எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 மார்ச், 2016

டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)


661. ஒரு டிவிஎஸ் 50 தரும் மனதுக்கு இணக்கமான பயணத்தை வேறெந்தப் பயணமும் கொடுப்பதில்லை.

#அனுபவம்_பேசுது :)

662. வெள்ளரித்துக் கிடக்கும் புகைப்படங்கள் வரிசைக்கிரமமாய் கிடந்து கடந்த ஒரு வாழ்க்கையை ஞாபகப்படுத்துகின்றன.

663. இந்த ஸ்வீட் நத்திங்க்ஸ் அப்பிடிங்கிறாங்களே.. அப்பிடின்னா என்ன

664. பொய்மையும் வாய்மையிடத்துப் புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்.

-- ஒண்ணுமில்ல நேத்து ஒரு பொய் சொல்லிட்டேன். அதான் திருவள்ளுவரைத் துணைக்குக் கூப்பிட்டேன்

ஞாயிறு, 27 மார்ச், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

281. கல்யாணம் எழுதிக் கொள்ளுதல். - இன்னாரின் மகனை/பேரனை  இன்னாரின் மகளுக்கு/பேத்திக்குத் திருமணம் செய்ய நாள் குறித்து நோட்டில் எழுதிக் கொள்ளுதல்.பெரும்பாலும் பெண் மற்றும் மாப்பிள்ளையின் வீட்டார் கூடி இருக்க, இருவரின் அப்பத்தா வீட்டு ஐயாக்கள் எழுதிக் கொள்வார்கள்.

 282. பேசி முடித்துக் கொள்ளுதல் - பெண் பார்த்தபின் இரு வீட்டாரும் கூடிப் பேசி நிச்சயம் செய்து கொள்வது.

283.  முறைச்சிட்டை எழுதுதல் - திருமண  முறைகளை நோட்டுகளில் எழுதிக் கொள்ளுதல்.

 284 . கல்யாணம் சொல்லுதல் - திருமணத்துக்கு  முதலில் அப்பா அம்மா சகோதர சகோதரி எல்லாரையும் வேவுக்கடகத்தில் தேங்காய் பழம் வைத்து அழைத்து பின் அனைவரையும் அழைத்தல் .இதற்கு அவரவர் பெரிய வீட்டில் சாமி அறையில் நடுவீட்டுக் கோலம் போட்டு வைத்திருப்பார்கள். வருபவர்கள் தடுக்கில் அமர்ந்து தலைப்பா கட்டி திருமணத்துக்கு வரச் சொல்லி அழைப்பார்கள். 


285. முகூர்த்தக் கால் ஊன்றுதல் - திருமணத்துக்கு  ஒரு வாரம் அல்லது 4 நாள்/ 3 நாள் முன்பு முகூர்த்தக் கால் ஊன்றுவார்கள். அதன்பின் திருமணம் முடியும்வரை நல்லது கெட்டதுக்கு விசாரிக்கப் போகமாட்டார்கள்.

286. நடுவீட்டுக் கோலமிடுதல்  - நடுவீட்டிலும் நடையிலும் நடுவீட்டுக் கோலம் இடுவார்கள். பெரும்பாலும் பங்காளி வீட்டுப் பெண்கள் வந்து சட்டம் வைத்துக் கட்டம் போட்டு கோலக்கூட்டைக் கரைத்துத் துணி கொண்டு  கோலமிடுவார்கள்.

வெள்ளி, 25 மார்ச், 2016

தங்கத் தாமரையில் உங்களுக்கும் இடமுண்டு !

சுபா அவர்களின் ( எழுத்தாளர்கள் சுரேஷ் , பாலகிருஷ்ணன் ) தங்கத்தாமரை பதிப்பகத்தில் வரவிருக்கும் நூல் ஒன்றிற்கு நீங்களும் பங்களிப்புச் செய்யலாம். இதை வேதகோபாலன் மேம் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். இதில் என் அன்புத் தங்கை ஷாலினி சாமுவெல் என்னை ( டாக் ) பிணைத்திருந்தார்கள்.

