புதன், 13 ஜனவரி, 2010

சூரியப் பொங்கல்

அந்திக்கூட்டுக்குள்
விடியலின் சிறகு முளைக்க
சூரியன் பறந்து கிளம்பி ....

சூரியப் பொங்கலில்
வெளிச்சப் பால்
பொங்கி வழிந்து...

சூரியத்தண்ணீர்
மரத்தாமரை வழி சிதறித்
தரையில் முத்துக்களாய்.....

இலைக்குடைத்தடுப்பில்
சில ஒளிக்கற்றைகள் பிரிந்து
மரத்தின் கிழவாய்களாய்...

சூரியப் பூக்கள்
காலையில் மலர்ந்து மாலையில் வாடி
பறிக்கவும் சேகரிக்கவும் முடியாமல்...

பறவைகளைப் போல
தினம் புலம் பெயர்ந்து சூரியன்...

இருள் மானை வேட்டையாடியபடி
சிங்கமாய் துரத்தும் சூரியன் ...

நகரும் அமீபாக்களாய்
கட்டடங்களை நிழலாய் நகர்த்தியபடி ...

மணித்துளிகளையும் நாட்களையும்
வாரங்களையும் மாதங்களையும்
வருடங்களையும் ஆயுளையும்
காயசண்டிகையாய் விழுங்கி...

உலகம் முடியுமளவு
அலையச் சபிக்கப்பட அஸ்வத்தாமனாய்
கிரகணம் பீடித்து...

வனவாச ராமனைத் துயிலெழுப்ப
விஸ்வாமித்திரன் துதிவழிவெளித்து...

பூமிக்காதலியை தினம் சுற்றி
பச்சையம் பிரசவித்து...

மழைக் கண்ணாடி வழி
வானவில்லாய் ...

சாயா உஷாவின் கணவன் ..
சனி யமனின் தந்தை..
ரதசப்தமி உலா..
ஏழுகுதிரையிலாரோகணித்து..

இரவுக் கூட்டுக்குள்
இறக்கை சுருக்கி
உறங்கக் கூடடையும்சூரியன்

37 கருத்துகள் :

D.R.Ashok சொன்னது…

:)

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

விஜய் சொன்னது…

நான் முன்னாடியே ஒருதரம் சொன்னேன் ஆன்மீக வலைப்பதிவு ஒண்ணு ஆரம்பிங்கன்னு , இலக்கியம், ஆன்மிகம் கவிதை எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி அழகா தர்றீங்க

வாழ்த்துக்கள்

விஜய்

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...

Chitra சொன்னது…

இரவுக் கூட்டுக்குள்
இறக்கை சுருக்கி
உறங்கக் கூடடையும்சூரியன் ........அக்கா, பொங்கல் வைக்குற நேரத்தில் கூட கவிதை அருமையா எழுதுறீங்க. இனிக்கட்டும், என்றும்.........

ஹேமா சொன்னது…

தேனு உங்களுக்குக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Muniappan Pakkangal சொன்னது…

Wishing you and your family a Happy Pongal Thenammai,nice concept& narration abt Sooriyan..

ஸ்ரீராம். சொன்னது…

பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

கோபிநாத் சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள் தேனம்மை.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

Sangkavi சொன்னது…

அனுபவக் கவிதை மாதிரி இருக்குது...

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

R.Gopi சொன்னது…

ஆஹா.... இதுவல்லவோ கவிதை....

சூரிய பொங்கல் படு சூப்பர்.... பலே...

வாழ்த்துகள் தேனம்மை லக்‌ஷ்மணன்

S.A. நவாஸுதீன் சொன்னது…

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் சொன்னது…

பொங்கலோ பொங்கல்..

ரிஷபன் சொன்னது…

பொங்கல் நல் வாழ்த்துகள்

வினோத்கெளதம் சொன்னது…

பொங்கல் நல்வாழ்த்துகள்..:)

PPattian : புபட்டியன் சொன்னது…

//பூமிக்காதலியை தினம் சுற்றி
பச்சையம் பிரசவித்து...

மழைக் கண்ணாடி வழி
வானவில்லாய் ...//

பிடித்த வரிகள்

தைத் திருநாள் வாழ்த்துகள்..

சக்தியின் மனம் சொன்னது…

happy pongal

thenammailakshmanan சொன்னது…

நன்றி அஷோக்

நல்லா இருக்கு அஷோக் உங்க காதல் கிறுக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன் உங்க முத்தமிழ் நல்லா இருக்கே ஸ்டார்ஜன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய் உங்க கல்வி கவிச்சை அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி வசந்த்

உங்களுக்கும் வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா உங்க வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி முனியப்பன் சார் உங்க வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம் உங்க வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி கோபிநாத் உங்க வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

உங்க முதல் வருகைக்கு நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

பர்முடாஸ் முக்கோணம் நல்ல பகிர்வு நன்றி சைவகொத்துப்பரோட்டா

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜோக்கிரி ...கோபி உங்களுக்கும் வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி நவாஸ்

உங்கள் வலிகளனைத்தையும் எனக்குள் ஏற்றி விட்டீர்கள் நவாஸ்

என் ஆர் ஐ இதயத்தோடு என் இதயம் அதிகமாக மருள்கிறது

thenammailakshmanan சொன்னது…

நன்றி அண்ணாமலையான் உங்க வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி வினோத்

நல்லவங்க எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருக்காங்க வினோத் ..நல்ல பகிர்வு

thenammailakshmanan சொன்னது…

நன்றி சக்தி

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அருமையான கவிதை சக்தி...நல்ல சாட்டையடியா இருக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் எனது தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சங்கவி கிராமத்துப் பொங்கலைப்பற்றி மிக அருமையா சொல்லி இருக்கீங்க சங்கவி

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரிஷபன் உங்க வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி பட்டியன் எல்லாம் பாபூஸ் கைபூஸ் தான் கலர்ஃபுல் பொங்கல்தான்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...