எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

தீக்குளிப்பும் குண்டு வெடிப்பும்

கிராமம் சார்ந்த
காங்க்ரீட் காடு எனது .
மௌனமாய் நகரும் பல்லி .,
ஓடி ஒளியும் கரப்பான்.,
தத்தித் தாவும் பாச்சை.,
புத்தகங்களுக்குள் சில்வர் ஃபிஷ்.,
ஓரத்து ஒட்டடைக்குடியிருப்பில் சிலந்தி.,
பருப்புகளில் வண்டு .,
காய்களில் பச்சைப்புழு.,

மழைத்தேங்கல்களில் கானம் பாடும்
ஈக்களும்.,மொழும்புகளும்., கொசுக்களும்.,
தலைப்பிரட்டையும்., தவளையும் கூட...
தோட்டத்தில் செவ்வால் அரணை .,
புதர்களுக்குள் ஓணான்., மரப்பல்லி
பச்சைப்பாம்பு .,பூரான்.,மரவட்டை.,
மொசுக்கட்டை., கம்பளிப்பூச்சி .,அட்டை.,
கட்டெறும்பு., சிகப்பெறும்பு., கறுப்பெறும்பு.,
புற்று .,கரையான்.,
கல் படிகளின் கீழ் நத்தை .,சங்குப்பூச்சி .,
கோழி.,நாய்., பூனை., ஆடு., மாடு., கன்று.,
காக்கை., குளவி .,தட்டான்.,பட்டாம்பூச்சி.,
மைனா.,குருவி.,தேன்சிட்டு.,
சில்வண்டு .,மின்மினிப்பூச்சி., மண்புழு ...
இவ்வளவும் என்னோடு....
இவற்றோடு என் வாழ்வு....
****************************************************
ஓரறிவு உள்ள இவையே வாழத்துடிக்கும் போது
ஆறறிவு பெற்ற முத்துக்குமார், தாணு ஏன் இப்படி.,?
ஏன் சிந்தனைச்சாவு...?
எது தூண்டியது .,?யார் தூண்டியது .,?
ஊடகமா ., சமூகமா .,தேசமா .,
கொள்கையா., இயக்கமா., இழப்பா.,
தீவிர சிந்தனையா .,தீராத்துக்கமா .,
தீராத்தூக்கத்தில் வீழ..?
மௌனப்போராட்டம் நடத்தும் தலாய்லாமா ..
அகிம்சாவாதி காந்தி .,..நெல்சன் மண்டேலா
கவரவில்லையா உங்களை ..?
நெருப்பிலிட்டும் வெடித்துக்கொள்ளவுமா
உங்களம்மா பத்துமாதம் கருக்காத்தாள் ....
எங்கோ நடந்த கண்டத்திட்டதிர்விற்காய்
தன்னையே சாய்த்துக்கொண்ட விருக்ஷமாய்....
தன்னையழித்ததும் .,பிறரையழித்ததும் தவிர
உங்கள் சாவு நிகழ்த்தியது என்ன...?
அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழலாம்....
மண்கிளர்ந்து மறையலாமா..?
எது எதனால் அணையப்பெற்றது எனத்
தெரியாமல் யார் யாருக்காகவோ
உயிர் நீத்த இரு அப்பாவிகள் ....
உயிர் யாருடையதாக இருந்தாலும்
வாழ்வு விலை மதிப்பற்றது
...

டிஸ்கி :- பட்டியன் பதிவில் படித்தவுடன் ஒரு சக
உயிராக முத்துக்குமாரையும் தாணுவையும் பற்றிய
சிந்தனைகளை பதிவிட்டு இருக்கிறேன்....
//பாரிஸ் கார்னரில் ஷாப்பிங், நாதமுனியில்
திரைப்படம், VGP யில் உல்லாசம் என தாணு
கழிக்கும் நாட்களும், வெடிகுண்டை உடலில் சுமந்த
வண்ணம் பிள்ளையார் தரிசனம், பஸ் பிரயாணம்,
கனகாம்பரம், முனியாண்டி விலாஸ் பிரியாணி
என இருப்பதும் இனம்புரியாத ஒரு உணர்வை
மனதுள் ஏற்படுத்துகின்றன.....ரகோத்தமன்
சொல்வது எல்லாமே (Exposed) உண்மைதானா
என்றெல்லாம் ஆராய முடியாது..
ஆனாலும் வாசிக்கலாம்.. ஆர்வத்துடன்//

29 கருத்துகள்:

 1. இந்த புத்தகத்தை படிக்க ஆர்வமாய் உள்ளேன்..