நன்றி இருவருக்கும் மற்றும் சுபா அவர்களுக்கும் தங்கத்தாமரைப் பதிப்பகத்துக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என இங்கே பகிர்ந்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் தங்கள் அனுபவங்களையும் எழுதி அனுப்புங்க. இதை அனுப்ப ஈமெயில் ஐடி வேணும்னா பின்னூட்டத்துல உங்க ஈமெயில் ஐடில வந்து பின்னூட்டமிடுங்க. அனுப்பி வைக்கிறேன். இல்லாட்டி முகநூலில் வேதா கோபாலன் மேடத்திடமும் ஷாலினி சாம்வெலிடமும் இன்பாக்ஸில் பெற்றுக் கொள்ளலாம்.

வாழ்த்துகள் மக்காஸ். :)

///வேதாகோபாலன் பதிவு
//copy paste post
பாலகிருஷ்ணன் (சுபா/ பாலா) இன்று போன் செய்தார்.

சில சருகுகள் துளிர்க்கின்றன.சில சருகுகள் துளிர்க்கின்றன.

மனோகரமான மாலைப் போதில் சிட்டுக்குருவி ஒன்று தன் குஞ்சுகளுக்கு சத்துணவு கொடுத்துவிட்டு மின்மினிக்களைப் பிடித்துப் போட்டுத் தன் வீட்டுக்கு விளக்குப் போட்டது. இந்த ரம்யத்தை ரசித்துக் கொண்டிருந்த ரம்யா – வெள்ளை வெளேரென்று ஆறடி உயரத்தில் – ஆளை அசரவைக்கும் அழகில் – ஏக்கம் நிறைந்த பெரிய விழிகளுடன் சின்ன மூக்கும் சிரிப்பு மறந்த இதழ்களுமாய் இருப்பவள் – ஹாலில் மாட்டியிருந்த ஜப்பான் கடிகாரத்தில் குயில் வந்து ஐந்துமுறை கூவிவிட்டுப் போனவுடன் திடுக்கிட்டு, ‘ஓ ! நேரமாகி விட்டது. அவர் வந்துடுவார் ‘ என்ற நினைப்பில் அவசர அவசரமாக எழுந்தாள்.

இப்படித்தான் முந்தாநாள் இவளும் வினோத்தும் இவள் அக்கா மகள் சுபாஷிணியின் கல்யாணத்துக்குக் கொடுப்பதற்கு பரிசுப்பொருள் வாங்க ஷாப்பிங்க் போயிருந்த போது எதிரே குட்டியாய் வெள்ளை ரோஜாப்பூ ஒன்று தத்தித் தத்தி நடந்து வர, இவள் ஆசையுடன் போய் அதன் கன்னத்தை லேசாய்த் தொட்டுப் பார்க்க, அது தன் குண்டுக் கண்களால் இவளைப் பார்த்து சிநேகமாய்ச் சிரிக்க, இவள் பரவசத்துடன் அதை வாரிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு அதன் கையில் சாக்லேட்டுக்களை அடுக்க அது ‘தின்கின்றேன்’ என்று பேர் பண்ணிக்கொண்டு கையில், வாயில் , மூக்கில், கன்னத்தில், அப்பிக்கொண்டு இவள் முகத்திலும் தேய்த்துவிட்டு வாயினுள் போட “டேய் சந்துருக் கண்ணா ! இங்கேயாடா இருக்குற ! படுவாப் பய ! உன்னை எங்கேயெல்லாம் தேடுறது “ என்று கூறிக்கொண்டு அங்கு வந்த ஒரு ஆண் வினோத்தைப் பார்த்ததும் “ஹலோ சார் ! நீங்க எங்க இப்படி ? இவனுக்கு ரெண்டு நாள் கழிச்சுப் பிறந்தநாள். அதுக்காக பாபா சூட் வாங்க வந்தோம். நாங்க ட்ரஸ் தேர்ந்தெடுத்துக்கிட்டு இருக்குறப்ப என் வைஃப் ’என்னங்க சந்துரு எங்கேங்க’ என்றாள். நான் அலறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்தேன். வந்து பார்த்தா, இப்பத்தான் நிம்மதியா இருக்கு “ என்று கூறினான்.

