எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

என்னவளே

என்நேரமும் உன் பார்வைத்தோணியில்..
பத்திரமாய் விழிபிடித்து மிதந்துகொண்டு..

அவ்வப்போது நான் என்ற முகமூடி மாட்டி..
அன்பின் கழுத்தை இறுக்கக் கட்டி..

உன் புன்னகையையும் பார்வையையும்
தரையில் வீசி மிதித்து
காணாதது போல் புறந்திரும்பி..


கஜனி முகமதாய்க் கவர்ந்து செல்ல
முயல்கிறாய் பலமுறை..
ராபர்ட் புரூஸ் போல் தளராத மனத்துடன்..

ஹாலோவின்ஸ் டேயில் போட்ட முகமூடியை
நான் ஜிம்கேரியைப்போல் கழற்றாமல்..
வீர்யத்துடன் வெவ்வேறு விஸ்வரூபம் எடுத்து
உன்னை பயப்படுத்திக்கொண்டே..

என் கோபம்.,காமம்.,வன்முறையில்லா வன்முறை.,
அழுக்காறு கண்டு நீ நடுங்குவதை ரசித்து..
என் கம்பீரமாக நினைத்து..
வென்டேட்டாவின் வர்ணக்கோமாளியாய்..

ஒரு மென்மையான தருணத்தில்
என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே..

59 கருத்துகள்:

 1. ஒரு மென்மையான தருணத்தில்
  என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
  நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே..

  ........... very nice!

  பதிலளிநீக்கு
 2. பெண்மை மிளிர்கிறது!!

  ஆண்மைக்கு இதெல்லாம் அத்துப்பிடியாகிப் போய்விட்ட வேளையில் இன்னுமா பெண்கள் இந்த முகமூடி சூட்சமங்களை மாற்றிக்கொள்ளவில்லை!!

  அழகியல் கோணத்தில் இன்னுமோர் அழகுக் கவிதை...
  வாழ்க்கையை அழகாகவே பார்ப்பது நல்ல அப்ரோச் தானே :)
  கலக்குங்க :)

  பதிலளிநீக்கு
 3. ஹாலிவுட் காதல் சும்மா அதிரடியா இருக்கு :))

  பதிலளிநீக்கு
 4. ஆகா... நான்தான் முகமூடி யாரணிந்திருப்பது என்பதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ!! :)
  இந்த அப்ரோச்சும் பிடிச்சிருக்கு :)

  பதிலளிநீக்கு
 5. காதல் கவிதைல அசத்துறீங்க தேனக்கா!!

  //என் கோபம்.,காமம்.,வன்முறையில்லா வன்முறை.,
  அழுக்காறு கண்டு நீ நடுங்குவதை ரசித்து..
  என் கம்பீரமாக நினைத்து..
  வென்டேட்டாவின் வர்ணக்கோமாளியாய்..

  ஒரு மென்மையான தருணத்தில்
  என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
  நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே// அருமைக்கா!!

  பதிலளிநீக்கு
 6. ஏங்க இந்த கொலை வெறி?

  கஜினி, ராபர்ட் புரூஸ், ஹாலோவின்ஸ் டே, ஜிம்கேரி, வேன்டேட்டா.... வேணாங்க...

  தமிழ்நாட்டிலேயே இதைவிட பெரிய ஆளுங்கல்லாம் இருக்காங்க.

  கவிதையில் எனக்கு பிடித்த வரிகள் :

  //என்நேரமும் உன் பார்வைத்தோணியில்..
  பத்திரமாய் விழிபிடித்து மிதந்துகொண்டு..

  அவ்வப்போது நான் என்ற முகமூடி மாட்டி..
  அன்பின் கழுத்தை இறுக்கக் கட்டி..

  உன் புன்னகையையும் பார்வையையும்
  தரையில் வீசி மிதித்து
  காணாதது போல் புறந்திரும்பி..//


  //ஒரு மென்மையான தருணத்தில்
  என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
  நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே..

  பதிலளிநீக்கு
 7. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இல்லையா?

  பதிலளிநீக்கு
 8. பெண்ணுக்குப் புரியாதா இந்த முகமுடிகள்??

  பதிலளிநீக்கு
 9. கவிதையில ஹாலிவுட்டா. கலக்கல் அக்கா.

