எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

லைம் ட்ரீயும் டைரிக்குறிப்பும்

இன்றும் அதே டிஸ்கவரி புக் ஹவுஸ் ..அதே
புத்துணர்ச்சியோடு சகவலைப்பதிவர்களும்.,
நண்பர்களும் .,சகோதரர்களும்....!!!

கேபிள் சங்கர் ஜி மற்றும் பரிசல்காரனின் மலர்ந்த
புன்னகையோடு ஆரம்பித்தது விழா.. சகோதரர்
அப்துல்லாவைத்தான் முதன்முதல் பார்த்தேன்..
அடையாளம் கண்டு கொண்டேன்.. என் சின்ன
மகனுடன் சென்று இறங்கியபோதுதான் சீப் கெஸ்ட்
பிரமிட் நடரஜன் அவர்கள் வந்தார்கள்.. நேரமாகி
விட்டதோ என்று நினைத்து போக நிம்மதி
ஆகிவிட்டது ..போனமுறை நடந்த வெளீயீட்டு
விழா ஹாலின் மேல் மாடியில்.. இன்றைய
வெளீயீடு நடந்தது.. நல்ல கூட்டம்.. ஒரே
காமிரா வெளிச்சம்..


கேபிள் ஜி மற்றும் பரிசல்காரன் குடும்பத்தார்
போக சென்னையின் அனைத்து வலைப்
பதிவர்களும் அங்கே..!!

நாகரத்னா புத்தக நிலைய உரிமையாளர் குகன்.,
தமிழ்ப்பட இயக்குனர் சி.எஸ் .அமுதன்., சாய்மீரா
ப்ரொடக்ஷன்ஸ் பிரமிட் நடராஜன்., நண்பர் அஜயன்
பாலா., அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆகியோர்
முக்கிய விருந்தினர்கள்...

நடராஜன் அவர்களுக்கு சகோதரர் அப்துல்லா
பொன்னாடை போர்த்த அமுதன் அவர்களுக்கு
வடகரை வேலன் அண்ணாச்சியும் அஜயன் பாலா
அவர்களுக்கு தண்டோராவும் பொன்னாடை
போர்த்தினார்கள்...திரு நடராஜன் அவர்கள் கேபிள்ஜி
யின் புத்தகத்தை வெளியிட அனைவரும் பெற்றுக்
கொண்டார்கள் ..பரிசல்காரனின் புத்தகத்தை அஜயன்
பாலா வெளியிட அனைவரும் பெற்றுக்
கொண்டார்கள்.. திரு நடராஜன் கேபிள் ஜியின்
சித்தப்பாவும் கூட.. மிக்க அருமையாக தொகுத்து
வழங்கினார் கவிஞர் சுரேகா ..நல்ல மொழி வளம் ..

திரு நடராஜன் சங்கர் அவர்கள் புத்தகம் பற்றிப்
பேசும் போது மிக அருமையாக எழுதப்பட்டிருப்ப
தாகக் கூறினார்.. தான் ஒரு சினிமா தயாரிப்பாளர்
என்பதை விடவும் எழுத்தாளர் சங்கரின் சித்தப்பா
என்பதில் பெருமை கொள்வதாக கூறினார் ..
திரு அமுதன் தமிழ்ப்பட வெற்றிக்கு வலைப்
பதிவர்களின் பதிவுகளும் ஒரு நல்ல காரணம்
என்று கூறினார்.. பதிவர் உலகத்துக்கு நன்றி
தெரிவித்தார் .. திரு அஜயன் பேசும் போது மிக
நீளமாகவும் ஆழமாகவும் பேசினார் .. அவருடைய
முதல் கதையை விருட்ஷத்தில் பார்த்தபோது
ஏற்பட்ட பரவசம் பற்றியும் அதற்கு தன்னுடைய
அயராத உழைப்பு பற்றியும் கூறினர்.. கேபிள்ஜியின்
கதைகளின் உள்ளீடு அற்ற தன்மை பற்றியும்
ஒன்றைத்தொட்டு ஒன்று சென்று ஒன்றைக்
குறிப்பிட்டு முடிவில் சுவாரசியமாய் அமைந்தது
பற்றியும் குறிப்பிட்டார்...

