எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இராவணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராவணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஆகஸ்ட், 2021

மாயமான் ஆன மாரீசன்

மாயமான் ஆன மாரீசன்

தனக்கு உரிமையில்லாத ஒரு பொருளின்மேல் நாட்டம் வைத்தால் தனக்கு உரிமையானதையும் இழக்க நேர்ந்துவிடும் , மேலும் கெட்டவர்களோடு இணைந்தால் அழிவு வரும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. கதைக்குள் போவோம் வாருங்கள் குழந்தைகளே.
தண்டகாரண்யத்தில் ராமன் இலக்குவன் சீதை ஆகியோர் பர்ணசாலை அமைத்து தங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருந்தார்கள். கானகங்களில் முனிபுங்கவர்களின் வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களின் தொல்லைகளில் இருந்து அவர்களைக் காத்ததால் அகத்தியரிடம் ஆசி பெறுமாறு கூறினார்கள் முனிவர்கள்.

திங்கள், 11 மே, 2020

சீதைக்குத் தாயாய் ஆன திரிசடை. தினமலர் சிறுவர்மலர் - 59.

சீதைக்குத் தாயாய் ஆன திரிசடை.
சீதைக்குத்தான் தாயே இல்லையே. ஜனக மகாராஜா ஒரு வேள்வி முடிந்ததும் பூமியைக் கலப்பை கொண்டு உழுதபோது பூமியில் இருந்து வெளிப்பட்டவள்தான் சீதை. மிகவும் அழகுடன் திகழ்ந்த அக்குழந்தையை ஜனகமகாராஜா தன் மகளாக எடுத்து வளர்த்து வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் அசோகவனத்தில் சீதையைக் காவல் காத்த இயக்கர்குலப் பெண்ணான திரிசடை சீதைக்கு எப்படித் தாயாவாள். அதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஆரண்யவாசத்தில் ஒரு நாள் மாரீச மாய மானை உண்மை மான் என நம்பி சீதை கேட்டதும் ராமன் அதைப் பிடிக்கச் சென்றார். அப்போது சந்நியாசி வேடத்தில் வந்து இராவணன் சீதையைப் பூமியோடு பேர்த்து புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு எடுத்துச் சென்று தன்னை மணக்கும் படி வேண்டினான். சீதை மறுக்கவே அவளை அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது அவளைக் காவல் காக்க பல இயக்கர் குலப் பெண்களை நியமித்தான். அவர்களுள் ஒருத்திதான் திரிசடை.
ஆமாம் யார் இந்த திரிசடை. அண்ணனே ஆனாலும் இராவணனின் அநியாயத்தை எதிர்த்து நியாயத்துக்குக் குரல் கொடுத்த விபீஷணனின் மகள்தான் இவள். இவளும் பண்பும் அன்பும் வாய்ந்தவள்.

திங்கள், 16 மார்ச், 2020

தர்மத்திடம் சரணடைந்த விபீஷணன். தினமலர் சிறுவர்மலர் - 56.

தர்மத்திடம் சரணடைந்த விபீஷணன்
எப்போதும் தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று கடுந்தவம் இருந்து வரம் பெற்றான் ஒருவன். அவன் இயக்கர் வம்சமாயினும் பஞ்சமாபாதகங்களைக் கண்டாலே அஞ்சுபவன். அவன் எப்படி அதர்மம் புகுந்த இடத்தில் இருப்பான். அதனால்தான் அவன் தர்மத்திடம் சரணடைந்தான். அவன் யார் ? அவன் பெற்ற வரம் என்ன ? அவன் தர்மத்திடம் சரணடந்த காரணம் என்ன எனப் பாப்போம் குழந்தைகளே.
விஸ்ரவஸ் என்ற முனிவருக்கு புஷ்போத்கை, மாலினி, ராகை ஆகிய மூன்று மனைவியர் மூலம் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை, கரன் ஆகியோர் பிறந்தார்கள். இவர்களுள் மாலினிக்குப் பிறந்த விபீஷணன் அழகும் அறிவும் நிரம்பப் பெற்றவன். அத்தோடு அறச் செயல்களில் விருப்பம் கொண்டவன். சிறந்த பக்திமான்.
இவர்களில் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் வேதங்கள் கற்றுக் கல்விமானாகத் திகழ்ந்தாலும் இன்னும் பலம்பெற வேண்டி பிரம்மனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தனர். முடிவில் பிரம்மன் தோன்றி அவர்கள் தவத்தை மெச்சி வரங்கள் வழங்கினார். இராவணன் யாராலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என வரம் கேட்டவன் மனிதனாலும் இறப்பு நேரக்கூடாது என்பதைக் கேட்க மறந்தான். கும்பகர்ணனோ நித்திய ஆயுசு வேண்டும் எனக் கேட்கவந்தவன் நித்திரை வேண்டும் என வாய்தவறிக் கேட்டு தூக்கத்தை வரமாகப் பெற்றான்.
உண்ணா நோன்பு நோற்றிருந்த விபீஷணனோ இன்னும் ஞானமும் மேன்மையும் அடைந்தான். அவன் “ எந்தச் சமயத்திலும் எத்தகைய சூழலிலும் நான் தர்மத்தில் இருந்து வழுவாமல் வாழவேண்டும். மேலும் எனக்கு ஞான ஒளி பெருகவேண்டும் ” என்பதை பிரம்மாவிடம் வரமாகக் கேட்டதால் அவர் மகிழ்ந்து ’அவன் சிரஞ்சீவியாகவும் வாழ்வான்’ என்ற வரத்தையும் சேர்த்து அருளினார்   

