எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.


173. மாட மாளிகை கூட கோபுரம் என்பார்களே அதைப் போன்ற வீடுகள் கொத்தமங்கலம், ஆத்தங்குடி ஆகிய ஊர்களில் பார்க்கலாம். இது காரைக்குடியில் எடுத்ததுதான். மாடியில் 174. இரட்டைத் தூண்கள் கொண்ட வளைவு எவ்வளவு அழகாக இருக்கிறது. ஏதோ அரசர் அங்கே காட்சி தந்து ஆணை பிறப்பிக்கப் போகிறாரோ என எண்ணும்படி இருக்கிறது இந்த வீட்டின் அமைப்பு :)

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

”விழுதல் என்பது எழுகையே.” நிறைவுப்பகுதி.


பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்பீழை இருக்குதடி தங்கமே. என்று பாரதியார் பாடியது சும்மாவா.

பத்மகலாவின் வருகைக்காக சீலன் பிராங்போர்ட் ஏர்போர்ட்டில் வெளியேறுவார் கதவிற்கு முன்னால்  படபடப்புடன் காத்திருந்தான். விமானத்தை விட்டிறங்கி பாஸ்போட் பரிசோதனை முடிந்து வெளியே வரும் கதவுக்கூடாக  ஒவ்வொரு பயணியும் வரும் போதும் கதவு திறப்பதும் வருவது பத்மகலாவா என ஆவலுடன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில விநாடி இடைவெளிகளுக்குள் மூடித்திறக்கும் கதவிடுக்குள் ஊடாக பத்மகலாவின் உருவம் தெரிகிறதா என அவனின் கண்கள் தேடின.

இதோ ப்ராங்க்ஃபர்ட் ஏர்ப்போர்ட்டில் பீடு நடைபோட்டு தன்னருகே வரும் பத்மகலாவைப் பார்த்துப் பெருமிதமாக இருந்தது சீலனுக்கு. 

சீலன் தனக்காக ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடன் கண்களில் ஆவலும் பரசவமும் மின்ன காத்திருப்பதைக் கண்டதும் அவனை நோக்கி வேகமாக நடந்து வர அவனும் அவளை நோக்கி நடந்தான்.

சில விநாடிகள்தான், தாயிடம் சேய் பாய்ந்து சென்று அணைத்துக் கொள்வது போல் இருவரும் ஒருவரை அணைத்துக் கொண்டனர்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

என் ஜன்னலெங்கும்20.4.86.

14.என்
ஜன்னலெங்கும்
ஒட்டடைகள்,
துடைத்தெறிந்தும்
துடைத்தெறிந்தும்.

இணைந்து அளவளாவல், கூட்டு வாழ்வு, தோழமை வாழ்வு (டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் )– ஆன்மநேயக் காதலா.

டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் – ஆன்மநேயக் காதலா.

”கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வழி வழி வந்திருக்கு அது வாழ்வும் தந்திருக்கு டேக் இட் ஈஸி” என்று சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் 70 களில் ஆடிய கமலஹாசன் 90 களிலேயோ ”கல்யாணம் கச்சேரி கால்கட்டு எல்லாமே ரயில் ஏறிப் போயாச்சுடி.” என்று அவ்வை ஷண்முகியில் ஆடி இருப்பார். அது உண்மைதான்.

104 வது சர்வதேச மகளிர் தினத்துக்கான கருப்பொருளாக ஐநா அறிவித்துள்ள – தீம் - ”மகளிரை மேம்படுத்துவது மனிதத்தன்மையை மேம்படுத்துவதாகும் . இதை நினைவில்கொள்ளுங்கள்.” இதுதான்.  Empowering Women, Empowering Humanity: Picture it!

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கம்பன் கழகம் - சொ சொ மீ யின் பாராட்டுரை. மூன்று தாமரைகளும் பிள்ளையார்களும்.

எங்கள் கல்லூரியின் முத்தழிச் சங்கத்தில் கேட்டு ரசித்த சொ சொ மீ அவர்களின் உரையைப் பல்லாண்டுகளுக்குப் பின் கம்பன் கழகத்தில் கேட்டு ரசித்து மகிழ்ந்தேன். தழிழ்த் தேனை மாந்தி மகிழ்ந்தேன் என்பது சாலப் பொருந்தும் :)
குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்பட்ட நாளில் திருமந்திரச் சொல்மணி திரு சொ சொ மீயின் உரை மிகச் செறிவானதாக இருந்தது. மூன்று தாமரைகளையும் இரண்டு பிள்ளையார்களையும் அவர் ஒருங்கே உவமைப்படுத்திய விதம் சுவையானது.