  பதிலளிநீக்கு
 10. //ஒரு மென்மையான தருணத்தில்
  என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
  நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே..//

  அருமையா எழுதிருக்கீங்க அக்கா..

  பதிலளிநீக்கு
 11. அழகான உணர்வு பூர்வமான கவி வரிகள்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. நல்லா இருக்கு...பலவீன சுயங்களைக் காட்டியும் கூட அன்பின் சாகசத்தால் நல்லவனாவகும் கருவா

  பதிலளிநீக்கு
 13. உலக ஞானத்தை கவிதைகளில் தேவையான இடத்தில் பயன்படுத்துவதில் உங்களை விட்டால் ஆளில்லை.. சூப்பர்.

  பதிலளிநீக்கு
 14. ஒரு மென்மையான தருணத்தில்
  என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
  நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே..
  வாவ்...

  பதிலளிநீக்கு
 15. GOOD. MY FRIEND MADURAI SARAVANAN SAID TO READ UR KAVITHAI. S ITS REALLY NICE. KEEP IT UP.

  பதிலளிநீக்கு
 16. வன்முறை இல்லா வன்முறை தானே வெறித்தனமான காதல்.

  பதிலளிநீக்கு
 17. எப்படிங்க 'இங்கிலீஷ்காரன்' வரைக்கும் கவிதையில் இழுத்துவிட்டுரிங்க..;)

  பதிலளிநீக்கு
 18. //ஒரு மென்மையான தருணத்தில்
  என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
  நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே.//

  டச்சிங்...

  பதிலளிநீக்கு
 19. //ஒரு மென்மையான தருணத்தில்
  என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
  நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே.//

  பதிலளிநீக்கு
 20. //ஒரு மென்மையான தருணத்தில்
  என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
  நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே.//

  பதிலளிநீக்கு
 21. பிராட்பேண்ட் இணைப்பு அறுந்து போனதால் சரியாக வரமுடியவில்லை.

  ஒற்றை பூவாய் மலர்ந்து எப்ப வருவாயென விளித்து என்னவளே என்று மருகிய அனைத்தும் அருமை

  வாழ்த்துக்கள் தேனக்கா

  விஜய்

  பதிலளிநீக்கு
 22. முகமுடியின் வெளிப்பாடு மிகவும் அருமை. பலர் வெகுளியாய் ஏற்பதை தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 23. வன்முறை இல்லா வன்முறை காதலில் மட்டும்தான் காணமுடியுமென நினைக்கிறேன்.

  //ஒரு மென்மையான தருணத்தில்
  என் சுயம் வெளிப்படமுகமூடியைக் கழட்டி
  நல்லவனாக்கி மகிழ்கிறாய் என்னவளே.//

  இதுதான் நிஜ முகமா?

  பதிலளிநீக்கு
 24. இறுக்கங்கள் குறைக்கப்பட்டிருந்தால் இன்னும் எளிமையாக இருக்கும்...

  நல்ல கவிதை... ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 25. நன்றி சித்து ..வீட்டு வாசலில்.," அம்மா போஸ்ட்" என்பது போல போட்டவுடனே உடனடி பின்னூட்டம்.. ம்ம்ம்.. ரொம்ப பாஃஸ்ட் மா,..

  பதிலளிநீக்கு
 26. நன்றி அகநாழிகை பொன் வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 27. ஓட்டுப்பட்டை கருவிப்பட்டை எல்லாம் இணைக்க வேண்டும் வாசு..

  பதிலளிநீக்கு
 28. நன்றி பிரபு சரியாகப் படித்து விட்டீர்கள் தானே

  பதிலளிநீக்கு
 29. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

  பதிலளிநீக்கு
 30. நன்றி பிரபு உங்க அப்ரோச்சும் எனக்கு பிடிச்சு இருக்கு ரெண்டு முறை படிக்கிறதை சொன்னேன்

  பதிலளிநீக்கு
 31. திரும்பப் படிச்சுப்பாருங்க கரும்பயல் புரியும்

  பதிலளிநீக்கு
 32. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

  பதிலளிநீக்கு
 33. நன்றி ராமலெக்ஷ்மி
  நன்றி மாயோ மனோ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...