புதன், 23 மார்ச், 2016

கம்பர் திருவிழா - 2016 . மக நாள் மங்கல நிகழ்வுகள்.

கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் மற்றும் அவரது இளவல்களின் பெருமுயற்சியால் காரைக்குடியில் கம்பர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் நாளாம் மக நாளில் ஏகப்பட்ட கொண்டாட்டங்கள். கண்ணுக்கும் செவிக்கும் , மனதுக்கும் , சிந்தனைக்கும்  அதன்பின் வயிற்றுக்கும் மாபெரும் விருந்து படைத்தது சிறப்பு வாய்ந்த கம்பன் கழகம்.

காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஸ்ரீராமரும் சீதையும் எழுந்தருளி அருள் பாலித்தனர். கோட்டையூரைச் சார்ந்த புரவலர், வள்ளல் பெருமகள்,  திருமதி வள்ளி முத்தையா ( வள்ளல் அழகப்பரின் தமையனாரின் மகள் ) அவர்களின் இல்லத்திலிருந்து ஸ்ரீராமரும் சீதையும் தம்பதி சமேதராக திருச்சின்னங்கள் ஒளிர எழுந்தருளி கிருஷ்ணர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
கோயிலில் தீப தூபத்துக்குப் பின் தேவகோட்டை கலைவாணி வித்யாலயா மாணாக்கியர் கொடி பிடித்து மலர் தூவி நடனமாடிப் போற்றித் துதித்து ஊர்வலத்தின் முன்னே வர , சங்கொலிக்க, நாதஸ்வரமும் மேளமும் இசைவெள்ளமாய்ப் பொங்க., தீவட்டி பிடித்தபடி இருவர் முன்னே கட்டியம் கூறிச் செல்ல, வேஷ்டி மற்றும் மஞ்சள் & பிங்க் நிறச் சட்டையணிந்த இளைஞர் பட்டாளம் தோளுக்கினியானில் ஸ்ரீராமர்சீதையைத் தாங்கிக் கவரி வீசி வந்தனர். 
நாட்டியத் தாரகைகள் முன்னே செல்ல கம்பீர அணிவகுப்பில் ஸ்ரீராமரும் சீதையும் கம்பருடன் சேவை சாதித்து அருளினார்கள். ( திரு.வீரப்பன் அவர்கள்  கம்பன் புகைப்படத்தைத் தாங்கி வருகின்றார்கள் )
மனம் கவர் தம்பதிகள் கொற்றக் குடையின் கீழ் உலா.

செவ்வாய், 22 மார்ச், 2016

வினையால் அணைதல். :-வினையால் அணைதல். :-

அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான் இன்னமும்.

இவளுள் லேசாய் எரிச்சல் அரும்பத் தொடங்கி இருந்தது.

“ ஏய். ! இங்கே பாரேன். ! ச்சு, இங்க என்னைப் பாரும்மா. ! “

“எவ்வளவு நேரமா கூப்பிடுறேன். “ பஸ்ஸின் அருகில் இன்னம் நெருங்கி வந்தான். நண்பர் குழாம் சற்றுத் தள்ளிப் பிளாட்பாரத்தில் நமுட்டுச் சிரிப்புடன்.

“ ஏய். ! பார்க்கப் போறியா இல்லையா இப்ப ?” இதற்காகவே இவன் பக்கம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்.

“இவன் என்ன சொல்றது ? நாம என்ன பாக்கிறதுன்னு இருக்கிறியா ?” அவன் பக்கத்தில் நின்று அவன் தோளின் மேல் கைக் கோர்த்துக் கொண்டிருந்தவன் நக்கலாகக் கேட்டு விட்டு உரக்கச் சிரித்தான்.

