செவ்வாய், 17 மே, 2016

கோகுலத்தில் குழந்தைப் பாடல்கள். - விடுமுறை விளையாட்டு.

4. விடுமுறை விளையாட்டு :-கண்ணாமூச்சி ஆடலாம்
கைகளைத் தட்டிப் பாடலாம்
கபடிப்போட்டி நடத்தியே
காற்றாய்ச் சுழன்று சாடலாம்.

கோகோ என்றே துரத்தலாம்
கூடைப்பந்தை வீசலாம்
வளையப்பந்து போடலாம்
வாட்டங்களை ஓட்டலாம்.

க்ரிக்கெட் மட்டை தூக்கலாம்
க்ரவுண்டைச் சுற்றி ஓடலாம்
வீட்டுள்ளே முடங்காமல்
வெளியே விடுமுறை களிக்கலாம்.

டிஸ்கி :- தேனாஞ்சி என்ற புனை பெயரில் 2016 மே மாத கோகுலத்தில் வெளியானது.  கோகுலத்துக்கு நன்றி. !
டிஸ்கி:- கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்பைப் பாராட்டிய நெய்வேலி வாசகி  எஸ். கே. ஸ்ரீவித்யா அவர்களுக்கு நன்றிகள். :)

4 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

விடுமுறை விளையாட்டை ரசித்தேன். நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பாராட்டுகள்.....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...