புதன், 4 மே, 2016

மூன்று நகைச்சுவை நூல்கள் - ஒரு பார்வை.


 வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.

என்பது போல் எண்ணங்களால் உயர்வோம் மகிழ்வால் ஒன்றிணைவோம் என்பதைச் சொல்லும் 20 கட்டுரைகள் கொண்ட நூல் இது. தினத்தந்தி அதிபர் திரு. சிவந்தி ஆதித்தன் முன்னுரை அளித்துள்ளார்.

அங்கங்கே திருக்குறள், திருவருட்பா, நான்மணிக் கடிகை, இனியவை நாற்பது, சிலப்பதிகாரம், நாலடியார், திருவாசகம், தேவாரம், ஆகியவற்றிலிருந்தும் அப்பர் பெருமான், சம்பந்தர், தொண்டரடிப்பொடி ஆழ்வார், விவேகானந்தர், கணியன் பூங்குன்றன், பாரதி, ஔவையார், வள்ளுவர், பட்டினத்தார், பிசிராந்தையார், குருநானக்,  கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரை மேற்கோள் காட்டியும் சிறப்பாக எழுதி இருக்கின்றார்உலகத்தை ஒட்டித் தனிமனிதனின் மகிழ்ச்சி, இனிய குடும்பத்தின் மகிழ்ச்சி, சுற்றம் போற்றுதல்,  கல்வி ,செல்வம், ஒழுக்கம், ஆகியவற்றின் சிறப்பு, கவலை , கோபம், மன அழுத்தத்தை நீக்குதல், பணி செய்யும் இடத்தில் பண்பு, இயந்திர மயமாதலும் இயற்கைச் சூழலும் பற்றியும், காதல் திருமணம் குழந்தைச் செல்வம் பற்றியும் உறவு முறைகளைக் கையாள்வது பற்றியும் கூறியிருக்கிறார்.

இன்னும் புதியன படைத்தல்  , காலத்தே முயற்சி செய்தல்,திட்டமிடல் , அனுசரித்துச் செல்லுதல்,  புலனடக்கம் கைக்கொள்வது  , ஐயம் ஒழித்தல், உடல் நலம் பேணுதல், ஆக்கப்பூர்வமான பொழுது போக்குகள், சோம்பலை அகற்றுதல், எண்ணங்களால் உயர்தல், பக்தியால் வரும் சக்தி, சமுதாய சேவை, புகழ் மற்றும் விருதுகள் பற்றியும் கூறி எப்படி வாழவேண்டும் எனவும் எப்படி வாழக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

நூல் :- மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி ?

ஆசிரியர் :- ஆர். பி. ஜெயபிரபு

வெளியிட்டோர் :- ஜெமினி பப்ளிகேஷன்

விலை :- 60 ரூ.

இவ்விரு நூல்களையும் எழுதியவர் நீலம் மதுமயன். இதில் நகைச்சுவைப் பூங்கா டிசம்பர் 2002 இலும் மேடையில் நகைச்சுவை டிசம்பர் 2003 இலும் வெளிவந்துள்ளது. திருமணப் பரிசுக்காகவே எழுதப்பட்ட நூல் வகைகள் இவை.

நெருக்கடியான வாழ்வியல் சூழலில் மனிதன் சிரிப்பதே அரிதாகிவிட்டது. இம்மாதிரி நூல்களைப் படிப்பதன் மூலம் அந்த நகைச்சுவையை மீட்டெடுக்கலாம்.
 வாங்க படிக்கலாம் சிரிக்கலாம் வகையறா. சில சிந்திக்கவும் வைக்கின்றன.

இரண்டு நூல்களில் இருந்து சில சிரிப்புகள். :-

1. தாயிடம் மகன் :- அம்மா சார் சொன்னாங்க  வாழைப்பழம் தின்றால் அறிவு வளருமாம்.

அம்மா :- உடனே அஞ்சு பழம் வாங்கிட்டு வந்து நீ ஒன்னத் தின்னுட்டு நாலு பழத்தை அப்பாவுக்குக் கொடு. !

2. ஆசிரியர் :- ஒரு ஆசிரியர் ஒரு தாய்க்குச் சமம்.

மாணவன் :- இல்லை சார் 54 தாய்க்குச் சமம்.!

ஆசிரியர் :- எப்பிடிப்பா ?!

மாணவர் :- சார் ஒரு தாயால் ஒரு நேரத்தில் ஒரு குழந்தையைத்தான் தூங்க வைக்க முடியும். நீங்க ஒரே நேரத்தில் எங்க 54 பேரையும் தூங்க வைக்கிறீங்களே சார். !!

3. மனைவி :- ஏங்க இந்தப் புதுப் பாத்திரங்களுக்கு எல்லாம் பாத்திரக் கடையில் போய் பேர் வெட்டிட்டு வாங்க.

கணவர் :- சரி

மனைவி :- என்னங்க இது என் பேரையோ உங்க பேரையோ போடாம சட்டுவம் , அண்டா, கரண்டி,டம்ளர், அகப்பைன்னு வெட்டிட்டு வந்திருக்கீங்க. !

4. குரு சீடனிடம் :- பல்லாண்டுகளாகக் காணாமல் எங்கே போயிருந்தாய்.

சீடன் :- 25 வருடம் நீரில் நடக்கும் கலை கற்கப் போயிருந்தேன். இப்போது ஆற்று நீரின் மேல் நடப்பேன் சுவாமி.

குரு :- அடப்பாவி 25 பைசா கொடுத்தால் படகோட்டி அக்கரையில் கொண்டு விடுவானே. 25 வருடத்தை வீணாக்கிட்டியே.

இது போல் ஒவ்வொரு நூலிலும் தலா 100 நகைச்சுவைப் பகிர்வுகள் உள்ளன.

நூல் :- நகைச்சுவைப் பூங்கா

ஆசிரியர் :- நீலம் மதுமயன்.

பதிப்பகம் :- பாரதி நிலையம்.

விலை :- 30 ரூ. 

நூல் :- மேடையில் நகைச்சுவை

ஆசிரியர் :- நீலம் மதுமயன்

பதிப்பகம் :- மெய்யம்மை நிலையம்

விலை  :- 30 ரூ.


3 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அறிமுகம்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...