கம்பன் அடி சூடியின் உரைக்குப் பின் தன்னுடைய உரை அமைந்ததால் அது இலக்கியமழைக்குப் பின்னே சிதறும் தூவானம் என்று குறிப்பிட்டார்.

காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

முகப்பில் மட்டுமல்ல மாடியிலும் மிக அழகான ஆர்ச்சுகளோடு கட்டப்பட்ட வீடு இது. வாயிலுக்கு இரு பக்கமும் இரு அறைகள் நீண்டு அமைக்கப்பட்டிருப்பது அழகு.  வீட்டிற்கு வெளிச்சுவரிலும் தெரிகின்றாற்போல  தூண்கள்  அமைக்கப்பட்டிருப்பது வித்யாசம். அதன் மேல் உள்ள பாரபட் வால் போன்ற அமைப்பு நுணுக்கத்தோடு மழை நீர் விழும் வசதிகளோடு கட்டப்பட்டிருக்கு. காம்பவுண்டு சுவரிலும் வளையமாக டிசைன் செய்திருக்கின்றார்கள்.வெள்ளி, 18 செப்டம்பர், 2015

அசடனில் குற்றமும் தண்டனையும் கடிதம்.

அசடன் நூலில் அவர்களது மொழிபெயர்ப்பு நூலான குற்றமும் தண்டனையும் பற்றிய எனது கடிதத்தையும் வெளியிட்டு கௌரவம் கொடுத்துள்ளார்கள் சுசீலாம்மா.

நன்றி அம்மா. :) மிகப் ப்ரபலமான எழுத்தாளர்களோடு எனக்கும் ஒரு தனியிடம் கொடுத்தமைக்கு அன்பும் நன்றியும்மா.

புதிய பயணியில் வாசகர் கடிதம். !

புதிய பயணி இதழில் வெளியான என்னுடைய கட்டுரைக்கு வந்த வாசகர் கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

வியாழன், 17 செப்டம்பர், 2015

ஆவணியாய்.10.4.86.

12. ஆவணியாய் இருக்கிறது
மனது.

காய்த்தலும் கனித்தலும்
பூத்தலும் இல்லாமல்.

புதன், 16 செப்டம்பர், 2015

நம்மைப் போல்10.4. 86.

11. சுவற்றில் எறும்பு வரிசை
அன்றாட வேலைகள் போல்

காற்றுச் சலனங்களுக்குள்
கொசுக்கள்,
மனத்தின் நுகத்தடி போல்.

பட்டு நெசவில் பட்டர்ஃப்ளை டிசைன்.

கலர் வேண்டாம், பென்சில் வேண்டாம், க்ரேயான்ஸ், ஸ்கெட்ச், ( இந்தியன் இங்க் ) பேனா, ( போஸ்டர்கலர், வாட்டர் கலர், ஆயில் ) பெயிண்ட்ஸ், எதுவுமே வேண்டாம்., ஏன் ப்ரஷுமே வேண்டாம்.  நீங்க மவுஸோட அமர்ந்து மவுஸை இயக்கினா போதும். ஓவிய டிசைன்கள் உருப்பெற ஆரம்பிச்சிடும். ஓரிரு தரம் கசா முசா ஆனாலும் மூன்றாவதா வரையும்போது பிடிபட்டுடும். அப்புறம் என்ன நீங்கதான் பிகாஸோ, நீங்கதான் மாடர்ன் ரவிவர்மா.

பட்டு நூல் டிசைன் மாதிரி இந்த ஓவியங்கள் உருவாகுது. கலர்ஃபுல்லா பார்க்கவே அற்புதம். நாமதான் போட்டமான்னு திகைக்க வைக்குது.

முதல் மூன்றிலும் சிறிது சிவன் டச். ஏன்னா உடுக்கை சூலம், நாகம்னு ஏதேதோ ஞாபகம் வந்தது.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தீவுகள்.10.4. 86.

10.
ஒரு பயணியின்
துடுப்புகள்
வேர்களுக்குள்ளும்
வினைகளுக்குள்ளும்.

திங்கள், 14 செப்டம்பர், 2015

ஜீவாத்மா10.4. 86.

9. உன் ஆன்மாவின் குரலில்
உயிரினங்களின் சிலிர்ப்புகள்.

உன்னுடைய கம்பீரம்
பசுவினுடையதைப் போன்ற
மிருதுத் தன்மையில்.

பரல்கள். சொல்வனம் பெண்கள் சிறப்பிதழ் - 2

பரல்கள்.

