வெட்டாட்டம் –
ஒரு பார்வை.
வெட்டாட்டம்
சுஜாதா, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், போன்ற எவர் மாதிரியும் இல்லாத புதுமாதிரிக் கதை சொல்லி ஈர்த்திருக்கிறார் ஷான். ஏகப்பட்ட அரசியல் வில்லங்கப் படங்கள் பார்த்திருப்போம். இது ஹைடெக் இண்டர்நெட் வகை. முதலில் வெட்டாட்டம் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தோன்றியது இதற்குப் பொருத்தமான ஆள் விக்ரம் அல்லது அரவிந்தசாமி. இந்த வருண் கேரக்டரின் முழு வலுவையும் தாங்கும் சக்தி அவர்கள் இருவருக்கே உள்ளது.
நாவலெங்கும் பல புதுமைகள். அடங்கிப் போகாத சித்ரா, எதிர்க்கேள்வி கேட்கும் சுவாதி, தீர்க்கமுடியாத திறமையான எதிர்க்கட்சிக்காரியான கயல்விழி இவர்களோடு மென்மையான கவுசல்யாவும் நர்மதாவும் தொட்டுக்கொள்ள ஊறுகாயாய் J வாங் நடத்தும் சைபர் கிரைம் உச்சம். எடுத்தவுடனே ஒரு திரைப்படத்தின் லாவகத்துடன் பாயத்தொடங்கிவிடுகிறது நாவல்.
