எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குழந்தைப் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைப் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 டிசம்பர், 2016

பொருட்காட்சி :-


பொருட்காட்சி :-

குட்டிப்பாப்பா குட்டிப்பாப்பா எங்கேபோறீங்க
பொருட்காட்சித் திடலுக்குத்தான் போகுறேனுங்க.

பொருட்காட்சித் திடலுக்குப்போய் என்னசெய்வீங்க
ராட்டினத்தில்ஏறி உலகைச்சுத்திப் பார்க்கப்போறேங்க

ராட்டினத்தில் சுத்தியபின் என்னசெய்வீங்க
பலூன்பொம்மை பஞ்சுமிட்டாய் வாங்கப்போறேங்க.

பஞ்சுமிட்டாய் தின்னபின்னே என்னசெய்வீங்க
பஃபூன்மாமா பல்டிஅடிப்பதை பார்த்துச்சிரிப்பேங்க.

பல்டிஅடிப்பதை பார்த்தபின்னே எங்கேபோவீங்க
குட்டியானை, சிங்கவித்தை பார்த்துரசிப்பேங்க.

அம்மாகையைப் பிடித்துக்கொண்டு சென்றுவாருங்க
அழகாய்ப்பொருட் காட்சித்திடலை ரசித்துவாருங்க


வெள்ளி, 9 டிசம்பர், 2016

மீனு எத்தனை மீனு :- ( குழந்தைப் பாடல்கள் )

மீனு எத்தனை மீனு :-

தங்க மீனு தேவதை மீனு
பூக்கொண்டை மீனு ஆபரண மீனு
கத்தி மீனு பென்சில் மீனு
கப்பி மீனு நெத்திலி மீனு

ப்ளாசம் மீனு ப்யூட்டி மீனு
டைகர் மீனு ரைடர் மீனு
சக்கர் மீனு ஃபைட்டர் மீனு
ஆஸ்கார் மீனு அரோவணா மீனு

எத்தனை மீனு  எத்தனை மீனு
அழகுக்கு மீனு அமைதிக்கு மீனு.
கண்ணுக்குப் பயிற்சி மனதுக்கு அமைதி
வீட்டுக்கு இதமா தொட்டி மீன் வளர்ப்போம்.

சனி, 3 டிசம்பர், 2016

தொட்டிச் செடி வளர்ப்போம் :- ( குழந்தைப் பாடல்கள் ).

தொட்டிச் செடி வளர்ப்போம் :-

பட்டுரோஸை ரசிக்கலாம்.
புதினா வாசம் பார்க்கலாம்
துளசி இலைகள் எட்டிப் பார்க்கும்
தொட்டிச் செடி வளர்ப்போம்.

ரோஜாப்பூவு தலையாட்ட
சாமந்திப் பூவு சாமரம் வீச
சங்குப் பூவும் இதழ் சிரிக்க
ஜன்னலோரம் செடி வளர்ப்போம்.

காற்றை சுத்தம் செய்யும்
வீட்டை அழகாய் மாற்றும்
அம்மாவின் சமையலுக்குதவும்
அருமையான செடிகள் வளர்ப்போம்.

பறவைக்கூட்டம் காப்போம். :- ( குழந்தைப் பாடல்கள். )

பறவைக்கூட்டம் காப்போம். :-


கோடைக்காலம் வருகுது.

கொள்ளை வியர்வை பெருகுது
குடியிருக்க இடமில்லாமல்
கீச்சுக்கூட்டம் அலையுது.


ரொட்டித் துண்டு போடலாம்
குருணை, தானியம் போடலாம்
குட்டிக் கிண்ணங்களில் நீரூற்றி
குருகுகள் தாகம் தணிக்கலாம்.

கோடை காலம் தீரும்வரை
கொள்கையொன்று கொள்ளுவோம்
பறவைக் கூட்டம் பசியாற
பரிந்தே உதவிகள் செய்திடுவோம்.


வெள்ளி, 2 டிசம்பர், 2016

கண்விழித்தெழுந்திடு பாப்பா :- ( குழந்தைப் பாடல் ).

கண்விழித்தெழுந்திடு பாப்பா :-

கண்விழித்தெழுந்திடு பாப்பா
கன்னுக்குட்டியும் கால் எட்டித் துள்ளுது.
துள்ளிக் குதித்தே பள்ளிக்குச் செல்ல
கண்விழித்தெழுந்திடு பாப்பா .

கணக்கும் ஆங்கிலமும் அந்நியம் இல்லை
விஞ்ஞானம் என்றும் அஞ்ஞானம் போக்கும்
வரலாறும் உனக்கு  வாழ்க்கையை போதிக்கும்.
தமிழோ உனக்கு அமிழ்தமாய் இனிக்கும்.

ஆசிரியர்கள் உனக்கு அருமையாய்க் கற்பிப்பர்.
அம்மாவும் நண்பர்களும் அருதுணையாய் இருப்பர்
கண்ணை இறுக்கும் சோம்பலைக் களைந்திடு
கண்விழித்தேதான் பள்ளிக்குக் கிளம்பிடு.

வியாழன், 9 ஜூன், 2016

கோகுலத்தில் குழந்தைப் பாடல்கள். புத்தகத் திருவிழா போகலாம்.

5. புத்தகத் திருவிழா போகலாம். :-

புத்தகத் திருவிழா போகலாம்
பொம்மைப் படங்கள் வாங்கலாம்

புதுப் புதுச் சேதிகள் கற்கலாம்
பரிசுப் பொருளாய்க் கொடுக்கலாம்.

திங்கள், 4 ஏப்ரல், 2016

கோகுலத்தில் குழந்தைப் பாடல்கள் . வயல் கம்பளம்.

3.வயல் கம்பளம். :-


மேகப்பஞ்சு அவிழுது

மழை நூலை உதிர்க்குது

நீர்ப்புடவை நெய்யுது

மின்னல் சரிகை சேர்க்குது.

Related Posts Plugin for WordPress, Blogger...