சுயமறுத்துச்
சலங்கைகள் சிதற
நடனமாடிச் செல்கிறது மழை.
மோகம் சுமந்த
மேகம் சுமந்து
அலைமோதுகிறது காற்று
இருப்பிடம் குழம்பி.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7

153. வண்ண ஜன்னல் கதவுகள். ஜன்னலுக்கு மேல் உள்ள இடத்தில் ஒரு ஓவியம் இருந்திருக்கும். அதை புதுப்பிக்கும்போது பெயிண்ட் செய்ததால் மறைந்துவிட்டது. வளைவில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் காற்றோட்டம் வேண்டும் என்பதால் இப்படி அமைத்திருக்கிறார்கள் . தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இரும்புக் கம்பிகளுக்கு சில்வர் வார்னிஷ் அடித்து  வலையும் போட்டிருக்கிறது .


சனி, 12 செப்டம்பர், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர். கரோகியும் கானாமிர்தம் குருமூர்த்தியும்

முகநூலில் நண்பரானவர் குருமூர்த்தி. ஸ்ரீராமின் பக்கத்தில் ஜிவாஜி சாரி சிவாஜி பாடல்கள் பற்றிய ஒரு பதிவில் பின்னூட்டமிடும்போது அறிமுகமாகி நண்பர்களானோம். இவர் கரோகி ஸ்பெஷலிஸ்ட் என அறிந்தேன். துபாயில் வசித்து வரும் அவர் தமிழ்ப் பாடல்களை  ( பின்னணி இசை பின்னணியில் ஒலிக்க ) இனிமையாகப் பாடுவதில் வல்லவர் எனத் தெரிந்தது. எனவே அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. போனஸா அவர் பாடிய பாடலுக்கும் இணைப்பு கொடுத்திருக்கிறேனாக்கும். படித்து & கேட்டு மகிழுங்கள். :)

/// குரு கரோகியில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி. ? நீங்கள் பாடிய பாடல் ஒன்றையும் பகிர்ந்து கொள்ளுங்களேன். ///

 இசையும் கரோகியும்  மற்றும் குருவாகிய  நானும் 


சிறு வயதில்  என் அக்கா பாட்டு  கற்றுக்கொளும்போது கூடவே  சென்று  உட்காரும் பழக்கம் ஏற்பட்டது.பாட்டு  வாத்தியார் சொல்லிகொடுக்கும் போது அக்கா  பாடுவதை  விட  நான்தான் அதிகம் ச ரி க ம த நி ச  சொன்னது. அதைப்பார்த்த வாத்தியார் நாளையிலிருந்து  இந்த  பயலை அழைச்சிக்கிட்டு வராதே  என்று  என் அக்காவிடம் கறாராக  சொல்லிவிட்டார்.அதற்கான காரணம்  இன்று  வரை  எனக்கு  விளங்கியதே  இல்லை.. 

புதன், 9 செப்டம்பர், 2015

பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.

341.பணத்தை அடித்து உழைப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். ஆனால் முகஸ்துதியை வீசி எதையுமே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் வித்தைக்காரர்களும் இருக்கிறார்கள்.

‪#‎உழைத்துக்_களைத்தவர்கள்_ஐ_மீன்_நம்மைப்போலே_ஏமாளி_எவனுமில்லே‬

342. சரக்கில்லாத முகநூல் சரக்கே கிடையாது போலிருக்கே. ஓ மை காட். ஒரே சரக்குதான்..


343.தானே சோகத்தோடு அமர்ந்து தோசை ஊத்தித் தின்னும் ஆத்தாவைப் பார்த்த ஒரு மகன் தாய்க்காக ஒரு க்ளோன் ஆத்தாவைக் கண்டுபிடிக்கிறார்.


சந்தோஷமாக ஆத்தாவிடம் ஓடி வந்து ”ஆத்தா ஆத்தா இனி நீங்க கடைசியா தனியா உக்கார்ந்து தோசை ஊத்தித் திங்க வேண்டாம். உங்களுக்கும் சுடச் சுட முருகல் தோசை ஊத்திக் கொடுக்க ஒரு க்ளோன் ஆத்தாவை உருவாக்கிட்டேன்.”

பிறந்தோமே சிறந்தோமா. :)

பிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப்  படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால் பிறந்ததற்கு ஏதோ சிறப்பாகச் செய்ய முயல்கிறோம் என்பது உண்மை. 2015 ஆம் ஆண்டில் வந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சிலவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

Raji Krish‎


மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
நம் இனிமையான நினைவுகள்
நிழல் போல் தொடரட்டும்
நெகிழ்வான பாசமும் நேசமும்
கருனையும் நம் மனதளவில்
மலரட்டும்... என்றும் இனிய
புன்னகையுடனும்.. இளமையுடனும்
வலம் வர வேண்டும் அன்பின் இனிய செல்ல தோழியும், சுடர் எழுத்தாளினியும், தங்கையுமான தேனிம்மாவிற்கு...
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
வாழ்க என்றும் வளமுடன்..!!
என்றும் ப்ரியமுடன்...ராஜிகா... பிக் ஹக் ♡ உம்மாஆஆ..

