பொண்ணுக பெஞ்ச்.
பள்ளிகளில், கல்லூரிகளில்
மெக்காலே கல்வித் திட்டம் தேவையில்லை, ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை, தாய்மொழிக் கல்விதான்
தேவை என்று அவ்வப்போது சர்ச்சை எழுந்து கொண்டிருக்கிறது.
ஆனால் ஜாலியா இருக்க
விடாம படி படின்னு வீட்டை விட்டுத் தொரத்துறாய்ங்க.,
நம்மள எல்லாம் பள்ளிக்கூடத்துக்கும் காலேஜுக்கும் அனுப்பிட்டாய்ங்களே என்று கஷ்டப்பட்டுப்
படிப்பதுபோல் ரெண்டு புக்கைக் கையில் வைத்து பாவ்லா காட்டிக் கொண்டு நண்பர்களுடன் ஊர்சுற்றிக்கொண்டு
அரட்டை அடிக்கும் பசங்க பொதுவாக அமரத் தேர்ந்தெடுப்பது வகுப்பறையின் கடைசி பெஞ்ச்தான்.
அதுனால அந்த பெஞ்சுக்கு மாப்பிள்ளை பெஞ்ச்னு பேரு.