ஒரு குறிப்பட்ட புத்தகம் வெளிடப்படும் போது
அதைப்பற்றி வலையில் ஒரே சமயத்தில்
விமர்சனம் எழுதி அந்தப்புத்தகத்தின்
விற்பனையைக் கூட்ட முடியும் என்றும்
வலைப்பதிவர்கள் மனம் வைத்தால் மிகப்
பெரும் பத்திரிக்கைகளுக்கு கூட சவாலாக
வரமுடியும்... என கூறினார் ..

நேரம் ஆக ஆக சலசலப்பில் சரிவர கேட்க
முடியவில்லை.. வழக்கம் போல எனக்கும்--
கல்லூரி விடுதி செல்லும் மகனுக்கு ட்ரெயினுக்கு--
நேரமாகிவிட்டதால் உடன் கிளம்ப வேண்டியதாகி
விட்டது ...அங்கு நர்சிம் .,மணிகண்டன் மற்றும்
உலக சினிமா வலைப்பதிவர் நண்பர் சூர்யா(எல்லா
புத்தக வெளியீட்டுக்கும் சென்று அனைவரையும்
ஊக்குவிப்பவர்)மற்றும் செல்வா ஸ்பீக்கிங்க் என்றும்
மேலும் ஏழு எட்டு பதிவுகள் நடத்திவரும்
இயக்குனர்., நண்பர் செல்வகுமாரையும் (அவர் என்று
ஒரு படத்தயாரிப்பில் இருக்கிறார் மறைந்த நடிகர்
திரு ஐ. எஸ். ஆர். அவர்களின் புதல்வர் ) பார்த்தேன்..

எலுமிச்சை மரம் வளர நாளாகும்.. ஆனால்
வளர்ந்த பின் வருடா வருடம் .,ஏன் வருடம்
முழுக்க பலன் கொடுக்கும் .. அதுபோல
கேபிள்ஜியின் எல்லா முயற்சிகளும்
வெற்றிஅடையட்டும்...!!!
டைரிக்குறிப்பு என்பது எப்போதும் எழுதிக்கொண்டே
இருப்பது ..அதுபோல் பரிசல்காரன் இன்னும் நிறைய
படைப்புகள் வெளியிடட்டும் என வாழ்த்துகிறேன் !!!

83 கருத்துகள்:

 1. வெளிநாட்டில் இருப்பதால் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தவற விடுகிறேன் என்ற வருத்தம் உண்டு, அதை நீங்கள் உங்கள் எழுத்தின் மூலம் என் முன் கொண்டு நிறுத்தி விட்டீர்கள், தேனம்மை நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நன்றி செந்தழல் ரவி திருத்தியமைக்கு திருத்தி வெளியிட்டு விட்டேன்.. ஒரு சில இடத்தில் அப்படி நிகழ்ந்து விட்டது

  பதிலளிநீக்கு
 3. நன்றி கும்மாச்சி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 4. அருமையான வர்ணனை தேனம்மை அக்கா .

  நான் இங்கே இருந்தாலும் உங்கள் மூலமா விழாவை பற்றி அறிந்து கொண்டேன் . நன்றி அக்கா

  பதிலளிநீக்கு
 5. பகிர்வுக்கு மிக்க நன்றி தேனக்கா. சென்னையிலதான் இருக்குறீங்களா?

  பதிலளிநீக்கு
 6. அருமையான பகிர்தல்...!

  புக் வாங்கினீங்களா இல்லியா?

  :))

  பதிலளிநீக்கு
 7. பகிர்விற்கு நன்றி. வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு நேர்முக வர்ணனை - நல்வாழ்த்துகள் தேனம்மை லக்ஷ்மணன்

  பதிலளிநீக்கு
 9. வாவ்!

  சுடச் சுட போட்டுட்டீங்க தேனு!

  சக பயணியின் மேல் உள்ள உங்களின் அன்பிற்கு வந்தனம் மக்கா!