இவளுக்கு மூஞ்சி ஜிவுஜிவுத்துப் போயிறு. இன்னமும் இவள் ஜன்னல் பக்கம் திரும்பவில்லை.

பிக்னிக்குக்காக முக்கொம்பு வந்திருந்தனர் அந்தக் கல்லூரிப் பெண்கள். ஏழு பேருந்துகள் முழுக்க முழுக்க விதம் விதமான மலர்கள். எவனுக்குத்தான் அலுக்கும் அந்த மலர்க் கண்காட்சியைப் பார்க்க. போதாக்குறைக்கு அந்த மெயின் ரோட்டில் இரண்டு கல்லூரிகளும் மாணவர் விடுதிகளும் கடைகளும் இறைச்சலுமாக இருந்தன.

காலேஜ் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஏழு பேருந்துகளும் கோயிலுக்கு, பிள்ளையார் தரிசனத்துக்கு, காற்று வாங்க, கடைத்தெருவில் இருந்த வெளிநாட்டுச் சாமான் கடைகளில் வீட்டாருக்கு கிஃப்ட் வாங்க, ஒன்றும் வாங்காமல் விலை மட்டும் கேட்டுக் கும்மாளமிட்டுத் திரிந்துகொண்டிருந்த கும்பல்களின் திரும்பல்களுக்காகக் காத்திருந்தன.

அவள்தான் அந்த பஸ்ஸின் ரெப்ரசெண்டேட்டிவ். சிஸ்டர் “ மதுரா எல்லாரும் வந்திட்டாங்களான்னு அட்டெண்டன்ஸ் எடுத்திரும்மா என்க. இதுதான் சமயம் என வேகமாக எழுந்து அட்டெண்டன்ஸ் எடுக்க ஒருத்தி மட்டும்தான் வரவில்லை. அனைவரும் பஸ்ஸினுள் அடைகாக்கும் கோழியாட்டம் அடைந்து கொண்டிருக்க. வந்து ஃபுட்போர்டுக்கு அருகினில் இருக்கும் சீட்டினில் வந்து அமர்ந்தாள்.

வந்த வேகத்தில் மேலே இருந்த லக்கேஜ் காரியரின் முனை நடு மண்டையில் மடாரென இடித்துவிட “ ஆ. அம்மா “ என முனகினாள். முகம் லேசாய் வலியில் கோண தலையைத் தடவி விட்டுக் கொண்டு அமர

திங்கள், 21 மார்ச், 2016

விருட்சங்களை நடுவோம் ! வனவாழ்வியல் காப்போம். !


PLANT MORE TREES.! SAVE WILD LIFE. ! - 2016 ( THEME FOR FOREST DAY. )

விருட்சங்களை நடுவோம் ! வனவாழ்வியல் காப்போம். ! இதுதான் 2016 க்கான வனநாள் கருப்பொருள். 

குஜராத், கேரளா, கோவா, பெங்களூரு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பயணம் செய்த போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

விந்திய சாத்புரா மலைகள் மற்ற மலைகளிலும் உள்ள வனக்காடுகளை ஓரளவுதான் எடுக்க முடிந்தது ( வேகமான ரயில் பயணத்தின் ஊடே ) ,

வனங்களின் மூலம் ரப்பர், ரேயான், மரம், மூங்கில், பழங்கள், எண்ணெய் வித்துகள், மற்றும் உணவுப் பொருட்களும், மூலிகைப் பொருட்களும் எரிபொருட்களும் கிடைக்கின்றன.  

விலங்குகளுக்கான மேய்ச்சல் நிலமாகவும், வன உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், இயற்கைப் பேரிடர் ஏற்படா வண்ணம் மண் அரிப்பைத் தடுக்கவும் மழைப் பொழிவை அதிகமாக்கவும் உதவும்  விருட்சங்களை நடுவோம். வன வாழ்வியல் காப்போம்.


