எனது பதிநான்கு நூல்கள்

புதன், 16 ஜூன், 2021

கைகேயி ஏன் அப்படிச் செய்தாள்.

கைகேயி ஏன் அப்படிச் செய்தாள்.


ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்யும்போது ஏன் செய்தார்கள் என்று அறிந்துகொண்டோமானால் நமக்கு அவர்கள் மேல் ஏற்பட்ட வெறுப்பு சிறிதாவது குறையும்.இப்படித்தான் கேகய நாட்டு மன்னனும் தயரதனின் மனைவியுமான கைகேயி அனைவராலும் வெறுக்கப்பட்டாள். ஆனால் அவள் மகன் ராமனோ அவளுக்காகத் தந்தையிடம் பரிந்து பேசினான். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அயோத்தியே ஒளிமயமாய் மின்னிக் கொண்டிருந்தது. மக்கள் தங்கள் இல்லங்களைக் கோலங்களாலும் மாவிலை தோரணங்களாலும் அழகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். விடியற்காலையிலேயே பம்பையும் எக்காளமும் ஒலிக்க அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருந்தது. ஏனெனில் அவர்கள் சக்கரவர்த்தி தயரதன் தன் இளவல் ராமனுக்கு முடிசூட்டப் போகிறார். அந்த இனிய காட்சியைக் காண அரண்மனை நோக்கி சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

செவ்வாய், 15 ஜூன், 2021

மடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும்

காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். 

இது குழந்தையின் வாநீர்த் துண்டு. அதில் ஓவியாய் இருக்கும் பலூனில் கட்டி மிதக்கும் பூனையும், பின்னே பறக்கும் வண்டும் வெகு அழகு. 

புதன், 9 ஜூன், 2021

அன்பின் இசையால் அருமை பெற்ற பாணர்

அன்பின் இசையால் அருமை பெற்ற பாணர்

பெரியோர் சிறியோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வறியோர் வலியோர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருமே இறைவனை எட்டமுடியும் என்பதற்கு இறைவனை நினைத்து யாழிசை மீட்டி வந்த ஒரு பாணரின் கதை உதாரணமாய் இருக்கிறது. அது என்ன என்று பார்ப்போம் குழந்தைகளே.
உறையூர் நகரில் மிகப் பரந்த செந்நெல் வயல் அது. கடம்ப மரங்களும் மருதநில மரங்களும் செழித்திருந்தன. நண்பகல் நேரம் வெய்யிலோ தகித்தது. திடீரென குவா குவா என்ற சத்தம் ஓங்கி வளந்திருந்த நெற்பயிரின் ஊடே ஒலித்தது.
அந்தப் பக்கமாக பாணன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் யாழினை மீட்டி இறைவனைப் பாடிப் பரவும் மெய்யன்பர். இறையன்பரான அவருக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லை. எனவே குழந்தைச் சத்தம் கேட்டதும் மனம் திடுக்கிட்டு இதென்ன பிரம்மையோ என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

உண்மையாகவே ஒரு குழந்தையின் அழுகுரல் அவரை அசைத்தது. பதட்டத்துடன் செந்நெற்பயிர்களை விலக்கித் தேடத் தொடங்கினார். அடடா பிஞ்சுக் குழந்தை ஒன்று கைகால்களை அசைத்தபடி உச்சியில் சுட்ட சூரியனைக் காணக் கண் ஒட்டாமல் அழுது கொண்டிருந்தது.

சனி, 5 ஜூன், 2021

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

 அதிசயமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது காதல் வனம் நூலை வெளியிட்டவர்கள் , பெற்றுக் கொண்டவர் இருவருமே மணிமேகலைகள். காதலை வெறுத்த துறவி மணிமேகலையின் பெயர் கொண்ட இருவரும் எனது காதல்வனம் நூலைப் படித்துப் பார்த்தார்கள் வெளியிடும் முன். :) 

ஒருவர் எனது அன்பிற்குரிய தோழி சாஸ்திரி பவன் பெண்கள் சங்கத் தலைவி, தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி மணிமேகலை. இன்னொருவர் பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன். ( இவரது பெயரில் இருவரின் பெயருமே காதலையும் இல்வாழ்வையும் துறந்தவர்களாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியது ) 


என்னப்பா நம்மளக் கூப்பிட்டுத் தேன் இப்பிடி ஒரு புக்கை வெளியிடுறா.. என்று கூறுகிறார் தோழி மணிமேகலை :) 

வியாழன், 3 ஜூன், 2021

ஆடியன்ஸ் ..

 சென்னையில் இருந்தபோது பல்வேறு நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அவை எல்லாவற்றையும் தொகுத்துப் போட்டுள்ளேன். சில நிகழ்வுகள் விடுபட்டுள்ளன. 

இது அட்சய ஃபவுண்டேஷனுக்காக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் மாணவச் செல்வங்களுடன். 
Related Posts Plugin for WordPress, Blogger...