இந்த உலகத்துக்கே ஒளி கொடுக்குற சூரியனும் சோமனும் கூட துடுக்குத்தனமா செயல்பட்டதால தங்களோட ஒளியை இழந்தாங்க. அப்புறம் தவறை உணர்ந்து திருத்திக்கிட்டதால திரும்ப ஒளி பெற்றாங்க. அது என்ன கதைன்னு பார்ப்போம் குழந்தைகளே.
காசியப முனிவர் அதிதி தம்பதிகளின் புதல்வர்தான் சூரியன். இவருடைய ரதத்தை அருணண் என்பவன் செலுத்தி வந்தான். ஆனால் இவன் அங்கஹீனம் உள்ளவன். அதே சமயம் அன்பும் பக்தியும் கொண்டவன்.
இவன் ஒரு முறை சூரியனிடம் கைலாயம் சென்று சிவனை தரிசிக்க வேண்டும் என்ற தன்னுடைய நியாயமான கோரிக்கையைத் தெரிவித்தான். அதற்காக சூரியனிடம் அனுமதி கேட்டான். ஆனால் சூரியனோ அருணனின் உடற்குறையைச் சொல்லி கிண்டலடித்து ”நீயெல்லாம் எங்கே கைலாயம் செல்லப் போகிறாய், சிவனை தரிசிக்கப் போகிறாய்” என்று எள்ளினான்.

திங்கள், 3 ஜூன், 2019

காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.

இது மட்டும் காரைக்குடியில் உள்ள வீடு. மற்றவை கானாடுகாத்தானில் உள்ள வீடுகள். 

தற்போதுதான் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் கீழ்த்தளம் மட்டும். நிலைக்கு மேலே உள்ள சிற்பத்தொகுதியைப் பாருங்கள். கண்கவர் காட்சி. 

திருவாச்சியின் கீழ் தாமரையில் பொலியும் கஜலெக்ஷ்மி. பக்கத்தில் இரு பணிப்பெண்கள் சாமரம் வீச மேலே எட்டுக் காவல் பெண்கள் நிற்பது கொள்ளை அழகு. இவர்கள் போக மேங்கோப்பின் இருபுறமும் பெண் தெய்வங்கள் காவல் காக்கிறார்கள். 

இடி மின்னல் தாக்காமலிருக்க வீட்டின் மேலேயே கோபுரங்களில் இருப்பது போல் சாணி, வரகு, சாமை தாங்கிய இடிதாங்கிக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. சனி, 1 ஜூன், 2019

வெட்டாட்டம் – ஒரு பார்வை.


வெட்டாட்டம் – ஒரு பார்வை.

சுஜாதா, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், போன்ற எவர் மாதிரியும் இல்லாத புதுமாதிரிக் கதை சொல்லி ஈர்த்திருக்கிறார் ஷான். ஏகப்பட்ட அரசியல் வில்லங்கப் படங்கள் பார்த்திருப்போம். இது ஹைடெக் இண்டர்நெட் வகை. முதலில் வெட்டாட்டம் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தோன்றியது இதற்குப் பொருத்தமான ஆள் விக்ரம் அல்லது அரவிந்தசாமி. இந்த வருண் கேரக்டரின் முழு வலுவையும் தாங்கும் சக்தி அவர்கள் இருவருக்கே உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...