புதன், 22 ஜனவரி, 2020

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை. தினமலர் சிறுவர் மலர் - 49.

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை.
நல்லவர் ஒருவர் எந்தக் காரணமும் இல்லாமலே துயர்ப்பட நேரும். அது அவங்க தப்பு இல்லை. தன் துர்நோக்கம் நிறைவேற அவங்களை இப்பிடிப் பகடைக்காயா சிலர் பயன்படுத்திக்குவாங்க. அப்படிப்பட்ட துர்நோக்கம் கொண்ட சூர்ப்பனகை தன் எண்ணம் நிறைவேற ஒன்றுமறியா சீதையைப் பகடையாகப் பயன்படுத்திக்கிட்டா. உள்ளபடி அவள் காழ்ப்புணர்வு சீதை மேலே இல்லை. பின்னே யார் மேலேன்னு பார்க்கலாம் வாங்க குழந்தைகளே.
பிரம்மாவின் புத்திரர் புலத்திய மகரிஷி. அவரது மகனான விச்ரவசுவுக்கும் அவரது இரண்டாம் மனைவியான கேசிக்கும் பிறந்தவர்கள்தான் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன்.
சூர்ப்பணகைக்கு உரிய பருவம் வந்ததும் காலகேயர் என்னும் தங்கநிற அரக்கர் வம்சத்தைச் சார்ந்த வித்யுத்சிகுவன் என்பாருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். சூர்ப்பணகையும் இயல்பிலேயே அழகானவள். இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருமுறை இராவணன் தன் புஜபராக்கிரமத்தைக் காட்ட வேண்டிக் காலகேயர்களுடன் போரிட்டான். அப்போது வித்யுத்சிகுவனை சூழ்ச்சி செய்து இராவணன் கொன்று விடுகிறான். இதைக்கேட்டுத் துடித்த சூர்ப்பணகை போர்க்களத்துக்கு ஓடிவருகிறாள். அண்ணனாயினும் தன் கணவன் சாவுக்குக் காரணமானவனை அதே போல் சூழ்ச்சியால் வெல்வேன் என சபதமேற்கிறாள்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான். தினமலர் சிறுவர்மலர். 33.