-- அன்பு ராஜிக்கா நன்றி :)

ரமலான் கோட்டையார்

நாளை (14-7-2015) பிறந்த நாள் கானும் முகநூலில் எனக்கு கிடைத்திட்ட முத்துக்களில் ஒன்று அன்பின் உறைவிடம் அன்பு அக்கா திருமதி . தேனம்மை லெட்சுமணன் அவர்கள் வாழ்வில் சிறப்புகள் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி எனதன்பின் நட்பூக்களோடு இணைந்து வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்...

நகரத்தார் குல மாணிக்கமே...
செட்டி நாட்டின் செல்லப்பிள்ளையே..
எங்களின் சிவகங்கை
மண்ணின் மகுடத்தை
அலங்கரிக்கும் வைரங்களில்
ஒன்றே...

உங்களின் எழுத்து வரிகளில் தான்
எத்துனை எதார்த்தம் பாமரனுக்கும்
புரியும் கவியும் கட்டுரையும்
புனைவதில் தங்களின் திறமை
கண்டு வியந்தவர்கள்
எத்துனை பேர் என்று
எங்களை போன்றோர் அறிவோம்

குழல் இனிது யாழ் இனிது என்பர்
தன் மழலை சொல் கேளாதோர்
சுசிலா அம்மாவின் கவிப்பட்டறையில்
பட்டை தீட்டப்பட்டதால்தான்
உங்கள் மேடைப்பேச்சில்
உங்கள் குரலும் இனிக்கின்றதோ...

”ங்கா” எனும் தாலாட்டால்
மடியில் இருக்கும் மழலைக்கும்
கவி சொல்லி
ஒளிந்து கிடந்த அரசிகளை
பட்டை தீட்டிய வைரமாக
”சாதனை அரசி”யில்
ஜொலிக்க செய்து
"அன்னபட்சி" யை
கைகளில் தவழவிட்டது வரை
உங்களின் படைப்புகளின் வரிசை
எத்தனை எத்தனை

வலைப்பூவரசியே
என்றும் புன்னகை அரசியே
வையகத்து விருதுகளெல்லாம்
உங்களை வந்து அடைந்து
குன்றா புகழுடன் அவனியில்
ஜொலித்திட வாழ்த்துகிறேன்
வாழ்வாங்கு வாழ்ந்திட.....

HAPPY BIRTH DAY AKKOVV

-- அஹா தீன் கவியே அன்புத் தம்பியே இனிய கவிதைக்கு நன்றி. நன்றி ! வாழ்க வளமுடன்


செவ்வாய், 8 செப்டம்பர், 2015

ஸ்வயம்.:- 2ஸ்வயம்.:-
மேய்ப்பனைத் தேடி
அலையும் மாடு

விசிலடிக்கும்
மூங்கில் மரங்கள்
பக்கம் ஓடி
மடுவுக்குள்
உடல் கலக்கி
கந்தைத் துணிகளை
முகர்ந்து முகர்ந்து

மேய்ப்பனைத் தேடி
அலையும் மாடு.

வியாழன், 3 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

காரைக்குடிப்பக்க வீடுகள் 147. மூன்று கட்டு கொண்டவை முகப்பே மிக அம்சமாக இருக்கும். அபூர்வமாக இரு நிலையிலும் தெய்வங்கள் வைக்கப்பட்டு மிக அழகாகப் பராமரிக்கப்படும் வீடுகளில் இதுவும் ஒன்று.புதன், 2 செப்டம்பர், 2015

அகலிகா

புத்தம்புது அறை வாசனைக்குளிர்காற்று
கண்ணெட்டும்தூரம் கடல்.
கதகதப்போடு முடங்க
வெள்ளைஉறை மெத்தை.
மனிதர்களின் மக்கல் வாசனைமட்டுப்படுத்தப்பட்ட
ஒரு அறைக்குள்ளில் அயர்ந்திருந்தேன்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தின ஓவியம்.

ஒவ்வொரு தினமும்
புதிய ஓவியத்தை
வரையத் துவங்கி விடுகிறது.

சிலவற்றில் கோபச் சிவப்பு.
சிலவற்றில் காம நீலம்.
சிலவற்றில் காதல் பசுமை
சிலவற்றில் தியான வெண்மை
சிலவற்றில் இழப்பின் கறுப்பு
சிலவற்றில் குழந்தை ரோஜா
சிலவற்றில் துறவின் வயலட்.

Related Posts Plugin for WordPress, Blogger...