  பதிலளிநீக்கு
 10. நானும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டேன்... :)

  பதிலளிநீக்கு
 11. நிகழ்வை நேர்ல பார்த்தது போல் இருந்தது, நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 12. நானும் அங்கதாங்க இருந்தேன்..அடடா சந்திச்சிருக்கலாமே

  பதிலளிநீக்கு
 13. http://4.bp.blogspot.com/_BWVBzjJQMwA/S3hjd4KESSI/AAAAAAAAAVQ/UCv-3Xxv9PU/s1600-h/DSC02284.JPG

  myself and my sn is here in palapattrai's blogspot photos...

  பதிலளிநீக்கு
 14. நேர்த்தியாக நிகழ்ச்சியை பற்றி குறிப்பு தந்து இருக்கிறீர்கள், அக்கா. மிக்க நன்றி.
  செல்வா அண்ணனை சந்தித்தது அறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 15. அருமையான பகிர்வு, வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. சும்மா வந்து சும்மா சென்றேன். எனக்கு கட்டுரையில் 5 வரிகளா?

  பதிலளிநீக்கு
 17. நீங்களும் வந்திருந்தீங்களா மேடம்.. கூட்டத்துல கவனிக்க முடியாம போச்சே.. நல்ல பகிர்வு..

  பதிலளிநீக்கு
 18. நேரில் வந்திருந்து வாழ்த்தியமைக்கு மிக்க ந்ன்றி அக்கா..

  பதிலளிநீக்கு
 19. புலிகேசி பக்கத்திலும் படித்தேன்...இங்கும் படித்து மகிழ்ந்தேன்...

  பதிலளிநீக்கு
 20. எலுமிச்சை நல்ல உதாரணம்..
  விழா பார்க்கமுடியவில்லையே என எழுமிச்சை..(எழும் + இச்சை) பதிவின் வெற்றி..

  பதிலளிநீக்கு
 21. பார்க்க முடியல சின்ன வருத்தம் \

  பதிலளிநீக்கு
 22. நன்றி ஸ்டார்ஜன் அதுக்குத்தானே வேகமா வந்து எழுதினேன்

  பதிலளிநீக்கு
 23. நன்றி சரவண குமார் சென்னையிலதான் இருக்கேன்

  பதிலளிநீக்கு
 24. நன்றி வசந்த் நாளை சென்று வாங்கலாம்னு இருக்கேன் படித்த பின் எழுதுறேன் எப்படி இருக்குன்னு

  பதிலளிநீக்கு
 25. நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

  பதிலளிநீக்கு
 26. விழாவிற்க்கு நீங்களும் போனிங்களா அக்கா?நல்லப்டியாக முடிந்ததில் சந்தோஷம்.அவர்களிருவருக்கும் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 27. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீனா சார்

  பதிலளிநீக்கு
 28. நன்றி அக்பர் உங்க வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 29. நன்றி மக்கா ...!!! எல்லோருக்குமான அன்புடன் கூட ..நாமும் இது போல் ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்று ஊக்கம் பெறவும் செல்கிறேன் மக்கா

  பதிலளிநீக்கு
 30. நன்றி வானம்பாடிகள் உங்க வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 31. நன்றி நதியானவள் உங்க வரவுக்கும் மகிழ்வுக்கும்

  பதிலளிநீக்கு
 32. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா உங்க வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 33. ஆமாம் புலிகேசி நானும் தேடித்தேடிப்பார்த்தேன் கண்டு பிடிக்க முடியல சரி வரலையோன்னு நினைச்சேன்

  பதிலளிநீக்கு
 34. அழகா நேர்வர்ணனை செய்றீங்க தேனு.

  பதிலளிநீக்கு
 35. நன்றி சித்து உனக்கும் அம்முவுக்கும் முன்னாடி நான் செல்வாவைப் பார்த்துட்டேன் ..அவர் படம் வெற்றியடைஞ்சு அவரை நாம் மூன்றுபேரும் சென்று வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 36. நன்றி அகநாழிகை பொன். வாசுதேவன்.. ஒரு வெளியீட்டாளரா உங்களை நர்சிம் கௌரவித்ததை பார்க்க முடியாமல் போயிற்று.. ஆனால் புகைப் படங்களில் பார்த்தேன் ...