குஜராத்தில் வெராவலில் இருந்து போர்பந்தர் செல்லும் வழியில்.
பெங்களூருக்கு அருகில் உள்ள ஹோசூருக்கு முன்னால்.
விந்திய சாத்புரா காடுகள்.

சனி, 19 மார்ச், 2016

கம்பர் விழா – 2016கம்பர் விழா – 2016

கம்பன் கழகத்தார் வருடா வருடம் நிகழ்த்தும் கம்பர் விழா இந்த ஆண்டு (2016 ஆம் ஆண்டு) வரும் மார்ச் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது. அனைவரும் வருக. கம்பரசம் பருகுக.


வியாழன், 17 மார்ச், 2016

புதினம். உலகளாவிய சிறுகதைப் போட்டி.-1,00,000 /- ரூபாய் பரிசு.

இமேஜாக மாற்றி அனுப்பிய சகோ ராம்ப்ரசாத்துக்கு நன்றி. :)
லண்டனில் இருந்து 20 ஆண்டுகளாக வெளிவரும் புதினம் என்ற இலவச மாதாந்திர தமிழ் சஞ்சிகைக்காக உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாய்மையின் சிறப்புப் பற்றி, “ தாயெனும் கோயில் ”என்னும் தலைப்பில் இன்னுமொரு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.உங்கள் நெஞ்சைத் தொட்ட தாயின் நினைவையும் எழுதி அனுப்புங்க. ஏ -4 ஷீட்டில் 3 முதல் 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பனும். ( அமரர் சின்னத்தங்கம் ரத்னம் நினைவாக அவரது புத்திரர் ரத்னம் சிவானந்தன் ( KINGSBURY ) இந்தப் போட்டிக்கான ஆதரவை வழங்குகிறார். 

விதிகளைக் கவனமாப்  படிச்சுக்குங்க. ஜூன் 1. 2016 க்குள் அனுப்ப வேண்டும்.பரிசுத் தொகை ஒரு லட்சமாம். அதுனால ப்ரமாதமா எழுதுங்க. முக்கியமா அவங்க கேட்டிருக்கும்படி இலங்கை மக்களின் வாழ்வியல் பற்றி ஏ-4 ஷீட்டில் 10 - 12 பக்கத்துக்கு மிகாம எழுதி, இது உங்க சொந்தப் படைப்புத்தான்னு உறுதிமொழி கொடுத்து 1.6.2016 க்குள்ள கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புங்க.

வியாழன், 10 மார்ச், 2016

நீல ரயிலில் ஒரு நீண்ட பயணம்.


1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

உண்மைதான். இரயில் ஒரு அழகான ராட்சசன். எப்போதும் அவன் ஓடிவரும் அழகைக் காணக் காத்திருப்பேன். என் முதல் இரயில் பயணம் அறந்தாங்கியிலிருந்து பட்டுக்கோட்டை என நினைவு. காரைக்குடியில் இருந்து அறந்தாங்கிக்கு பஸ்ஸிலும், ங்கேயிரந்த பட்டுக்கோட்டைக்கு ட்ரெயினிலும், ன்பின் ஸ்டிலிருந்து ஜட்கா ( குதிரை ) வண்டியில் பஸ்ஸ்டாண்ுக்குப் போய் மன்னார்குடிக்கு ( ராஜமன்னார்குடி) பஸ்ஸிலும் செல்வோம். அப்போதெல்லாம் கரியை எரிபொருளாய்வைத்து ஓடும் ரயில் வண்டியில் ஜன்னலோரம் அமர்ந்தால் கண்களில்  கரித்தூசி  விழுவது  நிச்சயம். கண்கைக் கசக்கிகொண்டே பயணிப்பதும் அதன் தாலாட்டில் உறங்குவதும் உலகமகா இன்பங்கள்.


2. மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

என் கணவருடன் செல்லும் எல்லாப் பயணங்களும் மகிழ்ச்சியான பயணங்கள்தான். ஆனால் முதன் முதலில் 2009 செப்டம்பரில் துபாய்க்கு ஃப்ளைட்டில் சென்றது மிக மிக மறக்க முடியாத அனுபவம். ஏர்போர்ட்டில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது. ஒரே பிரமிப்பு. பறக்கும்போது தலை சுத்துமோ என்றெல்லாம் கவலை. முதல் ஃப்ளைட் பயணம். என் மூத்த மகன் வந்ததால் நானும் என் பெற்றோரும் கவலையில்லாமல் பயணம் செய்தோம். அதிலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் துபாயில் இருக்கும் என் தம்பி மெய்யப்பன் நாங்கள் அனைவரும் அவன் அங்கே இருக்கும்போது ஒரு முறையாவது அவன் வீட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக இங்கேயிருந்து ஃப்ளைட்டில் கால் எடுத்து வைப்பதில் இருந்து திரும்ப வீட்டில் இறங்கி வந்து அமரும் வரை உள்ள ஒவ்வொரு திர்ஹாமையும் செலவு செய்தான். மேப் போல போட்டே அனுப்பி விட்டான். பாஸ்போர்ட் எடுத்ம். விசா இன்சூரன்ஸ் எல்லாம் அவன்தான். 

பணத்தைப் பற்றிய கவலை இல்லை. ஏன் எதைப் பற்றிய கவலையுமே இல்லை. அவன் பாதுகாப்பில் பராமரிப்பில் ஒரு மாதமும் குழந்தைகளைப் போலக் குதூகலமாய்த் திரிந்தோம். அவன் மனைவியும் மிக அருமையான பெண். பெட்டர் ஹாஃப் என்பார்களே அதைப் போல. அவன் கொடுத்தது போக தினம் தினம் நூறு திர்ஹாம் செலவுக்கும் J அதன் பின் திரும்பி வரும்போது ஆளுக்கு ஆயிரம் திர்ஹாமும் அவர் பங்கிப்பாகக் கொடுத்தார். அதை அங்கேயே தங்கமாக வாங்கி வந்துவிட்டோம். 

அதன் பின் 4 வருடங்கள் கழித்து இன்னொரு பயணமும் போய் வந்து விட்டோம். அதேபோல் இந்தத் ும் எல்லா செலவும் தம்பியுடையதே.  அங்கார்ஜான்யுமெண்ட், மியூசியம், எமிரேட் மால், லூலூ மால்,இபுன் பா மால், அட்லாண்டிஸ், டால்ஃபின் ோ, வொண்டர் பஸ், க்ரீக்ார்க், ஆப்ராவில் பம், ுர்ஜ் அல் அராப், புர்ஜ் கீஃபா, (உலத்ிலேயே உயானர்.) ஆகியார்த்ோம்.க்க இயை. 

ே சன் குடும்பத்ாரோடு அறை முருகன்கத் ிசித்ும், சென்றுடம் ஹையிலிரந்து ஃப்ளைட்டில் மும்பை சென்று அங்கேயும் ஜிர்லிங்கங்கத் ிசித்ும் மக்க இயு. (கணவருடன் சிங்கப்பூர், மலேஷியா சென்று வந்ததும் இனிய அனுபவம் )

புதன், 9 மார்ச், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

நிறைய சொல் வழக்குகள் வழக்கொழிந்து போய் விட்டன.. மிச்சமிருக்கும் இவற்றை பதிவு செய்யவே இது..

261. மக்களுக்கு அப்பச்சி - கணவரைக் குறிப்பிடுவது. என் மக்களுக்கு ( பிள்ளைகளுக்கு அப்பா ) அப்பச்சி என்று அடுத்தவரிடம் சொல்லும்போது குறிப்பிடுவது. கணவர் வெளியில் சென்றிருக்கும்போது ஏதும் தாக்கல் சொல்லவேண்டி  யாரும் வீட்டுக்கு வந்திருந்தால் அவர்களிடம் ”எம் மக்களுக்கு அப்பச்சி வந்ததும் சொல்றேன் ”என்பார்கள் இல்லத்தரசிகள். ( மனைவி )