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான்
எந்தச் செயலைச் செய்வதற்கும், “உன்னால் முடியும் தம்பி” என்று ஒருவர் சொன்னால் அதை நம்ப வேண்டும் அப்படித் தன் மறந்து போன திறமையை ஒருவர் ஞாபகப்படுத்தியவுடன் தன்னால் முடியும் என்று விண்ணிலே பறந்த ஒருவரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே.
கேசரி அஞ்சனை ஆகியோருக்கு வாயுபுத்திரரின் அருளால் பிறந்தவர் ஹனுமன். இவர் சிறு வயதில் மிகுந்த சுட்டிக் குழந்தையாய் இருந்தார். ஒருமுறை தாய் ஏதோ வேலையாக இருக்கும்போது இவருக்குப் பசி எடுத்துவிட வானில் தோன்றிய சூரியனைப் சிவப்புப்பழம் என நினைத்துத் தாவிப் பிடிக்கப் போனார். அதைக் கண்டு பதறிப்போன  இந்திரன் சின்னக் குழந்தையான அனுமனைத் தாடையில் அடிக்க அவர் மயக்கமுற்று விழுந்தார்.
இதனால் வாயு பகவான் கோபப்பட்டுத் தன் இயக்கத்தை நிறுத்த அனைத்து உயிர்களும் காற்றில்லாமல் தவித்தன. உடனே சூரியன் முதலான தேவர்கள் அனுமனை மயக்கம் தெளிவித்துப் பல்வேறு வரங்கள் வழங்கினார்கள். அணிமா மஹிமா லகிமா ஆகிய சித்திகளும், காற்றில் பறக்கும் சக்தியும் பெற்றார் அனுமன்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன். தினமலர் சிறுவர்மலர் - 11.

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன்.
ள்ளம் கெடாதவரை எதுவுமே கெடுவதில்லை. உள்ளம் கெட்டால் அனைத்தும் கள்ளமாகும், அது ஒருவனை மலையில் இருந்து மடுவில் மட்டுமல்ல மரணத்துக்கும் செலுத்தும் என்று ஒருவனின் வாழ்க்கை நமக்குப் பாடம் புகட்டுகிறது.
அப்படி உள்ள நலன் அழிந்ததால் இழிந்தவன் சாதாரணன் அல்ல. உலகனைத்தையும் வென்றவனும், மூன்று கோடி வாழ்நாள் உடையவனும், முயன்று பெற்ற தவப்பயனால் யாராலும் வெல்லப்படமாட்டான் என சிவபெருமானே மனமகிழ்ந்தருளி வரம் வழங்கிய தசமுகன் எனப்படும் இராவணன்தான் அவன். அவனைப்பற்றிப் பார்ப்போம் குழந்தைகளே.
தென்கடலில் கெம்புப் பதக்கம் போல் ஒளிவீசி மின்னுகிறது இலங்கை மாநகரம். அங்கே அயோத்திக்கீடாக ஏன் அதை விடவும் அழகான மாட மாளிகை கூட கோபுரங்கள் எல்லாம் ஒளிவீசிப் பொலிகின்றன. அவற்றின் நடுவில் அதோ விஸ்வகர்மா சமைத்து விண்ணளாவி உயர்ந்து நிற்கின்றதே அந்த அரண்மனைதான் இலங்காதிபதி இராவணனின் மாளிகை.
இராவணனின் பெற்றோர் புலஸ்தியரின் பேரனான விஸ்ரவ முனிவரும், அசுரகுலத் தலைவனான கமாலியின் மகள் கேசியும் ஆவார்கள்.. இராவணனின் கூடப்பிறந்தவர்கள் விபீஷணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை. இவனது மனைவி மண்டோதரி. மகன்கள் இந்திரஜித்து, அட்சய குமாரன், அதிகாயன், பிரகஸ்தன், திரிசரன், நராந்தகன், தேவாந்தகன் ஆகியோர்.

திங்கள், 7 ஜனவரி, 2019

வலிமை மிக்க வாலி.! தினமலர் சிறுவர்மலர் - 51.