  பதிலளிநீக்கு
 37. நன்றி தமிழ் உதயம் உங்க வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 38. நன்றி ராமலெக்ஷ்மி உங்க வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 39. நன்றி செல்வா சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா

  பதிலளிநீக்கு
 40. நர்சிம் பக்கத்தில் நீங்க அமர்ந்து இருந்ததை நான் பார்த்தேன் அன்புடன் மணிகண்டன் ...ஹெல்மெட்டுடன் இருப்பது நீங்க தானே...?

  பதிலளிநீக்கு
 41. அது என்ன பலா பட்டறை ஷங்கர் உங்க ப்லாக் பேரை உங்க பேர்ல மாத்திட்டீங்களா ..? ஏதோ ம்யூசிக்கோட கோட்ஸ் எல்லாம் இருந்துச்சா ...

  Maddy maddy hoho maddy nu ungka pathivuellam paarththu kathula ore song than poongka...!!


  நானும் தேடித்தேடிப்பார்த்தேன் கண்டு பிடிக்க முடியல சரி வரலையோன்னு நினைச்சேன்

  பதிலளிநீக்கு
 42. என்னது கண்டுபிடிக்க முடியலையா?? அடுத்தமுறை நீங்கதான் அட்டைப்படமே ..:))

  யாரு நான் maddy ?? அப்ப கிழமா??

  யக்கோவ் நான்
  யூத்துங்க..:)

  பதிலளிநீக்கு
 43. காதலர் தின பதிவை வைத்து யூத் மாடின்னு (மாதவன்) சொன்னேன் ஷங்கர்

  பதிலளிநீக்கு
 44. நன்றி பரிசல்காரன் உங்க புத்தகங்கள் அமோகமா விற்பனை ஆகட்டும்

  பதிலளிநீக்கு
 45. ரைட்டு..:))

  உங்க புள்ள சும்மா 'ரெமோ' கணக்கா இருக்காரு :))

  பதிலளிநீக்கு
 46. நன்றி ராம் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 47. உங்க பதிவு நேரடி ஒளிபரப்பு மாதிரி இருந்தது.அப்புறம் பலாப்பட்டறையில உங்களோட,தம்பியோட புகைப்படம் பார்த்தேன்.நீலக்கலர் பட்டுப்புடவை உடுத்தியிருந்தவங்க தானே! வாழ்க! வளர்க!

  பதிலளிநீக்கு
 48. சென்னைல இருக்கின்றதால் இதையெல்லாம் பார்க்கமுடிகிறது. நாங்க இங்க கிராமத்துல ஒக்காந்துகிட்டு மண்டை காயறோம்.

  ரன்னிங் கமெண்டரி அருமை எப்பொழுதும்போல்

  வாழ்த்துக்கள் அக்கா

  விஜய்

  பதிலளிநீக்கு
 49. ரிஷபன் புத்தகங்களின் வழி எழுமிச்சைக்கு எழும் இச்சைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்

  பதிலளிநீக்கு
 50. நன்றி வி ஏ எஸ் சங்கர் உங்க வருகைகக்கு ..அடுத்த புத்தக வெளியீட்டில் அல்லது பதிவர் சந்திப்பில் பார்க்கலாம் ..

  பதிலளிநீக்கு
 51. ஆமாம் மேனகா நானும் விழாவுக்கு போனேன்மா ஆமாம் அவர்கள் இருவருக்கும் எல்லோருடைய வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
 52. நன்றி ஹேமா உங்க வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 53. மேடியைக் கிழவன் என்று சொன்ன பலா பட்டறை ஷங்கரை சென்னை ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 54. வடபழனியில் மொட்டை போட்டு ஒரு மாசம் ஆகுது ...எதுக்கும் உங்க பாராட்டை அவனிடம் தெரிவிக்கிறேன் ஷங்கர்

  பதிலளிநீக்கு
 55. வாங்க சாந்தி உங்க பாராட்டுக்கு நன்றி .. அது பட்டு இல்லை ஸிந்தடிக்தான் மா...

