திங்கள், 14 செப்டம்பர், 2015

ஜீவாத்மா10.4. 86.

9. உன் ஆன்மாவின் குரலில்
உயிரினங்களின் சிலிர்ப்புகள்.

உன்னுடைய கம்பீரம்
பசுவினுடையதைப் போன்ற
மிருதுத் தன்மையில்.


காற்றைச் சுற்றிக்
கலகலக்கும் இலைகளாய்
உன்னைச் சுற்றிலும் நான்.

கர்வத்துக்கும்
ப்ரியத்துக்கும்
பேதம் உணராமல் நீ !

நீ மலர்களைச் சுற்றும்
வண்டு அல்ல.
விளக்கை வணங்கும் விட்டில்,
( பரமாத்மாவோடு கலக்கும் ஜீவாத்மா )
என்பது புரியாமல் இவர்கள். !

7 கருத்துகள் :

Nagendra Bharathi சொன்னது…

அருமை

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை. பாராட்டுகள்.

G.M Balasubramaniam சொன்னது…

நீங்கள் நான் எழுதி இருந்த ஜீவாத்மாவும் பரமாத்மாவும் படித்திருக்கிறீர்களா.?வாழ்த்துகள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

நன்றி பாலா சார் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thenammai Lakshmanan சொன்னது…

இணைப்பு கொடுங்கள் பாலா சார் ( முடிந்தால்.. )

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...