வலிமை மிக்க வாலி.!
லவான் என்றால் வலிமை உடையவன். வலிமை என்றால் சாதாரண வலிமை அல்ல. நேர்மையும் வீரமும் கொண்ட ஒருவன் பத்துத்தலை உள்ள ஒருவனைக் கைக்குள் பிடித்து அடக்க முடியுமா. அடக்கி இருக்கிறானே. அந்தப் பத்துத்தலை கொண்டவனும் வீரதீரப் பராக்கிரமம் மிக்கவன்தான். அதெப்படி முடியும் என்று நினைக்கிறீர்கள்தானே. அந்த பலவான்களைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிஷ்கிந்தை என்றொரு நாடு இருந்தது. அதை நிரஜன் என்னும் வானர அரசன் ஆண்டுவந்தான். அவனது மகள் விரஜா மிக மிக அழகி. அவளை நிரஜன் ருஷீடன் என்ற வானர அரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவர்களுக்கு வாலி, சுக்ரீவன் என்ற இரு வானர இளவரசர்கள் பிறந்தார்கள்.
வாலி மிகுந்த வலிமை வாய்ந்தவன். இவன் சுவேஷன் என்ற வானர அரசனின் மகளான தாரையை மணந்தான். கேசரி என்ற வானரனுக்கும் அவனது மனைவி அஞ்சனைக்கும் பிறந்த அனுமன் பிறந்தார். கிஷ்கிந்தையை வாலி ஆட்சி செய்துவர அனுமன் அவருக்கு மந்திரியாக ஆலோசனை வழங்கி வந்தார்.
து இப்படி இருக்க இந்த தசமுகன் என்பான் யார் என்று பார்ப்போம். இவன் பத்துத்தலை கொண்டவன். இலங்காதிபதி. சிறந்த சிவபக்தன். வீணை இசைப்பதில் வல்லவன். இவன் பாடிய சாமகானத்தைக் கேட்டு சிவன் மகிழ்ந்து பல வரங்கள் கொடுத்திருக்கிறார்.
இவன் திக்பாலகர்களை வெற்றி கொண்டவன். தோல்வி என்பதே அறியாதவன். மூன்று லோகமும் இவன் காலடியில். நவக்ரகங்களும் இவனது சிம்மாசனப்படியில் . இப்படியான கீர்த்திகளைக் பெற்ற இவன் வாலியின் வலிமையைக் கேள்விப்பட்டு அவனை அடக்க வேண்டும் என எண்ணினான்.

சனி, 19 மே, 2018

பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.


பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.

ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலவிருட்சத்தில் அமர்ந்திருந்த அந்தப் பறவைகளின் அரசன் தன் இறக்கைகளைச் சோம்பல் முறித்து விழிக்கிறார். சடசடவென தெறித்து விழுகின்றன முதிர்ந்த மரத்தின் சுள்ளிகள்.

அவருக்கு வயது 60,000 ஆண்டுகள்.உள்ளத்தில் நன்னெறிகள் நிரம்பியதால் இன்னும் பறந்து விரிந்த பிரம்மாண்ட சிறகுகளும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு திடமாகத்தான் விளங்குகிறார். 
  
வானம் இன்னும் மேகமூட்டத்துடந்தான் இருக்கிறது. இன்று என்னவோ ஒரு அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று ஏனோ தோன்றியது அந்தப் பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு. மனதில் இனம் தெரியாத ஒரு அவசம். என்னவானால் என்ன எதிர்கொள்ளத்தானே வேண்டும். தன் தினப்படி காரியங்களை முடித்துவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார்.

அது சரி இந்த ஜடாயு யார். அவர் மனதை அச்சுறுத்திய அசம்பாவிதம்தான் என்ன ?

பெரியப்பா.. பெரியப்பா” என்ற குரல்கள் அசைக்கின்றன. ஆனால் கண் விழிக்க இயலவில்லை. அரைக்கண் மூடியபடி பார்க்கிறார் ஜடாயு. தயரத புத்திரர்கள்தான். ஒருவித ஏலாமையுடன் அவர்களிடம் அந்த அசம்பாவிதத்தைச் சொல்லியவுடன் அவரது கண்கள் நிரந்தமாக மூடுகின்றன.

திங்கள், 20 மார்ச், 2017

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - ஒரு பார்வை.

ராமனுக்கு நிகராகவும் ஒரு துளி அதிகமாகவும் கம்பனே மாந்தி மயங்கிப் புகழும் ஒரு பாத்திரமும் கம்பராமாயணத்தில் உண்டென்றால் அது இராவணன்தான்.  அ. ச. ஞான சம்பந்தனாரின் இராவணனின் மாட்சியும் வீழ்ச்சியும் படித்தேன். சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மாட்சி பற்றிக் கூறும்போது இலங்கையின் மாட்சி பற்றியும் , அவன் செய்த பாவம் அல்லவாம் , “குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டான் “என்றும்  “இந்திரப் பெரும்பதம் இழந்தான் “, “இடிக்குநர் இல்லான் “, ”நாளை வா எனப்பட்டான் “ எனவும் வருந்துவது, ”வெலற்கு அரியான்” எனக் கம்பன் பெருமிதம் கொள்வது கூறப்பட்டுள்ளது. அதே போல் தீமை வரும் விதம் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் எல்லாம் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.

Related Posts Plugin for WordPress, Blogger...