262. நாச்சியா மகன் - இதுவும் கணவரைக் குறிப்பிடுவது. நாச்சியா என்று மாமியாரைக் குறிப்பிடுவது. பிள்ளைகள் சேட்டை செய்தால் ”சேட்டை கொறையலையே. வரட்டும் நாச்சியா மகன் “ என்று பிள்ளைகளை அன்பாக மிரட்டுவார்கள். வெளியே சென்றிருக்கும் கணவர் வந்ததும் சொல்லி மாட்டிக் கொடுப்பதாக அர்த்தம். :)

263. சோறு உண்ணு/சோத்தை உண்ணுட்டுப் போ   -  சோற்றை உண்பது. உண்ணுதல் என சாப்பிடுவதைக் குறிக்கிறது. மென்று சாப்பிடுதல் எனவும் சொல்லலாம்.

264. வெஞ்சனம் - காய்கறி. குழம்பில் இருக்கும் காய், பொரியல் , கூட்டு, பிரட்டல், மசாலை மண்டி வறுவல் , துவட்டல் போன்ற சமைத்த காய்கறிகள். இன்னைக்கு என்ன வெஞ்சனம் சமைச்சே என்று விசாரிப்பதுண்டு. இன்னிக்கு என்ன வெஞ்சனம் வைக்க என்று கணவரிடம் கேட்டுக் கேட்டு மனைவியர் சமைப்பதுண்டு. :)

265. லோட்டா - டம்ளர், தண்ணீர் அருந்தும் குவளை.

செவ்வாய், 8 மார்ச், 2016

புதுக்கவிதை இயல்புகள்:-புதுக்கவிதை இயல்புகள்:- ( அசைன்மெண்டை கவிதையா எழுதி இருக்கேன். :)

12.3.84.

ச. தேனம்மை
இளம் அறிவியல்
வேதியல் இரண்டாமாண்டு.

முன்னுரை :-

புதுக்கவிதை புதியவர்களின்
சிந்தனையைப் ’புதுக்க விதை’
புதைக்கின்றது.
கருத்துக்களைக் காப்பியடித்துக்
கொண்டிருந்த காப்பி(ய)
நாயகர்களின் முகத்திரையைக்
கிழித்தது புதுக்கவிதை.
வார்த்தைகளைக் கோர்த்து
வாய்ச்சாலம் பண்ணுவதல்ல இது.
‘பொங்கிவரும் வலிமைமிக்க
உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அவை’
யாப்பினை அறிந்தும்
யாப்பினை மீறி வெளிப்படும்
கவிதா விலாசங்கள்.
கவிதா விசாலங்கள் இவை.
‘உள்ளுறை உவமை’யையும்
உவப்பக் கொண்டவை.
பரமவைரியைப்
பக்கதில் பார்த்தாற்போல்
பளிச்சென்று துப்பிக்
குற்றங்களைச் சாடுபவை.
ஜீவா பாரதி தாசன்கள்,
பாலா, நாமக்கல்லின்
கவிதா விலாசங்கள்.
கவிதா விசாலங்கள்.

திங்கள், 7 மார்ச், 2016

ஆயிரத்தில் ஒருவர் நீங்கதான்.

ஆயிரத்தில் ஒருவர் நீங்கதான். அந்த ஆயிரத்தில் ஒருவரின் ஒரே ஒரு  கவிதையில் நம்மோடதும் இருக்கணும்.எடுங்க பேனாவை/லாப்டாப்பை, தட்டுங்க கவிதையை அல்லது கவுஜய. அனுப்புங்க கீழே உள்ள ஜி மெயில் முகவரிக்கு.

நாம மட்டும் பர பரன்னு அலைஞ்சா போதுமா. இன்னபிற ப்லாகர்ஸையும் ஃபேஸ்புக்கர்ஸையும் தூக்கம் இல்லாம அலைய விட வேண்டாமா. 

 நண்பர் ஷண்முகம் சுப்ரமணியம் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கிறேன்.

பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

641.Nadappavai elllam nallabadiyaagathan nadakkindrana.. Nam anumathippum aamoothippum poruttillai endra kuraiyaith thavira..

642. ஹலோ.. எல்லாரும் மாத்தி மாத்தி லைக் போடவும் கமெண்ட் போடவும் வைக்கிறீங்களே.. எப்பத்தான் விடுவீங்க.. வேற வேலையெல்லாம் இருக்கில்லா.. :)

இந்த அலைகள் ஓயாது விடு ஜூட்..

643. ஒரு எழுத்தின் சாரத்தைத் திசைதிருப்பிவிட அதில் இருக்கும் சில அநாவசிய வார்த்தைகளே போதுமானதாயிருக்கின்றன.
‪#‎சொல்வன_திருந்தச்_சொல்‬.

644. ஒரு விதையைப் போல
ரகசியமாய்ப் புதைக்கிறேன்
உன் நினைவை.
கிச்சுக் கிச்சுத் தாம்பூலம்
கியா கியா தாம்பூலம் எனக்
கைவிரித்து மடக்க மடக்க
கவிதை விருட்சமாய்க்
கிளைவிட்டெழும்பிக்
காட்டிக் கொடுத்தேவிடுகிறது
எனக்குள் என்னை. :)

645.தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்..

’பேதை மனுஷியே ’கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்.

ஞாயிறு, 6 மார்ச், 2016

கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .

”ராமன் நான்கு கொலைகள் செய்திருக்கிறான். ஆனால் ராவணன் உயிர்க்கொலை செய்ததே இல்லை. “ என்று கம்பராமாயணப் பேச்சின் ஊடே ஒரு எதிர்பாரா செய்தியை கம்பனின் கோட்டையான காரைக்குடியில் கம்பன் கழகத்தில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் வழங்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார் நண்பர் வளரும் கவிதை முத்து நிலவன் அவர்கள். !!!

விஷயம் இதுதான். மார்ச் மாத கம்பர் விழா - 5- 3- 2016. அன்று காரைக்குடி கிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் நண்பர் பதிவர் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்று மகா சுந்தர் அவர்களும், அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் அவர்களும் வாதாடினார்கள்.


மிக சுவாரசியமான இவ்விழாவுக்கு மகா சுந்தர் பேசி முடிக்கும்போதுதான் செல்ல இயன்றது. அடுத்து முத்துநிலவன் அவர்கள் செறிவார்ந்த உரையையும் மு பாலசுப்ரமணியன் அவர்களின் உரையையும் , கம்பன் அடி சூடி அவர்களின் நெகிழந்த உரையையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன். 

வெள்ளி, 4 மார்ச், 2016

நேர் நேர் தேநீரில் தேனம்மைலெக்ஷ்மணனின் தோழமை.

நேர் நேர் தேநீர் என்ற நிகழ்ச்சி தினந்தோறும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் இடம்பெற்று வருகிறது. அதில் பல ப்ரபல கவிஞர்களின் கவிதைகள் தினம் காலை நேரத்தில் தேநீருடன் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.


தோழமை - தேனம்மை லட்சுமணன்தேனம்மை லட்சுமணனின் தோழமை
Posted by நேர் நேர் தேநீர் on Thursday, March 3, 2016

வியாழன், 3 மார்ச், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!


241. அடம் - அடம் செய்யும் குழந்தைகளைக் குறிப்பது.

242. சீண்ட்ரம் - எது கேட்டாலும் கோபத்தோடு கத்தும் குழந்தைகளைக் குறிப்பது.

243. பொல்லாப் பூடம்.. -  சேட்டை செய்யும் குழந்தைகளை குறிப்பது.

244. அட்டணக்கால் - கால் மேல் கால் போட்டு அமர்தல்.

245. அலக்கழிக்கிது - கேலி செய்யுது

246.ஒறண்டை - வம்புக்கு இழுப்பது
Related Posts Plugin for WordPress, Blogger...