  பதிலளிநீக்கு
 56. நன்றி முனியப்பன் சார் உங்க வாழ்த்துக்கு உங்க வாழ்த்துக்கள் கேபிள் ஜிக்கும் பரிசல்காரனுக்கும்

  பதிலளிநீக்கு
 57. சரிங்க அவர் மேடி. நான் மோடி.:)

  பதிலளிநீக்கு
 58. நன்றி விஜய் உங்க வாழ்த்துக்கு ..உண்மைதான் சென்னையில் இருக்குறதாலதான் கலந்துக்க முடியுது.. அதுவும் வீட்டுக்குப் பக்கத்தில்

  பதிலளிநீக்கு
 59. ரொம்ப நாள்கழித்து வந்து இருகீங்க திவ்யா ஹரி உங்க வாழ்த்துக்கு நன்றிம்மா

  பதிலளிநீக்கு
 60. கேபிள்ஜி பரிசல்ஜி இருவரும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்...நீங்களும் உயர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 61. அருமையான கவரேஜ். நேரில் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.. உங்களது புத்தக விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 62. என்னை ஏன் இந்த ஆட்டத்துல சேர்த்துக்கல, பரவாயில்லை இந்த பதிவை படித்ததே நேரில் வந்த அனுபவத்தை உண்டாக்கியது, தொடர்ந்து எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 63. அடடா உங்களை பார்க்காமல் விட்டேனே!! பார்த்து வணக்கம் சொல்லியிருக்கலாம்.

  பதிவு அருமை. நன்றி

  பதிலளிநீக்கு
 64. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சுகுமாரன் ..நீங்களும் நல்ல படைப்புகள் வெளீயிடுகிறீர்கள் ..

  வாழ்த்துக்கள் உங்களுக்கும் ..

  பதிலளிநீக்கு
 65. நன்றி கேபிள் சங்கர்ஜி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் சீக்கிரம் விமர்சனம் போடுறேன்

  உங்க புத்தகம் பேரு லெமன் ட்ரீ ஆனா லைம் லைட்டில் இருந்ததால் லைம் ட்ரீ என போட்டேன்

  பதிலளிநீக்கு
 66. சசிகுமார் நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க கேபிள் ஜீ மற்றும் புலவன் .,மற்றைய வலைப்பதிவர் ப்லாக்கிலெல்லாம் புத்தக வெளியீடு பற்றிப் போட்டு இருந்தாங்களே ...

  அடடா ..பரவாயில்லை.. அடுத்த வெளியீடு நடக்கப்போகுதாம் சென்னையில்.. கலந்துக்குங்க

  பதிலளிநீக்கு
 67. எனக்கு முன்சீட்டில் இருந்துதான் புகைப்படம் எடுத்தீர்கள் மோகன் ...ஆனால் எனக்குத் தெரியவில்லை நீங்களென்று ...

  உங்கள் வீடு திரும்பல் புகைப்படங்களும் அருமை

  பதிலளிநீக்கு
 68. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ...!!!
  நமக்குள் வலிமை பெருகட்டும்...!!!

  பதிலளிநீக்கு
 69. //கும்மாச்சி சொன்னது…
  வெளிநாட்டில் இருப்பதால் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தவற விடுகிறேன் என்ற வருத்தம் உண்டு, அதை நீங்கள் உங்கள் எழுத்தின் மூலம் என் முன் கொண்டு நிறுத்தி விட்டீர்கள், தேனம்மை நன்றி.//

  இதையே நானும் வழிமொழிகிறேன்!! நன்றி.

  பதிலளிநீக்கு
 70. சரி மணிகண்டன் அடுத்தமுறை பேசிடுறேன் உங்களோடு

  பதிலளிநீக்கு
 71. வாங்க ஷஃபி நீங்களெல்லாம் படிக்க ஆவலாய் இருப்பீங்கன்னுதன் உடனடியா எழுதினேன் ஷஃபி

  பதிலளிநீக்கு
 72. Very nice writeup. You should have become a journalist or event reporter. The reporting style and narrations are very good.

  பதிலளிநீக்கு
 73. நன்றி மெய்யர் உன்னுடைய வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 74. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...