  பதிலளிநீக்கு
 2. என் உணர்வுகளை அச்சு அசலாக அப்படியே பிரதிபலிக்கிறது.

  //உயிர் யாருடையதாக இருந்தாலும்
  வாழ்வு விலை மதிப்பற்றது ...//

  கண்டிப்பாக

  உங்கள் பதிவில் என் பெயரைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். I feel so privileged..

  என் மொக்கைகளும் கூட சிந்தனையைத் தூண்டுகிறதா என்ற வியப்பு இன்னொரு பக்கம் :)

  அப்புறம் உங்கள் முதல் சில வரிகளை வைத்து அழகான ஒரு ராப் பாடல் (Rap Song) செய்யலாம்..

  நன்றி

  பதிலளிநீக்கு
 3. காந்தி பிறந்த மண்ணின் கவனத்தைக் கவர 12 நாள் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த திலீபன் உயிர்காக்க ராஜீவ் அரசு மனமிறங்கி வந்திருந்தால்,அதன் பின்பு தாணு,18 வ்ருஷ இடைவெளிக்குப் பிறகு முத்துக்குமார் போன்ற என்ன்ருமைத் தமிழர்களின் அரிய உயிர் போயிருக்காது.ஏன் ராஜீவின் உயிரும் கூடத்தான்

  பதிலளிநீக்கு
 4. மன அழுத்தம் அதிகமாகி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் முத்துக்குமார் தீக்குளிப்பு

  மனதில் அழுந்த பதிந்த ஈழத்தின் விடுதலைக்காக தனு தற்கொலை

  இரண்டும் அவரவர் கண்ணோட்டத்தில் சரியாக பட்டாலும் உயிரிழப்பு மறுக்கப்பட வேண்டியது அவசியம்

  விஜய்

  பதிலளிநீக்கு
 5. ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 6. உயிரோட மதிப்பு தெரியாதவங்க தான் தற்கொலை / கொலை செய்வாங்க .

  தற்கொலை என்பது நம்மை பார்த்து , நாமே புறமுதுகிட்டு ஓடுவதுக்கு சமம் ...

  பதிலளிநீக்கு
 7. துளசி டீச்சர் ( துளசி கோபால் ) வலைப்பதிவோட லிங் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் .

  பதிலளிநீக்கு
 8. At present i dont have STARJAN
  tomorrow i'll ask some friends and i'll give u da link

  பதிலளிநீக்கு
 9. துளசி டீச்சரின் தளத்தை கண்டு கொண்டேன் . மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 10. உயிர் யாருடையதாக இருந்தாலும்
  வாழ்வு விலை மதிப்பற்றது ............. எப்படித்தான் விலை மதிப்பிலா உயிரை எடுக்க முடியுதோ?

  பதிலளிநீக்கு
 11. /உயிர் யாருடையதாக இருந்தாலும்
  வாழ்வு விலை மதிப்பற்றது ...//

  அவர் உயிர் விட்டது சரியென்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை.

  பதிலளிநீக்கு
 12. ///எது எதனால் அணையப்பெற்றது எனத்
  தெரியாமல் யார் யாருக்காகவோ
  உயிர் நீத்த இரு அப்பாவிகள் ....

  உயிர் யாருடையதாக இருந்தாலும்
  வாழ்வு விலை மதிப்பற்றது ...///

  நிஜம். நல்ல இடுகை

  பதிலளிநீக்கு
 13. உயிர் யாருடையதாக இருந்தாலும்
  வாழ்வு விலை மதிப்பற்றது ...
  தேவையான கருத்து.. நல்ல பதிவு..

  பதிலளிநீக்கு
 14. வாழவேண்டிய வயதில் வாழாமல் மண்ணுக்காய் விதையாகிய எத்தனையோ உயிர்களை நினைக்க வைத்துவிட்டீர்கள் தேனு.கண்ணீர் அஞ்சலி மட்டுமே கொடுக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
 15. //உயிர் யாருடையதாக இருந்தாலும்
  வாழ்வு விலை மதிப்பற்றது ...//

  வாழ்ந்து பார்க்க வேண்டுமே தவிர...
  உயிரைப் பறித்துக் கொள்ளும் உரிமை
  யார் கொடுத்தார்?


  அருமை...!

