எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுக்ரீவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுக்ரீவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 அக்டோபர், 2021

தாய்போல் காத்த தாரை.

தாய்போல் காத்த தாரை


நம்மைச் சார்ந்த ஒருவருக்கு ஒரு இக்கட்டு நேரும்போது காப்பது நம் கடமை. அதையும் ஒருத்தி வெகு இலகுவாகச் செய்தாள். தனக்காக மட்டுமல்ல தன் நாட்டையும் வீட்டையும் தாய்போல் தீர்க்கமான மதியுடன் செயல்பட்டுக் காத்த அந்தப் பெண்ணைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
வானர அரசன் வாலியின் மனைவி தாரை. இவள் வானரர்களின் மருத்துவர் சுசேனரின் மகள். வாலி தேவர்களுக்குத் துணையாகப் பாற்கடலைக் கடைந்தபோது அவதரித்தவள் என்றும் சொல்கிறார்கள். அவள் தன் கணவன் வாலியின்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள். இவர்கள் மகன் அங்கதன்.
ஒரு சமயம் சுக்ரீவனும் வாலியும் ஒரு மாயாவி அரக்கனுடன் போர் செய்யச் சென்றபோது வாலியும் அந்த அரக்கனும் ஒரு குகைக்குள் சென்றனர். போர் தொடர்ந்தது. ஆனால் இதை அறியாத சுக்ரீவன் தனயன் திரும்பவில்லை எனவே அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி நாடு திரும்பி அரசாட்சியை எடுத்துக் கொண்டான்.

ஞாயிறு, 20 ஜூன், 2021

இராமன் செய்தது நியாயமா ?

இராமன் செய்தது நியாயமா ?

ஒருவரை நேருக்கு நேர் நின்று எதிர்ப்பது ஒரு விதம். ஆனால் ஒருவரை மறைந்திருந்து தாக்குதல் இன்னொரு விதமான போர்முறை. இராமன் வாலியை அப்படி மறைந்திருந்து தாக்கிக் கொன்றான். அதனால் வாலியின் மனதில் ”பகைவனல்லாத தன்னை இராமன் மறைந்திருந்து அம்பெய்ந்து கொன்றானே. அவன் செய்தது நியாயமா” என்ற கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது. அதை இலக்குவனிடம் கேட்டான். அதன் பின் தெளிந்தான். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அன்றலர்ந்த பூக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. வாலி அவற்றை எடுத்துக் கொண்டு காலை பகல் மாலை என்று மூன்று வேளையும் எட்டுத் திக்கும் சென்று சிவனுக்கு அர்ச்சித்து வணங்குபவன். சிவநேயச் செல்வன். பக்தியிலும் ஆட்சி நெறியிலும் வல்லமை, வலிமை கொண்டவன் என்பதால் வாலி என வழங்கப்பட்டான்.
அன்று காலையும் தன் பூஜை புனஸ்காரங்களை முடித்து வந்து அமர்ந்தான் வாலி. வெளியே சுக்ரீவனின் அறைகூவல் கேட்கிறது. வாலியின் தம்பிதான் அவன். போருக்கு வரும்படி ஏன் அறைகூவல் விடுக்கிறான் அவன். என்னாயிற்று இன்று அவனுக்கு. வாலி உணவை விடுத்துத் தன் கதையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.

திங்கள், 7 ஜனவரி, 2019

வலிமை மிக்க வாலி.! தினமலர் சிறுவர்மலர் - 51.

வலிமை மிக்க வாலி.!
பலவான் என்றால் வலிமை உடையவன். வலிமை என்றால் சாதாரண வலிமை அல்ல. நேர்மையும் வீரமும் கொண்ட ஒருவன் பத்துத்தலை உள்ள ஒருவனைக் கைக்குள் பிடித்து அடக்க முடியுமா. அடக்கி இருக்கிறானே. அந்தப் பத்துத்தலை கொண்டவனும் வீரதீரப் பராக்கிரமம் மிக்கவன்தான். அதெப்படி முடியும் என்று நினைக்கிறீர்கள்தானே. அந்த பலவான்களைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிஷ்கிந்தை என்றொரு நாடு இருந்தது. அதை நிரஜன் என்னும் வானர அரசன் ஆண்டுவந்தான். அவனது மகள் விரஜா மிக மிக அழகி. அவளை நிரஜன் ருஷீடன் என்ற வானர அரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவர்களுக்கு வாலி, சுக்ரீவன் என்ற இரு வானர இளவரசர்கள் பிறந்தார்கள்.
வாலி மிகுந்த வலிமை வாய்ந்தவன். இவன் சுவேஷன் என்ற வானர அரசனின் மகளான தாரையை மணந்தான். கேசரி என்ற வானரனுக்கும் அவனது மனைவி அஞ்சனைக்கும் பிறந்த அனுமன் பிறந்தார். கிஷ்கிந்தையை வாலி ஆட்சி செய்துவர அனுமன் அவருக்கு மந்திரியாக ஆலோசனை வழங்கி வந்தார்.
இது இப்படி இருக்க இந்த தசமுகன் என்பான் யார் என்று பார்ப்போம். இவன் பத்துத்தலை கொண்டவன். இலங்காதிபதி. சிறந்த சிவபக்தன். வீணை இசைப்பதில் வல்லவன். இவன் பாடிய சாமகானத்தைக் கேட்டு சிவன் மகிழ்ந்து பல வரங்கள் கொடுத்திருக்கிறார்.
இவன் திக்பாலகர்களை வெற்றி கொண்டவன். தோல்வி என்பதே அறியாதவன். மூன்று லோகமும் இவன் காலடியில். நவக்ரகங்களும் இவனது சிம்மாசனப்படியில் . இப்படியான கீர்த்திகளைக் பெற்ற இவன் வாலியின் வலிமையைக் கேள்விப்பட்டு அவனை அடக்க வேண்டும் என எண்ணினான்.