  பதிலளிநீக்கு
 16. உயிர்த்தியாகம் செய்வதில் எனக்கும் உடன்பாடில்லை ஆனாலும் உங்களின் கருத்திலும் சற்றே நான் முரண்படுகிறேன். நீங்கள் சொல்லும் காந்தியமும், அகிம்சையும் இன்று உண்மையாகவே இருக்கிறதா? காந்தி இன்று இருந்தாலும் போதும்டா சாமி என போயிருப்பார். சட்டமும், ஜனநாயகமும் பணமும் பதவியும் இருந்தால் மட்டுமே செவி சாய்கிறது. முத்துக்குமாரின் உயிர்ராசத்தில் அவரால் எழுத்தப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனமான உண்மை. ஒரு இனம் அழிந்த போது நாமென்ன செய்தோம்? என்ன செய்ய முடிந்தது. விடுதலை புலிகளை அழித்த பிறகும் அந்த மக்கள் இன்னும் முல்வேளிகளுக்குள் முடங்கி கிடப்பதை இந்த உலக நாடுகள்
  வேடிக்கை மட்டும் தானே பார்க்கின்றன. நம் ஆட்சியாளர்களும் கடிதம் மட்டும் தானே எழுத முடிகிறது. என்ன செய்ய? பாரதி "சுடர்மிகு அறிவுடன் எனை படைத்து விட்டாய்" என சொன்னதை போல, அவன் தன்னை அழித்தலாவது இந்த சமுதாயம் விழிப்படைந்து ஒரு இன அழிப்பு போரை தடுக்கும் என நினைத்து இருக்கலாம். சமுதாயமும் கொந்தளித்ததே, என்ன செய்ய, பொடா எங்களை போடா என்கிறது. உங்களின் சட்டம் எங்களை இன்னும் ஒரு முள்வேலி வலயத்துக்குள் முடக்குகிறது. என்ன செய்ய எங்கள் விதியே!... இன்னும் என்ன செய்வாய் என் தமிழ் இனத்தை?

  பதிலளிநீக்கு
 17. நன்றி வினோத் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 18. நன்றி பட்டியன் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. உண்மைதான் வெற்றி வேல் சார் மலைகள் குவாரிகளாய் சுரண்டப்படுவது குறித்த உங்கள் இடுகை அற்புதம்

  பதிலளிநீக்கு
 20. விஜய் உண்மைதான் சகோதரரே
  ஆனால் தவறான முன்னுதாரணமாக இது எடுத்துக் கொள்ளப்படக் கூடாதுன்னு நினக்கிறென்

  உங்க கல்வி கவிச்சை அருமை

  பதிலளிநீக்கு
 21. நன்றி சங்கவி

  நல்லா சொன்னீங்க சங்கவி

  தேவை இல்லாத எண்ணங்களை எல்லாம் கழித்து விடுதல் நல்லது என்று நன்றி நண்பரே

  பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. சரியா சொன்னீங்க ஸ்டார்ஜன்
  உயிரின் மதிப்பு தெரியாதவங்கதான் தற்கோலை அல்லது கோலை செய்வாங்கனு

  ஏதாவது சரித்திர பி ஹெச்டி பண்றீங்களா ஸ்டார்ஜன் தகவல்கள் அருமை

  பதிலளிநீக்கு
 23. நன்றி சித்து வரவுக்கும் கருத்துக்கும்

  பதிலளிநீக்கு
 24. ஆமாம் புலிகேசி எந்த துயரத்தையும் பொறுமையாத்தான் தீர்த்துக்கணும் தற்கொலை சரியான தீர்வு அல்ல

  உண்மைதான் புலிகேசி என்ன செய்ய இந்த மாதிரி பிள்ளைங்களை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கு குடும்பத்தாருடன் கவலைகளை மறந்து பொங்கல் கொண்டாடி விட்டு வரவும்

  பதிலளிநீக்கு
 25. ஆமாம் நவாஸ் சரியா சொன்னீங்க நன்றி

  பதிலளிநீக்கு
 26. உண்மை ரிஷபன் ரிஷபன் நன்றி உங்க கருத்துப் பதிவுக்கு

  பதிலளிநீக்கு
 27. ஆமாம் ஹேமா
  ரொம்பத் துயரமான விஷயம் இது

  என்ன செய்ய

  இனி யாரும் இவ்வாறு செய்யாமல் இருக்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 28. உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார் சிறுகதையெலாம் நல்லா எழுதுறீங்க

  பதிலளிநீக்கு
 29. உங்க முதல் வருகைக்கு நன்றி இளம் வழுதி ஆனால் தற்கொலை மற்றும் தீக்குளிப்பு நல்ல தீர்வாகாது

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...